Search
  • Follow NativePlanet
Share
» »வருஷம் 16 அரண்மணை, ஒரு ஃபோட்டோ டூர்

வருஷம் 16 அரண்மணை, ஒரு ஃபோட்டோ டூர்

By Staff

திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவிலுக்கு பேருந்தில் போய்க்கொண்டிருக்கிறீர்கள். அதுவரையிலான புழுக்கம், வியர்வை சடாரென மாறியது போல் இருக்கிறது. உங்களை அறியாமலே ஒரு குளுமை, உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. ஜன்னலுக்கு வெளியே பார்த்தால், பேருந்து, ஆரல்வாய்மொழியை நெருங்கி கொண்டிருக்கிறது. இதுதான் நாகர்கோவில் மாவட்டம்; காற்றாலைகளும், தென்னை மரங்களும், இதமான வானிலையும்; கேரள பாணி வீடுகளும் ஒருங்கே கொண்ட அழகிய மாவட்டம்.

நாகர்கோவிலுக்கு 20 கி.மீ தொலைவில், தக்கலைக்கு அருகில் பத்மநாபபுரம் என்னும் சிறிய ஊரில் இருக்கும் ஒரு அரண்மனை. இன்னும் சரியாகச் சொன்னால் : வருஷம் 16 படம் முழுவதும் எடுத்த இடம் இந்த அரண்மனை.

பத்மநாபபுரம் அரண்மனை - தக்கலை

அரண்மனை முகப்பு

அரண்மனை முகப்பு

பத்மநாபபுரம் அரண்மனையை கி. பி.1601'இல், திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட ரவி வர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்டது. முதலில் தாய்க் கொட்டாரம் மட்டும் இருந்திருக்கிறது. பின், நூறு வருடம் கழித்து, அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்ற மன்னர், இந்த அரண்மனையை விரிவுபடுத்தினார்.

Photo Courtesy : Aviatorjk

கடிகார கோபுரம்

கடிகார கோபுரம்

1795 வரை பத்மநாபபுரமே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக இருந்திருக்கிறது. பின், திருவனந்தபுரம், தலைநகரமாக‌ மாற்றப்பட்டது. கேரளக் கட்டிட‌க்கலையை பிரதிபலிக்கும் நேர்த்தியான அரண்மனைகளில் இது முக்கியமானது.

Photo Courtesy :LIC Habeeb

நவராத்திரி மண்டபம்

நவராத்திரி மண்டபம்

முற்றிலும் உள்நாட்டுப் பொருட்களான ம‌ரப்பலகைகள், செங்கற்கள், கருங்கற்கள், சுன்னக்கற்கள் கொண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வழ வழப்பான கரிய நிறத்தரையை கொண்டு வர‌ தேங்காய்ச்சிரட்டை, எலுமிச்சை, முட்டை வெண்கரு மற்றும் மரக்கறிகள் சிலவற்றிலிருந்து பெறப்பட்ட சாறு ஆகியவை உபயோகப்பட்டிருக்கிறது.

Photo Courtesy :Aviatorjk

குதிரை விளக்கு

குதிரை விளக்கு

இன்று வரை அரண்மனையில் மின் விளக்குகள் கிடையாது. அதற்காக இருட்டில் பார்க்க வேண்டுமா என்று நினைக்க வேண்டாம். சூரியனின் ஒளியே போதியளவு வெளிச்சத்தை கொடுக்கிறது. இதன் காரணமாக, காலை 9.00 மணி முதல் மாலை 4.30 வரை பொதுமக்கள் உள்ளே அனுமதிப்படுகின்றனர்.

Photo Courtesy :Aviatorjk

தர்பார்

தர்பார்

அரண்மனை முழுவதும் உள்ள உட்கட்டமைப்புகளில் நுட்பமான மரவேலைப்பாடுகளை நீங்கள் காணலாம்.

Photo Courtesy :Harinair

அரண்மனைக் குளம்

அரண்மனைக் குளம்

தமிழ் நாட்டிற்குள் இருந்தாலும் இந்த அரண்மனை கேரள அரசுக்கு சொந்தமானது. ஆகவே, அரண்மனையைப் பராமரிப்பது கேரள தொல்லியல் துறை.

Photo Courtesy : Aviatorjk

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X