Search
  • Follow NativePlanet
Share
» »ஆரஞ்சு திருவிழா இந்தியால எங்க நடக்குதுன்னு தெரியுமா? இதப் படிங்க!!

ஆரஞ்சு திருவிழா இந்தியால எங்க நடக்குதுன்னு தெரியுமா? இதப் படிங்க!!

ஆரஞ்சு திருவிழா இந்தியால எங்க நடக்குதுன்னு தெரியுமா? இதப் படிங்க!!

By Balakarthik Balasubramanian

திரிபுராவின் வடகிழக்கு மாநிலத்தில் காணப்படும் சிறந்ததோர் மலைத்தொடர் தான் இந்த ஜம்பூய் மலைத்தொடராகும். இதனை 'வசந்த நித்திய மலை' என்றும் அழைப்பர். வட திரிபுராவில் காணப்படும் அழகிய இடமான இந்த ஜம்பூய் மலை, மிசோ சமூகத்தினரின் குக்கிராமத்து வீடுகளால் சூழ்ந்து மனதை சிலிர்க்கிறது.

3,200 அடி உயரத்தில் காணப்படும் இந்த மலைப்பகுதி, மாநிலத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஜம்பூய் மலையிலிருந்து நாம் பார்க்க, மிசோரமின் பள்ளத்தாக்குகளின் அழகினை நம்மால் காண முடிகிறது. மேலும், திரிபுராவில் காணப்படும் பெரிய மலைதொடர்ச்சி என்னும் புகழையும் தாங்கிகொண்டு இந்த மலை பெருமையுடன் நிற்கிறது.

ஜம்பூய் மலைப்பகுதிகள், நிலப்பரப்புகளுடன் காணப்பட...அங்கே ஆர்க்கிட் பண்ணைகளும், தேயிலை தோட்டங்களும், பச்சை பசேல் எனும் காட்சிகளால் காற்றினால் மனதை வருட கண்களையும் குளிர்விக்கும் இடம் பல அமைந்து, நம் மனதை இதமாக்குகிறது.

மேலும், உள்ளூர் மக்களின் நேர்த்தியான மர வீடுகளும் பின்புலத்தில் அமைந்து நம்மை நட்புக்கரம் கொண்டு வரவேற்கிறது. இங்கே நாம் காணும் இயற்கை காட்சிகள் மனதை இதமாக்க முயலுகிறது என்றே கூற வேண்டும்.

சுற்றுலா இடத்தைப் பற்றிய எண்ணத்தை நாம் சிந்தையில் சிதறவிடுவோமினில், இந்த ஜம்பூய் மலை அதற்கு சிறந்ததோர் இடமாக அமையும் என்பதில் மாற்று கருத்து வேண்டாம். இந்த ஜம்பூய் மலைகளின் சரிவுகளில் வளர்ந்திருக்கும் ஆரஞ்சு தோட்டங்கள், மிகவும் பிரசித்திபெற்று விளங்குகிறது.

ஆரஞ்சு திருவிழா இந்தியால எங்க நடக்குதுன்னு தெரியுமா? இதப் படிங்க!!

Zeynel Cebeci

ஜம்பூய் மலையில் நடைபெறும் ஆரஞ்ச் திருவிழா:

நவம்பர் மாதத்தின் போது, திரிபுராவின் மிகப்பெரிய திருவிழா இந்த ஜம்பூய் மலையில் நிகழும். அது, ஆரஞ்ச் மற்றும் சுற்றுலா திருவிழா எனப்படும். திரிபுராவில் விளையும் ஆரஞ்சு வகைகளுள், மிகவும் தரமானதாக இந்த ஜம்பூயில் விளையும் ஆரஞ்சுகள் இருக்க, உற்பத்திக்கு தங்கள் நன்றியை செலுத்தும் வகையில்., மக்கள் ஆரஞ்சு திருவிழா என்ற ஒன்றை கொண்டாடி வருகின்றனர்.

1960 ஆம் ஆண்டிற்கு முன்பு, உள்ளூரில் விளையும் ஆரஞ்சுகளை தன் சுய நுகர்வுக்காக மட்டும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாளடைவில் இந்த ஆரஞ்சுகளின் ஏற்றுமதி நாடெங்கும் அதிகரிக்க தொடங்கியது. இதனால், ஜம்பூயின் வளர்ச்சிக்கு இந்த ஆரஞ்சுகள் உதவுவதாய் கருதிய மக்கள், இதனை விளைவிக்க பெருமளவு தரசு நிலங்களை ஓதுக்கி தன்னையும் அதற்காக தயார்படுத்திக் கொண்டனர்.

இன்று, உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா ஆர்வலர்கள்...செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் இங்கே கூடி விழாவை சிறப்பித்து மகிழ்வதை பலரும் வழக்கமாய் கொண்டிருக்கின்றனர். வனவிலங்குகளின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப ஆரஞ்சுகள் அணிவகுக்கப்பட்டிருக்க, இந்தியாவின் பிரசித்திபெற்ற கோட்டையாகவும் இது திகழ்கிறது.

அதனால், இதனை கண்காட்சிக்காகவும் வைக்கப்படுகிறது. திபெத்திய கைவினைப்பொருட்கள், ஆரஞ்சுகள், தேயிலைகள், காபி பீன்ஸ் ஆகியவை இங்கே வைக்கப்பட்டிருக்க, வரும் சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு இணங்க இவை விற்கவும் படுகிறது. இந்த விழாவை தொடர்ந்து, அரசும் மாநிலத்தின் மேம்பாட்டிற்க்காக பல்வேறு வசதிகளை வந்து செல்வோருக்காக செய்துள்ளது.

ஜம்பூய் மலைப்பகுதியை காண சிறந்ததோர் நேரங்கள்:

ஆரஞ்சு திருவிழா இந்தியால எங்க நடக்குதுன்னு தெரியுமா? இதப் படிங்க!!

Soman

இங்கே நடைபெறும் ஒரு பெருந்திருவிழாவாக ஆரஞ்ச் திருவிழாவிருக்க, இந்த மலையை நாம் காண ஏதுவானதொரு மாதமாக நவம்பர் இருக்கிறது. மழைக்காலங்களின் போது மலையின் அடிவாரத்தில் மேகங்கள் உருவாகிறது. இந்த மேகங்கள் அந்நாளில் மெதுவாக உயர, மேகங்களுக்கு நடுவில் நாம் மிதப்பதை போன்றதோர் உணர்வு நம் மனதை மெழுகுபோல் இன்பம் கொண்டு உருக்குகிறது.

ஜம்பூய்யின் கால நிலையானது சிறந்ததாகவும், மென்மையானதாகவும் வருடம் முழுவதும் இருக்கிறது. இதனால், இந்த இடமானது எல்லா கால நிலைகளிலும் நாம் செல்ல ஏதுவாக அமைந்து நம்மை அன்புடன் வரவேற்கிறது.

இந்த ஜம்பூய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள்:

ஜம்பூய் மலை ஏறலாம்:

திரிபுராவில் காணப்படும் இந்த உயர்ந்த சிகரம் அழகிய மலையை கொண்டு காட்சிகளை பரிசாய் தருகிறது. உச்சத்தை வென்ற இந்த சிகரத்தின் அமைதியான மலைப்பகுதியில் நம் நேரத்தை செலவிட்டு, கன்னி காட்டின் அழகையும் நாம் ஆராயலாம். இந்த மலையிலிருந்து நாம் பார்க்க, எண்ணற்ற அழகிய காட்சிகளை தருவதோடு, இங்கே தோன்றும் அற்புத காட்சியான சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் நாம் காண வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

சாபௌல் கிராமத்தில் படகு சவாரி போகலாம்:

ஜம்பூயில் இருக்கும் பத்து கிராமங்களுள் ஒன்று தான் இந்த சாபௌல் ஆகும். திரிபுராவில் தொடர்ந்து மேம்பாட்டு பணிகளை, அரசு மேற்கொண்டு வர...அதில் புதுவித சேர்க்கையாக இந்த சாபௌல் கிராமத்தின் படகு பயணம் விளங்குகிறது. மிசோ சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த கிராமத்தில் பெரும்பான்மை வகிக்க, இங்கே லூசாய் மொழியானது பேசப்படுகிறது.

அகர்ட்டலாவை பார்க்கலாம்:

ஜம்பூய் மலையிலிருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் ஒன்று தான் இந்த அக்ர்ட்டலா. இது திரிபுராவின் தலைநகரமாகும். வடகிழக்கு பகுதியில் காணப்படும் இரண்டாவது பெரிய நகரமும் கூட. இந்த நகரத்தை நாம் திரிபுராவுக்கு வரும்பொழுது கண்டிப்பாக காணவேண்டிய ஒன்றாகவும் அமைகிறது. பாரம்பரியத்தின் மிகுதியை கட்டிக் காத்துகொண்டிருக்கும் இந்த அகர்ட்டலாவில் அரண்மனைகளையும், அருங்காட்சியகத்தையும் பார்க்க முடிகிறது. ஆம், உஜ்ஜயந்தா அரண்மனை, ஹவாலி அருங்காட்சியகம் என பலவற்றை கண்டு நம் மனதை பரவசம் அடைய செய்ய முடிகிறது.

திரிபுரா அரச ராஜ்யபாரத்தின், முன்னாள் அரச அரண்மனைதான் இந்த உஜ்ஜயந்தா அரண்மனையாகும். முகலாயர், ரொமானியர்கள், ஆங்கிலேயர்களின் செல்வாக்கினால் உருவாகிய இந்த அரண்மனை நவீன-செவ்வியல் அரண்மனையாகவும் கட்டிடக்கலையில் சிறந்து விளங்குகிறது.

ஆரஞ்சு திருவிழா இந்தியால எங்க நடக்குதுன்னு தெரியுமா? இதப் படிங்க!!

Sharada Prasad CS

ஜம்பூய் மலையை எப்படி நாம் அடைவது?

ஆகாய மார்க்கமாக:

ஜம்பூயிற்கு அருகிலிருக்கும் ஒரு விமான நிலையம் தான் இந்த அகர்ட்டலா விமான நிலையமாகும். இந்த விமான நிலையம், சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து முக்கிய நகரங்களான கவுஹாத்தி, தில்லி, கொல்கத்தா ஆகியவை இணைக்கப்பட்டு சேவை செயல்படுகிறது. இங்கிருந்து நாம், சாலையின் வாயிலாக எளிதில் ஜம்பூய் மலையையும் அடையலாம்.

தண்டவாள மார்க்கமாக:

ஜம்பூயிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தர்மாநகர் மற்றும் குமரகாட் இரயில் நிலையங்கள் தான் அருகில் காணப்படும் இரயில் நிலையங்களாகும். இங்கிருந்து, வாடகை காரின் மூலம்...காஞ்ச்பூர் வழியாக நம்மால் ஜம்பூய் மலையை அடைய முடிகிறது.

சாலை மார்க்கமாக:

உள்ளூர் போக்குவரத்தான... கார் அல்லது ஆட்டோக்கள் அகர்ட்டலா விமான நிலையத்தில் கிடைக்கிறது. வட கிழக்கு பகுதியில் காணப்படும் அனைத்து மாநிலங்களும்...மாநில அரசு பேருந்துகளின் மூலம் ஜம்பூய் மலையை இணைத்து காணப்படுகிறது. கார்கள் எடுத்துகொண்டு கைலாஷ் நகர் அல்லது தர்ம நகரிலிருந்து புறப்பட்டு ஜம்பூய் மலையை, காஞ்ச்பூர் வழியாக நாம் அடையலாம்.

Read more about: travel hills
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X