Search
  • Follow NativePlanet
Share
» »சசிகலா கட்டுப்பாட்டில் இருந்த இடங்கள் இவை!

சசிகலா கட்டுப்பாட்டில் இருந்த இடங்கள் இவை!

சசிகலாவுக்கு தொடர்புடைய இடங்கள் இவை தெரியுமா?

சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் உறுதி செய்து அறிவித்தது. இதையடுத்து 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சசிகலாவைப் பற்றித்தான் தமிழ்நாடே பேசிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் உங்களுத்தெரியாத சில விசயங்களை இங்கு தெரிந்து கொள்வோம். சசிகலாவின் கட்டுப்பாட்டில் எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் மட்டுமில்லை.. சில இடங்களும் இருந்துருக்கின்றன. இவற்றுள் பல சுற்றுலாத் தளங்களாகும்.

சசிகலா தன் வாழ்நாளில் தடம் பதித்த இடங்கள் எவை என்று அறிந்துகொள்ள ஆவலா இதைப்படிங்க அப்போ...

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி

சசிகலாவின் தாத்தா சந்திரசேகர் திருத்துறைப்பூண்டியில் மருந்துகடை நடத்தி வந்தார். அவரது மறைவுக்குப் பின் சசிகலாவின் தந்தை விவேகானந்தன் அந்த கடையை நடத்தினார். இவரது மனைவி கிருஷ்ணவேனி. இந்த தம்பதியருக்கு 5வது மகளாக பிறந்தவர் சசிகலா. இங்குதான் சசிகலா வளர்ந்தார்.

PC: Srini

திருத்துறைப்பூண்டி சுற்றுலா

திருத்துறைப்பூண்டி சுற்றுலா

திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தலைநகர் சென்னையிலிருந்து 335 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

திருத்துறைப்பூண்டியில் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.

பறவைகள் சரணாலயம்

பறவைகள் சரணாலயம்

திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள உதயமார்த்தாண்டபுரத்தில் பறவைகள் சரணாலயம் ஒன்று உள்ளது.

PC: JM Garg

 பிறவிமருந்தீஸ்வரர் கோயில்

பிறவிமருந்தீஸ்வரர் கோயில்

பல அற்புதங்கள் நிகழ்த்தும் பிறவிமருந்தீஸ்வரர் கோயில் திருத்துறைப் பூண்டியில் அமைந்துள்ளது.

PC: Raavanan

ஆஞ்சநேயர் சிலை

ஆஞ்சநேயர் சிலை

திருத்துறைப்பூண்டியில் 32அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

PC:John hill

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

திருத்துறைப் பூண்டிக்கு செல்ல நிறைய ஊர்களிலிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

திருவாரூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை, வேளாங்கன்னி, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருச்சி, தஞ்சாவூர் முதலிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருவாரூர், காரைக்குடி முதலிய ரயில் நிலையங்கள் அருகாமையில் உள்ளன.

மன்னார்குடி

மன்னார்குடி

பாரத ஸ்டேட் வங்கியில் பணியில் இருந்த சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனம் 1950 இன் இறுதியில் மன்னார்குடிக்கு மாற்றலாகி வந்ததால் விவேகானந்தனின் குடும்பம் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தார்கள்.

மன்னார்குடி சுற்றுலா

மன்னார்குடி சுற்றுலா

மன்னார்குடி , திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சிப்பகுதியாகும். இங்கு சுற்றுலா செல்வதற்கென பல்வேறு இடங்கள் உள்ளன.

ராஜகோபாலசாமி திருக்கோயில்

ராஜகோபாலசாமி திருக்கோயில்


1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவில் உலகப்புகழ் பெற்றதாகும்.

முற்பிறவி பாவங்களைப் போக்கும் இந்த கோவில் மன்னார்குடியில் அமைந்துள்ளது.


PC: Chitrinee

தீர்த்தக்குளம்

தீர்த்தக்குளம்

கோவிலில் இருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது.

கிருஷ்ணரின் தரிசனம் வேண்டி முனிவர்கள் தவமிருந்த தலம் என்ற பெருமையைக் கொண்டது இது. இந்த தீர்த்தக்குளத்தை யமுனை நதியாக கருதுகின்றனர்.

Pc: Ssriram mt

மன்னார்குடி மல்லிநாதசுவாமி ஜினாலயம்

மன்னார்குடி மல்லிநாதசுவாமி ஜினாலயம்

மல்லிநாதசுவாமி ஜினாலயம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள சமணர் கோயிலாகும்.

ராஜகோபுரம், கர்ப்பகிரகம், அந்த்ராளம், அர்த்தமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம், கொடி மரம், சமையலறை, பாதுகாப்பு அறை ஆகிய அமைப்புகளை இக்கோயில் கொண்டுள்ளது.

PC: ArugaNathan

திருவாரூர்

திருவாரூர்

திமுக தலைவர் மு. கருணாநிதி தலைமையில் திமுக ஆதரவாளரான நடராசன் என்பரை மணமுடித்தார் சசிகலா.

திருவாரூர் மனுநீதிச் சோழன் ஆண்ட ஊர் என்பது சிறப்பு

திருவாரூரில் சுற்றுலா செல்வதற்கென்று பல்வேறு இடங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை, திருவாரூர் தியாகராஜர் கோயில் , தூவாய் நாதர் கோயில் ஆகும்.

PC: wiki

கடலூர்

கடலூர்

திருமணம் முடிந்த சில வருடங்களில், கடலூர் ஆட்சியர் சந்திரலேகாவுடன் நெருக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கத்தைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார் சசிகலா.

சந்திரலேகா உதவியுடன் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா. நாளடைவில் ஜெயலலிதாவுடன் நெருக்கமானார் சசிகலா.

கடலூரின் இயற்பெயர் கூடலூர் என்பதாகும். கெடிலம், பரவனாறு,பெண்ணையாறு ஆகியவை கூடும் இடமென்பதால் இப்பெயர் பெற்றது.

கடலூரில் சுற்றுலாவிற்கு ஏற்ற இடங்களாக வெள்ளிக்கடற்கரை, செயிண்ட் டேவிட் கோட்டை, பாடலீஸ்வரர் கோயில் முதலியன உள்ளன.

PC: Mohan krishnan

சென்னை

சென்னை

ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக சென்னைக்கு குடிபெயர்ந்தார் சசிகலா. அவரது வீட்டின் அருகே சிடி கடை வைத்து நடத்தி வந்தனர் சசிகலா குடும்பத்தினர்.

சென்னையில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடங்கள்

போயஸ்கார்டன்

போயஸ்கார்டன்

எம்ஜியார் மறைவுக்குப் பிறகு, தனிமைபடுத்தப்பட்ட ஜெயலலிதாவுக்கு இன்னும் நெருக்கமான சசிகலா போயஸ்கார்டனுக்கே குடிபெயர்க்கப்பட்டார். பின்னர் தன்னை ஒரு சகோதரியாக பாவித்து ஜெயலலிதாவுடனேயே பயணித்து வந்தார்.

கூவத்தூர்

கூவத்தூர்

அதிகாரப்போட்டியில் ஓபிஎஸ், சசிகலா தனித்தனியாக ஆனபோது எம்எல்ஏக்களை தன் கட்டுப்பாட்டில், கூவத்தூரில் ரிசார்ட் ஒன்றில் வைத்திருந்தார் சசிகலா.

கூவத்தூரில் சுற்றுலா செல்பவர்கள் தங்கும் வசதிகளுடன் கோல்டன் பே ரிசார்ட் உள்பட பல்வேறு விடுதிகள் உள்ளன.

இந்த ரிசார்ட்டில் தங்குவதற்கு ஒருநாள் வாடகை 5500 லிருந்து 6500 வரை ஆகும்.

சுத்தமான, சுகாதாரமான அறைகள், படுக்கை வசதிகள், உணவுகள் என ஓய்வெடுக்க ஏற்ற விடுதிகள் பல சென்னைக்கு அருகாமையில் உள்ளன.

Read more about: travel sasikala
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X