Search
  • Follow NativePlanet
Share
» »இந்திய அரசியலையே தடம் மாற்றிய ராஜீவ்காந்தி கொலை நடைபெற்றது எங்கே தெரியுமா?

இந்திய அரசியலையே தடம் மாற்றிய ராஜீவ்காந்தி கொலை நடைபெற்றது எங்கே தெரியுமா?

By Super Admin

 ரஜினி தனது அரசியல் கட்சியை இந்த இடத்தில்தான் தொடங்கவுள்ளார் எப்ப தெரியுமா? ரஜினி தனது அரசியல் கட்சியை இந்த இடத்தில்தான் தொடங்கவுள்ளார் எப்ப தெரியுமா?

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 25 வருடங்களாக சிறையில் வாடும் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதும் அதனை தொடர்ந்து இனி மத்திய அரசு எடுக்கவிருக்கும் முடிவும் தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

மறு ஜென்மத்தில் நம்பிக்கை கொண்டிருந்தாரா புத்தர்? என்ன சொல்கிறது அஜந்தா குகைமறு ஜென்மத்தில் நம்பிக்கை கொண்டிருந்தாரா புத்தர்? என்ன சொல்கிறது அஜந்தா குகை

தமிழீழ போராட்டத்தின் தலையெழுத்தையும், இந்திய அரசியலின் போக்கையும் மாற்றியது ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகும். இந்த துயர நிகழ்வு நடைபெற்ற ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்திக்கு நினைவகம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. அந்த இடத்தை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

ராஜீவின் அரசியல் பிரவேசம்:

1984ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது மகனான ராஜீவ்காந்தி இந்தியாவின் மிக இளம் பிரதமர் என்ற வாய்ப்பை பெற்றார். தாயார் இந்திராவும், தம்பி சஞ்சய் காந்தியும் அரசியலில் இருக்க ராஜீவ் அதிலிருந்து ஒதுங்கியே இருந்து வந்தார்.

ராஜீவின் அரசியல் பிரவேசம்:

ராஜீவின் அரசியல் பிரவேசம்:

"அரசியல் உங்களுக்கு வேண்டாம்" என்ற காதல் மனைவி சோனியாவின் விருப்பத்திற்கு மாறாகவே வேண்டாவெறுப்பாக ராஜீவ்காந்தியின் அரசியல் பிரவேசம் அமைந்தது.

எளிமையான விமான ஓட்டியாக இருந்த ராஜீவ்காந்தியின் அரசியல் வாழ்க்கையில் அடுத்தடுத்து பெரும்புயல் வீசியது. ஈழப் பிரச்சனையில் ராஜீவ் எடுத்த சில முடிவுகள் இறுதியில் அவருக்கே எமனாகவும் மாறியது.

ராஜீவ் படுகொலை:

ராஜீவ் படுகொலை:

இந்திய அமைதிப்படை(IPKF) இலங்கையில் செய்த அட்டூழியங்களுக்கு பழிவாங்கவும், இம்முறை ஆட்சிக்கு வந்தால் தங்கள் போராட்டத்தை நசுக்கிவிடுவார் என்ற சந்தேகத்தினாலும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வந்த ராஜீவ்காந்தி விடுதலைபுலிகள் அமைப்பை சேர்ந்த தாணு என்னும் பெண் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.

இன்றளவும் பல அவிழ்க்கப்படாத முடிச்சுகள் இருப்பதாக சொல்லப்படும் ராஜீவ் காந்தி கொலை நடைபெற்ற இடத்தில் நினைவகம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது.

ராஜீவ்காந்தி நினைவிடம்:

ராஜீவ்காந்தி நினைவிடம்:

ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் ஏழு உயரமான தூண்கள் எழுப்பப்பட்டுள்ளன.

ராஜீவ்காந்தி நினைவிடம்:

ராஜீவ்காந்தி நினைவிடம்:

நேரே சற்று தூரத்தில் கல் வைக்கப்பட்டிருக்கும் அந்த இடத்தில் தான் தாணு தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை விசையை அழுத்தி வெடிக்கச்செய்திருக்கிறார்.

ராஜீவ்காந்தி நினைவிடம்:

ராஜீவ்காந்தி நினைவிடம்:

குண்டுவெடிப்பின் போது ராஜீவ்காந்தி அணிந்திருந்த சட்டையின் மிச்சம் இதோ !!

ராஜீவ்காந்தி நினைவிடம்:

ராஜீவ்காந்தி நினைவிடம்:

நினைவகத்தில் ராஜீவ் காந்தி செய்த சாதனைகள் அனைத்தும் ஒரு சுவர்ச்சித்திரத்தில் வடிக்கப்பட்டுள்ளன. லைசன்ஸ் ராஜை ஒழித்தது, கிராம பகுதிகளில் இருக்கும் குழந்தைகளும் இலவச உயர்நிலை பள்ளிக்கல்வி பெற வழிவகை செய்தது, பொதுத்தொலைபேசிகளை பிரபலப்படுத்தியது போன்றவை இங்கே இடம்பெற்றுள்ளன.

ராஜீவ்காந்தி நினைவிடம்:

ராஜீவ்காந்தி நினைவிடம்:

இந்த நினைவகத்தில் இருக்கும் தூண்களின் அர்த்தம் பின்வருமாறு:

சக்ர தூண் தர்மத்தையும், போதி மர தூண் சத்தியத்தையும், சாத்ரி தூண் நியாயத்தையும், நட்சத்திர தூண் அறிவியலையும், தீச்சுடர் தூண் தியாகத்தையும், தாமரை தூண் அமைதியையும் குறிப்பதாக அமைக்கப்பட்டுள்ளன.

ராஜீவ்காந்தி நினைவிடம்:

ராஜீவ்காந்தி நினைவிடம்:

உயர்த்தப்பட்ட தளத்தில் பின்க் கிரேணைட் கல்லில் வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தியின் சிலை !!

ராஜீவ்காந்தி நினைவிடம்:

ராஜீவ்காந்தி நினைவிடம்:

நினைவகத்தில் உள்ள ராஜீவ்காந்தியின் வாழ்க்கை குறிப்பு. நீங்கள் சென்னையில் வசிப்பவராக இருந்தால் நிச்சயம் இந்த இடத்திற்கு ஒருமுறை சென்று வாருங்கள்.

Read more about: chennai memorial sriperumbudur
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X