Search
  • Follow NativePlanet
Share
» »அட... கேரளாவில் இப்படி ஒரு இடமா... நம்ம பாத்ததே இல்லையே!

அட... கேரளாவில் இப்படி ஒரு இடமா... நம்ம பாத்ததே இல்லையே!

கண்டிப்பா சொல்வீங்க.. இது சோலையா இல்ல நந்தவனமா நீங்களே குழம்பிடுவீங்க.. அந்த அளவுக்கு அழகுகளைக் கொட்டி தீர்த்துள்ளது இயற்கை

By Udhaya

இந்தியாவிலேயே மிகவும் பசுமையான மாநிலங்களில் ஒன்றாக திகழ்வது கேரளா ஆகும். மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகள் கேரளத்தில் எப்போதும் பசுமை தவழ காரணமாயிருக்கின்றன. இதன் காரணமாகவே இந்தியாவில் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் மாநிலமாக கேரளா இருக்கிறது. கேரளத்தில் இன்னும் அதிகம் வெளியுலகத்திற்கு தெரியாத மிகவும் பசுமை இடம் தான் கவி ஆகும். தீண்டப்படாத மாசற்ற இயற்கை அழகை ரசிக்க விரும்புகிறவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய கவியை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

கவியின் கொள்ளைகொள்ளும் அழகு

கவியின் கொள்ளைகொள்ளும் அழகு

கவி, பந்தனம்திட்டா மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையான குமிளியில் இருந்து 40கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. குமிளியில் இருந்து வண்டிப்பெரியாரை வந்தடைந்து அங்கிருந்து 27.5கி.மீ தொலைவிலிருக்கும் கவியை சென்றடையலாம்.

PC: Samson Joseph

வல்லக்கடவு சோதனைச் சாவடி

வல்லக்கடவு சோதனைச் சாவடி

கவி பெரியார் புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்திருக்கிறது. இதனை வண்டிபெரியாரில் இருந்து கார் மூலமே வந்தடைய முடியும். இதற்கு நுழைவுக்கட்டணமாக ஒருவருக்கு ₹25யும், வாகனத்திற்கு ₹50 வசூலிக்கப்படுகிறது.


PC: Jayeshj

கவியின் கொள்ளைகொள்ளும் அழகு

கவியின் கொள்ளைகொள்ளும் அழகு

லேடி ஷூ பூக்கள்

PC: Faizalcec

பெரியார் தேசிய பூங்கா, கவி

பெரியார் தேசிய பூங்கா, கவி

பூங்காவில் காணப்படும் ஒருவகை மலர்.

PC: K Hari Krishnan

அழகிய புல்வெளி காளான்கள்

அழகிய புல்வெளி காளான்கள்

அழகிய புல்வெளி காளான்கள்

PC: Ezhuttukari

மலபார் ராட்சதன்

மலபார் ராட்சதன்

மலபார் ராட்சதன்

PC: Faizalcec

நீலகிரி குரங்குகள்

நீலகிரி குரங்குகள்

நீலகிரி குரங்குகள்

PC: Faizal

இந்திய ராட்சத அணில்

இந்திய ராட்சத அணில்

இந்திய ராட்சத அணில்

PC: ArunGuy2002

இந்திய யானைகள்

இந்திய யானைகள்

இந்திய யானைகள்

PC: Arun Suresh

மாடு

மாடு

புற்களை மேயும் மாடு

Pc: Arun Suresh

வண்ண வண்ண பூக்கள்

வண்ண வண்ண பூக்கள்

வண்ண வண்ண பூக்கள்

PC: K Hari Krishnan

என்ன செய்யலாம்

என்ன செய்யலாம்

மலையேற்றம்
காட்டு சுற்றுலா
பறவைகள் காட்சி
காடுபகுதிகளில் முகாம்
காடு சாலைகளில் சுவாரசிய பயணம்
நின்னுமுள்ளிக்கு சென்று வரலாம்
படகு குழாம் செல்லலாம்
நறுமணப் பொருள்கள் தோட்டத்தில் காலார நடைபோடலாம்
மசாஜ் செய்துகொள்ளவும் வசதிகள் உள்ளன.

ஜீப் சவாரி:

ஜீப் சவாரி:

கவியில் பரவிக்கிடக்கும் இயற்கை புதையலை ரசிக்க நிச்சயம் ஜீப் சவாரி செய்ய வேண்டும். ஜீப் சவாரியின் போது அரிய விலங்குகளான நீலகிரி தார் மான்கள், சிங்கவால் குரங்குகள் மற்றும் இங்கிருக்கும் 260 வகையான உயிரினங்களில் சிலவற்றை கண்டு மகிழலாம்.

PC: Reji

 முன்பதிவு

முன்பதிவு

விக்கு சுற்றுலா செல்லும் முன்பாக கேரள வனத்துறையை தொடர்புகொண்டு கவியில் தங்குவதற்கான காட்டேஜுகள், ஜீப் சவாரி, படகு பயணம் போன்றவற்றை முன்பதிவு செய்துகொள்வது நல்லது. இதன்மூலம் தேவையில்லாத தாமதத்தை தவிர்க்க இயலும். -


PC: Reji

கவியின் கொள்ளைகொள்ளும் அழகு

கவியின் கொள்ளைகொள்ளும் அழகு

கவியின் கண்ணைக் கவரும் அழகிய மலைக்காட்சி

PC: Reji

குரங்குகள்

குரங்குகள்

கவியில் அதிகம் காணப்படும் குரங்கு வகைகள்.

PC: kfdcecotourism

படகு சவாரி

படகு சவாரி

கவியில் பாய்ந்தோடும் தெள்ளத்தெளிவான நன்னீர் ஓடையான கொச்சுபம்பாவில் படகு சவாரி செய்து மகிழலாம். இங்கே படகு சவாரி செய்யும் போது 'லைப் ஜாக்கெட்' அணியவேண்டியது கட்டாயமாகும். மோட்டார் படகு சவாரி மட்டுமல்லாது துடுப்பு படகில் சவாரி செய்யும் வசதியும் இங்கே உள்ளது. Show Thumbnail

கட்டணவிவரங்கள்

கட்டணவிவரங்கள்

கவியில் ஜீப் சவாரி செய்திட ஒருவருக்கு ₹1250, சிறுவர்களுக்கு ₹675 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மதிய உணவு, இதர நுழைவுக்கட்டணங்கள் போன்ற அனைத்தும் இதனுள் அடங்கிவிடுகின்றன. கொச்சுபம்பையில் படகு சவாரி செய்ய இரண்டு நபர்களுக்கு ₹300 கட்டணம் செலுத்தவேண்டும்.

கவியின் கொள்ளைகொள்ளும் அழகு

கவியின் கொள்ளைகொள்ளும் அழகு

கவியின் கொள்ளை கொள்ளும் அழகு நீர் நிலை


PC: Reji

 கோபர் மரங்கள்

கோபர் மரங்கள்

பைபிளில் குறிப்பிடப்படும் கோபர் மரங்கள் இந்தியாவிலேயே கவி வனப்பகுதியில் மட்டுமே இருப்பதாக தாவரவியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேரழிவில் இருந்து பூமியில் உள்ள ஜீவராசிகளை எல்லாம் கோபர் மரத்தினால் செய்யப்பட்ட படகில் ஏற்றி நோவா என்பவர் காப்பாற்றியதாக பைபிளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

PC: Muneef Hameed

 மலையேற்றம்

மலையேற்றம்

கவியில் மலையேற்றம் செய்யலாம், உயரமான மரங்களின் மேல் அமைக்கப்பட்டுள்ள குடில்களில் தங்கலாம், மிளகு மற்றும் ஏலக்காய் தோட்டங்களுக்கு சென்று அவை உற்பத்தி செய்யப்படும் முறை பற்றி அறிந்துகொள்ளலாம், சபரிமலையை காணலாம், ஆயுர்வேத மசாஜ் செய்துகொள்ளலாம்.


PC: Reji

கவியின் கொள்ளைகொள்ளும் அழகு

கவியின் கொள்ளைகொள்ளும் அழகு

கவியின் பேரழகை காணுங்கள்

PC: Reji

கவியின் கொள்ளைகொள்ளும் அழகு

கவியின் கொள்ளைகொள்ளும் அழகு

PC: Reji

கவியின் கொள்ளைகொள்ளும் அழகு

கவியின் கொள்ளைகொள்ளும் அழகு

PC: Reji

எப்படி செல்வது?

எப்படி செல்வது?


வார விடுமுறையில் சுற்றுலா வர அற்புதமான இடமாகும் இந்த கவி. பெங்களூருவில் இருந்து 546 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 680 கி.மீ தொலைவிலும் கவி அமைந்திருக்கிறது. அடுத்தவாரம் வரும் மூன்று நாள் உகாதி விடுமுறைக்கு சுற்றுலா போகலாம் என்ற விருப்பமிருந்தால் நிச்சயம் கவிக்கு சென்றுவாருங்கள்.

PC: Muneef Hameed

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X