Search
  • Follow NativePlanet
Share
» »தமிழில் பயண இலக்கியம்!

தமிழில் பயண இலக்கியம்!

ஏ.கே செட்டியார்

யாதும் ஊரே யாவருங் கேளிர், திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று சங்க காலம் தொட்டே பயணத்தை பற்றி தமிழர்கள் எழுதியிருக்கின்றனர். பர்மா, மலேசியா, இலங்கை என்று பல நாடுகளுக்கு வணிகம் செய்ய, வேலை தேடி பயணித்திருக்கின்றனர்.

அப்படியிருந்தும் தமிழில் பயணம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் அதிகம் என்று சொல்ல முடியாது.நாவல், சிறுகதை அளவிற்கு பயணம் இலக்கியம் இங்கு பெரிதாக வளரவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில புத்தகங்கள் வந்திருக்கின்றன. அதில் முக்கியமானது ஏ.கே. செட்டியாரின் பயண நூல்கள்.

ஏ.கே செட்டியார், 1911'இல் திருவண்ணாமலை அருகே கோட்டையூரில் பிறந்தார். பள்ளிப்படிப்பை திருவண்ணாமலையில் முடித்த இவர், ஜப்பான், அமெரிக்கா சென்று புகைப்படக்கலையைப் பயின்றார். இவரின் மகத்தான பங்கு உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று விவரங்களைத் திரட்டி காந்தியைப் பற்றி ஆவணப்படம் எடுத்தது.

ஏ.கே. செட்டியார் ஐரோப்பா முதல் அமெரிக்கா வரை ஜப்பன் முதல் மலேசியா வரை உலகம் முழுதும் பல நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். இன்று போல பயணம் அன்று அத்தனை எளிது கிடையாது. கப்பலில்தான் செல்ல முடியும். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல பல நாட்கள் பிடிக்கும். புயல், பெரு மழை என்றால் பயணம் மேலும் தள்ளிப் போகும்.

இவர் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டிருந்த போது பல இதழ்களுக்கு தன் பயண அனுபங்களை கட்டுரைகளாக எழுதியுள்ளார். அதில் சிலவற்றை உலகம் சுற்றும் வாலிபன் என்ற புத்தகத்தில் நீங்கள் படிக்கலாம்.

இதோடு நிற்காமல் இவர் செய்த இன்னுமொரு பங்களிப்பு : தமிழில், 1850 - 1925 காலப்பகுதியில் எழுதப்பட்ட பலரின் பயணக்கட்டுரைகளைத் தொகுத்து, ஆறு நூல்களாக வெளியிட்டார். இவர் எழுதிய பின்வரும் பயண நூல்கள் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன:

  • உலகம் சுற்றும் தமிழன்
  • பிரயாண நினைவுகள்
  • மலேயா முதல் கனடா வரை
  • கயானா முதல் காஸ்பியன் கடல் வரை
  • அமெரிக்க நாட்டிலே
  • ஐரோப்பா வழியாக
  • இந்தியப் பயணங்கள்
  • ஜப்பான் கட்டுரைகள் (1936, இரங்கூன்)
  • தமிழ்நாடு -நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்

மேலே உள்ள புத்தகங்களை நூல் உலகம் தளத்தில் போய் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

LenaThamizhvanan

Photo Courtesy : Manimegalai Prasuram

லேனா தமிழ்வாணன்

ஏ.கே செட்டியாருக்கு அடுத்து அதிக பயணக் கட்டுரைகளை எழுதியவர் லேனா தமிழ்வாணன்.

லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரத்தின் ஆசிரியர் குழுவின் தலைவர். கல்கண்டு ஆசிரியரும்கூட. மேலும், கல்லூரிகளுக்குச் சென்று பத்திரிகை சார்ந்த வகுப்புகளையும் எடுக்கிறார். இவரின் இன்னொரு பரிமாணம். பயண இலக்கியம். இவர் சுற்றாத நாடுகளே இல்லையெனச் சொல்லலாம். அதை பயணக் கட்டுரைகளாக எழுதியும் வருபவர். கவனமாகத் திட்டமிட்டு எந்த நாட்டிற்கு எப்படிச் செல்ல வேண்டும், என்னென்ன வாங்க வேண்டும், செலவுகளை எப்படி திட்டமிட வேண்டும் என்று தெளிவாய் முடிவெடுத்து பயணிப்பவர்.

பயணத்தில் நேர்ந்த பல சுவாரஸ்யமான அனுபவங்களை கட்டுரைகளாக எழுதுபவர்.

  • துபாய் அழைக்கிறது
  • கண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு
  • தமிழைத் தேடி ஓர் பயணம்
  • ஒரு பத்திரிகையாளரின் மேல்நாட்டு பயண அனுபவங்கள் என்று பல பயண நூல்களை எழுதியுள்ளார்.

இவர்களைத்தவிர தி.ஜானகிராமனின் உதயசூரியன் (ஜப்பான் பயணக்கட்டுரைகள்), தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகங்களும் நல்ல வாசிப்பு அனுபவத்தை கொடுக்ககூடியது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X