உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியையே வெளியேற்றிய கோயில் எங்கே? ஏன்? எப்படி?

Written by: Udhaya
Updated: Wednesday, May 17, 2017, 14:49 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

இந்துக்கள் அல்லாதவர்கள் சில கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. பழம்பெரும் கலாச்சாரங்கள் கொண்ட கோயில்கள் சிலவற்றுள் மிக அதிக கட்டப்பாடுகள் இருக்கின்றன. இது போன்ற கட்டப்பாடுகளால் வெளிநாட்டவர்கள் பலர் சில கோயில்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இது இந்த 2017ம் ஆண்டும் சில கோயில்களில் தீவிரமாக கடைப்பிடிக்கப்படும் ஒரு விதியாக உள்ளது.

முன்னாள் பிரமர் இந்திரா காந்தி, ஒரு கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றார். ஆனால் கோயில் நிர்வாகிகள் பிரதமரான இந்திராவையே உள்ளே அனுமதிக்கவில்லை. ஏன் தெரியுமா? அது எந்த கோயில் , ஏன் அனுமதிக்கவில்லை என்பதை பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்

குருவாயூர், கேரளா


இந்த கோயில் கேரள மாநிலத்தின் குருவாயூர் நகரத்தில் அமைந்துள்ளது. கிருஷ்ணர் கோயிலான இங்கு இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

கேரளாவின் மிக முக்கிய கோயிலும், இந்தியாவின் டாப் 5 கிருஷ்ணர் கோயிலுமான இது மிக கடுமையான உடைக் கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்கிறது.

commons.wikimedia.org

 

எந்த உடைகள் அணியலாம்

 

வேட்டியும், துண்டும் அணிவது ஆண்களுக்கும், பெண்கள் சேலை மற்றும் சிறுமிகள் முழு பாவாடை மட்டுமே அணிந்துவரவேண்டும் என்பது இங்குள்ள விதி.

இந்து அல்லாதவர்கள் யாரும் கோயிலுக்குள் வருவதை கண்டறிந்துவிட்டால் உடனே வரவிடாமல் கோயில் வாசலிலேயே திருப்பி அனுப்பி விடுவர்.

 

ஏசுதாஸுக்கு நிகழ்ந்த அனுபவம்

 

பாடகர் ஏசுதாஸ் இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள கிருஷ்ணருக்காக ஒரு பாடல் ஆல்பம் தயார் செய்ய அனுமதி கேட்டபோது திருப்பி அனுப்பிவிட்டனர். பின் அவர் கோயில் வெளியிலிருந்து பாடலை இயற்றினாராம்.

 

பூரி ஜெகன்நாத் கோயில்


இந்த கோயிலில் மிகக் கடுமையான விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதாவது, பவித்ரமான இந்துக்கள் என்றழைக்கப்படுபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்களாம். இது இந்த கோயிலின் வெளிப்புற சுவற்றில் எழுதப்பட்டுள்ளது.

வாழ்வில் ஒருமுறையாவது ஒவ்வொரு இந்துவும் கட்டாயம் வந்து செல்லவேண்டுமென நினைக்கும் தளம் இதுவாகும்.

en.wikipedia.org

இந்தியாவிலேயே தனிச்சிறப்பு கொண்ட இந்த பிள்ளையார் கோயிலை தெரியுமா?

இந்திரா காந்தியவே அனுமதிக்கலை

 

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, இந்த கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஏன் தெரியுமா? அவர் பெரோஸ் காந்தி எனும் இந்து அல்லாதாரை மணம் செய்ததால்.

commons.wikimedia.org

இந்த சக்தி வாய்ந்த கோவில்களுக்கு நீங்க போயிருக்கீங்களா?

ராணிக்கு வந்த சோதனை


தாய்லாந்து ராணி மகாசக்ரி சிரிதரன் இந்தியா வந்திருந்த போது அவரும் அனுமதிக்கப்படவில்லை. காரணம் அவர் ஒரு புத்தமதத்தவர்.

2012ம் ஆண்டு அமெரிக்கரான நீல் மகி ஹேடனும் அனுமதி மறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். 2006ம் ஆண்டு சுவிஸ் நாட்டின் எலிசபெத் ஜிக்லர் என்பவர் 1.67 கோடி நன்கொடை கொடுத்தார். நன்கொடையை ஏற்றுக்கொண்ட கோயில் நிர்வாகம், அவரை உள்நுழைய அனுமதி தரவில்லை.

commons.wikimedia.org

 

காசி விஸ்வநாதர் கோயில் , வாரணாசி

 

கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள வாரணாசிப் பகுதி, இந்துக்களின் மிக முக்கிய புண்ணிய தலமாகும்.

12 ஜோதிர்லிங்கத்தில் இதுவும் ஒன்றாகும். இந்த கோயிலுக்குள்ளும் இந்து அல்லாதவர்கள் நுழைய அனுமதி இல்லை.

பா.ஜம்புலிங்கம்

 

லிங்கராஜா கோயில், புவனேஸ்வர்

 

ஒரிசாவின் மிக முக்கிய சுற்றுலாத் தளமும், புவனேஸ்வர் நகரத்தின் முக்கிய புண்ணிய தளமுமாகிய லிங்கராஜா கோயிலிலும் இந்து அல்லாதோர்க்கு அனுமதி கிடையாது.

நாளொன்றுக்கு 6 ஆயிரம் பக்தர்கள் வருகை தரும் இந்த கோயிலுக்கு விழாக் காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.

எனினும் இந்து அல்லாதோர்கள் முக்கியமாக வெளிநாட்டவர்கள் வருகை இங்கு தடை செய்யப்பட்டுள்ளது.

 

பத்மநாபசுவாமி கோயில், திருவனந்தபுரம்

 

16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் உலகின் மிக பெரிய பணக்கார கோயில் என்று மக்களால் புகழப்படுகிறது.

இந்த கோயிலுக்கு பல வெளிநாட்டுப் பயணிகள் வருகை தருகின்றனர். ஆனால் இந்து அல்லாதோர்கள் இங்கு அனுமதி மறுக்கப்படுகின்றனர். இருப்பினும் பலர் கோயிலுக்குள் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ashcoounter

en.wikipedia.org

 

கபாலீஸ்வரர்கோயில், சென்னை

 

சென்னை கபாலீஸ்வரர்கோயிலில் இந்து அல்லாதோர் நுழைய தடை உள்ளது. இந்து மதத்துக்கான அடையாளம் ஏதும் இன்றி வருபவர்கள் சந்தனம், திருநீறு போன்ற அடையாளங்கள் இல்லாதவர்கள் கேள்விக்குட்படுத்தப்படுகிறார்கள்.

எனினும் பல நேரங்களில் பெரியதாக கட்டுப்பாடுகள் இல்லை. வெள்ளைக்காரர்களை நுழைய அதிக கட்டுப்பாடு தெரிவிக்கின்றனர் கோயில் நிர்வாகத்தினர்.

Nsmohan

 

பசுபதிநாத் கோயில்


இந்திய நேபாள எல்லையில் அமைந்துள்ள இந்த கோயிலில் இந்து அல்லாதோர்க்கு மிகமிககட்டுப்பாடு. அவர்கள் உள் நுழைவதற்கு அனுமதி இல்லவே இல்லை.

en.wikipedia.org

 

காமாட்சியம்மன் கோயில்

 

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலிலும் இந்து அல்லாதோர்கள் அனுமதி மறுக்கப்படுகின்றனர். அதே நேரத்தில் தான் இந்து என்று பொய் கூறியும் சிலர் செல்கின்றனர்.

108 வைணவத்தளங்களில் ஒன்றான இது 5 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இந்து அல்லாருக்கு இந்த கோயிலிலும் அனுமதி இல்லை.


SINHA

உலகுக்கே சவால் விடும் தமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா?

Read more about: travel, temple
English summary

Temples where non-Hindus are not allowed in Tamil

Temples where non-Hindus are not allowed in Tamil
Please Wait while comments are loading...