Search
  • Follow NativePlanet
Share
» »அதென்னங்க மிதக்கும் சந்தை! நீங்க பாத்திருக்கீங்களா? அதைப் பத்தி தெரிஞ்சுக்கனும்னா இதப் படிங்க!!

அதென்னங்க மிதக்கும் சந்தை! நீங்க பாத்திருக்கீங்களா? அதைப் பத்தி தெரிஞ்சுக்கனும்னா இதப் படிங்க!!

அதென்னங்க மிதக்கும் சந்தை! நீங்க பாத்திருக்கீங்களா? அதைப் பத்தி தெரிஞ்சுக்கனும்னா இதப் படிங்க!!

By Balakarthik Balasubramanian

ஏரியில் மிதக்கும் சந்தைகள் என்பது எங்காவது சில இடத்தில் மட்டுமே உலகம் முழுவதும் காணப்படுவது, நம்மிடம் ஒரு புதுவித எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது. வியட்நாமில் கை ராங்க் மிதக்கும் சந்தை காணப்பட, அதனை தொடர்ந்து சாலமன் தீவு சந்தை மற்றும் தாமோன் சௌதாக் ஆகிய சந்தைகளும் தாய்லாந்தில் காணப்படுகிறது.

ஒரு நிமிடம்ங்க... இத்தகைய அழகிய மிதக்கும் சந்தையானது இந்தியாவிலிருக்க நான் ஏன் இப்பொழுது அயல் நாட்டிற்கெல்லாம் விமானம் இன்றி சென்று வருகிறேன்! அட ஆமாம்ங்க, ஸ்ரீ நகரில் அழகிய தால் ஏரி காணப்பட, இதில் காணும் மிதக்கும் சந்தை நம் உடம்பை சிலிர்க்க செய்கிறது. இங்குள்ள உள்ளூர் வாசிகள், சிறிய படகுகளின் உதவியுடன் இங்கே பொருட்களை விற்பது நம்மை வியப்பூட்டுகிறது.

தால் ஏரியிலுள்ள மிதக்கும் தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இங்கே விற்கப்படுகிறது. இங்குள்ள சூழலானது ஈரமாக அதிகம் காணப்பட, இத்தகைய காரணத்தால்...தக்காளி, வெள்ளரிகள், நீர் கடலைகள்...அத்துடன் மறக்காமல் வாங்க வேண்டிய பிரசித்திபெற்ற நட்று எனப்படும் பள்ளத்தாக்கில் உள்ள தாமரை வேர்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுபண்டம் ஒன்று நாம் கவனிக்க வேண்டியவைகளுள் ஒன்றாக இருக்கிறது.

அதென்னங்க மிதக்கும் சந்தை! நீங்க பாத்திருக்கீங்களா? அதைப் பத்தி தெரிஞ்சுக்கனும்னா இதப் படிங்க!!

Basharat Alam Shah

படகுகள் மூலம் ஒவ்வொரு இடத்திற்கு வியாபாரிகள் செல்ல அதனை நாம் ஆச்சரியத்துடன் பார்க்கிறோம். அவர்கள் சூரிய உதயத்தின் முன்னர் ஏரியின் மத்தியில் ஒன்றுசேர, சூரிய ஒளி தண்ணீரில் விழும்பொழுது வியாபாரத்தை முடித்துகொள்கின்றனர். பேச்சுவார்த்தை மற்றும் பரிமாற்றம் ஆனது ஒரு மணி நேரத்திற்கு நடைபெற, அதன்பிறகு சந்தை நடந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் அற்று அவரவர் கிராமங்களில் சென்று மறைந்துவிடுகின்றனர்.

ஷிகரா சவாரி:

இந்த தால் ஏரியின் வாழ்க்கை நடப்பை நாம் கவர்வதற்கு சரியானதோர் இடமாக இந்த ஷிகரா அமைகிறது. இந்த மிதக்கும் சந்தையின் வியாபாரம் சூடுபிடிக்க, இந்த ஷிகரா சவாரிக்கு நாம் தாவி, இரண்டு மணி நேரம் நிதானமாக நாம் சவாரி செய்ய, இது உள்ளூர் கால்வாய்களின் அழகின் வழியே பயணித்து நமக்கு இனிமையை தர, அழகில் மயங்கி திரும்பிவர மனமற்று நிற்போம் என்பதே உண்மை.

முன்பு காஷ்மீரின் டோக்ரா விதிப்படி, இந்த பள்ளத்தாக்கில் ஆங்கிலேயர்களுக்கு வீட்டை கட்ட அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்த பிரிவினை விதியால், ஆங்கிலேயர்கள் ஆடம்பர படகு வீடுகளை கட்டினார்கள். சிலரோ, வால்நட் மர சிற்பங்களையும் அழகிய திறந்த மேடையையும் வடிவமைத்தனர்.

அதென்னங்க மிதக்கும் சந்தை! நீங்க பாத்திருக்கீங்களா? அதைப் பத்தி தெரிஞ்சுக்கனும்னா இதப் படிங்க!!

Basharat Alam Shah

அங்கிருப்பவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமென்றாலும், சந்தை அல்லது உறவினர்/பக்கத்து வீட்டிற்கு செல்ல வேண்டுமென்றாலும்...தோணியின் உதவியுடன் தால் ஏரி வழியாக தான் செல்ல வேண்டும்.

சிறப்பம்சங்கள்:

இந்த மிதக்கும் சந்தையில் விற்கப்படும் காய்கறிகளானது, இந்த தால் ஏரி தண்ணீரிலே வளர்பவையாகும். அவை ஓர் அல்லது இரண்டு மணி நேரங்களில் அறுவடை செய்யப்பட்டு சந்தையில் விற்கப்படுகிறது. இந்த மிதக்கும் தோட்டமானது ராத் அல்லது தேம்ப் வகையை சார்ந்திருக்க, இந்த ஏரிக்கு மட்டுமே இருக்க கூடிய சிறப்பம்சமாகவும் இது விளங்குகிறது. இந்த படர்ந்த தாவரங்களையும், மண்ணையும் உள்ளடக்கிய இந்த நிலம், ஏரியின் கீழிறுந்து பிரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஏரியில் காணும் சூழலானது தக்காளி, காலிபிளவர், கேரட், முலாம்பழங்கள், கத்தரிக்காய், காஷ்மீர் சாக் (கொல்லார்ட் கீரைகள்) என நிறையவே காணப்பட, ஒவ்வொரு நாள் காலையிலும்...இரண்டு டஜன் படகோட்டிகள் திறந்த இணைப்பு நீரில் சந்திக்கின்றனர். இதனை 'குத்ரி சந்தை' எனவும் கூறுவர். இந்த சந்தையானது அரை மணி நேரம் படகுவீடுகளின் வழியே உலவ, சூரிய உதயத்திற்கு முன்பு அவர்கள் மீண்டும் திரும்பவேண்டும் என்பதையும் மனதில் பதியவைத்து கொள்கின்றனர்.

அதென்னங்க மிதக்கும் சந்தை! நீங்க பாத்திருக்கீங்களா? அதைப் பத்தி தெரிஞ்சுக்கனும்னா இதப் படிங்க!!

nevil zaveri

இந்த பொருட்கள் பரிவர்த்தனையின் போது தோணியின் ஓரத்தில் அவர்கள் ஆபத்தான நிலையில் அமர்ந்து வியாபாரம் செய்வது நம் மனதை நெகிழ்ச்சி அடைய செய்கிறது. இந்த தோணிகள், தேவதாரு மரங்களை கொண்டு தயாரிக்கப்பட்டிருக்க...இதே போன்ற மரங்களானது ஸ்ரீ நகரிலுள்ள ஜமியா மஸ்ஜித்தின் தூண்களிலும் காணப்படுகிறது.

நூற்றாண்டின் பழைய சந்தை:

கோடைக்காலத்தில் மட்டும் இந்த சந்தையானது இயங்கப்பட, படகோட்டிகள் தங்கள் விலை நிலங்களிலிருந்து 15 கிலோமீட்டர் தினமும் பயணம் செய்ய வேண்டியுள்ளது. குளிர்காலத்தின்போது...அனைத்து குடியிருப்பாளர்கள் ஒன்றாக இணைந்து முக்கிய நிலங்களிலிருந்து விநியோகம் செய்கின்றனர்.

அதென்னங்க மிதக்கும் சந்தை! நீங்க பாத்திருக்கீங்களா? அதைப் பத்தி தெரிஞ்சுக்கனும்னா இதப் படிங்க!!

Kashif Pathan

இந்த சந்தையானது கிட்டத்தட்ட நூறு வருடங்களை தாண்டி செயல்பட்டுவர, இதற்கு பல புராணங்களும் உண்டு. இங்கே உற்பத்தி செய்யப்படும் முலாம்பழமானது மிகவும் சுவையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முதல் அறுவடையின் போது, அக்ராவின் முகலாய ஆட்சியாளர்களின் முன்னே இந்த பொருட்கள் வைக்கப்பட்டதாகவும் வரலாற்றில் ஒரு கதை உண்டு.

காஷ்மீர் மக்களான காஷ்மீரிஸ்., ரொட்டியை அதிகம் விரும்ப, ரொட்டி வகைகளுக்கு பெயர் பெற்ற ஒரு இடமாகவும் இது விளங்குகிறது. காய்கறி விற்பனையை தவிர்த்து, ரொட்டி விற்பவர்களும் அதிகாலையில் தண்ணீரில் தோன்றி லாவாஸ் மற்றும் கிர்தாவை கூடைகளில் வைத்து வியாபாரம் செய்கின்றனர்.
பூ வியாபாரிகளும் இங்கே அதிகளவில் காணப்பட, முகலாய தோட்டங்களை நோக்கி தினமும் ஏரியின் ஓரங்களில் இவர்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.

அதென்னங்க மிதக்கும் சந்தை! நீங்க பாத்திருக்கீங்களா? அதைப் பத்தி தெரிஞ்சுக்கனும்னா இதப் படிங்க!!

Colin Tsoi

இவர்களிடமிருந்து சிறந்த பூக்களையும் நாம் வாங்க முடிகிறது. இந்த மிதக்கும் சந்தையில் ரோஜாக்களும், டெய்சி, நீர் அல்லிகளை விற்பதையும், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். ஏரியில் காணப்படும் தாமரையானது கோடைக்காலத்தில் நம் கண்களுக்கு விருந்து படைக்கிறது. இதன் தண்டுகளானது அக்டோபர் மாதத்தில் அறுவடை செய்யப்பட, அவற்றை கொண்டு மீன் கறிகளும், பக்கோடாவும் செய்யப்படுகிறது.
>

Read more about: travel tour
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X