Search
  • Follow NativePlanet
Share
» »Photography ரொம்ப பிடிக்குமா உங்களுக்கு? அப்ப நீங்க கண்டிப்பாக போக வேண்டிய இடங்கள் இவை...

Photography ரொம்ப பிடிக்குமா உங்களுக்கு? அப்ப நீங்க கண்டிப்பாக போக வேண்டிய இடங்கள் இவை...

புகைப்படம் எடுப்பது சும்மா 'கிளிக்' செய்வது மட்டும் இல்லை. அது 'அதுக்கும் மேல'. சரியான தருணத்தில் அழகான புகைப்படம் ஒன்றை எடுக்கும் சந்தோசம் எத்தனை அற்புதமானது என்பது அதனை அனுபவித்தவர்களுக்கு தெரியும்.

நல்ல புகைப்படங்கள் எடுக்க நிறைய பயணம் செய்ய வேண்டும். பயணங்கள் தான் நமக்குள் இருக்கும் சிறந்த புகைப்பட கலைஞனை வெளிக்கொண்டு வரும். சரி. எங்கே பயணம் போவது?. வாருங்கள் தென் இந்தியாவில் புகைப்படம் எடுக்க சிறந்த இடங்கள் என நாங்கள் பரிந்துரைக்கும் இடங்களை பற்றி அறிந்து கொள்ளாம் .

யாத்ராவின் எல்லா இலவச கூப்பன்களையும் இங்கே பெற்றிடுங்கள்

கன்னியா குமரி - கதிரவனின் வர்ணஜாலம்:

கன்னியா குமரி - கதிரவனின் வர்ணஜாலம்:

அகண்ட பாரதத்தின் தென் முனையாக இருக்கும் கன்னியா குமரி முக்கியமான சுற்றுலாத்தலமாக திகழ முக்கிய காரணங்களில் ஒன்று இங்கே நமக்கு காணக்கிடைக்கும் அற்புதமான இயற்கை காட்சிகள் தான். காலையும் மாலையும் கதிரவன் அந்தி வானில் நிகழ்த்தும் வர்ணஜாலங்களை உங்கள் குவியத்தில்(lens) சிறைபிடித்திடுங்கள்.

Photo:NeilsPhotography

கன்னியா குமரி - கதிரவனின் வர்ணஜாலம்:

கன்னியா குமரி - கதிரவனின் வர்ணஜாலம்:

அடுத்ததாக கடற்கரையில் இருந்து கப்பலில் சிறிது நேரம் பயணித்தால் 133 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையும் நிச்சயம் தவற விடகூடாத ஓரிடமாகும். வள்ளுவன் தமிழின் அழகை இரண்டடியில் சொன்னார். வள்ளுவனின் அழகை ஒரு கிளிக்கில் நீங்கள் சொல்லுங்கள்.

Photo: Flickr

கன்னியா குமரி - கதிரவனின் வர்ணஜாலம்:

கன்னியா குமரி - கதிரவனின் வர்ணஜாலம்:

இதை தாண்டி தமிழ் நாட்டின் மிகவும் பசுமையான மாவட்டங்களில் ஒன்றாக கன்னியா குமரி இருப்பதால் பசுமை ததும்பும் அவ்விடங்களையும், அதி சுவைமிக்க நாஞ்சில் நாட்டு உணவுகளை சுவைப்பதோடு மட்டும் இல்லாமல் புகைப்படமும் எடுங்கள்.

கன்னியாகுமரியை எப்படி அடைவது?

கன்னியாகுமரியை எப்படி அடைவது?

கன்னியாகுமரி நகரம் சாலை மார்கமாக தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கேரளாவின் திருவனந்த புறத்தில் இருந்தும், மதுரை, திருநெல்வேலி வழியாகவும் கன்னியா குமரியை அடையலாம். கன்னியா குமரியை ரயில் மூலமாகவும் எளிதாக அடையலாம். கன்னியாகுமரிக்கு செல்லும் ரயில் நேரங்கள் பற்றிய விவரங்கள் இங்கே மிக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரியில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள் இங்கே உள்ளன.

ஆலப்புழா - இவ்வளவு அழகா ஒரு இடமா?! :

ஆலப்புழா - இவ்வளவு அழகா ஒரு இடமா?! :

ஆலப்புழா என்றதுமே நம் நினைவுக்கு வருவது படகுவீடுகள் தான். அலைகள் எழாத உப்பங்கழி ஓடைகளில் படகுவீடுகளில் பயணிப்பது மிகவும் காதல் ததும்புவதாய் இருக்கும். உங்கள் மனைவி மீது காதல் உள்ளது போல DSLR கேமராவின் மீதும் காதல் இருந்தால் நிச்சயம் அதனுடன் தேனிலவு கொண்டாட ஆலப்புழாவிற்கு செல்லுங்கள்.

ஆலப்புழா - இவ்வளவு அழகா ஒரு இடமா?! :

ஆலப்புழா - இவ்வளவு அழகா ஒரு இடமா?! :

மிகவும் பசுமை நிறைந்த ஆலப்புழா நகரை படகு வீடுகளில் வலம் வருகையில் எதோ நெதர்லாந்தின் ஓடைகளில் பயணிப்பது போன்ற அனுபவம் ஏற்ப்படும். கேரளாவின் அழகையும், மலையாளிகளின் வாழ்க்கையோடு ஏரிகளும், ஓடைகளும் எத்தகைய தாக்கத்தை கொண்டுள்ளன என்பதை கேமராவின் மூலம் இந்த படகுவீடு பயணத்தின் போது நாம் பதிவு செய்யலாம்.

ஆலப்புழா - இவ்வளவு அழகா ஒரு இடமா?! :

ஆலப்புழா - இவ்வளவு அழகா ஒரு இடமா?! :

ஆலப்புழாவை ஒட்டியே கோட்டயம் மாவட்டத்தில் இருக்கும் வேம்பநாடு ஏரியும் நாம் நிச்சயம் செல்ல வேண்டிய இடமாகும். ஆசியாவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான இதில் படகு வீடு பயணமும். ஆகஸ்டு மாதம் நடைபெறும் 'பாம்பு படகு' போட்டிகளும் உலகப்பிரசித்தம்.

ஆலப்புழா - இவ்வளவு அழகா ஒரு இடமா?! :

ஆலப்புழா - இவ்வளவு அழகா ஒரு இடமா?! :

இந்த வேம்பநாடு ஏரிக்கரையில் இயற்கை புதையலை கொண்டு அமைந்திருக்கிறது குமரகோம் பறவைகள் சரணாலயம். வருடம் முழுக்க இமய மலைகளில் இருந்தும் செர்பிய நாட்டில் இருந்தும் ஏராளமான பறவைகள் புலம் பெயர்ந்து இந்த சரணாலயத்திற்கு வருகின்றன. அற்புதமான இயற்கை காட்சிகளின் பின்னணியில் பறவைகளை படமெடுக்க இந்த இடத்திற்கு நிச்சயம் வர வேண்டும்.

ஆலப்புழாவை எப்படி அடைவது? எங்கு தங்குவது?

ஆலப்புழாவை எப்படி அடைவது? எங்கு தங்குவது?

கேரளாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருப்பதால் ஆலப்புழா கோயம்பத்தூர், திருவனந்தபுரம், மும்பை, பெங்களுரு ஆகிய நகரங்களுடன் தேசிய நெடுஞ்சாலை மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரை ரயில் மூலம் அடைவதற்கான நேர விவரங்களை இங்கே விரிவாக அறிந்து கொள்ளுங்கள்.

ஆலப்புழாவில் உள்ள ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னை - பல மனிதர்கள், பல முகங்கள் :

சென்னை - பல மனிதர்கள், பல முகங்கள் :

இயற்கை காட்சிகளை படம்பிடிப்பது ஒரு வகை எனில், மனிதர்களையும் அவர்களின் அன்றாட வாழ்க்கையையும் படம்பிடிப்பது மிக சுவாரஸ்யமான விஷயமாகும். அப்படி மனிதர்களின் முகங்களை புகைப்படம் எடுக்க சென்னையை விட சிறந்த இடம் வேறெதுவாக இருக்க முடியும்.

Photo:Vinoth Chandar

சென்னை - பல மனிதர்கள், பல முகங்கள் :

சென்னை - பல மனிதர்கள், பல முகங்கள் :

சென்னையின் முக்கிய ஷாப்பிங் மையங்களில் ஒன்றான தியாகராய நகரில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு சில நாட்கள் முன்பாக சென்றால் எறும்பும் நுழைய இடமில்லாத அளவு கூடமாக இருக்கும். எப்போதுமே மிகவும் நெரிசல் மிகுந்து காணப்படும் இந்த இடத்தில் எண்ணற்ற வகையான மனிதர்களை நாம் காண முடியும்.

Photo:Simply CVR

சென்னை - பல மனிதர்கள், பல முகங்கள் :

சென்னை - பல மனிதர்கள், பல முகங்கள் :

பன்னாட்டு உணகவம் ஒன்றில் ஒருவேளை உணவுக்காக சில ஆயிரங்கள் செலவிடும் மனிதர்களையும், சில நூறு ரூபாய்கள் சம்பாதிக்க நாள் முழுக்க வெயிலில் நின்று வியாபாரம் செய்யும் மனிதர்களையும் அடுத்தடுத்து இங்கே காண முடியும். 'குட்டி தமிழ்நாடு' என்று சொல்லும் அளவிற்கு தமிழ்நாட்டின் பலதரப்பட்ட இடங்களில் இருந்தும் வந்து வாழும் மக்களை இங்கு காண முடியும்.

Photo:Vinoth Chandar

சென்னை - பல மனிதர்கள், பல முகங்கள் :

சென்னை - பல மனிதர்கள், பல முகங்கள் :

என்னதான் நவீனமயமாதலில் சென்னை மாறிப்போனாலும் இன்றும் மாறாத சென்னையின் பூர்வகுடி மக்கள் சென்னை நகருக்கு வெளியில் உள்ள சேரிப்பகுதிகளில் வாழ்கின்றனர். மீனவர்களாகவும், விவசாயம் செய்தும் வாழும் இம்மக்களை சந்திப்பதும், புகைப்படம் எடுப்பதும் மிக வித்தியாசமான ஓரனுபவமாக இருக்கும்.

photo:Kannan Muthuraman

சென்னை - பல மனிதர்கள், பல முகங்கள் :

சென்னை - பல மனிதர்கள், பல முகங்கள் :

எப்படி அடைவது?

சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் என்பதால் இந்தியாவின் மற்ற எல்லா நகரங்களில் இருந்தும் சாலை வழியாகவும், ரயில் மற்றும் விமானம் மூலமாக சிறப்பாக இணைக்கப்பட்டிருக்கிறது. சென்னையை அடைவது பற்றிய விவரங்களை விரிவாக எங்கள் தளத்தில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Thangaraj Kumaravel

அந்தமான் & நிகோபார் தீவுகள்:

அந்தமான் & நிகோபார் தீவுகள்:

வங்காள விரிகுடாவில் அமைந்திருக்கும் அந்தமான் தீவுகள் அற்புதங்களை கொண்டிருக்கிறது. இரைச்சலும், நெருக்கடியும் மிக்க நகர வாழ்க்கைக்கு மாற்றாக இயற்கையுடன் பின்னிப்பிணைத்து அமைதியுடன் மகிழ்ச்சியாக சிலநாட்களை கொண்டாட அந்தமான் மிகச்சிறந்த இடம். அதிலும் கேமரா உடன் இருந்தால் இவ்விடம் சொர்க்கம்.

அந்தமான் & நிகோபார் தீவுகள்:

அந்தமான் & நிகோபார் தீவுகள்:

அந்தமானில் நாம் செல்ல வேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்று ஹவேலோக் தீவு ஆகும். இந்த தீவில் உள்ள ராதா நகர் பீச் தேனிலவு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாகும். வெள்ளை மணல் கடற்கரையில் காதல் துணையுடன் உலா வருவது ஏகாந்தமாக இருக்கும்.

இனிமையாக கொண்டாடவும், இயற்கையின் அழகை புகைப்படம் எடுக்கவும் இந்த ராதநகர் கடற்கரை நல்லதொரு தேர்வாக அமையும்.

லேபாக்க்ஷி கோயில் - பழமையின் மகத்துவம் :

லேபாக்க்ஷி கோயில் - பழமையின் மகத்துவம் :

பழமையான இடங்களை புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் செல்ல வேண்டிய ஓரிடம் என்றால் அது ஆந்திர மாநிலத்தில் அனந்தபூரில் இருக்கும் லேபாக்க்ஷி கோயில் தான். விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்ட இக்கோயில் அதி நுட்பத்துடனும், அதிசயிக்க வைக்கும் அழகுடனும் உள்ளது.

Photo: Flickr

லேபாக்க்ஷி கோயில் - பழமையின் மகத்துவம் :

லேபாக்க்ஷி கோயில் - பழமையின் மகத்துவம் :

ராமாயண காலத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்கையில் அவரை காப்பாற்ற ஜாடாயு என்னும் கழுகு ராவணனுடன் போரிட்டு இக்கோயில் அமைந்திருக்கும் இடத்தில் தான் வீரமரணம் அடைந்ததாக நம்பப்படுகிறது.

இக்கோயிலில் இருக்கும் அதிசயங்களுள் ஒன்று மிதக்கும் தூண் ஆகும். எதன் துணையுமில்லாமல் நிற்கும் இந்த தூண் அக்காலத்தில் இருந்த கட்டிட கலை அறிவுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். கல்லினால் செய்யப்பட்டதா அல்லது களிமண்ணினால் செய்யப்பட்டதா என்று குழப்ப வைக்கும் அளவு அத்தனை நேர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் உங்கள் புகைப்பட பசிக்கு ஏற்ற விருந்தாக இருக்கும்.

கொண்டாடுங்கள்!!

கொண்டாடுங்கள்!!

அற்புதமான இவ்வுலகை குவியத்தின் வழியே கொண்டாடுங்கள். நிறைய பயணம் செய்யுங்கள், வாழ்க்கை அழகாக மாறும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X