Search
  • Follow NativePlanet
Share
» »திருமணம் செய்றதுக்கு முன்னாடியே இதெல்லாம் அனுபவிச்சடனும்! ஏன் தெரியுமா?

திருமணம் செய்றதுக்கு முன்னாடியே இதெல்லாம் அனுபவிச்சடனும்! ஏன் தெரியுமா?

"சீக்கிரம் பையனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சு கால்கட்ட மாட்டிவிடுங்க" என்று 25 வயது ஆனதுமே நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் கல்யாண பேச்சை ஆரம்பித்து விடுவார்கள். எவ்வளவு தான் நம்மை ஆழமாக புரிந்துகொள்ளும் மனைவியோ கணவனோ அமைந்தாலும் நாம் செய்ய நினைத்த, கொண்டாடி மகிழ வேண்டும் என்று ஆசைப்பட்ட பலவற்றை கல்யாணத்திற்கு பிறகு செய்ய முடியாமல் போகலாம் என்பது தான் உண்மை.

எனவே, மீண்டும் கிடைக்காத திருமணதிற்கு முன்பான வாழ்கையின் அற்புத நாட்களில் நாம் நிச்சயம் செல்ல வேண்டிய அங்கே சென்று செய்ய வேண்டிய இடங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

 சன் பர்ன் பார்டி திருவிழா - கோவா:

சன் பர்ன் பார்டி திருவிழா - கோவா:

திருமணமான பிறகு நண்பர்களுடன் பார்டிக்கு கிளம்புகிறேன் என்று சொன்னால் சமையலறையில் இருந்து பூரிக்கட்டை பறந்து வரலாம் என்பதால் திருமணதிற்கு முன்பே நண்பர்களுடன் கோவா சென்று சன் பர்ன் பார்டி திருவிழாவில் கலந்துகொள்ளுங்கள். இந்தியாவில் நடக்கும் பார்டிகளின் உச்சமாக இந்த சன் பர்ன் பார்டி சொல்லப்படுகிறது.

Photo:Ale

 சன் பர்ன் பார்டி திருவிழா - கோவா:

சன் பர்ன் பார்டி திருவிழா - கோவா:

கோவாவில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 27-29ஆம் தேதிகளில் கோவா கடற்க்கரையில்நடக்கும் இந்த பார்டி கொண்டாட்டத்தில் உலகின் தலைசிறந்த டீஜெக்கள் கலந்துகொண்டு இசைமாலை பொழிகின்றனர். விடிய விடிய நடக்கும் இந்த பார்டியில் நண்பர்களுடன் ஆசைதீர சோமபானம் அருந்தியபடி கொண்டாடலாம்.

Photo:Ale

 சன் பர்ன் பார்டி திருவிழா - கோவா:

சன் பர்ன் பார்டி திருவிழா - கோவா:

கோவாவின் புகழ்பெற்ற கடற்க்கரைகளில் ஒன்றான வகேடோர் பீச்சில் நடக்கும் இந்த பார்டி திருவிழாவில் கலந்துகொள்ள முன்பதிவு செய்து டிக்கெட் பெறவேண்டியதும் அவசியம். வெறுமனே ஆட்டம், பாட்டம் என்பதோடு மட்டும் இல்லாமல் இங்கே பீச் வாலிபால் விளையாடலாம், ஆபத்து நிறைந்த பாறை ஏற்றத்தில் ஈடுபடலாம், இங்கே உள்ள கடைகளில் வித்தியாசமான பொருட்களை ஷாப்பிங் செய்யலாம்.

Photo:Ale

 சன் பர்ன் பார்டி திருவிழா - கோவா:

சன் பர்ன் பார்டி திருவிழா - கோவா:

இந்த பார்டி கொண்டாடும் சமயத்தில் புத்தாண்டு கொண்டாடத்திலும் ஈடுபட நிறையப்பேர் கோவா வருவார்கள் என்பதால் ஹோட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்வதும் அவசியம். கோவாவை எப்படி அடைவது என்கிற விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள். கோவாவில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள்.

Photo:Kaushal Karkhanis

ஸ்டாக் காங்கிரி - மலைக்க வைக்கும் ஒரு சாகச பயணம்:

ஸ்டாக் காங்கிரி - மலைக்க வைக்கும் ஒரு சாகச பயணம்:

லடாக், இயற்கையின் பரிசுத்தமான அழகை கொண்டாட விரும்புகிறவர்களுக்கு சொர்க்க பூமி. ஹிமாலய மலையில் அமைந்திருக்கும் இந்த இடம் மனதுக்கு பரவசமூட்டும் இடங்களால் நிரம்பியிருக்கிறது. லாடாக்கில் இருக்கும் அப்படியொரு மிகச்சிறந்த இடம் தான் ஸ்டாக் காங்கிரி மலைச்சிகரம்.

Photo:Jørn Eriksson

ஸ்டாக் காங்கிரி - மலைக்க வைக்கும் ஒரு சாகச பயணம்:

ஸ்டாக் காங்கிரி - மலைக்க வைக்கும் ஒரு சாகச பயணம்:

கடல் மட்டத்தில் இருந்து 20,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த ஸ்டாக் காங்கிரி மலைச்சிகரம் தான் லடாக்கின் மிக உயரமான சிகரம் ஆகும். சாகசங்களில் ஈடுபட விரும்புபவர்கள் நிச்சயம் இந்த சிகரத்தில் மலையேற்றத்தில் ஈடுபடவேண்டும்.

Photo:Nomad Tales

ஸ்டாக் காங்கிரி - மலைக்க வைக்கும் ஒரு சாகச பயணம்:

ஸ்டாக் காங்கிரி - மலைக்க வைக்கும் ஒரு சாகச பயணம்:

ஹெமிஸ் தேசிய பூங்காவினுள் அமைந்திருக்கும் இந்த சிகரம் லடாக்கின் தலைநகரான லெஹ் வில் இருந்து 24கி.மீ தென்கிழக்கே உள்ளது. கடினமான சாகசப்பயணம் தான் என்றாலும் இதன் உச்சியில் இருந்து காணக்கிடைக்கும் அற்புதமான காட்சிகளை காண்பதற்காக பலரும் ஸ்டாக் காங்கிரி சிகரத்தில் மலையேற்றத்தில் ஈடுபடுகின்றனர்.

Photo:Jørn Eriksson

ஸ்டாக் காங்கிரி - மலைக்க வைக்கும் ஒரு சாகச பயணம்:

ஸ்டாக் காங்கிரி - மலைக்க வைக்கும் ஒரு சாகச பயணம்:

லாடாக்கை எப்படி அடைவது?

லடாக்கில் உள்ள ஹோட்டல்கள்.

அந்தமானில் ஸ்கூபா டைவிங்:

அந்தமானில் ஸ்கூபா டைவிங்:

கடலுக்கு அடியில் மூழ்கி நாம் பார்த்திராத வேறொரு உலகத்தினுள் சஞ்சரிப்பது எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். அப்படியொரு அனுபவம் உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் செல்ல வேண்டியது அந்தமான் தீவுகளுக்கு தான்.

Photo:Nemo's great uncle

அந்தமானில் ஸ்கூபா டைவிங்:

அந்தமானில் ஸ்கூபா டைவிங்:

அந்தமான் & நிகோபார் தீவுகளில் இருக்கும் மிக அழகான இடம் என்றால் அது ஹவேலோக் தீவு தான். வெள்ளை மணல் கடற்கரையும், அன்பானவருடன் இயற்க்கை ரசிக்க அமைதியான சூழலையும் கொண்டுள்ள இங்கு ஸ்குபா டைவிங் விளையாட்டும் பிரபலமடைந்து வருகிறது.

Photo:Min Sheng Khoo

அந்தமானில் ஸ்கூபா டைவிங்:

அந்தமானில் ஸ்கூபா டைவிங்:

இந்த தீவு அமைந்திருக்கும் வங்காள விரிகுடா பகுதிதான் உலகத்திலேயே மிக செழுமையான கடல் வளத்தை கொண்டுள்ள பகுதிகளில் ஒன்றாக சொல்லப்படுகிறது. அந்த அளவு விதவிதமான மீன்களையும், ஆமைகளையும், பவளப்பாறைகள் மற்றும் கடல் தாவரங்களையும் நாம் இங்கே காண முடியும்.

Photo:Min Sheng Khoo

அந்தமானில் ஸ்கூபா டைவிங்:

அந்தமானில் ஸ்கூபா டைவிங்:

நண்பர்களுடன் பேரமைதி நிறைந்த கடல் என்னும் உலகத்தினுள் சஞ்சரிப்பது நம்முள் குறிப்பிடும்படியான மாற்றங்களை ஏற்ப்படுத்தும். திருமணதிற்கு முன்பு நிச்சயம் செல்ல வேண்டிய, செய்ய வேண்டிய விஷயம் இந்த அந்தமான் பயணமும் ஸ்கூபா டைவிங்கும் தான்.

Photo:Arun Katiyar

 தனுஷ்கோடி - இயற்கையால் சிதைந்த நகரம்:

தனுஷ்கோடி - இயற்கையால் சிதைந்த நகரம்:

இயற்கையின் பெரும் சீற்றத்தால் பேரழிவை சந்தித்து பெருமயானமாய் மாறிப்போன நகரம் ராமேஸ்வரம் தீவில் இருக்கும் தனுஷ்கோடி ஆகும். சிதைந்த நிலையில் இருக்கும் சர்ச் சுவர்களும், ரயில் நிலையமுமே 1964 புயலின் எச்சமாக நிற்கின்றன.

Photo:Nitish

 தனுஷ்கோடி - இயற்கையால் சிதைந்த நகரம்:

தனுஷ்கோடி - இயற்கையால் சிதைந்த நகரம்:

திருமணதிற்கு முன் ஏன் இங்கு செல்ல வேண்டும்?. இந்திய பெருநிலப்பரப்பின் முனையில் இருக்கும் தனுஷ்கோடி நகருக்கு செல்கையில் அங்கு நிலவும் பேரமைதியும், கடலலைகளின் ஓசையும் நம்மை எதோ செய்யும். விசித்திரமான உணர்வுகளை தனிமையில் ரசிக்கையில் நமக்குள் ஏற்படும்.

Photo:M.Mutta

 தனுஷ்கோடி - இயற்கையால் சிதைந்த நகரம்:

தனுஷ்கோடி - இயற்கையால் சிதைந்த நகரம்:

ராமேஸ்வரம் கோயிலில் இருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கும் தனுஸ்கோடி நகரை ராமேஸ்வரம் வரை ரயிலில் வந்தோ அல்லது சாலை மார்கமாகவோ எளிதாக அடையலாம். ராமேஸ்வரத்தை எப்படி அடைவது என்பது பற்றிய மேலதிக விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Nsmohan

லட்சத்தீவுகள் - பூலோக சொர்க்கம்:

லட்சத்தீவுகள் - பூலோக சொர்க்கம்:

லட்சத்தீவுகள் உண்மையில் தேனிலவு செல்ல சிறந்த இடம் என்றாலும் சிறந்த நண்பர்கள் கிடைப்பார்கலேயானால் லட்சத்தீவு பயணம்அற்புதமானதாக அமையும்.

Photo:Binu K S

லட்சத்தீவுகள் - பூலோக சொர்க்கம்:

லட்சத்தீவுகள் - பூலோக சொர்க்கம்:

சுத்தமான வெள்ளை மணல் கடற்கரைகள் , சக்குபா டைவிங் செய்யவும், ச்னார்கிளிங் செய்ய ஏதுவான கடல் பகுதிகளையும் கொண்டிருக்கும் லட்சத்தீவில் வேறெங்கும் இல்லாத இயற்கையின் பேரழகை எந்த தொந்தரவும் இன்றி ரசிக்கலாம்.

Photo:Thejas

லட்சத்தீவுகள் - பூலோக சொர்க்கம்:

லட்சத்தீவுகள் - பூலோக சொர்க்கம்:

லட்சத்தீவுகளில் தெள்ளத்தளிவான நீல நிறக்கடலில் இருக்கும் ஹோட்டல்களில் தங்குவதும் மிகப்புதுமையானதாகவும் புத்துனர்வூட்டுவதாகவும் அமையும்.

Photo:Thejas

லட்சத்தீவுகள் - பூலோக சொர்க்கம்:

லட்சத்தீவுகள் - பூலோக சொர்க்கம்:

லட்சதீவுகளுக்கு கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து படகு மூலம் சென்றடையலாம். லட்சதீவுகளை எப்படி அடைவது என்பது பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Vishal Bhave

Read more about: goa andaman ladak lakshadweep
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X