உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

இந்திய அரச குடும்பங்கள் கட்டிய பிரம்மாண்ட சுற்றுலாத் தளங்கள்

Written by: Udhaya
Updated: Tuesday, July 18, 2017, 9:49 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

அரசர்கள் நாட்டை ஆள்வதற்கும், போர்புரிவதற்கும் மிகுந்த வலிமை கொண்டு திகழ்ந்ததை நாம் அறிந்திருப்போம். சில அரசர்கள் நீதியின் பால் நேர்மை தவறாமை பற்றியும், அப்படி அநீதி இழைத்துவிட்டதாக நினைத்து அந்த இடத்திலேயே உயிர் விட்டதையும் அறிந்துவைத்துள்ளோம்.

சில அரசர்கள் நட்புக்கு இலக்கணமாகவும், இன்னும் சிலர் பிரம்மாண்டங்களுக்கு எடுத்துக்காட்டாகவும் இருந்தனர்.

அப்படி பிரம்மாண்டமான சில செயல்களை செய்த அரசர்களின் பகுதிகளுக்கு ஒரு சுற்றுலா சென்று வருவோம் வாங்க....

மைசூரு

 


மைசூரு தற்போதைய கர்நாடக மாநிலத்தில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு மைசூர் சாம்ராஜ்யத்தின் அரசரான நான்காம் கிருஷ்ணராஜ உடையார் தனது தனது பாதுகாவலர்களை வெயிலிலிருந்து பாதுகாக்க ரோல்ஸ் ராயல்ஸ் காரை வாங்கியுள்ளார்.

 

நான்காம் கிருஷ்ணராஜ உடையார்

 

இந்த கார் 1916ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. ஏறத்தாழ அதன் மதிப்பு நான்கு லட்சம் யூரோக்கள் ஆகும். நான்காம் கிருஷ்ணராஜ உடையார் அந்த காலத்தில் உலகின் மிகப் பெரிய பணக்காரராக திகழ்ந்தார்.

 

சொத்து மதிப்பு

 

கிட்டத்தட்ட 35 பில்லியன் யூரோக்கள் அவரது சொத்து மதிப்பாக இருந்தது. அவர் 1940ம் ஆண்டு மரணமடைந்தார்.

 

பெங்களூரு அரண்மனை


பெங்களூரின் மையத்தில் உள்ள அரண்மனைப் பூங்காவில் பெங்களூர் அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை அமைந்துள்ளது. சதாசிவ நகருக்கும் ஜயமஹாலுக்கும் இடையில் இது இருக்கிறது.

SMit224

 

குஜராத்


800 நாய்கள் வளர்த்த நவாப் ஜூனகர்க். ஜூனகர்க் பகுதியின் அரசரான இவர் 800 மிக விலையுயர்ந்த நாய்களை வளர்த்து வந்துள்ளார்.

தனியாக வேலைக் காரர்கள்

 

800 நாய்கள் வளர்த்தது மட்டுமின்றி ஒவ்வொரு நாய்க்கும் தனியாக பாதுகாவலர்களை நியமித்திருந்தார்.

 

ஆடம்பர திருமணம்

 

பொதுவாக மகன் அல்லது மகளுக்குத்தான் ஆடம்பரத் திருமணம் செய்து அழகு பார்ப்பார்கள். இவரோ இரண்டு நாய்களுக்கு 30 லட்சம் அந்த காலத்திலேயே செலவழித்து திருமணம் செய்துவைத்தாராம்

Bernard Gagnon -

https://en.wikipedia.org/wiki/Junagadh#/media/File:Gate_of_Junagadh.jpg

 

ஹைதராபாத்

 

உலகின் மிக அதிக மதிப்புள்ள வைரத்தை பேப்பர் வெயிட்டாக பயன்படுத்தினாராம் ஐதராபாத் நிசாம் உஸ்மான் அலி.

 

 

விலைமதிப்பற்றது

 

இந்த வைரம் உலகிலேயே அதிக மதிப்புள்ளது. நெருப்புகோழி முட்டை அளவு பெரியது என்கிறார்கள்.

இதன் மதிப்பு 5 மில்லியன் யூரோக்களாம்

 

மாளிகை

 

பலக்னமா மாளிகை எனப்படும் இது மிகவும் அழகியது மற்றும் பிரம்மாண்டமானது.

ஃபலக்னுமா பேலஸ் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை ஒரு ஆங்கிலேய கட்டிடக்கலை நிபுணரால் வடிவமைக்கப்பட்டதாகும். 1884ம் ஆண்டு இதன் கட்டுமானம் துவங்கப்பட்டிருக்கிறது.

Bernard Gagnon

https://en.wikipedia.org/wiki/Falaknuma_Palace#/media/File:Falaknuma_Palace_01.jpg

 

குப்பை அள்ள ரோல்ஸ்ராயல்ஸ்

 

குப்பை அள்ள ரோல்ஸ்ராயல்ஸ் காரை பயன்படுத்திய அரசர் ஜெய்சிங் அல்வார்.

 

அவமதிப்பு

 

இங்கிலாந்தில் அவமதிக்கப்பட்டதால், ரோல்ஸ் ராயல்ஸ் காரை விலைக்கு வாங்கி அதை குப்பை அள்ள பயன்படுத்தியுள்ளார் அல்வார்.

 

கோட்டை

 

ராஜஸ்தானில் உள்ள இந்த கோட்டை மிகச்சிறந்த சுற்றுலா தளமாகும். இங்கும் அதிகஅளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

படிகங்களால் அரண்மனையை நிரப்பிய உதய்ப்பூர் அரச குடும்பம்

படிகங்கள் மீது அலாதி ஆவல் கொண்ட உதய்ப்பூர் குடும்பம் அரண்மனை முழுவதும் படிகங்களால் நிரப்பி, அலங்கரித்துள்ளனர்.

Astoriajohn

 

அனைத்தும் படிகங்கள்

 

அவர்களது அரண்மனையில் நாற்காலிகள், மேசைகள், உணவுகூடங்கள் என அனைத்திலும் படிகங்களால் அலங்கரித்திருப்பர்.

 

 

உதய்ப்பூர் சிட்டி மாளிகை

 

மிகவும் நேர்த்தியான கட்டுமானம்... அழகிய வடிவமைப்புகள் என இந்த கோட்டை சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

Henrik Bennetsen

https://en.wikipedia.org/wiki/City_Palace,_Udaipur#/media/File:Udaipur_City_Palace.jpg

 

லண்டனில் வடிவமைக்கப்பட்ட கதவு

 

இந்தூர் லால் பாக் கோட்டையின் முற்வாசல் கதவு லண்டனில் வடிவமைக்கப்பட்டதாகும்.

 

 

லால் பாக் மாளிகை

லால் பாக் மாளிகை

Read more about: travel, palace
English summary

Richest things had done by indian king families tour

Richest things had done by indian king families
Please Wait while comments are loading...