Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் போட்டோ எடுக்க சூப்பரான இடங்கள்

இந்தியாவில் போட்டோ எடுக்க சூப்பரான இடங்கள்

முன்பெல்லாம் நம் வீட்டு சுப காரியங்களுக்கு புகைப்படம் எடுக்க வரும் புகைப்பட கலைஞரை ஏதோ விஞ்ஞானி போல பார்ப்போம். குவியத்தை சரியாக அமைத்து நேர்த்தியான புகைப்படம் எடுப்பதெல்லாம் நிலாவுக்கு ராக்கெட் விடுவதற்கு ஒப்பானதாக இருந்தது. இந்த நிலை DSLR எனப்படும் டிஜிட்டல் கேமராக்களின் வருகைக்கு பிறகு தலைகீழாக மாறிவிட்டது.

ஒரு தொழில் சார்ந்த விஷயம் என்பதை கடந்து பலருக்கும் ஒரு பொழுதுபோக்காக இந்த 'போட்டோ கிராபி' இருக்கிறது. ஒரு அருமையான, நின்று கவனிக்கத்தூண்டும் ஒரு புகைப்படத்தை எடுக்க பயணம் செய்ய வேண்டியது மிக மிக அவசியம்.

பயணங்களின் போது கிடைக்கும் சில அற்புத தருணங்களை குவியத்தில் சிறைபிடிக்கும் அந்த மகிழ்ச்சி எதனோடும் ஒப்பிட முடியாததாகும். இந்த கட்டுரையில் இந்தியாவில் புகைப்படம் எடுக்க அற்புதமான காட்சிகளை வழங்கும் இடங்களை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

லோனவலா :

லோனவலா :

பசுமை சூழ்ந்த மலைகளும், அதன் மேல் நூற்றாண்டுகள் பழமையான கோட்டைகளும், மலைகளின் ஊடாக பாய்ந்தோடும் நதிகளும் நிரம்பிய ஏகாந்தமான அழகு ததும்பும் இடம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் புகழ் பெற்ற மலை வாசஸ்த்தலமான லோனவலா ஆகும்.

Photo:Amogh Sarpotdar

லோனவலா :

லோனவலா :

மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் லோனவலாவிற்கு செல்ல மழைக்காலமே சிறந்ததாக சொல்லப்படுகிறது. லோனவலாவில் இருந்து 3 கி.மீ தொலைவில் கண்டாலா என்ற இடம் இருக்கிறது. இதுவும் சுற்றிப்பார்க்க நல்லதொரு இடமாகும்.

Photo:Alosh Bennett

லோனவலா :

லோனவலா :

லோனவாலாவில் இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுக்க நல்ல இடங்களில் ஒன்று 'ராஜமச்சி பாயிண்ட்' ஆகும். பசுமை சூழ்ந்த இந்த இடத்தில் தான் மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் கோட்டை ஒன்றும் இருக்கிறது. லோனவலாவின் மொத்த அழகையும் இந்த கோட்டையின் மேல் நின்று நாம் புகைப்படம் எடுக்கலாம்.

Photo:Ravinder Singh Gill

லோனவலா :

லோனவலா :

புத்த துறவிகள் வாழ்ந்த கர்லா குகை, டியூக்ஸ் மூக்கு என்ற ட்ரெக்கிங் செல்ல ஏற்ற மலைப்பகுதி, புஷி அணை என சுற்றிப்பார்க்கவும் புகைப்படம் எடுக்கவும் ஏராளமான இடங்கள் இந்த பகுதியில் இருக்கின்றன.

டியூக்ஸ் மூக்கு Photo:Alewis2388

லோனவலா :

லோனவலா :

லோஹகட் கோட்டை என்பதன் பொருள் இரும்புக் கோட்டை என்பதாகும். 1050 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கோட்டை சத்ரபதி சிவாஜியால் சிறப்பாக பயன்படுத்தப்பட்டும்; விதர்பா, மராத்தா போன்ற பல ராஜவம்சங்களுக்கு அரன்மணையாகவும் திகழ்ந்திருக்கிறது. இந்தக் கோட்டையின் பிரம்மாண்டமான நான்கு வாயிற்கதவுகளும் இன்றும் நல்ல நிலையில் உறுதியாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

Photo:vivek Joshi

லோனவலா :

லோனவலா :

லோனவலா மும்பையில் இருந்து 96 கி.மீ தொலைவிலும் புனே நகரில் இருந்து 60 கி.மீ தொலைவிலும் அமைந்திருக்கிறது. வார விடுமுறைகளின் போது நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ சென்று வர இந்த இடம் நல்லதொரு தேர்வாக அமையும். லோனவலாவை பற்றிய மேலும் அதிக தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Nagesh Kamath

மூணார் :

மூணார் :

கடவுளின் சொந்த தேசத்தில் இருக்கும் அற்புதமான இடங்களில் ஒன்றான மூணாறில் பரிசுத்தமான இயற்கையின் பேரழகு கொட்டிக்கிடக்கிறது. காதலர்களின் சொர்க்க பூமி என்று சொல்லப்படும் இந்த மூணார் கேமராவுடன் திரியும் புகைப்பட ஆர்வலர்களுக்கும் சொர்க்க பூமி தான். மூணாறில் இருக்கும் அழகிய இடங்களை பற்றி அடுத்த பக்கத்தில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Photo:Bimal K C

மூணார் :

மூணார் :

மூணாறில் இருந்து 5 கி.மீ தொலைவில் இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம் என்ற இடம் இருக்கிறது. பச்சை போர்வை போர்த்தியது போல எங்கு பார்த்தாலும் பசுமையாக காட்சியளிக்கிறது இவ்விடம். அதிகாலையில் சூரியன் உதயமாகும் பொழுது இங்குள்ள நீலவானில் நடக்கும் வர்ணஜாலங்களை புகைப்படம் எடுக்க தவறாதீர்கள்.

Photo: Flickr

மூணார் :

மூணார் :

சூசைட் பாயிண்ட் :

ஊட்டி, கொடைக்கானலில் இருப்பது போலவே மூணாறிலும் சூசைட் பாயிண்ட் என்ற இடம் இருக்கிறது. ஆனால் மற்ற மலை வாசஸ்த்தளங்களில் இருக்கும் சூசைட் பாயிண்ட் இடங்களை காட்டிலும் இங்கே மூணாறில் இருக்கும் சூசைட் பாயிண்டில் நின்று அற்புதமான காட்சிகளை காண முடியும்.

Photo:himanisdas

மூணார் :

மூணார் :

கொலுக்குமலை :

மூணாறில் இருந்து 30 கி.மீ தொலைவில் இன்னும் அதிகம் அறியப்படாத அற்புதமான சுற்றுலாத்தலமாக இருக்கிறது. தேயிலை தோட்டங்களால் நிரம்பிய இந்த கொலுக்குமலையில் சில இரவுகள் கேம்ப் அமைத்து தங்கி இந்த இடத்தின் இயற்கையழகை குவியத்தில் சிறைபிடித்திடுங்கள்.

Photo:Prasanth Chandran

மூணார் :

மூணார் :

மூணாரில் இருக்கும் தங்கும் விடுதிகள் பற்றிய தகவல்களையும், அங்கே எப்படி சென்றடைவது என்பது பற்றிய தகவல்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Prasanth Chandran

மூணார் :

மூணார் :

கொலுக்குமலையில் நாம் தவற விடக்கூடாத விஷயங்களில் ஒன்று அங்கு அதிகாலையில் நிகழும் சூரிய உதயமாகும்.

Photo:zachary jean paradis

ஆலப்புழா :

ஆலப்புழா :

ஆலப்புழா என்றதுமே நம் நினைவுக்கு வருவது படகுவீடுகள் தான். அலைகள் எழாத உப்பங்கழி ஓடைகளில் படகுவீடுகளில் பயணிப்பது மிகவும் காதல் ததும்புவதாய் இருக்கும். உங்கள் மனைவி மீது காதல் உள்ளது போல DSLR கேமராவின் மீதும் காதல் இருந்தால் நிச்சயம் அதனுடன் தேனிலவு கொண்டாட ஆலப்புழாவிற்கு செல்லுங்கள்.

ஆலப்புழா :

ஆலப்புழா :

மிகவும் பசுமை நிறைந்த ஆலப்புழா நகரை படகு வீடுகளில் வலம் வருகையில் எதோ நெதர்லாந்தின் ஓடைகளில் பயணிப்பது போன்ற அனுபவம் ஏற்ப்படும். கேரளாவின் அழகையும், மலையாளிகளின் வாழ்க்கையோடு ஏரிகளும், ஓடைகளும் எத்தகைய தாக்கத்தை கொண்டுள்ளன என்பதை கேமராவின் மூலம் இந்த படகுவீடு பயணத்தின் போது நாம் பதிவு செய்யலாம்.

ஆலப்புழா :

ஆலப்புழா :

ஆலப்புழாவை ஒட்டியே கோட்டயம் மாவட்டத்தில் இருக்கும் வேம்பநாடு ஏரியும் நாம் நிச்சயம் செல்ல வேண்டிய இடமாகும். ஆசியாவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான இதில் படகு வீடு பயணமும். ஆகஸ்டு மாதம் நடைபெறும் 'பாம்பு படகு' போட்டிகளும் உலகப்பிரசித்தம்.

ஆலப்புழா :

ஆலப்புழா :

கேரளாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருப்பதால் ஆலப்புழா கோயம்பத்தூர், திருவனந்தபுரம், மும்பை, பெங்களுரு ஆகிய நகரங்களுடன் தேசிய நெடுஞ்சாலை மூலமாக இணைக்கப்பட்டுள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X