Search
  • Follow NativePlanet
Share
» »வரந்தா மலைத்தொடர்கள் - அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது!

வரந்தா மலைத்தொடர்கள் - அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது!

By

ஒரு இடத்தை காணப் போகுமுன் அது இவ்வளவு அழகு, அவ்வளவு அழகு என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டே செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படி உங்கள் கற்பனையை எத்தனை இடங்கள் திருப்திபடுத்தியிருக்கின்றன?

ஆனால் வரந்தா மலைத்தொடர்கள் உங்கள் கற்பனையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் நீங்கள் கற்பனையிலும் காணமுடியாத அற்புத காட்சிகளை கொண்டிருக்கிறது.

புனேவிலிருந்து 108 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்திருக்கிறது வரந்தா மலைத்தொடர்கள்.

இந்த பகுதி முழுக்க அடர்த்தியும் பசுமையான காடுகள், உயரச் சிகரங்கள், விலங்குகள், அருவிகள் என்று தாராளமாக இயற்கை அன்னை எல்லையில்லா வளங்களை அள்ளித் தெளித்திருக்கிறது.

பயமுறுத்தும் சாலைகளும், மிரட்டும் அழகும்!

பயமுறுத்தும் சாலைகளும், மிரட்டும் அழகும்!

வரந்தா மலைத்தொடர்களில் வாகனங்கள் ஓட்டிச் செல்வது கடினமானது மட்டுமல்ல மிகவும் ஆபத்தானதும் கூட. ஏனெனில் மலைத்தொடர் முழுக்க வளைந்து நெளிந்து செல்லும் சாலைகள் நம்மை பயமுறுத்துவதோடு, சாலைகளுக்கு அப்பால் காணப்படும் பள்ளத்தாக்கு நம்மை அழகாக மிரட்டும்.

அருவிகளாய் சிரிக்கும் பச்சை மலைகள்!

அருவிகளாய் சிரிக்கும் பச்சை மலைகள்!

வரந்தா மலைத்தொடர்கள் 10 கி.மீ நீளம் இருப்பதுடன், ஒவ்வொரு மலைச்சிகரங்கங்களும் ஒவ்வொரு உயரத்தில் காட்சியளித்துக்கொண்டிருக்கும். எங்கும் பச்சை பட்டுடித்தியது போல் தோன்றும் மலைகளின் நடுநடுவே அட்டகாசமாய் கொட்டிக்கொண்டிருக்கும் அருவிகள் அப்படியே நம் மனதை கொள்ளையடித்துவிடும்.

கர்ஜிக்கும் அருவிகள்!

கர்ஜிக்கும் அருவிகள்!

வரந்தா மலைத்தொடரின் ஒவ்வொரு வளைவுகளில் திரும்பும்போதும் வெவ்வேறு அருவிகள் நம் கண்களுக்கு விருந்து படைக்கும். இந்த அருவிகள் தூரத்தில் பார்க்கும்போது சிறியதாக தெரிந்தாலும் அருகே சென்று பார்த்தோமானால் இவற்றில் நிறைய அருவிகள் மிகப்பெரியதாகவும், பலத்த சத்தத்துடனும் ஆர்ப்பரித்துக் கொட்டிக்கொண்டிருக்கும்.

ஷிவ்தார் கால்

ஷிவ்தார் கால்

வரந்தா மலைத்தொடரில் போர்-மஹத் சாலையில் ஷிவ்தார் கால் என்று ஒரு அற்புதமான குகை அமைந்துள்ளது. இந்த குகையில் 17-ஆம் நூற்றாண்டு மராட்டிய கவி மற்றும் முனியான சாம்ராத் ராம்தாஸ் என்பவர் 22 ஆண்டுகாலம் வாழ்ந்தார் என்று சொல்லப்படுகிறது. அதோடு இந்த இடத்தில்தான் இவருக்கும், சத்ரபதி சிவாஜிக்குமான முதல் சந்திப்பு நடந்தேறியது என்றும் கூறப்படுகிறது. இங்கு சாம்ராத் ராம்தாஸ் சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மடலாயம் ஒன்றும் இருக்கிறது. அதோடு மழைக்காலங்களில் இந்த குகையை மறைத்துக்கொட்டும் அருவியின் காட்சி எவரையும் அடிமையாக்கிவிடும்.

மகிழ்ச்சியான பயணத்துக்கு சில டிப்ஸ்...

மகிழ்ச்சியான பயணத்துக்கு சில டிப்ஸ்...

வரந்தா மலைத்தொடருக்கு செல்வதாக நீங்கள் முடிவு செய்துவிட்டால் குழுவாகவோ அல்லது குடும்பத்துடனோ செல்வது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பகுதிகளில் வொர்க் ஷாப்கள் குறைவாக இருப்பதால் அதற்கு தகுந்தார் போல கவனமாக வாகானத்தை செலுத்த வேண்டும்.

பெட்ரோல் டேங்கை ஃபுல் செய்யுங்கள்!

பெட்ரோல் டேங்கை ஃபுல் செய்யுங்கள்!

வரந்தா செல்லும் வழியில் பெட்ரோல் பங்குகள் குறைவு என்பதால் உங்கள் வாகனங்களை வீட்டில் இருந்து எடுக்கும்போதே டேங்கை ஃபுல் செய்து வைத்துக்கொள்வது அவசியம்.

குளிர் ஜாஸ்தி!

குளிர் ஜாஸ்தி!

வரந்தா பகுதியில் குளிர் ஜாஸ்தியாக காணப்படும் என்பதால் குளிர் தாங்கும் அளவுக்கு நல்ல கனமான ஆடைகளை உடுத்திக்கொள்வது முக்கியம். அதோடு சூரிய உதயத்துக்கு முன்பும், சூரிய அஸ்த்தமனத்துக்கு பிறகும் சாலையெங்கும் பனிமூட்டமாக இருக்குமென்பதால் வாகனங்களை மெதுவாக ஓட்டிச்செல்வதே சிறந்தது.

எப்படி அடைவது?

எப்படி அடைவது?

புனேவிலிருந்து 108 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது வரந்தா மலைத்தொடர்கள். எனவே புனேவிலிருந்து செல்ல விரும்புபவர்கள் NH4 சாலை மூலம் நாராயண்பூர் சாலையை பிடித்து போர் சாலையில் வலது பக்கம் திரும்பி போர் மலைத்தொடரை அடைய வேண்டும். அதன்பின்பு நேராக வரந்தா மலைத்தொடரை சுலபமாக அடைத்து விடலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X