Search
  • Follow NativePlanet
Share
» »மிக வினோதமான ஹிந்து கோயில்கள் ஒரு சிறப்பு பார்வை

மிக வினோதமான ஹிந்து கோயில்கள் ஒரு சிறப்பு பார்வை

உலக நாடுகளுள் இந்தியா மேன்மையுற்றதாய் பார்க்கப்பட அதன் தொன்மையான கலாச்சாரமும், பண்பாடுமே காரணம் ஆகும். அதிலும் குறிப்பாக இந்திய கோயில்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும், ஏன் விஞ்ஞானிகளுக்கும் கூட எப்போதுமே புதிராகவே இருந்து வருகின்றன. கோயில்களின் அமைக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் இருக்கும் நம்பிக்கைகளும், அவற்றுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அறிவியலும் தேடல் தரும் சுகத்தை விரும்புகிறவர்களின் சொர்க்கபுரியாக இந்தியா திகழ காரணமாக இருந்திருக்கிறது.

இந்திய நம்பிக்கைகளின் அடிநாதமாக இருக்கும் கோயில்களிலும் சில விநோதமானவையாக இருக்கின்றன. அதுபோன்ற சில வினோதமான கோயில்களை பற்றிதான் நாம் இங்கே அறிந்துகொள்ளவிருக்கிறோம்.

தாமஸ் குக் தளத்தில் விடுமுறைகால சுற்றுலா கட்டணங்களில் ரூ.3000 தள்ளுபடி கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்

 புல்லட் பாபா கோயில் :

புல்லட் பாபா கோயில் :

ஒரு புல்லட் மோட்டார் சைக்கிளை கடவுளாக மக்கள் வணங்கும் அதிசயத்தை காண நீங்கள் ராஜஸ்தானின் ஜோத்பூருக்குத்தான் வரவேண்டும். இந்த வினோதமான ஆலயம் ஜோத்பூரிலிருந்து 50 கி.மீ தொலைவில் சோட்டிலா எனும் கிராமத்தில் அமைந்திருக்கிறது. அதாவது 1991-ஆம் ஆண்டு ஓம் சிங் ரத்தோர் என்பவர் தன் புல்லட்டில் சென்றுகொண்டிருக்கும்போது ஒரு மரத்தில் மோதி இறந்துவிட்டார். அதன்பிறகு அந்த வாகனம் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

Photo:Sentiments777

 புல்லட் பாபா கோயில் :

புல்லட் பாபா கோயில் :

ஆனால் மறுநாள் அது விபத்து நடந்த மரத்தருகே நின்றுகொண்டிருந்ததாம். எனவே அந்த புல்லட் திரும்பவும் காவல் நிலையம் கொண்டுவரப்பட்டு சங்கிலி போட்டு கட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் மறுநாள் அதே மரத்தருகே சென்றுவிட்டதாம் அந்த புல்லட் வண்டி. அன்றிலிருந்து ஓம் பன்னா அல்லது புல்லட் பாபா ஆலயம் என்று அந்த மரத்தையும், புல்லட்டையும் அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகிறார்கள். யார் இந்த புல்லட் பாபாவை வணங்கினாலும் அவர்கள் பயணம் பாதுகாப்பானதாக அமையும் என்று நம்பப்படுகிறது.

Photo:Oliver Laumann

ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் ஆலயம் :

ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் ஆலயம் :

எஸ்.ஜே.சூர்யா காமெடியில வரமாதிரி 'இருக்கு ஆனா இல்லை' அப்படி ஒரு அதிசயமான கோயில் இது. அதாவது அரபிக்கடல் ஓரத்தில் இருக்கும் இந்தக் கோயில் நீர்மட்டம் குறைவாக இருக்கும்போது கண்ணுக்கு தெரிவதோடு பக்தர்களும் கோயிலுக்குள் சென்று தரிசிக்கலாம். அதுவே கடலின் நீர்மட்டம் அதிகரித்தால் பாதி ஆலயம் கடலில் மூழ்கிவிடுவதோடு தரிசனமும் செய்ய முடியாது. இந்தக் கோயில் குஜராத்தின் வதோதரா நகரிலிருந்து 40 மைல் தொலைவிலுள்ள கவி கம்போய் என்ற சிறிய நகரில் அமைந்திருக்கிறது.

Photo:wikigogo

ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் ஆலயம் :

ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் ஆலயம் :

ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் ஆலயத்தின் சில புகைப்படங்கள்.

Photo:wikigogo

ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் ஆலயம் :

ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் ஆலயம் :

ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் ஆலயத்தின் சில புகைப்படங்கள்.

Photo:wikigogo

ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் ஆலயம் :

ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் ஆலயம் :

ஸ்தம்பேஷ்வர் மஹாதேவ் ஆலயத்தின் சில புகைப்படங்கள்.

Photo:wikigogo

காலபைரவநாத் கோயில் :

காலபைரவநாத் கோயில் :

வருடத்தின் 365 நாளும், நாளின் 24 மணிநேரமும் குடம் குடமாக, லிட்டர் லிட்டராக ஒயின் அருந்தும் கடவுளை எங்காவது பார்த்திருக்கீர்களா?! மத்தியப்பிரதேசத்திலுள்ள உஜ்ஜைன் நகரின் காவல் தெய்வமாக கருதப்படும் காலபைரவநாத் சுவாமிதான் அப்படி லிட்டர் லிட்டராக ஒயின் அருந்துவது. இங்கு வரும் பக்தர்கள் ஒயினையே கடவுளுக்கு படைப்பதோடு, அந்த ஒயினே பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.

Photo:Manjari Shrestha

கர்ணி மாதா கோயில் :

கர்ணி மாதா கோயில் :

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ஒரு எலிக்கோயிலில்தான் ராக்கெட்டை கடத்தி வைத்திருப்பார்கள். அதேபோல ராஜஸ்தானின் தேஷ்நோக் கிராமத்தில் அமைந்திருக்கும் கர்ணி மாதா கோயிலும் எலிக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் கபாஸ் என்று அழைக்கப்படும் 20,000-க்கும் மேற்பட்ட எலிகளுக்கு வாழ்விடமாக இருந்து வருகிறது.

Photo:Shakti

கர்ணி மாதா கோயில் :

கர்ணி மாதா கோயில் :

இங்குள்ள எலிகள் அனைத்தும் 'சரண்ஸ்' எனும் பெயர்கொண்ட கர்ணி மாதாவின் எதிர்கால குழந்தைகளின் ஆன்மாக்களை சுமந்து கொண்டு திரிவதாக தேஷ்நோக் கிராமத்தை சேர்ந்த மக்கள் நம்புகின்றனர். அதுமட்டுமல்லாமல் பக்தர்களின் கால் பாதங்களில் இந்த எலிகளின் ஸ்பரிசம் படுவது நற்பேற்றின் அடையாளமாக நம்பப்படுகிறது.

Photo:Arian Zwegers

கர்ணி மாதா கோயில் :

கர்ணி மாதா கோயில் :

கர்ணி மாதா கோயிலின் சில வித்தியாசமான புகைப்படங்கள்.

கோயில் நுழைவு வாயில்.

Photo:Axel Drainville

சைனீஸ் காளி கோயில் :

சைனீஸ் காளி கோயில் :

கொல்கத்தாவில் உள்ள இந்த சைனீஸ் காளி கோயிலில் நூடுல்சும், சாப்ஸியுமே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஏனென்றால் சீன தேசத்து மக்கள் குடியிருக்கும் சைனாடவுனில் இந்த கோயில் அமைந்திருக்கிறது. அதோடு புத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் இப்பகுதியில் ஹிந்து தெய்வமான காளிக்கு கோயில் இருப்பதும், அது இவ்வளவு பிரசித்தமாக அறியப்படுவதும் அதிசயம்தான்.

Photo:Sankarrukku

பிரம்மா கோயில் :

பிரம்மா கோயில் :

ராஜஸ்தானின் புனித நகரமான புஷ்கரில் உள்ள இந்த பிரம்மா கோயில்தான் உலகத்திலேயே பிரம்மாவுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலாகும். 14-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலில் உள்ள பிரம்மனுடைய சிலை, இடதுபுறம் இளைய மனைவி காயத்ரியுடனும், வலதுபுறத்தில் சாவித்திரியுடனும், நான்கு தலைகளுடன் தாமரை மலரில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

Photo:Vberger

Read more about: temples rajasthan gujrath
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X