Search
  • Follow NativePlanet
Share
» »சோனமார்க் - தங்கச் சமவெளியில் ஒரு உலா!!!

சோனமார்க் - தங்கச் சமவெளியில் ஒரு உலா!!!

By Super Admin

முகலாயர்களின் ஆட்சி காலத்துக்கு திரும்ப போகலாம் வாங்க...

தங்கச் சமவெளி என்று பொருள்படும் சோனமார்க் நகரம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

இந்த நகரம் பனிச்சறுக்கு விளையாட்டு மற்றும் மலையேற்றம் போன்றவற்றில் அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு சொர்க்கபுரியாகத் திகழ்கிறது.

குறிப்பாக பனிச்சறுக்கிற்கான எல்லா பாதைகளும் சோனமார்க் நகரத்திலிருந்தே தொடங்குகின்றன.

மேலும் இயற்கை அழகையும், ஏரிகளையும் மற்றும் ஓங்கி உயர்ந்த மலைகளையும் ஒருங்கே கொண்டிருக்கும் சோனமார்க் நகரம், உலகின் எந்த ஒரு சுற்றுலாத் தலத்துக்கும் சளைத்ததல்ல!

உலகிலேயே மிகப்பெரிய உணவருந்தும் அறை எங்குள்ளது தெரியுமா?உலகிலேயே மிகப்பெரிய உணவருந்தும் அறை எங்குள்ளது தெரியுமா?

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

சோஜி-லா கணவாய், தாஜ்வாஸ் க்ளேசியர், விஷன்சர் ஏரி போன்ற எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் சோனமார்க் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் அமைந்துள்ளன.

சோனமார்க் சுற்றுலாத் தலங்கள்

படம் : June West

சோஜி லா கணவாய்

சோஜி லா கணவாய்

இமயமலையின் நுழைவாயில் என்றழைக்கப்படும் சோஜி லா கணவாய் சோனமார்க்கிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது.

படம் : Yogeshgupta26

தாஜ்வாஸ் க்ளேசியர்

தாஜ்வாஸ் க்ளேசியர்

தாஜ்வாஸ் க்ளேசியர் கடல் மட்டத்திலிருந்து 3000 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதி ஆண்டு முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும். சோனமார்க்கலிருந்து குதிரைகள் மூலம் தாஜ்வாஸ் க்ளேசியரை அடையலாம்.

படம் : Kashmir Pictures

நடைப்பயணம்

நடைப்பயணம்

தாஜ்வாஸ் க்ளேசியர் நோக்கி நடந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : Kashmir Pictures

விஷன்சர் ஏரி

விஷன்சர் ஏரி

சோனமார்க்கிலிருந்து 20 கிமீ தொலைவில் விஷன்சர் ஏரி அமைந்திருக்கிறது.

படம் : Mehrajmir13

குல்மார்க்கிலிருந்து...

குல்மார்க்கிலிருந்து...

குல்மார்க்கிலிருந்து சோனமார்க் செல்லும் வழி.

படம் : Girish Suryawanshi

சோனமார்க் பள்ளத்தாக்கு

சோனமார்க் பள்ளத்தாக்கு

சோனமார்க் பள்ளத்தாக்கின் எழில்மிகு காட்சி.

படம் : Girish Suryawanshi

நம்பிக்கையின் பள்ளத்தாக்கு!

நம்பிக்கையின் பள்ளத்தாக்கு!

சோனமார்க் பள்ளத்தாக்குக்கு நம்பிக்கையின் பள்ளத்தாக்கு என்றொரு பெயர் இருக்கிறது.

படம் : Vamsi Krishna

கிருஷ்ணசர் ஏரி

கிருஷ்ணசர் ஏரி

சோனமார்க் பகுதியில் அமைந்திருக்கும் ஏரிகளில் மிக அழகான ஏரியாக கிருஷ்ணசர் ஏரி கருதப்படுகிறது. இந்த ஏரியில் நீங்கள் ஒரு சில நீர் விளையாட்டுகளில் ஈடுபடலாம். அதுமட்டுமல்லாமல் இங்கு மீன் பிடித்தும் பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.

படம் : Mehrajmir13

டிரெக்கிங்

டிரெக்கிங்

சோனமார்க்கில் பனி படர்ந்த மலைச் சிகரங்களை கடந்து டிரெக்கிங் செல்லும் அனுபவம் சிலிர்ப்பூட்டக் கூடியது. கங்காபல், விஷன்சர், கத்சர், சத்சர் மற்றும் கிருஷண்சர் போன்ற பகுதிகள் டிரெக்கிங் செல்வதற்கு ஏற்ற பகுதிகளாக விளங்குகின்றன.

படம் : Kashmir Pictures

கூடாரங்கள்

கூடாரங்கள்

டிரெக்கிங் செல்லும் பயணிகள் கூடாரமிட்டு தங்கியிருக்கும் காட்சி.

படம் : Kashmir Pictures

ஸ்லெட்ஜ் பனிச்சறுக்கு

ஸ்லெட்ஜ் பனிச்சறுக்கு

சோனமார்க்கில் ஸ்லெட்ஜ் எனப்படும் சக்கரம் இல்லாத வண்டியில் பனிச்சறுக்கில் ஈடுபடும் பயணிகள்.

படம் : Amanda W

உச்சி நோக்கி

உச்சி நோக்கி

உச்சியிலிருந்து ஸ்லெட்ஜ் வண்டியில் சறுக்கி வர உச்சி நோக்கி வண்டியை இழுத்துச்செல்லும் பயணி.

படம் : Girish Suryawanshi

ஹர்முக்

ஹர்முக்

சோனமார்க்கில் உள்ள ஹர்முக் மலைத்தொடர்.

படம் : June West

குதிரைச் சவாரி

குதிரைச் சவாரி

சோனமார்க்கின் பனிச்சிகரங்களுக்கு மத்தியில் குதிரைச் சவாரி செய்வது அற்புதமான அனுபவம்.

படம் : Akshay N

யஸ்மார்க்

யஸ்மார்க்

சோனமார்க்கிலிருந்து 88 கிலோமீட்டர் தொலைவில் யஸ்மார்க் எனும் இந்த அழகிய சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது.

படம் : Basharat Alam Shah

மேய்ப்பர்கள்

மேய்ப்பர்கள்

சோனமார்க் மலைப்பாதைகளில் மந்தை மந்தையாக செம்மறி ஆடுகளை மேய்ப்பர்கள் மேய்த்துக்கொண்டிருக்கும் காட்சியை நீங்கள் அடிக்கடி பார்க்கலாம்.

படம் : Kashmir Pictures

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

சோனமார்க் ஹோட்டல் டீல்கள்

படம் : Tony Gladvin George

சோனமார்க்கை எப்போது மற்றும் எப்படி அடைவது?

சோனமார்க்கை எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்படி அடையலாம்?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Kashmir Pictures

Read more about: hill stations
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X