Search
  • Follow NativePlanet
Share
» »ஷிரிடி - சாய் பாபா வாழ்ந்த புண்ணிய பூமி

ஷிரிடி - சாய் பாபா வாழ்ந்த புண்ணிய பூமி

ஷிரிடி, சமத்துவத்தையும் சமதர்மத்தையும் போதித்த மகாஞானி ஷீரடி சாய் பாபா வாழ்த்த புண்ணிய இடம். ஹிந்து மற்றும் இசுலாமிய மத வழக்கங்களை ஒன்றினைத்து அவர் உருவாக்கிய வழிபாட்டு முறைகள் அமைதிக்கும், சகோதரத்துவத்துக்கும் அச்சாரமாக அமைந்தது. அவர் ஆற்றிய அற்புதங்களும், தந்த ஆசிர்வாதங்களும் உலகம் முழுக்க அவருக்கென கோடிக்கணக்கான மக்களை அவரின் போதனைகளை பின்பற்றுபவர்களாக மாற்றியது.

புகைப்படம்: Photographer in Shirdi, India

1918 ஆம் ஆண்டு அவர் சமாதி நிலையை அடைந்தாலும் இன்றும் ஷிரிடியில் உள்ள சாய் பாபா கோயிலில் அவரை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மகாராஷ்ட்ராவின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. சரி, வாருங்கள் நாமும் ஷிரிடிக்கு சென்று வருவோம்.

ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் உள்நாட்டு பயண டிக்கெட்டுகளில் ரூ.250 தள்ளுபடி பெற இங்கே கிளிக்குங்கள்.

ஷிரிடி கோயில்:

புகைப்படம்: paras gupta

இந்தியாவின் முக்கியமான ஆன்மீக சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஷிரிடி நகரம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் அஹ்மத்நகர் நகர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது . இது மும்பையில் இருந்து 300 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. ஷீரடி கோயில் இந்நகரத்தின் மையமாக திகழ்கிறது . இங்கு ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 25,000 பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வருகின்றனர்.

ஆரம்ப காலகட்டத்தில் அதாவது 19ஆம் நூற்றாண்டில் சாய் பாபாவை அறிந்தவர்களும், அவரை பின்பற்றுபவர்களும் குறைந்த அளவிலேயே இருந்திருக்கின்றனர். அதற்கு பிறகு 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட சாய் பக்தி அலையானது உலக மக்களிடம் அவரின் போதனைகளை எடுத்துச்சென்றது.

மதத்தினால் பிளவுபட்டுக்கிடந்த மக்களை இவரின் வழிகாட்டு நெறிமுறைகள் அவர்களுக்குள் புதைந்து கிடந்த சகோதரத்துவத்தை வெளிக்கொண்டு வரவே கோடிக்கணக்கான மக்கள் அவரை பின்பற்ற ஆரம்பித்தனர். அவரின் முக்கிய போதனைகளுள் ஒன்றாக கருதப்படுவது "ஸப்கா மாலிக் ஏக்". ‘அனைவருக்கும் ஒரே கடவுளே' என்பதாகும்.

புகைப்படம்: Andreas Viklund

1918 ஷிரிடி சாய் பாபா சமாதி அடைந்த பிறகு 1922இல் அவரின் சமாதியின் மேல் தற்போதிருக்கும் கோயில் கட்டப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே சாய் பாபாவை தரிசிக்க வரிசையில் காத்திருக்கின்றனர். வியாழக்கிழமை இங்கு சிறப்பு பூஜை நடக்கிறது. சாய் பாபா தன் பதினாறு வயதில் வேப்ப மரம் ஒன்றின் கீழ் அமர்ந்து தியானம் செய்த இடமானது இன்று 'குருஸ்தானம்' என்று பக்தர்களால் வழிபடப்படுகிறது.

புகைப்படம்: ૐ Didi ૐ

புத்தாண்டு பிறப்பு இக்கோயிலின் மிக முக்கியமான பண்டிகை. புது வருடத்தை சாய் பாபாவின் ஆசிர்வாதத்துடன் துவங்கினால் அந்த வருடம் சிறப்பானதாக அமையும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புத்தாண்டு அன்று இங்கே தரிசனத்திற்காக வருகின்றனர்.

ஷிரிடிக்கு வரும் பக்தர்கள் அப்படியே ஷீரடி சனி கோயிலுக்கும் சென்றுவருவது மேலும் சிறப்பை தரும். ஷிரிடியில் இருந்து 75கி.மீ தொலைவில் சிக்னாப்புரில் அக்கோயில் அமைந்திருக்கிறது.

எப்படி அடையலாம் ஷிரடியை?

சென்னை, விசாகப்பட்டினம், ஹைதராபாத், மைசூர் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து ஷிரிடிக்கு சேரடி ரயில் சேவைகள் உண்டு. இதை 'சாய்நகர் ஷிரிடி ரயில் நிலையம் என்று அழைக்கின்றனர். அல்லது மும்பை, நாசிக் நகரங்களில் ஏதாவது ஒன்றை வந்தடைந்து அங்கிருந்து ஷிரடியை அடையலாம்.

ஷிரிடி விமான நிலையம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. அது திறக்கப்பட்டவுடன் ஷிரிடிக்கு செல்வது மேலும் எளிதாகும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X