Search
  • Follow NativePlanet
Share
» »தாஜ்மஹாலை விட சிறந்தது எது தெரியுமா? இத படிச்சி தெரிஞ்சிக்கோங்க.

தாஜ்மஹாலை விட சிறந்தது எது தெரியுமா? இத படிச்சி தெரிஞ்சிக்கோங்க.

தாஜ்மஹால் போலவே அன்பின் சாட்சியாக இன்னொரு நினைவுச் சின்னம்- சப்தார்ஜங்க் கல்லறை !!

By Balakarthik Balasubramanian

தில்லியில் காணப்படும் சப்தார்ஜங்க் கல்லரை, கருவிழிகளால் குறைவாக காணப்பட்ட ஒரு இடமாகும். அத்துடன் இந்த இடம்...மனிதர்களால் மற(றை)க்கப்பட்ட முகலாய நினைவுசின்னம் என்பதும் நகரத்தில் இருக்கும் பலருக்கும் தெரியாத ஒன்றே என சொல்லும்போது...கவலை லேசாக நம் கண்களில் எட்டி பார்க்க தான் செய்கிறது. தாஜ்மஹாலுக்கு இணையாக கட்டப்பட்ட இந்த அமைப்பை பற்றி கீழ்க்காணும் பத்தியின் மூலம் இன்னும் விரிவாக நாம் பார்க்கலாம்...சரியா?

முகலாய அரசர்களின் ஆட்சி அவுரங்கசிப் மரணத்துடன் முடிவுக்கு வர...அதன் பின்னர், வெற்றியை தொற்றிகொண்டு இந்த இடத்தை நீ....நான்... என போட்டி போட்டுகொண்டு பலரும் பிடிக்க...அவர்கள் அனைவரும் அதே அரச பரம்பரையை சார்ந்தவர்கள் அல்ல...என்பது தான் மறுக்கப்படாத உண்மை. இருள் சூழ்ந்த இந்த இடத்திற்கு வெளிச்சம் தர, முஹம்மத் ஷா அதன் பிறகு வந்தார் என்பதனை நாம் வரலாற்றின் மூலமாக தெரிந்துகொள்கிறோம்.

அவர் வந்த பின்னர்...ஒரு வலிமையான சர்வதிகாரி அனைவருக்கும் கிடைத்துவிட்டார் என பேரரசு பற்றிய கவலைகள் நீங்க...முஹம்மத் ஷா, அவருடைய முதலமைச்சர் சப்தார்ஜங்க்கின் உதவியுடன்...வீழ்ந்துகொண்டிருந்த சில சாம்ராஜ்ஜியங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அதனால், அரசியல் சூழ்ச்சிகளில் சப்தார்ஜங்க் சிக்க, அவரது பதவி பறிபோனது.

1

1

அவர் முகலாய நீதிமன்றத்தில் ஒரு முக்கிய நபரை ஆக்கிரமித்திருந்தார். அவரின் இறப்புக்கு பின்னர், அவருடைய நினைவு சின்னமாக அவரது மகன் ஒரு கல்லறையை கட்டியெழுப்பினார். அத்துடன் இந்த அமைப்பு மற்ற முகலாய நினைவுசின்னங்களை விட வித்தியாசமாக இருக்க வேண்டுமெனவும் முடிவு செய்து அவ்வளவு அழகாக வடிவமைக்க...இன்று அந்த இடம் விலைமதிப்பில்லா காட்சிகளை கண்களுக்கு கர்வமின்றி வழங்குகிறது.

wikicommon

2 கடைசி முகலாய அமைப்பு:

2 கடைசி முகலாய அமைப்பு:

சப்தார்ஜங்கின் கல்லறை, பேரிடர் நிலையை உணர்த்துவதுடன்...முகலாய வம்சத்தின் அழிவையும் அது விவரிக்கிறது. இந்த நினைவுசின்னம் தான் முகலாய ஆட்சியில் கட்டப்பட்ட கடைசி நினைவு சின்னமாகும். அத்துடன் இந்த இடம் கலாச்சாரத்தின் பெருமையை தாங்கிகொண்டு நிற்பதுடன், கட்டிடக்கலையில் முகலாயர்களின் மரபையும் உணர்த்திகொண்டு பெருமை நீங்கா தன்மையுடன் காட்சியளிக்கிறது.

wikicommon

3

3


ஒவ்வொரு முகலாய காலத்து நினைவு சின்னங்களும் வீரம் கொண்டு போராடி, மாண்ட வீரர்களின் ஆயிரம் காலத்து கதை கூற... இந்த நினைவு சின்னங்கள் நுணுக்கமான முறையில் செதுக்கப்பட்டுள்ளது. கட்டிடக்கலைகள், அதிசயம் நீங்கா தன்மையுடன் காட்சியளித்து மனதை வரலாற்றின் சிறப்பை நோக்கி இழுத்து அமரவைத்து அமைதிகொள்ளவும் செய்கிறது. சப்தார்ஜங்க் கல்லறை முகலாய கட்டிடக்கலையின் சிறப்புமிக்க ஒரு கட்டிட தோற்றமாகும் இருப்பினும் சில இடங்களில் கட்டிடக்கலையின் துல்லிய குறைபாடுகள் அங்காங்கே இருக்க தான் செய்கிறது.

4 சப்தார்ஜங்க் கல்லறை

4 சப்தார்ஜங்க் கல்லறை



இந்த சரித்திர குறியீடு பேரரசின் சரிவினை குறிப்பதுடன்...300 வருடங்களுக்கு முந்தைய முகலாய ஆட்சியின் போது ஏற்பட்ட துன்பங்களையும் வறுமையையும் கூட வரலாற்றின் பக்கங்களாக நமக்கு எடுத்துகாட்டுகிறது. அதுமட்டுமல்லாமல்...மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றான...ஒரு உயர்மட்ட அதிகாரி நினைவகமும் இங்கு அமைந்து நம்மை ஆச்சரியத்தின் எல்லைக்கே அழைத்து செல்கிறது. ஆனால், இவர் ஒரு ஆட்சியாளர் இல்லை என்பதும் நம் கருவிழிகளால் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

5 சப்தார்ஜங்க் கல்லறை

5 சப்தார்ஜங்க் கல்லறை

கட்டிடக்கலை:

இங்குள்ள முதன்மை நுழைவாயில்...இரண்டடுக்கு மாடிகளை கொண்டுள்ளது. முகப்பில் அலங்கரிக்கப்பட்ட அழகிய தோற்றங்களுடன் கூடிய ஊதா நிற மேற்பரப்புகளும் நம்மை வரலாற்றின் சுவடுகளை புரட்டி பார்க்க வைக்கிறது. இங்கே காணப்படும் அரேபிய கல்வெட்டு வார்த்தைகளான...."ஒரு தலைவன் நிலையற்று விலகினார்..."அவர் கடவுளின் திருவடியை சேர்ந்து சொர்க்கலோகம் பிரவேசித்தார்..." என்றும் கல்வெட்டுகளை மொழிபெயர்ப்பதன் மூலம் நமக்கு தெரியவருகிறது.

6 சப்தார்ஜங்க் கல்லறை

6 சப்தார்ஜங்க் கல்லறை

அந்த முகப்பை கடந்து நாம் செல்ல...நம்மால் சில அறைகளையும் நூலகத்தையும் காண முடிகிறது. வலதுபுறத்தில் காணப்படும் ஒரு கதவு...மசூதி என்பதும் அங்கு நிலவும் அமைதியான சூழலின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. அந்த மசூதியின் அமைப்பு...மூன்று கோபுரங்களை கொண்டு காணப்பட...அந்த மசூதியின் முக்கிய தளங்கள்...சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் உள்ள கற்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது. முக்கிய கல்லறை உயரமாக காணப்பட...அந்த உயரத்தை நாம் கணக்கீடுகையில் அது சுமார் 92 அடி என்பதும் நமக்கு தெரிய வருகிறது.

 7 சப்தார்ஜங்க் கல்லறை

7 சப்தார்ஜங்க் கல்லறை


இதன் மத்தியில் காணப்படும் அறை, சதுர வடிவில் இருக்க...அதன் நடுப்புறத்தில் எட்டு பிரிவுகளாக அந்த கல்லறை பிரிக்கப்பட்டு இருக்கிறது. இங்கே காணப்படும் இந்த பிரிவுகள்...சதுரங்க வடிவத்திலிருக்க... மூலையிலிருந்து எட்டு பாகம் நம் கண்களுக்கு புலப்படுகிறது. மேலும் இதன் உட்புற தோற்றங்கள் அலங்காரங்களுடன், நம் மனதை நீங்கா தன்மை கொண்டு ஆட்சி செய்கிறது.

8 சப்தார்ஜங்க் கல்லறை

8 சப்தார்ஜங்க் கல்லறை


இந்த கல்லறையின் முக்கிய பகுதியில் 4 கோபுரங்கள் காணப்பட...அதன் வடிவம் பல கோணங்களில் அமைந்துள்ளது. மேலும் அங்கே காணப்படும் சிறிய கியோஸ்க்கள், பளிங்கு பலகைகளாலும், அலங்கரிக்கப்பட்ட வளைவுகளையும் கொண்டு மனதை காலம் கடந்து இழுத்து செல்கிறது. அத்துடன் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு அறையை நாம் காண அது ஆச்சரியத்தை மனதிற்கு தந்து கேள்வியை மூளைக்கு அனுப்புகிறது. ஆம், இது என்ன அறை? என நாம் யோசிக்க...அது சப்தார்ஜங் மற்றும் அவருடைய மனைவியின் கல்லறை என்பது நமக்கு தெரிய வருகிறது.

9 சப்தார்ஜங்க் கல்லறை

9 சப்தார்ஜங்க் கல்லறை


உங்களுக்காக தாஜ்மஹால் பார்வையில் இந்த கல்லறை:

இதன் முகப்பு தாஜ்மஹாலின் அழகை ஒத்திருக்க... இருப்பினும் சமச்சீர் அற்றே காணப்படுகிறது இதன் தோற்றம். இந்த அமைப்புகளின் முக்கியத்துவமாக..செங்குத்து அச்சு போன்ற பகுதி இருக்க, அது கல்லறையின் சம நிலையற்ற தோற்றத்தை நமக்கு தெளிவுபடுத்துகிறது. இங்குள்ள கோபுரம் நீட்டிக்கப்பட்டு காணப்படுவதுடன்...மையப்பகுதி உயரமாக காட்சியளிக்கிறது. அந்த பகுதியை "பிஸ்தா" என்றும் அழைப்பர். (ஒரு வளைந்த துவாரத்தை சுற்றி ஒரு செவ்வக சட்டகம்)

10 சப்தார்ஜங்க் கல்லறை

10 சப்தார்ஜங்க் கல்லறை

நான்கு மூலைகளிலும் காணப்படும்...நான்கு சுரங்கங்கள், இந்த கல்லரையின் சிறப்பம்சமாக இருப்பதுடன்...தாஜ்மஹாலை விட முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தை கொண்டு மனதை வரலாற்று சுவடுகளால் வருடுகிறது. மேலும் கல்லரையின் முகப்புகள் காணப்படும் கோபுரத்தை பிரிக்க...இங்குள்ள ஒரு தோட்டம் முகலாய பானியில் அமைந்து நம்மை ஆச்சரியத்தை நோக்கி தள்ளுகிறது. தோட்டத்தின் சிறுவடிவமைப்புகள் ஹுமாயூன் கல்லரையில் காணப்பட... ஒரு சேனல், நுழைவாயிலுக்கு வழிவகுத்து தர...ஏனைய மூன்றும் அரங்கத்துக்குள் பிரவேசிக்கிறது.

முகப்புகள் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் கட்டப்பட்டு காணப்பட...அதன் பெயர் "ஜங்காலி மஹால்", "மோத்தி மஹால்", "பாட்ஷா பசந்த்" என்பதும் நமக்கு தெரிய வருகிறது.

wikicommon

11 சப்தார்ஜங்க் கல்லறை

11 சப்தார்ஜங்க் கல்லறை

சப்தார்ஜங்க் கல்லறை

12 சப்தார்ஜங்க் கல்லறை

12 சப்தார்ஜங்க் கல்லறை

சப்தார்ஜங்க் கல்லறை

13 சப்தார்ஜங்க் கல்லறை

13 சப்தார்ஜங்க் கல்லறை

சப்தார்ஜங்க் கல்லறை

14 சப்தார்ஜங்க் கல்லறை

14 சப்தார்ஜங்க் கல்லறை

சப்தார்ஜங்க் கல்லறை

15 சப்தார்ஜங்க் கல்லறை

15 சப்தார்ஜங்க் கல்லறை

சப்தார்ஜங்க் கல்லறை

16 சப்தார்ஜங்க் கல்லறை

16 சப்தார்ஜங்க் கல்லறை

சப்தார்ஜங்க் கல்லறை

17 சப்தார்ஜங்க் கல்லறை

17 சப்தார்ஜங்க் கல்லறை

சப்தார்ஜங்க் கல்லறை

18 சப்தார்ஜங்க் கல்லறை

18 சப்தார்ஜங்க் கல்லறை

சப்தார்ஜங்க் கல்லறை

19 சப்தார்ஜங்க் கல்லறை

19 சப்தார்ஜங்க் கல்லறை

சப்தார்ஜங்க் கல்லறை

20 சப்தார்ஜங்க் கல்லறை

20 சப்தார்ஜங்க் கல்லறை

சப்தார்ஜங்க் கல்லறை

21 சப்தார்ஜங்க் கல்லறை

21 சப்தார்ஜங்க் கல்லறை

சப்தார்ஜங்க் கல்லறை

22 சப்தார்ஜங்க் கல்லறை

22 சப்தார்ஜங்க் கல்லறை

சப்தார்ஜங்க் கல்லறை

Read more about: travel taj mahal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X