Search
  • Follow NativePlanet
Share
» »மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் அட்டகாசமான திருவிழாக்கள்

மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் அட்டகாசமான திருவிழாக்கள்

நடுங்க வைக்கும் குளிரோ, தவிக்கவிடும் வெய்யிலோ இல்லாமல் மிக இதமான சூழல் நிலவும் மாதம் மார்ச் ஆகும். இம்மாதத்தில் இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் எண்ணற்ற கோயில் திருவிழாக்களும், கலை நிகழ்ச்சிகளும் கொண்டாடப்படுகின்றன. இந்த மார்ச் மாதத்தில் நீங்கள் எங்காவது சுற்றுலா செல்ல விரும்பினால் சுற்றுலா இடங்களுக்கு செல்வதை விடவும் இம்மாதிரியான திருவிழாக்களில் பங்கு கொண்டு கொண்டாடுவது புதுமையான அனுபவமாக மட்டும் இல்லாமல் அதிக உற்சாகம் தருவதாகவும் இருக்கும். வாருங்கள் மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் அற்புதமான திருவிழாக்கள் பற்றி அறிந்து கொள்வோம் .

Expedia தளத்தில் விமான கட்டணங்களில் 50% தள்ளுபடி பெறுவதற்கான கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்

ஹோலி பண்டிகை :

ஹோலி பண்டிகை :

ஹோலி, இதைவிட வண்ணமயமான திருவிழாவை இந்தியாவில் நாம் பார்க்கவே முடியாது. ஜாதி, மத, மொழி பேதங்கள் எல்லாவற்றையும் கடந்து ஒற்றுமையுடன் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை வீசி ஆனந்தமாக கொண்டாடும் பண்டிகையாக ஹோலி இருக்கிறது. இது இம்மாதம் 6ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

Photo:Ramnath Bhat

ஹோலி பண்டிகை :

ஹோலி பண்டிகை :

இந்தியாவில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த இப்பண்டிகை இப்போது அமெரிக்கா, ஐரோப்பா, தென் கிழக்கு ஆசிய நாடுகள், இந்திய வம்சாவளியினர் வசிக்கும் மேற்கு இந்திய தீவுகள் உள்ளிட்ட நாடுகளிலும் தற்போது வெகு விமரிசையாக ஹோலி கொண்டாடப்படுகிறது.

Photo:PaulaLyn Carvalho

ஹோலி பண்டிகை :

ஹோலி பண்டிகை :

மிகப்பெரும் விஷ்ணு பக்தனான பிரகலாதனின் அரக்க குணம் கொண்ட தந்தையான அரசன் ஹிரன்யகசிபுவும், பிரகலாதனை கொல்ல முற்பட்ட ஹிரன்யகசிபுவின் சகோதரியான ஹோலிகாவும் கொல்லப்பட்டதை கொண்டாடும் பண்டிகையே ஹோலி என இப்பண்டிகையை பற்றி புராண கதைகள் கூறுகின்றன.

Photo:Steven Gerner

ஹோலி பண்டிகை :

ஹோலி பண்டிகை :

தென் மாநிலங்களை காட்டிலும் வட இந்தியாவில் ஹோலி மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதிலும் குறிப்பாக உத்திர பிரதேசம், பஞ்சாப், குஜராத் போன்ற மாநிலங்களில் தனித்தன்மையுடன் வித்தியாசமாக ஹோலி கொண்டாடப்படுகிறது.

Photo:Steven Gerner

ஹோலி பண்டிகை :

ஹோலி பண்டிகை :

இப்பண்டிகையை கொண்டாட நீங்கள் செல்லவேண்டிய இடமாக நாங்கள் பரிந்துரைப்பது பகவான் கிருஷ்ணர் பிறந்த நகரமான மதுராவில் ஹோலி பண்டிகை வேறெங்கும் இல்லாத அளவுக்கு வண்ணமயமாக கொண்டாடப்படுகிறது. அங்கே எப்படி செல்வது என்பது பற்றிய விரிவான தகவல்களை எங்கள் தளத்தில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Biswajit Das

ஹோலி பண்டிகை :

ஹோலி பண்டிகை :

ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள்.

Photo:PaulaLyn Carvalho

ஹோலி பண்டிகை :

ஹோலி பண்டிகை :

ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள்.

Photo:FaceMePLS

ஹோலி பண்டிகை :

ஹோலி பண்டிகை :

ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள்.

Photo:Jeremy Nicoll

சர்வதேச யோகா திருவிழா :

சர்வதேச யோகா திருவிழா :

இந்திய திருநாடு உலகுக்கு அளித்த மாபெரும் கொடைகளுள் ஒன்று உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் அற்புத கலையான யோகா ஆகும். இன்று உலகம் முழுக்கவே பிரபலமாகிவிட்ட இந்த உன்னத கலையை கொண்டாடும் திருவிழா தான் இந்த சர்வதேச யோகா திருவிழாவாகும்.

Photo:Matt Madd

சர்வதேச யோகா திருவிழா :

சர்வதேச யோகா திருவிழா :

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் உத்ரகண்ட் மாநிலத்தில் உள்ள மிக முக்கிய ஆன்மீக ஸ்தலமான ரிஷிகேஷில் இந்த விழா நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுக்க இருந்து முன்னணி ஆன்மீக குருமார்கள் மற்றும் யோகா ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

Photo:VISIT FLORIDA Editor

சர்வதேச யோகா திருவிழா :

சர்வதேச யோகா திருவிழா :

யோகா கற்றுக்கொள்ளவும், அது பற்றி யோகா குருக்களிடம் விவாதிக்க விரும்புகிறவர்களும் நிச்சயம் ரிஷிகேஷ் வந்து இந்த யோகா திருவிழாவில் கலந்து கொள்ளுங்கள்.

Photo:VISIT FLORIDA Editor

ஆட்டுகால் பொங்கல் விழா :

ஆட்டுகால் பொங்கல் விழா :

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கும் ஆட்டுகால் பகவதி அம்மன் கோயில் தென் இந்தியாவில் இருக்கும் மிகப்பழமையான கோயில்களுள் ஒன்றாகும். இக்கோயில் பெண்களின் சபரிமலை என்ற சிறப்பு பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் நடக்கும் பொங்கல் விழாவை போன்று ஒன்றை நாம் வேறெங்குமே பார்க்க முடியாது.

Photo:

ஆட்டுகால் பொங்கல் விழா :

ஆட்டுகால் பொங்கல் விழா :

ஏனென்று கேட்கிறீர்களா?. இந்த விழாவின் போது மட்டும் கிட்டத்தட்ட 25 லட்சம் பெண்கள் இக்கோயிலுக்கு வந்து பொங்கல் வைத்து ஆட்டுகால் அம்மனை பொங்கல் வைத்து வழிபட்டு செல்கின்றனர். இக்கோயிலை சுற்றி 5கி.மீ நீளத்திற்கு பெண்கள் பொங்கல் வைக்கின்றனர். ஒரே இடத்தில் மிக அதிகமான பெண்கள் கூடும் இடம் இது என கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இந்த ஆட்டுகால் இடம் பெற்றிருக்கிறது.

Photo:Seema Krishnakumar

ஆட்டுகால் பொங்கல் விழா :

ஆட்டுகால் பொங்கல் விழா :

இக்கோயில் இவ்வளவு புகழ் பெற்றதன் பின்னணியில் தமிழ் பெண் ஒருத்தியும் இருக்கிறாள் என்றால் நம்பமுடிகிறதா?. ஆம்! சிலப்பதிகாரத்தின் நாயகியான கண்ணகி மதுரையை எரித்துவிட்டு கொடுங்களூர் நோக்கி செல்கையில் தற்போது ஆட்டுகல் பகவதி அம்மன் கோயில் அமைந்திருக்கும் இடத்தில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு சென்றதாக நம்பப்படுகிறது.

Photo:Bobinson K B

ஆட்டுகால் பொங்கல் விழா :

ஆட்டுகால் பொங்கல் விழா :

கற்பின் அரசியாகவும், பார்வதி தேவியின் ரூபமாகவும் கண்ணகி பார்க்கபப்டுவதால் அவரின் அருளை பெறவே லட்சக்கணக்கில் இங்கே பெண்கள் கூடுகின்றனர். இக்கோயிலுக்குள் செல்ல ஆண்களுக்கு அனுமதியில்லை என்பது கூடுதல் தகவல். திருவனந்தபுரத்தின் மைய பகுதியில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயிலில் இருந்து 2கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்திருக்கிறது.

Photo:Bobinson K B

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X