Search
  • Follow NativePlanet
Share
» »இரவில் அற்புதமாக காட்சியளிக்கும் இந்திய நகரங்கள்

இரவில் அற்புதமாக காட்சியளிக்கும் இந்திய நகரங்கள்

சில இடங்களை பகலில் சென்று பார்ப்பதை விடவும் இரவு நேரத்தில், மின் விளக்குகளின் ஒளியில் பார்க்கையில் அவை அதி அற்புதமாக காட்சியளிக்கும். அதிலும் குறிப்பாக சில இடங்களை பவுர்ணமி நாளில் நிலவொளியில் பார்ப்பதற்கு இணையான விஷயம் வேறெதுவுமே இருக்க முடியாது. அப்படி பேரிருள் சூழ்ந்திருக்க ஒளிவிளக்குகளில் மிக அழகாக இருக்கும் இடங்களை பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.

ஹோலி சிறப்பு சலுகை : தாமஸ் கூக் வழங்கும் 6 இரவு / 7 பகல் காஷ்மீர் சுற்றுலா வெறும் 26499 ரூபாயில்

ஹர்மந்திர் சாஹிப் - பொற்கோயில் :

ஹர்மந்திர் சாஹிப் - பொற்கோயில் :

பஞ்சாப் மாநிலம் அம்ரிதசரில் அமைந்திருக்கும் சீக்கியர்களின் புனித கோயில் தான் இந்த ஹர்மந்திர் சாஹிப் ஆகும். இதன் சுவர்களிலும், கூரையிலும் தங்க தகடுகள் பதிக்கப்பட்டுள்ளதால் இது பொற்கோயில் என அழைக்கப்படுகிறது.

Photo:Paul Simpson

ஹர்மந்திர் சாஹிப் - பொற்கோயில் :

ஹர்மந்திர் சாஹிப் - பொற்கோயில் :

இந்த கோயிலில் உள்ள தங்க தகடுகள் இரவில் ஒளிவிளக்குகளின் வெளிச்சத்தில் தங்க தகடுகள் மின்னுவது காண அவ்வளவு அழகாக இருக்கும்.

Photo:Arian Zwegers

ஹர்மந்திர் சாஹிப் - பொற்கோயில் :

ஹர்மந்திர் சாஹிப் - பொற்கோயில் :

ஒளிவிளக்குகளின் வெளிச்சத்தில் பொற்கோயில்.

Photo:gags9999

ஹர்மந்திர் சாஹிப் - பொற்கோயில் :

ஹர்மந்திர் சாஹிப் - பொற்கோயில் :

ஒளிவிளக்குகளின் வெளிச்சத்தில் பொற்கோயில்.

Photo:Paul Simpson

ஹர்மந்திர் சாஹிப் - பொற்கோயில் :

ஹர்மந்திர் சாஹிப் - பொற்கோயில் :

ஒளிவிளக்குகளின் வெளிச்சத்தில் பொற்கோயில்.

Photo:Rajesh

ஹர்மந்திர் சாஹிப் - பொற்கோயில் :

ஹர்மந்திர் சாஹிப் - பொற்கோயில் :

ஒளிவிளக்குகளின் வெளிச்சத்தில் பொற்கோயில்.

Photo:Arian Zwegers

ஹர்மந்திர் சாஹிப் - பொற்கோயில் :

ஹர்மந்திர் சாஹிப் - பொற்கோயில் :

ஒளிவிளக்குகளின் வெளிச்சத்தில் பொற்கோயில்.

Photo:Arian Zwegers

நிலவொளியில் தாஜ்மஹால் :

நிலவொளியில் தாஜ்மஹால் :

காதல் எத்தனை வலிமையானது என்று உலகுக்கு உரக்கச் சொன்ன ஓர் உன்னத அதிசயம், தாஜ் மஹால். உலகிலேயே மிக அழகான கட்டிடமாக சொல்லப்படும் இந்த தாஜ் மஹாலை கண்டு லயிக்க அற்புதமான நேரம் முழுநிலவு நாள் ஆகும்.

Photo:Avinash Menon

நிலவொளியில் தாஜ்மஹால் :

நிலவொளியில் தாஜ்மஹால் :

குளுமையான நிலாவின் வெளிச்சம் தாஜ் மஹாலின் வெண்பளிங்கு கற்களில் பட்டு பிரதிபலிக்கும் காட்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாததாகும்.

Photo:Christopher Blizzard

நிலவொளியில் தாஜ்மஹால் :

நிலவொளியில் தாஜ்மஹால் :

இதற்காகவே பௌர்னமி நாட்களின் இரவு நேரத்தில் தாஜ் மஹாலை காண வசதியாக சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். முடிந்தால் நீங்களும் ஒருமுறை முழுநிலவு நாளில் தாஜ் மஹாலுக்கு வருகை தாருங்கள்.

Photo:David Gil

நிலவொளியில் தாஜ்மஹால் :

நிலவொளியில் தாஜ்மஹால் :

தாஜ் மஹாலின் பேரழகை பறைசாற்றும் சில புகைப்படங்கள்.

Photo:Klaquax

நிலவொளியில் தாஜ்மஹால் :

நிலவொளியில் தாஜ்மஹால் :

தாஜ் மஹாலின் பேரழகை பறைசாற்றும் சில புகைப்படங்கள்.

Photo:Ashok Prabhakaran

 தாமரை கோயில், புது தில்லி :

தாமரை கோயில், புது தில்லி :

நவீன தில்லியின் அடையாளமாக மாறிப்போன விஷயங்களில் ஒன்று புது தில்லி நகரில் இருக்கும் சர்வ மத பிரார்த்தனை கூடமான தாமரை கோயில் ஆகும்.

Photo:Sourav Das

 தாமரை கோயில், புது தில்லி :

தாமரை கோயில், புது தில்லி :

மிகப்பெரிய பளிங்கு கற்களால் தாமரை மலர் வடிவில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலை சுற்றி 9 சிறிய குளங்களும், மிகப்பெரிய தோட்டமும் உள்ளது. இரவு நேரத்தில் இந்த தாமரை கோயிலை நோக்கி பாய்ச்சப்படும் ஒளி வெள்ளத்தில் அத்தனை அழகாக காட்சி தருகிறது.

Photo:Adib Roy

 தாமரை கோயில், புது தில்லி :

தாமரை கோயில், புது தில்லி :

இரவில் ஒளிரும் தாமரை கோயில்.

Photo:Adib Roy

 தாமரை கோயில், புது தில்லி :

தாமரை கோயில், புது தில்லி :

இரவில் ஒளிரும் தாமரை கோயில்.

Photo:Paul Ancheta

 தாமரை கோயில், புது தில்லி :

தாமரை கோயில், புது தில்லி :

இரவில் ஒளிரும் தாமரை கோயில்.

Photo:Ronit Bhattacharjee

 தாமரை கோயில், புது தில்லி :

தாமரை கோயில், புது தில்லி :

இரவில் ஒளிரும் தாமரை கோயில்.

Photo:Paul Ancheta

 தாமரை கோயில், புது தில்லி :

தாமரை கோயில், புது தில்லி :

இரவில் ஒளிரும் தாமரை கோயில்.

Photo:Amit Rawat

 தாமரை கோயில், புது தில்லி :

தாமரை கோயில், புது தில்லி :

இரவில் ஒளிரும் தாமரை கோயில்.

Photo:Adib Roy

அம்பா விலாஸ் அரண்மனை, மைசூர்:

அம்பா விலாஸ் அரண்மனை, மைசூர்:

தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் மைசூரும் ஒன்று. பழமையும், பசுமையும் நிறைந்த மைசூரில் நாம் எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் மைசூர் அரண்மனை என்று பரவலாக அறியப்படும் அம்பா விலாஸ் அரண்மனையும் ஒன்றாகும்.

Photo:Amit Rawat

அம்பா விலாஸ் அரண்மனை, மைசூர்:

அம்பா விலாஸ் அரண்மனை, மைசூர்:

மைசூரை ஆண்ட ராஜ பரம்பரையினர் வசித்த இந்த அரண்மனை இரவு நேரத்தில் 1,00,000 விளக்குகளால் அலங்கரிப்பட்டு ஜொலிக்கிறது.

Photo:Praveen Ankireddy

அம்பா விலாஸ் அரண்மனை, மைசூர்:

அம்பா விலாஸ் அரண்மனை, மைசூர்:

லட்சம் விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் மைசூர் அரண்மனை.

Photo:Matthieu Aubry

அம்பா விலாஸ் அரண்மனை, மைசூர்:

அம்பா விலாஸ் அரண்மனை, மைசூர்:

லட்சம் விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் மைசூர் அரண்மனை.

Photo:Hrishikesh Premkumar

அம்பா விலாஸ் அரண்மனை, மைசூர்:

அம்பா விலாஸ் அரண்மனை, மைசூர்:

லட்சம் விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் மைசூர் அரண்மனை.

Photo:Arian Zwegers

ஹுசைன் சாகர் ஏரி புத்தர் சிலை :

ஹுசைன் சாகர் ஏரி புத்தர் சிலை :

ஹைதராபாத் நகரில் உள்ள ஹுசைன் சாகர் அணையில் நடுவில் கம்பீரமாக வீற்றிருக்கிறது கௌதம புத்தரின் சிலை. இரவு நேரத்தில் இந்த ஹுசைன் சாகர் ஏரியை சுற்றிலும் ஒளிவிளக்குகள் சூழ்ந்திருக்க நடுவில் வண்ண நீரூற்றுகளுக்கு மத்தியில் இந்த புத்தர் சிலையை காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

Photo:Rajesh_India

ஹுசைன் சாகர் ஏரி புத்தர் சிலை :

ஹுசைன் சாகர் ஏரி புத்தர் சிலை :

பேரழகு மிக்க ஹுசைன் சாகர் ஏரியும் அதன் நடுவில் இருக்கும் புத்தர் சிலையும்.

Photo:Raghavan Prabhu

ஹுசைன் சாகர் ஏரி புத்தர் சிலை :

ஹுசைன் சாகர் ஏரி புத்தர் சிலை :

பேரழகு மிக்க ஹுசைன் சாகர் ஏரியும் அதன் நடுவில் இருக்கும் புத்தர் சிலையும்.

Photo:Rishabh Mathur

ஹுசைன் சாகர் ஏரி புத்தர் சிலை :

ஹுசைன் சாகர் ஏரி புத்தர் சிலை :

பேரழகு மிக்க ஹுசைன் சாகர் ஏரியும் அதன் நடுவில் இருக்கும் புத்தர் சிலையும்.

Photo:Vishal Jalan

ஜெய்சால்மர் கோட்டை, ராஜஸ்தான் :

ஜெய்சால்மர் கோட்டை, ராஜஸ்தான் :

இந்தியாவின் சுற்றுலா தலைநகரான ராஜஸ்தானின் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாக திகழ்வது ஜெய்சால்மர் நகரமாகும். தார் பாலைவனத்தை ஒட்டி அமைந்திருக்கும் ஜெய்சால்மர் நகரம் 'தங்க நகரம்' என்ற புனைபெயருடனும் அழைக்கப்படுகிறது.

Photo:Sheep"R"Us

ஜெய்சால்மர் கோட்டை, ராஜஸ்தான் :

ஜெய்சால்மர் கோட்டை, ராஜஸ்தான் :

இங்கு பொன்னிறமான பாலைவன மணல் கற்களால் கட்டப்பட்ட ஜெய்சால்மர் அரண்மனை அந்தி சாயும் நேரம் விளக்குகளின் ஒளியில் தகிதகிப்பதை பார்க்கையில் எதோ தங்கத்தினால் ஆனதோ இந்த அரண்மனை என ஆச்சரியப்பட வைக்கும்.

Photo:Animesh Singh

ஜெய்சால்மர் கோட்டை, ராஜஸ்தான் :

ஜெய்சால்மர் கோட்டை, ராஜஸ்தான் :

ஜெய்சால்மர் கோட்டையின் சில அழகான புகைப்படங்கள்.

Photo:ulricjoh

ஜெய்சால்மர் கோட்டை, ராஜஸ்தான் :

ஜெய்சால்மர் கோட்டை, ராஜஸ்தான் :

ஜெய்சால்மர் கோட்டையின் சில அழகான புகைப்படங்கள்.

Photo:Abhijith Rao

ஜெய்சால்மர் கோட்டை, ராஜஸ்தான் :

ஜெய்சால்மர் கோட்டை, ராஜஸ்தான் :

ஜெய்சால்மர் கோட்டையின் சில அழகான புகைப்படங்கள்.

Photo:Glenna Barlow

ஜெய்சால்மர் கோட்டை, ராஜஸ்தான் :

ஜெய்சால்மர் கோட்டை, ராஜஸ்தான் :

ஜெய்சால்மர் கோட்டையின் சில அழகான புகைப்படங்கள்.

Photo:Selmer van Alten

ஹவா மஹால், ஜெய்பூர் :

ஹவா மஹால், ஜெய்பூர் :

ஜெய்பூர் நகரின் ராஜ கட்டிடக்கலையை உலகுக்கு பறைசாற்றும் கலைப்போக்கிஷங்களில் ஒன்று ராஜா சவாய் பிரதாப் சிங் என்பவரால் கட்டப்பட்ட ஹவா மஹால் முக்கியமான ஒன்றாகும்.

Photo:p_gkkumar

ஹவா மஹால், ஜெய்பூர் :

ஹவா மஹால், ஜெய்பூர் :

அரண்மனையில் வசிக்கும் பெண்கள் அன்றாட நிகழ்வுகளை பார்ப்பதற்காக கட்டப்பட்ட இந்த ஹவா மஹால் பிங்க் நிற மணல் கற்களால் கட்டப்பட்டதாகும். இரவு நேரத்தில் இதன் மீது ஒளி விளக்குகள் ஒளிரும் போது இதன் அழகு மேலும் ஒருபடி கூடிவிடுகிறது.

Photo:rosipaw

ஹவா மஹால், ஜெய்பூர் :

ஹவா மஹால், ஜெய்பூர் :

ஹவா மஹாலின் கலைநயமிக்க ஜன்னல்கள்.

Photo:rosipaw

லேக் பேலஸ், உதய்பூர் :

லேக் பேலஸ், உதய்பூர் :

ராஜஸ்தானில் இருக்கும் மிக ரொமேண்டிக்கான இடங்களில் உதைபுரும் ஒன்று. இங்கே உள்ள லேக் பேலஸ் என்ற ஹோட்டல் இந்தியாவிலேயே மிக அழகான தாங்கும் விடுதிகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Photo: Flikr

லேக் பேலஸ், உதய்பூர் :

லேக் பேலஸ், உதய்பூர் :

ஜக் நிவாஸ் என்ற குட்டி தீவின் மேல் அமைந்திருக்கும் இந்த ஹோட்டல் அந்தி சாயும் நேரத்தில் இங்கு ஒளிரும் விளக்குகள் அந்த இடத்தை எதோ சொர்க்கம் போல மாற்றுகிறது.

Photo: Flikr

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X