Search
  • Follow NativePlanet
Share
» »வட இந்தியாவில் 30 வயதுக்குள் கண்டிப்பாக போக வேண்டிய இடங்கள்

வட இந்தியாவில் 30 வயதுக்குள் கண்டிப்பாக போக வேண்டிய இடங்கள்

30 வயது வரையிலான வாழ்க்கை என்பது விலைமதிப்பற்றது. பொறுப்புகள் குறைவு, உடலிலும் மனதிலும் இளமை போங்க நினைத்ததை செய்து முடித்திடும் ஆற்றல் நமக்குள் இருக்கும். முப்பது வயதுக்குள் நாம் செய்யும் பயணங்கள் வாழ்க்கையை பற்றிய நமது பார்வையையே மாற்றக்கூடும், பயணங்கள் தரும் அனுபவங்களும், புரிதல்களும் வேறெந்த விஷயங்களையும் விட மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தரும்.

கிடைத்திருக்கும் இந்த ஒரு வாழ்க்கையையும் முழுதாக அனுபவிக்கலாம் வாருங்கள், 30 வயதுக்குள் வட இந்தியாவில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள், செல்ல வேண்டிய இடங்கள் எவை எவை என்பதை தெரிந்து கொள்வோம்.

செவ்வாய்க்கிழமை சிறப்பு சலுகை: Makemytripஇல் ஹோட்டல் மற்றும் விமான கட்டணங்களில் 50% வரை தள்ளுபடி பெற இங்கே கிளிக்குங்கள்

சாந்தினி சௌக் உணவுகள்:

சாந்தினி சௌக் உணவுகள்:

பழைய டில்லியில் அமைந்திருக்கும் முக்கியமான வர்த்தக வளாகமான சாந்தினி சௌக் தாஜ் மகாலை கட்டிய முகலாய மன்னன் ஷாஹ் ஜகானால் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். வகைவகையான உணவுகள் மற்றும் இனிப்புகள், எலெக்ட்ரானிக் உபகரணங்கள், ஆடை அலங்கார பொருட்கள், புத்தகங்கள் என இங்கு கிடைகாகத பொருட்களே இல்லை எனலாம். இங்குள்ள கடைகளில் அட்சரம் பிசகாத சுவையில் இந்திய உணவுகள் கிடைக்கின்றன. விதவிதமான பரோட்டக்கள், சுடச்சுட பொறிக்கப்பட்ட பொன்னிறமான ஜிலேபி, தீயில் வாட்டப்பட்ட கபாப்கள் என வட இந்திய உணவுகளை ருசிபார்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த சாந்தினி சௌக்கிற்கு வர வேண்டும்.

Photo:Rajesh_India

யாக் சவாரி, லடாக்:

யாக் சவாரி, லடாக்:

நமிள்ள பலர் குதிரைல சவாரி செஞ்சிருக்கலாம், யானைல சவாரி செஞ்சிருக்கலாம் ஏன் மருதநாயகம் கமல் மாதிரி எருமைல கூட சவாரி செஞ்சிருக்கலாம் ஆனா 6000 அடி உயரத்துல ஹிமால மலை மேல யாக் மாடுகள் மேல சவாரி செஞ்சிருக்கீங்களா?. இத செய்யனும்னு ஆசைப்பட்டீங்கன்னா நீங்க போக வேண்டிய இடம் லடாக். நம்ம வீடுகள்ல பசு மாடு வளர்ப்பது போல இந்தப்பகுதிகள்ள யாக் வகை மாடுகளை வளர்க்குறாங்க. 1000 கிலோ எடை இருக்கும் இந்த மாடுகள் மேல உட்கார்ந்து லடாக்கின் அழகை ரசித்தபடி சவாரி செய்யுறது வாழ்க்கைல மறக்க முடியாத ஒரு அனுபவமா இருக்கும்.

Photo:Bruce Fingerhood

ராஜஸ்தானில் புல்லெட் பயணம்:

ராஜஸ்தானில் புல்லெட் பயணம்:

பைக் பிரியர்கள் பலருக்கு புல்லெட் வண்டி இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது. மற்ற வண்டிகளை காட்டிலும் புல்லெட்டில் கிடைக்கிற கம்பீரமும், வசதியும் பலரை இந்த வண்டிக்கு அடிமையாக்கும். வெப்பம் தகிக்கும் ராஜஸ்தான் மாநிலத்துல தார் பாலை வனத்தை ஒட்டி புல்லெட் வண்டியில் நண்பர்களுடன் ஒரு நீண்ட தூர பயணம் செய்யுங்கள். உங்கள் மோட்டார் சைக்கிள் டைரியில் மறக்க முடியாத ஒரு அனுபவமாக அமையும்.

Photo:Anshul Dabral

கோகர்ணா பீச்சில் ஒரு உலாச பொழுது:

கோகர்ணா பீச்சில் ஒரு உலாச பொழுது:

பெங்களுருவில் இருந்து 450 கி.மீ தொலைவில் இருக்கும் கோகர்ணா என்னும் சிறிய நகரத்தில் இன்னும் அதிகம் பிரபலம் ஆகாத அதே சமயம் நண்பர்களுடன் கடற்கரையில் விளையாடியபடி பொழுதை கழிக்க அற்புதமான கோகர்ணா கடற்க்கரை. இந்த நகரத்தில் தான் கர்நாடகாவின் மிக முக்கியமான சிவன் கோயிலான மகாபலேஷ்வர் கோயில் இருக்கிறது. தான் ஆன்மீக அடையாளங்களையும் தாண்டி இந்த சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாக கோகர்ணா கடற்க்கரை இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் நண்பர்களுடன் நிச்சயம் இங்கு சென்று வாருங்கள்.

Photo:Lovell D'souza

மார்க்கா பள்ளத்தாக்கில் ட்ரெக்கிங்:

மார்க்கா பள்ளத்தாக்கில் ட்ரெக்கிங்:


லடாக்கில் ட்ரெக்கிங் செய்ய சிறந்த இடங்களில் ஒன்றாக இந்த மார்க்கா பள்ளத்தாக்கு திகழ்கிறது. லடாக்கில் ஏறத்தாழ 18000 அடி உயரத்துக்கு மேல் இருக்கும் இங்கு ட்ரெக்கிங் செல்கையில் நமக்கு பார்க்கக்கிடைக்காத லடாக்கின் பேரழகை ரசிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும். கண்டாலா லா மற்றும் கொண்க்மாறு லா ஆகிய இரண்டு மலை கணவாய்களை கடந்து செல்லும் இந்த ட்ரெக்கிங் பயணம் விவரிக்க முடியாத காட்சிகளை உங்களுக்கு வழங்கும்.

Photo:M+M Photographers

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா:

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா:


யானை மீது அமர்ந்து சபாரி செய்தபடி மிகவும் அபூர்வமாக பார்க்க கிடைக்கும் விலங்குகளை பார்த்து ரசிப்பது எத்தனை சுவாரஸ்யமாக இருக்கும். உத்தரகண்ட் மாநிலத்தில் இருக்கும் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் அப்படியானதொரு அனுபவத்தை நீங்கள் பெறலாம். வங்காளப் புலி, ராஜ நாகம், காடு நரிகள், ஆந்தைகள் என பலவிதமான விலங்குகளை நாம் இந்த பூங்காவில் பார்க்கலாம். Wildlife Photography துறையில் ஆர்வம் இருப்பவர்கள் இங்கு கட்டாயம் வர வேண்டும்.

Photo:Arindam Bhattacharya

கோவா பீச் பார்ட்டி:

கோவா பீச் பார்ட்டி:

கொண்டாட்டங்களின் தலைநகரான கோவாவிற்கு வராமல் நமது இளமை நிச்சயம் நிறைவடையாது. காதை பிளக்கும் இசை, ஆறாக ஓடும் உற்சாக பானங்கள், எந்த கட்டுப்பாடும் இல்லாத பார்டிகள் என நண்பர்களுடன் கொண்டாட அவசியம் கோவா வரவேண்டும். அதிலும் காண்டலின் பீச்சில் நடக்கும் இரவு பார்டிகள் நம்மை இந்திர லோகத்துக்கே அழைத்துச்செல்லும்.

Photo:Ipshita Bhattacharya

மனாலி - லெஹ் சாலைப்பயணம்:

மனாலி - லெஹ் சாலைப்பயணம்:

இந்தியாவில் இருக்கும் அற்புதமான சாலைகளில் ஒன்று இந்த மனாலி - லெஹ் சாலையாகும். 475 கி.மீ நீளம் உள்ள இந்த சாலையில் உங்கள் உற்ற நண்பர்களுடன் இந்த சாலையில் முப்பது வயதை கடக்கும் முன் கண்டிப்பாக ஒரு முறையேனும் இதில் பயணம் செய்யுங்கள். இந்த சாலையில் தான் உலகில் வண்டியில் பயணம் செய்யகூடிய மிக உயரமான பகுதியும், வண்டியை தானாகவே இழுத்துச்செல்லும் காந்த மலைகளும் இருக்கின்றன.

Photo:Miran Rijavec

ரிஷிகேஷில் சாகச படகு சவாரி:

ரிஷிகேஷில் சாகச படகு சவாரி:


இந்துக்கள் மத்தியில் யாத்ரீகத்திர்க்கு புகழ் பெற்ற ரிஷிகேஷ் தற்போது ரேப்டிங் எனப்படும் சாகச படகு சவாரிக்கும் பிரபலமடைந்து வருகிறது. ஆர்ப்பரித்து ஓடும் கங்கை ஆற்றில் நண்பர்களுடன் படகு சவாரி செய்வதென்பது மறக்க முடியாத ஒரு அனுபவமாக அமையும்.

Photo:Philip Larson

பிருந்தாவனத்தில் ஹோலி பண்டிகை:

பிருந்தாவனத்தில் ஹோலி பண்டிகை:

கிருஷ்ணர் தன சிறு பிராயத்தை கழித்த இடமான பிருந்தாவனத்தில் ஒவ்வொரு வருடமும் வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாடங்கள் இசைக்க ஒருவருக்கொருவர் வண்ணங்களை வாரி அடித்தவாறு ஆனந்தமாக கொண்டாடப்படும் இந்தப்பண்டிகைகை நாளன்று இங்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. நீங்களும் ஒருமுறையேனும் ஹோலி பண்டிகையன்று பிருந்தாவனம் வந்து சிறப்பாக கொண்டாடுங்கள்.

Photo:

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X