உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமா? அப்போ இங்க போங்க

Written by: Udhaya
Published: Tuesday, January 3, 2017, 17:59 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

அலுவலகத்தில் வேலைப்பளு, வீட்டுக்குவந்தால் பிரச்சனை கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்னு பாத்தா அதுக்கு கூட டைம் இல்ல.. அப்றம் குடும்பத்துக்காக எப்ப நேரத்த செலவிடுவீங்க.. ஆமா நாமெல்லாம் பெரியவங்களாகிட்டோம். மனசுக்கு மட்டும் தான் வளர்ச்சி இல்லை.. நம் நினைப்பிற்கு ஏற்றவாறு பெரியவராகவும், குழந்தையாகவும் மாற்றிக்கொள்ளும். ஆனால் இதற்கெல்லாம் உடல் கட்டுப்படவும் வேண்டும்.

எப்பவும் பெரியவங்களாகவே இருந்துட்டா நம்ம மன அழுத்தம் குறையவே செய்யாது. அப்படி மனதை இளமையாகவே வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்றுதானே கேக்குறீங்க.. அதற்காகத்தானே சுற்றுலா என்ற ஒன்று இருக்கிறது. நேரம் கிடைக்கும்போது, சுற்றுலா சென்று வர மனதும் அமைதியாகும். நம் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் நேரம் செலவிட்டதாகவும் அமையும்.

சரி, இப்ப மனதை என்றும் இளமையாக வைத்திருக்க உதவும் சுற்றுலாத் தளங்கள் பற்றி பார்க்கலாமா?

பொம்மை ரயில்

 

கல்கா முதல் ஷிம்லா வரை ஓடும் பொம்மை ரயில் பெட்டியில் பயணம் செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் மனதை என்றுமே இளமையாக வைத்துக்கொள்ளமுடியும்.

வண்டி வண்டி ரயிலு வண்டி ...... வெள்ளக்காரன் கொடுத்தவண்டி........


PC: Nirav Patel

 

ரிஷிகேஸில் துடுப்பு விளையாட்டு

 

ரிஷிகேஸ், புகழ்பெற்ற ஆன்மீகத்தலம். இங்கு வரும் மக்கள் மன அமைதியை நாடியே வருகின்றனர்.

வேலைப் பளும், தீராத மன உளைச்சலால் அவதிப் பட்டு வந்தால் நீங்கள் இங்கு வந்து படகு துடுப்பு போட்டிகளில் கலந்து கொள்ளுங்கள் , பின் என்ன சிறுவர்களை போல துள்ளிக் குதித்து வீடு திரும்புவீர்கள்..

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்...அளவில்லாத வெள்ளம்வந்தால் ஆடும்.......


PC: Prashant Tailang

 

சோலாங்கில் பாராகிளைடிங்

 

அலுவலக பணிச் சுமையால் தலையை கழற்றி கீழே வைத்துவிடலாம் போலிருக்கிறதா.. இந்த பாராகிளைடிங்கும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கும். ஆனால் ஒரு நன்மை.

உங்கள் மன அழுத்தம் தீர்ந்து குழந்தையாய் மாறிவிடுவீர்கள். பின்னர் சிறுவர் சிறமியரைப் போல இம்மண்ணில் துள்ளி ஓடிவீர்கள்.

நான் போகிறேன் மேலேமேலே...... பூலோகமோ காலின் கீழே....


PC: Eric Lon

 

குஜராத் பட்டம் திருவிழா

 

உங்களை சில மணித்துளிகள் குழந்தையாய் மாற்ற வல்லது விளையாட்டு. நீங்கள் விளையாடும்போது குழந்தைகளாய் மாறி அழுவதும், சண்டை பிடிப்பதும் கவனித்திருக்கிறீர்களா. அதுதான் விளையாட்டுக்கு உள்ள வலிமை.

குஜராத் மாநிலம் கட்ஜ்சில் நடைபெறும் பட்டம் விடும் திருவிழாவில் கலந்து கொண்டு மனச் சோர்வை நீக்கிவிடுங்களேன்.....

பாஞ்சிப் பாயிற பட்டம்..இது பட்டயகிளப்புற பட்டம்.......

PC: Kaushik Patel

 

மதுராவில் நடைபெறும் வண்ணப்பொடி திருவிழா

 

கிருஷ்ணனின் வாழ்க்கை நிகழ்வுகளை நினைவுகூறும் வகையில் வண்ணப்பொடிகளைத்தூவி இவ்விழாவை கொண்டாடுகின்றனர்.

கங்கை நதித் தோட்டம்...கன்னிப்பெண்கள் கூட்டம்...கிருஷ்ணா நடுவினிலே.....

PC: kals Pic

 

பந்திப்பூர் காடுகளினூடே ஒரு சுவாரசிய லாங்க் டிரைவ்

 

காடுகளினூடே கடந்து செல்ல சரியான சாய்ஸ் பந்திபூர் தான். இங்கு செல்லும் போது நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைவீர்கள்.

இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே இருபுறமும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே செல்ல பந்திப்பூர் காடுகள் சிறப்பாக இருக்கும்.

என்னைக் கொஞ்சம் மாற்றி...என் நெஞ்சில் உன்னை ஊற்றி.......

PC: Poorna Kedar

 

மழைக்காட்டில் இயற்கை பாலத்தில் ஒரு பயணம்

 

மழைக்காடு எனப்படும் சிரபுஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மரப் பாலத்தில் பயணம் செய்வது, இங்குள்ள இயற்கை அழகுகளை ரசிப்பது என அனைத்தும் நம் வயதை குறைத்து மனதைரியத்தை அதிகப் படுத்தவல்லது.

PC: Udayaditya Kashyap

 

கடவுளின் சொந்த தேசமாம் கேரளாவில் இனிதே பயணம்.

 


கேரள மாநிலத்தில் நீங்கள் பயணிக்கும் போது பெரும்பாலான இடங்களில் உங்களுக்கு உங்கள் வயது நினைவுக்கே வராது. அந்த அளவுக்கு மகிழ்ச்சியில் உறைந்து வெளிவர மறுப்பீர்கள்.

அதுவும் , ஒரு மோட்டார் சைக்கிளில் உங்கள் மனைவி அல்லது காதலியை வைத்துக்கொண்டு போகும்போது...

....பார்த்த முதல் நாளே..உன்னை பார்த்த முதல் நாளே...

PC: MO KI

 

காதல் நகரத்தில் ஒரு காதல் சுற்றுலா

 

காதல் நகரம் என அழைக்கப்படும் ஆக்ராவில் உங்கள் மனம் விரும்பிய நபருடன் இருந்தால் உங்களுக்கு வயது ஆகி விட்டதாக நீங்கள் உணரவே மாட்டீர்கள். என்றும் இளமையாய் இருப்பதாக உணர்வீர்கள்.

 

PC: Michael Bleyzer

 

குகைப் பயணம்

 

குகைகளில் பயணம் செய்வதென்பது விசித்திரமான திரில் அனுபவத்தைத் தரவல்லது. இதனால் மனம் எளிமையாகி, பூரிப்படையும். தங்களை மனதளவில் இளமையாக வைத்திருக்க விரும்புபவர்கள் இதனை முயற்சிக்கலாம்.

PC: Rob Eavls

 

காட்டுக்குள் வேட்டைப் பயணம்

 

அமைதி..காடுகள்..உயரங்கள்...குளுமை..சிலுசிலு காற்று........... காட்டு வாழ்க்கை...

உங்கள் காட்டு வாழ்க்கை இங்கு உற்சாகம் பொங்க நிகழ்கிறது. உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பயணத்துக்கு...அதுவும்.. காட்டு பயணத்துக்கு சென்று வாங்க...

PC: Feroze

 

அந்தமானில் ஸ்கூபா டைவிங்

 

பூமியின் சொர்க்கமான அந்தமானில், கடலுக்கடியில் நீச்சல் அடிக்கும் டைவிங் முறைக்கு ஸ்கூபா டைவிங் என்று பெயர். இதனை பழக விரும்புவோர் அந்தமான் சென்று விடுமுறையை கொண்டாடிவிட்டு வரலாம்.

PC: Simlan Explorer

 

Read more about: travel, பயணம்
English summary

Take a tour to places in india where we feel like a child

Lets go a trip for the places where we feel like a child
Please Wait while comments are loading...