Search
  • Follow NativePlanet
Share
» »பழசிராஜாவும் சுல்தான் பத்தேரியும்!

பழசிராஜாவும் சுல்தான் பத்தேரியும்!

By Staff

சுல்தான் பத்தேரி, வயநாடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு வரலாற்று டவுனாகும். இதற்கு சுல்தான் பத்தேரி என்ற பெயர் வந்தது ஹைதர் அலி வயநாடை கைப்பற்றிய பின். இந்த இடத்தில்தான் ராணுவ தளவாடங்களின் கிடங்காக இருந்தது. இந்த இடத்தில் கிடங்கன் பழங்குடி மக்கள் அதிகம் வசிப்பதால் இதற்கு கிடங்க‌நாடு என்ற இன்னொரு பெயரும் உள்ளது.

இத்தகைய வரலாற்றுச் குறியீடாக இருக்கும் இந்த இடம் இன்று ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தலமாய் விளங்குகிறது.

JainTemple

Photo Courtesy : Joseph Lazer

சமண கோவில்

ஹைதர் அலி இந்த இடத்தை கைப்பற்றும் வரை இது சமணர்களின் புனித இடமாக விளங்கியது. 13'ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சமண கோவில் இங்கு வெகு பிரசித்தம். 18'ஆம் நூற்றாண்டில் இந்தக் கோவில் திப்பு சுலதானின் ராணுவ கிடங்காக பயன்படுத்தப்பட்டது.

எடக்கல் குகைகள்

Edakkal

Photo Courtesy : Nitish Ouseph

வயநாடின் டாப் சுற்றுலா தலம் இந்த எடக்கல் குகைகள். சுல்தான் பத்தேரி நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் எடக்கல் குகைகள், அம்புகுத்தி மலையில் கற்காலத்தின் உன்னத நினைவுச் சின்னமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இங்கு காணப்படும் தொன்மையான சிற்பங்களும், கல்வெட்டுகளும் வரலாற்று காதலர்களின் தீராத தாகத்தை தீர்க்கும் கலைப் பிரவாகமாய் திகழ்ந்து வருகிறது.

Wayanad

Photo Courtesy : Challiyan

இந்த குகைகளின் சுவர்களில் எண்ணற்ற தொன்மையான கல்வெட்டுகள், பல்வேறு விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்கள், பழங்கால ஆயுதங்களின் வடிவங்கள், குறியீடுகள் போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன.

மாரியம்மன் கோவில்

கிடங்கன் பழங்குடி மக்களின் குல தெய்வமான மாரியம்மனுக்கு இங்கு புகழ்பெற்ற கோவில் உள்ளது. அவ்வப்போது இங்கு கோவில் திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பழசிராஜா படத்தில் அம்பும் கொம்பு பாடல் கேட்டிருந்தீர்கள் என்றால் இந்த பழங்குடி மக்களின் இசை கலாசாரத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

தோவரிமல‌

சுலதான் பத்தேரியிலிருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கும் ஊர் தோவரிமல. இந்த மலையில் இருக்கும் ஒரு பாறையில் கற்காலத்து ஓவியங்கள் சுற்றுலா பயணிகளிடம் மிகப் புகழ்பெற்றது. மலை முகட்டில் இருந்து சுற்றியிருக்கும் இடங்கள் அத்தனை அழகு வாய்ந்தது. இயற்கை ஆர்வலர்கள், மலையேற்றம் செய்ய விரும்புவர்கள் தவறவிடக் கூடாத இடம்.

forest

Photo Courtesy : stonethestone

செதாலயம் அருவி

இப்பேர்பட்ட இயற்கை சூழலில் ஒரு நீர்வீழ்ச்சி இல்லாமல் இருக்குமா ? அடர்த்தியான காடுகளுக்கு இடையில் அட்டகாசமாய் இருக்கும் நீர்வீழ்ச்சி செதாலயம் அருவி. சுல்தான் பத்தேரியில் இருந்து 12. கி.மீ தொலவுதான்.

    Read more about: wayand sultan battery
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X