Search
  • Follow NativePlanet
Share
» »சில்க் துணிகளுக்கு பேமஸான கோலார் - ஒரு அட்டகாச பிக்னிக்

சில்க் துணிகளுக்கு பேமஸான கோலார் - ஒரு அட்டகாச பிக்னிக்

கோலார் சில்க் துணிகளுக்கும் பெயர் பெற்ற இடமாகும்.

கோலார் தங்கம் வெட்டியெடுக்கும் பகுதி என்பது நம்மில் பெரும்பாலானோர்க்குத் தெரியும். நமக்கு அதிகம் அறிமுகமில்லாத ஒரு தகவல் கோலார் சில்க் துணிகளுக்கும் பெயர் பெற்ற இடமாகும்.

பெங்களூருவிலிருந்து 69 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்நகரம் பல சுற்றுலாத்தளங்களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது.

வார இறுதி நாள்களில் பலருக்கு தூக்கம் கண்ணை கசக்கிக் கொண்டு வாயிலைத் தட்டும். பாதிபேருக்கு நம் அன்பிற்கினியவர்களுடன் நேரம் செலவழிக்க கிடைத்துள்ள வாய்ப்பு இது என்று பரபரப்பாக போகும். விடுமுறை கழிந்ததே தெரியாது.

சரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, கோவில்கள் பழமை நிறைந்து கோலார் பகுதிக்கு சென்று வரலாமா?

ஓசூரிலிருந்து பெங்களூருவுக்கு அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. எனவே பெங்களூருவிலிருந்து காலை 8 மணிக்கெல்லாம் கிளம்ப தயாராகிவிடவேண்டும்.

நீங்கள் காலை சிற்றுண்டி ஓசூரில் கழித்தாலும் சரி, 8 மணிக்குள் பெங்களூரு வந்துவிடவேண்டும். அப்போதுதான் நம் குறிப்பிட்டுள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று வர இயலும்.

பெங்களூருவிலிருந்து கோலார் வரைபடம்

பெங்களூருவிலிருந்து கோலார் வரைபடம்

கோலாருக்கு புறப்படும் முன்னர் இதன் வரைபடம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அரசுப் பேருந்தில் செல்வதாக இருந்தாலும், சுய வாகனத்தில் செல்வதாக இருந்தாலும் உங்கள் வசதியை பொறுத்து இடங்களைத் தேர்வு செய்யுங்கள்.

கோலாரின் வரலாறு

கோலாரின் வரலாறு

கோலாரின் வரலாறு பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் 8225 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.

பண்டைய காலத்தில் இந்நகருக்கு குவளாலபுரம் என்று பெயர்.

கி.பி 350-ல் கங்கமன்னர்களின் வம்சத்தை தோற்றுவித்த கொங்கனிவர்மானால் கோலார் நகரம் நிர்மாணிக்கப்பட்டு பிற்பாடு கங்கமன்னர்களின் தலைநகராக மாற்றம் பெற்றது.

கி.பி 10-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜன் கங்கர்களிடமிருந்து கோலார் பகுதியை கைப்பற்றி தனது காலனி யாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான்.

கோலார் அம்மன் கோயிலில் உள்ள இராஜராஜனின் 12 - 22 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுக்கள் குவளாலநாடு நிகரிலிச்சோழ மண்டலத்தில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன.

PC: Shailesh.patil

கோலார் அம்மன் கோயில்

கோலார் அம்மன் கோயில்

காலை 8 மணிக்கு கிளம்பினால், 10 மணிக்கெல்லாம் கோலாரை அடைந்துவிடலாம். முதலில் நாம் காணவிருப்பது அம்மன் கோயில்.

கர்நாடக மாநிலத்தில் தங்க பூமி என்றழைக்கப்படும் கோலாரில் சோழர்கள் கட்டிய அம்மன் கோயில் இன்றும் புகழ்பெற்று விளங்குகிறது.

இங்குள்ள சிற்பங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சோழர்கள் தன் நாட்டை விரிவுபடுத்தியபோது ஏற்படுத்திய கோயில் என்பதால் மிகவும் சக்திவாய்ந்த அம்மன் என்று நம்பப்படுகிறது.

PC: Hariharan Arunachalam

அந்தரகங்கை குகைகள்

அந்தரகங்கை குகைகள்


கோலார் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த அந்தரகங்கை கோயில். கோலாரில் கட்டாயமாக வருகை தரவேண்டிய இடம் இதுவாகும்.

இந்த இடம் உங்களுக்கு மிக சிறந்த மலையேற்ற அனுபவத்தைத் தருகிறது.

சதாசுரங்கன் மலையின் மேல் அமைந்துள்ளது இந்த குகை. கோயிலின் குளம் வறட்சி காலங்களிலும் நீர் நிறைந்தே காணப்படுகிறது.

PC: Vedamurthy J

சோமேஸ்வரர் கோயில்

சோமேஸ்வரர் கோயில்

கோலார் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் இந்த சோமேஸ்வரர் கோயில் ஆகும். சிவனின் அவதாரமான சோமேஸ்வரருக்காக கோலார் நகரின்

மையத்தின் இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.

விஜய நகர சாம்ராஜ்யத்தின் காலத்தில் வெளிநாட்டு உறவுகளும் போக்குவரத்தும் சிறப்பக இருந்ததற்கு சான்றாக இந்த கலவையான கலையம்சத்தை கொண்டுள்ள கோயில்

விளங்குகிறது.

PC: Dineshkannambadi

கோடி லிங்கேஸ்வரா கோயில்

கோடி லிங்கேஸ்வரா கோயில்


கோலார் தங்க வயலிலிருந்து சுமார் 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது உலகப்புகழ் பெற்ற கோடி லிங்கேஸ்வரன் கோயில்.

108 அடி உயரம் கொண்டு உலகின் மிகப்பெரிய சிவலிங்கத்தின் வீடாக பெயர்பெற்றுள்ளது இந்த கோடி லிங்கேஸ்வரா கோயில்.

PC: Visurao4all

அவனி

அவனி

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி அவனி.

கோலாரிலிருந்து 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.

இந்த இடத்தில் ராமாயண காலத்தில் சீதா வாழ்ந்ததாகவும், அவருக்காக அர்ப்பணிப்பதற்காகவே இந்த கோயில் அமைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

PC: Dineshkannambadi

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X