Search
  • Follow NativePlanet
Share
» »ஜனாதிபதி மாளிகை - ஒரு பார்வை

ஜனாதிபதி மாளிகை - ஒரு பார்வை

By Staff

புது தில்லியில் இருக்கும் ராஷ்ட்ரபதி பவன், இந்தியாவின் அதிகாரப்பூர்வமான ஜனாதிபதி மாளிகை. இந்த மாளிகையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.

ராஷ்ட்ரபதி பவனை கட்டி முடிக்க 17 ஆண்டுகள் ஆனது. 29000 தொழிலாளிகள் உழைப்பில், 70 கோடி செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது.

மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்; ஜனாதிபதி அறை, விருந்தினர் அறை, பணியாளர்கள் அறை எல்லாம் சேர்த்து மொத்தம் 300 அறைகள் இருக்கிறது.

மொத்தம் 750 ஊழியர்கள் ராஷ்ட்ரபதி பவனில் வேலை செய்கின்றனர்.

இந்த ஷாட் எந்தப் பாடலில் வந்தது என்று தெரிகிறதா ?

இந்த ஷாட் எந்தப் பாடலில் வந்தது என்று தெரிகிறதா ?

ஆம், மன்றம் வந்த தென்றலுக்கு பாடலின் ஆரம்பத்தில் வரும். எத்தனை அழகான ஷாட் இல்லை ? திடிரென ஒரு பள்ளத்தில் இருந்து ஒரு Fiat கார் வர, பின்னணியில் ராஷ்ட்ரபதி பவன்!!

ஜனாதிபதி மாளிகயின் கிழக்குப் பகுதி.

ஜனாதிபதி மாளிகயின் கிழக்குப் பகுதி.

Photo Courtesy : Anupom sarmah

ஜனாதிபதி மாளிகயின் நடுப்பகுதி கலசம்

ஜனாதிபதி மாளிகயின் நடுப்பகுதி கலசம்

Photo Courtesy : Wikipedia

மாளிகைக்கு வெளியே வைக்கபட்டிருக்கும் பீரங்கி

மாளிகைக்கு வெளியே வைக்கபட்டிருக்கும் பீரங்கி

Photo Courtesy :orvalrochefort

மாளிகையின் முக்கிய வாசற்புறம்

மாளிகையின் முக்கிய வாசற்புறம்

Photo Courtesy :AKS.9955

குடியரசு தினத்தையொட்டி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது

குடியரசு தினத்தையொட்டி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது

Photo Courtesy : Ashish Bhatnagar

வெளிப்புறச் சுவறில் பதிக்கப்பட்டிருக்கும் யானை சிற்பங்கள்!

வெளிப்புறச் சுவறில் பதிக்கப்பட்டிருக்கும் யானை சிற்பங்கள்!

Photo Courtesy :Wikipedia

முகல் தோட்டம்

முகல் தோட்டம்

Photo Courtesy :Cecil W. Stoughton

ராஷ்ட்ரபதி பவனை வடிவமைத்தது, ஆங்கிலேயே கட்டட வடிவமைப்பாளரான எட்வின் லூட்டியென்ஸ்.

சுதந்திரத்திற்கு முன்னால் வைஸ்ராய் இல்லம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு வருடம் ஃபிப்ர‌வரி மாதம் ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகல் தோட்டம் மக்களுக்குத் திறந்து விடப்படுகிறது.

முகல் தோட்டத்தில் நூற்றுக்கணக்கான வகைகளில் மலர்கள் இருக்கிறது.

அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த பொழுது, அவருக்காக ஒரு குடிசை அமைக்கப்பட்டது. அலுவல் இல்லாத நேரங்களில், குடிசையில் வந்து சில நேரம் தங்கிச் செல்வார். அவர் பதவிக் காலம் முடிந்த பிறகு அந்த குடிசை அகற்றப்பட்டுவிட்டது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X