Search
  • Follow NativePlanet
Share
» » பிரெஞ்சு காலனி பாண்டிச்சேரில மட்டும்தான் இருக்குன்னு யார் சொன்னது? சந்தர்னாகூர் போயிருக்கீங்களா பாஸ

பிரெஞ்சு காலனி பாண்டிச்சேரில மட்டும்தான் இருக்குன்னு யார் சொன்னது? சந்தர்னாகூர் போயிருக்கீங்களா பாஸ

பிரெஞ்சு காலனி பாண்டிச்சேரில மட்டும்தான் இருக்குன்னு யார் சொன்னது? சந்தர்னாகூர் போயிருக்கீங்களா பாஸ்?

By Balakarthik Balasubramanian

கொல்கத்தாவிற்கு அருகிலிருக்கும் பிரெஞ்ச் காலனியான சந்தர்நாகூரை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? ஒஹோ இல்லையா..அட என்னங்க நீங்க..ஒரு அழகிய காலனியை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துக்கொள்ள முயற்சி செய்யாமல் இவ்வளவு நாட்கள் இருந்திருக்கிங்க. வாங்க கீழ்க்காணும் பத்தியின் மூலம் இந்த பிரஞ்ச் காலனியின் அழகை நாம் அறிந்து கொள்வோம்...ஓகே வா?

என்னுடைய வங்கத்து நண்பர் மூலம் கொல்கத்தாவின் அருகில் காணப்படும் இந்த சந்தர்நாகூர் காலனியின் அழகை பற்றியும் பல ஆச்சரியமூட்டும் தகவல்களையும் நான் தெரிந்துகொண்டேன். இந்த இடம் காலனித்துவ ஆட்சியாளர்களின் இடங்களில் முதன்மை வகிக்கும் ஒன்றாகும். பிரஞ்ச் ஆட்சி என்று நாம் யோசித்து மூளையின் ஒரு ஓரத்தில் தட்ட..நமக்கு முன்னால் வந்து நிற்பது பிரசித்திபெற்ற பாண்டிச்சேரி தான். நாம் கொல்கத்தாவில் இருந்து செல்லும் டாக்சியின் மூலம் இந்த மற(று)க்கப்பட்ட காலனியை அடைந்து மனதை வருடும் பல காட்சிகளை கண்களால் கண்டு மனதை இதமாக்கிகொள்ள முடியும் என்பதனை அங்கே போன பிறகு நான் புரிந்துகொண்டேன்.

 பிரெஞ்சு காலனி பாண்டிச்சேரில மட்டும்தான் இருக்குன்னு யார் சொன்னது? சந்தர்னாகூர் போயிருக்கீங்களா பாஸ்?

Nichalp

நாங்கள் இறங்க போகும் ஒரு இடத்தை மட்டும் ஓட்டுநரிடம் கூற, அவர் என்னை ஏற இறங்க பார்த்து ஏமாற்றத்தை பரிசாக தர முயன்றார். நான் நன்றாக புரிந்துகொண்டேன்...இந்த இடத்தை பற்றி இவரும் கேள்விபட்டது இல்லை என மறைக்கப்பட்ட வரலாற்றை எண்ணி கவலையும் பிரம்மிப்பும் கொண்டு காரில் செல்ல, "சார் இங்க பார்க்குறதுக்கு ஒன்னும் இல்லையே..நீங்கள் வேறு எங்கயாச்சும் சென்று நேரத்தை செலவிடுவது தான் உசிதம் என நான் நினைக்கிறேன்..." என எங்களுக்கு அவர் ஆலோசனை தந்து எங்கள் திட்டத்தை மாற்ற முயன்றார். அவரின் சொல்லை கேட்ட, என் பெற்றோர்...பயணத்தை வேறு திசையில் மாற்றிவிடலாம் என்பது போல் முடிவெடுத்து என்னை பார்க்க...நான் என் தோழன் கூறிய வார்த்தைகளை மட்டும் மனதில் கொண்டு முரண்டு பிடித்து அந்த இடத்துக்கு செல்ல வேண்டுமென ஆசைகொண்டேன்.

அந்த ஓட்டுநரின் வார்த்தைகள் என்னிடம் இருந்த எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்ய..நான் ஏதும் பார்க்காமல் வெற்று மனதுடன் ஊர் திரும்பினாலும் பரவாயில்லை. ஆனால், கண்டிப்பாக இந்த இடத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்...இந்த காலனி, நாட்டில் காணப்படும் சிறிய காலனி என்றாலும்...மக்கள் நிரம்ப காட்சியளிக்கும் சாதாரண காட்சிகளையாவது நான் காண வேண்டுமென ஆசைகொண்டேன். கார்கள் வந்துகொண்டும் போய்கொண்டும் இருக்கும் சாதாரண காட்சிகளை காண வேண்டும் என என் மனம் ஏங்கியது. விளம்பர பலகைகளை சுமந்து கொண்டிருக்கும் வங்கிகளும், அலைபேசி விளம்பர பலகைகளையும் எங்கும் காண்பது போல் இங்கே கண்டு மன நிறைவுடன் திரும்ப வேண்டுமென என் எதிர்ப்பார்ப்பை கொஞ்சம் தளர்த்தி பாண்டிசேரியை போலாவது இருக்குமென மனதில் கற்பனை கோட்டைகளை அந்த பார்க்காத இடத்தில் கட்டி..நான் கனவில் கட்டிய கோட்டையை நினைவில் காண வேண்டுமென ஆசையுடன் காரில் சென்றேன். இறுதியாக அந்த அதிசய காலனியை அந்த கார் அடைந்தது.

 பிரெஞ்சு காலனி பாண்டிச்சேரில மட்டும்தான் இருக்குன்னு யார் சொன்னது? சந்தர்னாகூர் போயிருக்கீங்களா பாஸ்?

Aryan paswan

அசாதாரண பிரஞ்சு காலனி:

அந்த அசாதாரண தோற்றத்துடன் காணப்பட்ட காலனி..என் மனதில் பெரும் வியப்பை ஏற்படுத்தி என் மனதை பூர்த்தி செய்ய ஆரம்பித்தது. ஆம், அப்பொழுது என் பெற்றோர், தங்கும் இடம் பற்றி அங்கிருந்தவர்களிடம் (உள்ளூர்வாசிகளிடம்) விசாரிக்க நேராக சென்று ஹூக்லி என்னும் நதியை கடந்து பார்க்குமாறு கூறினார்கள். எப்பொழுதுமே எதிர்ப்பார்ப்புகள் நிறைந்த மனதில் ஏமாற்றத்தை எவரேனும் விதைத்துவிட்டால்... அதுவே அவர்கள் எதிர்ப்பார்ப்பை கலைத்து ஏளன பார்வையை உருவாக்கிவிடுகிறது. ஆம், அந்த ஓட்டுனர் ஏற்படுத்திய மன கசப்பு...என் பெற்றோர் மனதில் குறையாமல் இடத்தை பற்றிய தவறான எண்ணங்களை உருவாக்க...முனகிகொண்டே அவர்கள் மன நிறைவற்று நடந்தனர். நாங்கள் கண்ட அந்த நதி பரந்து விரிந்து அழகாக காணப்பட, என் பெற்றோர் மனதிலிருந்த இடத்தை பற்றின தவறான எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மறைகிறது என்பதனை கண்களால் கண்ட காட்சிகளை கொண்டு அவர்கள் இதழ்களை பதுக்கி (வாய் சொற்களை விழுங்குதல்) பிரமிப்படைந்த அந்த ஒரு நிமிடம் நான் உணர்ந்தேன். அடடா! என்ன ஒரு அழகிய அருங்காட்சியகம். ஆம் நாங்கள் கண்ட அந்த இந்தோ பிரஞ்சு அருங்காட்சியகமும், கலாச்சார மையமும் எங்கள் கண்களை கவர்ந்து நாங்கள் நினைத்த ஒன்று தவறு...சிறு துளி பெரு வெள்ளம் என்பதற்கேற்ப.... பல சுவாரஷ்யமான இடங்களை கொண்ட ஒரு சிறிய நகரம் தான் இந்த சந்திரநாகூர் என்பதனை எங்களுக்கு புரிய வைக்க... அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொண்டு ஒருவரையோருவர் மாற்றி மாற்றி பார்த்தோம் நாங்கள்.

இரண்டு வீடுகளை கொண்ட அந்த அருங்காட்சியகத்தின் ஒருபக்கம் பிரெஞ்ச் பள்ளி அமைந்து... பல வரலாற்று பாடங்களை அங்குள்ளவர்களுக்கு கற்றுகொடுக்க துடிப்பதனை எண்ணி தொலையும் நம் மனம், ஆசானாக இருப்பது அங்குள்ளவர்களுக்கு மட்டுமல்ல...வந்து செல்லும் சுற்றுலா ஆர்வலர்களுக்கும் தான் என்பதனை கீரீம் நிற அந்த கட்டிடங்கள் உணர்த்தியது. இதேபோன்ற கட்டிடங்களை நான் பாண்டிச்சேரியில் கண்டேன் என என் மனம் காலம் கடந்து செல்ல...அந்த கட்டிடங்கள் என் மனக்கண்களுக்கு மஞ்சல் நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டிருப்பதை தெரிந்துகொண்டு மீண்டும் நிகழ்காலத்துக்கு திரும்பியது. ஒரு காலத்தில் இந்த இரண்டு வீடுகளும் பிரஞ்ச் ஆளுனரின் வீடு என்பதும் வரலாற்றின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. அந்த அருங்காட்சியகத்துக்கு சென்ற சுற்றுலா பயணிகளின் கூட்டத்தை நம் விரல்களால் எண்ணிவிட முடியும். அதனால், நான் அங்கிருந்தவர்களை எண்ண தொடங்கினேன்...

1
2
3

 பிரெஞ்சு காலனி பாண்டிச்சேரில மட்டும்தான் இருக்குன்னு யார் சொன்னது? சந்தர்னாகூர் போயிருக்கீங்களா பாஸ்?

Aryan paswan

அவ்வளவு தான். அட ஆமாம்ங்க. என் தந்தை, என் தாய் மற்றும் நான் என மூன்றே பேர் தான் அந்த அருங்காட்சியகத்தில் இருந்தோம். அந்த அருங்காட்சியகத்தில் காணப்பட்ட வரைபடங்கள், பழமையான நாற்காலிகள், முன்மாதிரிகள், வீட்டு அலங்கார சாமான்கள் என அவை எங்களை பிரமிப்பில் ஆழ்த்தி வரலாற்றுடன் நேரடியாக பேசி எங்கள் மனதில் ஆச்சரிய குறியை எழுப்பியது.

என் மனதில் உருவாகிய அமைதியும் பெருமையும் அங்கிருந்த பொருட்களை ஆராய தொடங்கியது. பாவம்...அதற்கு தெரியவில்லை நான் ஒரு ஆராய்ச்சியாளன் இல்லை என்பதனை மறந்து என் மனம் ஆராய்வதனை என் பெற்றோர்கள் ஏதோ வித்தியாசமாக ஆச்சரியத்துடன் பார்த்தனர். நான் அந்த வரைபடங்களை பார்த்து முந்தைய வரலாற்றின் சிறப்பை உணர்ந்து என் மனதை ஏக்கத்துடன் அந்த நாடுகளுக்கு நாடு கடத்தினேன். பிரஞ்சு, டச்சு, டேனிஷ், போர்த்துகீசியம், ஜெர்மானியர்கள், ஆங்கிலேயர்கள் என என்னை ஆச்சரியத்தின் எல்லைக்கே அழைத்து சென்றது அந்த வரைப்படம். நாங்கள் கண்ட இத்தகைய அழகிய காட்சிகள் அனைத்தும் ஹூக்லி நதிக்கரைக்கு அப்பால் அமைந்து எங்கள் மனதை வரலாற்றின் சுவடுகளால் ஆட்சி செய்தது.

 பிரெஞ்சு காலனி பாண்டிச்சேரில மட்டும்தான் இருக்குன்னு யார் சொன்னது? சந்தர்னாகூர் போயிருக்கீங்களா பாஸ்?

Rangan Datta

ஃபோர்ட் டி ஆர்லியன்ஸ்:

1688ஆம் ஆண்டு பிரெஞ்ச் நிர்வாகத்தின் பேரரசரான அவுரங்கஷிப்பால் கட்டப்பட்டது தான் இந்த ஃபோர்ட் டி ஆர்லியன்ஸ் என்னும் காலனி. இந்த காலனி ஆங்கிலேயரிடம் பல முறைகள் கைமாறி, இறுதியில் 1952ஆம் ஆண்டு இந்தியர்களிடம் குடியரசு ஆட்சியின் போது கிடைத்தது. ஆனால் இந்த இடம் இப்பொழுது பராமறிப்பற்று ஒரு உணர்ச்சியற்ற பொருளாக வரலாற்றின் பெருமையை தொலைத்துகொண்டு நிற்கிறது. இத்தகைய கவனிப்பின்மையினாலோ என்னமோ...யாரும் இங்கே வருவதில்லையோ? என்ற ஒரு கேள்வியும் நம் மனதில் எழுகிறது.

ஒரு பழைய நான்கு சுவரொட்டி படுக்கை, அழகான சோபா, அழகான தட்டுகள், ஒற்றைப்படை சிலைகள், மற்றும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் வண்ண அச்சுப்பிரதிகள் என பழமை தன்மை முற்றிலும் நீங்காமல் அங்கும் இங்கும் சீரற்று காணப்பட்டது. அருங்காட்சியகத்திற்கு பின்புறத்தில் ஒரு தோட்டமும் அழகு நீங்கா தன்மையுடன் அமைதியான சூழலை பிரதிபலித்துகொண்டு காட்சியளித்தது. அத்துடன் அந்த இடத்தில் சில சமயங்களில்... ஆளுனர் கூடி மாலை நேரங்களில் ஆலோசிப்பதாகவும் பேச்சுக்கள் வந்த வண்ணம் வரலாற்றின் மூலம் இருக்கிறது.

அந்த அருங்காட்சியகத்தை விட்டு நாங்கள் வெளியில் வந்து அந்த பகுதியை சுற்றும் முற்றும் உலா வர... பாரிஸின் ஆர்க் டி டிரைம்ஃபின் தெளிவற்ற ஒற்றுமையை கண்டு வியந்து போனோம். அதன் அமைப்பு, கிழக்கு தாக்கங்கள் இணைந்து யானை வடிவத்திலும் பூக்கள் வடிவத்திலும் காணப்பட..எங்கள் மனம் கொள்ளை அடித்து செல்லப்பட்டு இதழ்கள் வார்த்தையின்றி நின்றது. அங்கு இணைந்து காணப்பட்ட பத்திகள் மற்றும் ஐரோப்பிய ஸ்டக்கோ வேலைகளுடன் கூடிய அழகு காட்சிகள் மனதை வருடியது.

அங்கே முகப்பில் ஒரு பளிங்கு கற்பலகை அமைந்து நம் மனதை மிளிர செய்கிறது. மேலும் அங்கே காணப்படும் பிரெஞ்ச் கல்வெட்டுகள், அந்த அமைப்பு இந்த நகரத்துக்கு தரப்பட்ட பரிசு என்றும் விவரிப்பது வரலாற்று சுவடுகளை நோக்கி காலடியை பின்னெடுத்து வைக்கிறது. ஷாமாச்சரோன் ரோகிட் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த இடம், அவர் தந்தையான டர்காச்சூர்ரோன் ரோகிட் அவர்களின் நினைவுகளாக கட்டப்பட்டு இருக்கிறது என்றும் வரலாற்றின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. மேலும் புரையோடின் கீழே காணப்படும் ஒரு வெள்ளை நிற அமைப்பு கொண்ட இடம்...நம்மை கேள்வியாக பார்வையை நோக்க வைக்க, அது சேக்ரட் ஹார்ட் தேவாலயம் என்பது வரலாற்று பதிவுகளால் நமக்கு தெரியும்.

 பிரெஞ்சு காலனி பாண்டிச்சேரில மட்டும்தான் இருக்குன்னு யார் சொன்னது? சந்தர்னாகூர் போயிருக்கீங்களா பாஸ்?

Biswarup Ganguly

பாரிஷ் பூசாரி:

இந்த இடத்தின் சுவர்களின் முன்னால் காணப்பட்ட பூசண கற்களால் ஆன பொருக்குகளால் ஒட்டப்பட்ட பகுதி நம்மை வெகுவாக கவர்ந்து அந்த இடத்தின் அழகை காட்சிகளால் உணர்த்துகிறது. மேலும் உட்புறத்தில் உயரமான கூரைகளையும் கொண்டிருக்க அந்த கூரைகளின் அழகு சில அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி ஜன்னல்களுடன் காட்சிகளை எந்த ஒரு எதிர்ப்பார்ப்புமின்றி நம் இதயத்துக்கு விட்டு மனதை வருடி காட்சிகளால் கவர்ந்தது. எங்களுக்கு இங்கே உள்ள பாரிஷ் பூசாரி ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்தார் என்று கூட அந்த இடத்தை பற்றி பெருமையுடன் கூறலாம்.

அவர் எங்களுக்கு மீண்டும் ஒரு கல்லறையை காட்டினார். ஆம் அவர் ஒரு கல்லறையை காண்பித்து பலிபீடத்தின் விளக்குகளையும் எங்கள் பார்வைக்கு காண்பித்து வரலாற்றை பற்றி விவரித்தார். ஆம், பிரான்சிலிருந்து வாங்கப்பட்ட அந்த விளக்குடன் மணியும் இணைந்தே காணப்படுகிறது. அந்த மணி ஒரு நாளைக்கு மூன்று முறை ஒலிக்கப்படும் என்று அந்த கல்லறை பற்றியும் அந்த இடத்தின் பெருமை பற்றியும் எங்களுக்கு தெரியாத பல விசயங்களை கூறினார் அவர். பிரஞ்ச் வணிகர்களால் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட இந்த இடம் எங்களை வியப்பில் ஆழ்த்தி வரலாற்று சுவடுகளை நோக்கி பயணிக்க வைத்தது.

பாண்டிச்சேரி அல்லாத பிரஞ்ச் ஓட்டல்களை நாங்கள் இதுவரை கண்டதில்லை. என்னுடைய தந்தை ஒரு சிறிய தேனீர் கடையை தேடி பிடிக்க...அங்கே அமர்ந்து நாங்கள் ஒரு கப் தேனீரை சிறியதோர் துளிகளால் வானிலிருந்து விழுந்த மழைகளின் உதவியுடன் ரசித்தோம். இந்த வரலாற்றில் மறை(ற)க்கப்பட்ட இடமான சந்திரநாகூரை பற்றி ஒற்றை வார்த்தையில் ஓலை எழுதி தூது அனுப்பலாம் என்றால், அது..."வரலாற்றின் பக்கங்களை தூசு தட்டி நம்மை அடையாளம் காண்பிக்கும் ஒன்று" என பெருமையுடன் நம் பயணத்தின்.... வரலாற்றின் அழகை பற்றி பார்ப்போரிடம் பெருமை பொங்க கூறலாம்.

நாங்கள் அந்த அழகிய வரலாற்று பதிவுகளை தெரிந்துகொண்டு ஒரு வித ஏக்கத்துடன் புறப்பட, என் தந்தையும் தாயும் ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசவில்லை. என் மனதில் சிறியதோர் பயம் தொற்றிகொண்டது. ஒருவேளை இந்த இடம் அவர்களுக்கு பிடிக்கவில்லையோ என என் சந்தோசத்தை ஓரம் கட்டிவிட்டு, 'என்ன அப்பா? யோசனையாக இருக்கிறீர்கள்?" என நான் வினவ, மெல்ல திரும்பிய அவர்...."இப்படி ஓர் வரலாற்று பொக்கிஷத்தின் தனித்தன்மை நீங்கா தருணத்தை இதுவரை என் வாழ்வில் நான் பார்த்தது இல்லை. ஏன் இப்படி பட்ட இடமெல்லாம் கருவிழிகளில் படாமல் மறைந்து போகிறது?" என ஆச்சரியமாக என்னை வியப்புடன் அவர் பார்க்க, என் தாயும் என் தோள் மீது அவள் கைகளை அன்போடு வைத்தாள். மேற்கு வங்கத்தில் இவ்வளவு அழகான வேறு ஒரு இடத்தை நம்மால் காணமுடியுமா என்பதே சந்தேகம் தான். இந்த இடத்தில் நாங்கள் ஏதேனும் பார்க்காமல் விட்டு சென்றால்...மீண்டும் கண்டிப்பாக வரவேண்டும் என ஒருமனதாக தீர்மானம் எடுத்துகொண்டு செல்ல...எங்களுக்கோ தெரியவில்லை... நாங்கள் எங்களுடைய மனதினை இங்கு தான் விட்டு செல்கிறோம். அதனை தேடி மறுபடியும் கண்டிப்பாக வருவோமென்று... மூளைக்கு கூட தெரியாமல் வரலாற்றின் ஏடுகளில் பிண்ணி பிணைந்து ஏக்கத்துடன் புறப்பட்டது.

மனதை கொள்ளைகொள்ளும் 50 அரண்மனைகள்!!!மனதை கொள்ளைகொள்ளும் 50 அரண்மனைகள்!!!

பாம்பே படத்தில் வரும் 'உயிரே, உயிரே' பாடல் எங்கே படமாக்கப்பட்டது?பாம்பே படத்தில் வரும் 'உயிரே, உயிரே' பாடல் எங்கே படமாக்கப்பட்டது?

நம்ம தமிழ்நாடு எவ்வளவு அழகானது தெரியுமா?நம்ம தமிழ்நாடு எவ்வளவு அழகானது தெரியுமா?

தேக்கடி அருகேயிருக்கும் சூப்பர் இடங்கள்!!தேக்கடி அருகேயிருக்கும் சூப்பர் இடங்கள்!!

செஞ்சி கோட்டையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்செஞ்சி கோட்டையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

கூர்க் சுற்றுலாவின் போது நாம் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள்கூர்க் சுற்றுலாவின் போது நாம் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள்

குதுப்மினார் - கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் சுற்றுலாகுதுப்மினார் - கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் சுற்றுலா

Read more about: travel tour picnic
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X