Search
  • Follow NativePlanet
Share
» »தலசேரி - மலபார் கடற்கரையின் பாரிஸ்

தலசேரி - மலபார் கடற்கரையின் பாரிஸ்

By Naveen

தலசேரி, கேரளத்தின் மலபார் கடற்கரையில் அமைந்திருக்கும் நகரமான இது கலை மற்றும் வரலாற்று புதையலாகும். 'மலபார் கடற்கரையின் பாரிஸ்' என்று புனைப்பெயரிடும் அளவிற்கு வரலாற்று செழுமையும், கலைகளை போற்றி வளர்க்கும் பூமியாகவும் இந்த தலசேரி திகழ்ந்து வருகிறது. கடவுளின் சொந்த தேசத்தின் திலகமாக இருக்கும் தலசேரி நகரை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தலசேரியின் வரலாறு :

தலசேரியின் வரலாறு :

போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்களை தொடர்ந்து இந்தியாவை கடல் மார்கமாக அடைந்த பிரான்ஸ் நாட்டினர் கால்பதித்த இடம் தான் இந்த தலசேரி. 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் வசம் வந்த பிறகு தலசேரிக்கு மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டு தெற்கு மலபாரின் தலைநகராகவும் ஆக்கப்பட்டிருக்கிறது.

தலசேரியின் வரலாறு :

தலசேரியின் வரலாறு :

புராண குறிப்புகளின்படி ஆதிகாலத்தில் ஸ்வதாரண்யா புரம் என்று இவ்விடம் அழைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள திருவங்காட் ராமஸ்வாமி கோயிலின் தல புராணப்படி சிவா பெருமான் தனது ஆனந்த தாண்டவத்தை ஆடிய இடமாகவும் தலசேரி சொல்லப்படுகிறது.

Photo: திருவங்காட் ராமஸ்வாமி கோயில்

நறுமணப்பொருட்கள் பொருட்களின் தலைநகரம் :

நறுமணப்பொருட்கள் பொருட்களின் தலைநகரம் :

வடக்கே கோட்டயம், தெற்கே கடத்தநாடு, கிழக்கே கோட்டயம் மற்றும் வயநாடு போன்ற நறுமணப்பொருட்கள் அதிகம் விளையும் இடங்களுக்கு மைய புள்ளியாக தலசேரி இருந்ததால் மூட்டை மூட்டையாக தங்கம் கொடுத்து மிளகையும், ஏலக்காயையும் வெளிநாட்டவர்கள் வாங்கிச்செல்லும் முக்கிய வணிக கேந்திரமாக இது இருந்திருக்கிறது.

சுற்றுலாத்தலங்கள் :

சுற்றுலாத்தலங்கள் :

தலசேரியில் இருக்கும் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்று முலுபிலங்காட் கடற்கரை ஆகும். இந்தியாவில் இருக்கும் மிக நீளமான 'டிரைவ்-இன்' கடற்க்கரை இதுவாகும். இந்த கடற்கரையில் இருக்கும் இறுகலான மணலின் காரணமாக வாகனங்களை சிரமமின்றி இயக்க முடியும். மாலை நேரத்தில் இந்த கடற்கரையில் காரிலே வண்டியிலோ சுற்றிப்பார்ப்பது வித்தியாசமான ஓர் அனுபவமாக இருக்கும்.

தலசேரி உணவுகள் :

தலசேரி உணவுகள் :

நறுமணப் பொருட்களின் நகரமாக திகழ்ந்ததால் தலசேரிக்கென்றே பிரத்யேகமான சுவையுடைய உணவுகள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. தலசேரியில் கிடைக்கும் மிகப்பிரபலமான உணவென்றால் அது தலசேரி பிரியாணி தான். கேரளா பாரம்பரிய சமையலில் இருக்கும் ஒரே பிரியாணி இது என்பதால் 'கேரளா பிரியாணி' என்றும் இது அழைக்கப்படுகிறது.

தலசேரி உணவுகள் :

தலசேரி உணவுகள் :

பிரியாணியை தவிர தலசேரியில் கிடைக்கும் விசேஷமான உணவுகளில் ஒன்று தலசேரி பலூடா ஆகும். பழக்கூட்டு, உலர்ந்த திராட்சை, வெண்ணிலா பனிக்கூழ் போன்றவை கொண்டு தயாரிக்கப்படும் இந்த வகை உணவு கோடைகாலத்தின் போது சாப்பிட மிகவும் உகந்தது.

தெய்யம் ஆட்டம் :

தெய்யம் ஆட்டம் :

கண்ணூர் மாவட்டத்தின் தனித்துவமான அடையாளங்களில் இந்த தெய்யம் ஆட்டமும் ஒன்றாகும்.

எப்படி அடைவது :

எப்படி அடைவது :

தலசேரி நகரை எப்படி அடைவது ?. அங்கிருக்கும் ஹோட்டல்களின் விவரங்கள், ரயில் கால அட்டவணைகள் போன்றவற்றை தமிழின் முதன்மை பயண இணையதளமான தமிழ் நேடிவ் பிளானட்டில் அறிந்து கொள்ளுங்கள்

Read more about: kerala kannur food tour thalassery
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X