Search
  • Follow NativePlanet
Share
» » மும்பை பாந்த்ராவின்வின் புற நகர்ப் பகுதியின் இன்னொரு முகம் இதுதாங்க!!

மும்பை பாந்த்ராவின்வின் புற நகர்ப் பகுதியின் இன்னொரு முகம் இதுதாங்க!!

மும்பை பாந்த்ராவின்வின் புற நகர்ப் பகுதியின் இன்னொரு முகம் இதுதாங்க!!

By Balakarthik Balasubramanian

மும்பைக்கு செல்லும் நாம், சில மணி நேரங்களாவது பந்த்ராவில் செலவிடாமல் திரும்பினால், அது பயணத்தின் பாதியையே மனதில் உணர்கிறதாம். இந்த பந்த்ராவில் குக்கிராமங்கள் எண்ணற்று காணப்பட, அவற்றில் வாழ்பவர்களுள் பெரும்பாலானோர் மீனவர்களும், விவசாயிகளும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தசாப்தங்களாக இந்த இடமானது பெரிய அளவிலான மாற்றத்தையும் கொண்டுள்ளது.

இன்று இந்த புறநகர் பகுதியானது சுற்றி நாம் பார்க்க, பாரம்பரிய வீடுகளில் தொடங்கி, பல மடங்கு உயர்ந்த கட்டிடங்களென எங்கும் சூழ்ந்திருக்க, தெருக் கடை உணவுகள் தொடங்கி பளபளக்கும் கண்ணாடிக்குள் வைத்து பாதுகாக்கும் உணவுகள் வரை இங்கே நம் பசியை போக்க, தெரு வண்டிகளில் வடிவமைப்பாளர் கடைகளும் காணப்பட, இங்கே கவரிங் நகைகளில் தொடங்கி பாணி பூரி வரை நமக்கு கிடைக்கிறது. மேலும் நாடோடி பிரியர்களின் சுவாரஷ்யங்களுக்கானதோர் இடமாகவும் இவ்விடம் விளங்குகிறது.

இங்கே காணும் பழமையான குடியிருப்பு பகுதிகள், நினைவுகளை சுமந்து நம்மை வருட, இன்று இப்பகுதிகளில் கூட்ட நெரிசலானது அவ்வளவு ஒன்றும் காணப்படவில்லை. இங்கே காணப்படும் உணவகங்களை அழகிகள் சூழ்ந்துக்கொள்ள, ஹிப் ஸ்டர்களை பிரபலங்களுடன் சேர்த்து ஜாக்கிங் செல்வதை இங்கே கடற்கரையில் நம்மால் காண முடிகிறது. மேலும், வேரூன்றிய ஆழமான வீட்டின் வளிமண்டலமும் சுதந்திரமாக காணப்பட, நிம்மதியையும் நம் மனதில் அவை விதைக்கிறது. பல தரப்பட்ட மக்களை ஈர்க்கும் இந்த பந்த்ராவானது, 'புறநகரங்களின் இராணி' என்றழைக்கப்படுகிறது.

 பந்த்ராவை காண சிறந்த நேரம்:

பந்த்ராவை காண சிறந்த நேரம்:


இந்த இடமானது வருடம் முழுவதும் நாம் பார்க்க பெரிதும் உதவ, எந்த நேரத்திலும் நாம் இங்கே வந்து செல்லலாம். மேற்கு கடற்கரையில் காணப்படும் மும்பையின் பந்த்ரா பகுதியில் வெப்பமண்டல ஈரமான சூழ்நிலையும், வரண்ட கால நிலையுமே காணப்படுகிறது.

Logan King

 எப்படி நாம் அடைவது?

எப்படி நாம் அடைவது?

விமான மார்க்கமாக:

இங்கே முக்கியமான விமான நிலையமாக சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் காணப்பட, இங்கிருந்து நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சேவை தினசரி இயக்கப்பட்டு, சில விமானங்கள் அயல் நாட்டுக்கும் இயக்கப்படுகிறது.

தண்டவாள மார்க்கமாக:

CST எனப்படும் சத்ரபதி சிவாஜி நிலையம் தான் இங்கே காணப்படுமோர் முக்கிய இரயில் நிலையமாகும். இங்கிருந்து பல முக்கிய நகரங்களுக்கும், மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கும் சேவை இயக்கப்பட, நாட்டின் முக்கிய நகரங்களான பெங்களூரு, சென்னை, தில்லி என பல இடங்களுக்கும் இரயில் போக்குவரத்து வசதி காணப்படுகிறது.

சாலை மார்க்கமாக:

பந்த்ராவிற்கு சாலை போக்குவரத்து சிறப்பாக இணைக்கப்பட்டிருக்க, பெங்களூரு, பூனே, என இந்தியாவின் பல முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்தானது தினமும் இயக்கப்படுகிறது.

Tawheed Manzoor

 இங்கே நாம் பார்க்க வேண்டிய இடங்கள்:

இங்கே நாம் பார்க்க வேண்டிய இடங்கள்:


போர்த்துகீசிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட இந்த காஸ்டெல்லா டீ ஆகுவடா விற்கு, ‘தண்ணீர் நிலையில் காணப்படுமோர் கோட்டை' என அர்த்தமாகும். இங்கே அருகில் காணப்படும் புதிய நீர் வசந்தத்தால் இவ்விடம் இப்பெயர் பெற்றிட, 1540ஆம் ஆண்டில் போர்த்துக்கீசியர்களால் கட்டப்பட்ட மணிக்கூண்டு இது என்பதும் நமக்கு தெரியவருகிறது. அதோடு மட்டுமல்லாமல், முக்கிய நிலத்தின் தெற்குமுனையிலும் இவ்விடம் அமைந்திருக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டில், இந்த கோட்டையின் பெரும் பிரிவினை ஆங்கிலேயர்களால் சிதைக்கப்பட, அதன்பின்னர் மராட்டியர்களின் கைக்கு சென்ற இந்த கோட்டையானது பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த கல் சுவர்களில் நின்று நாம் பார்ப்பதன் மூலம் மஹிம் வழி மற்றும் பந்த்ரா-வோர்லி கடல் இணைப்பு நம் கண்களுக்கு தெளிவாக புலப்படுகிறது.

Nicholas

 மௌன்ட் மேரி தேவாலயம்:

மௌன்ட் மேரி தேவாலயம்:

நம்முடைய பெண்களுக்கான மௌன்ட் பேராலயமாக இந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமானது சிறுகுன்றின் மேலே அரபிக்கடலை புறக்கணித்து காணப்படுகிறது. 1570ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஓர் அறையானது, அற்புத தளமாக அமைய, பல முறை அது திருப்பி கட்டப்பட்டது. இந்த மௌன்ட் மேரி தேவாலயத்தின் முகப்பானது இன்று அழகாக காணப்பட, கோதிக் நுழைவாயிலும், தூண்களும் செதுக்கப்பட்டு அழகிய காட்சிகளால் கண்களை குளிரூட்டுகிறது. மேலும், 1900ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட மால்ட் கல்லும் இங்கே காணப்படுகிறது.

மதர் மேரி மற்றும் குழந்தை இயேசுவின் மர சிலைகள் நம்மை கூர்ந்து கவனிக்க வைக்க, பதினாறாம் நூற்றாண்டின் போர்ச்சுகலின் அவையினரால் கொண்டுவரப்பட்டது என்பதும் நமக்கு தெரியவருவதோடு...அது, நம் மனதில் ஆன்மீகத்தையும், பக்தியையும் நிரம்பி வழிய செய்கிறது. 1700ஆம் ஆண்டு, அரபு கடற்கொள்ளையர்களால் இந்த சிலையின் கரம் நறுக்கப்பட்டு புதையல் இருக்கிறதா? எனவும் பார்க்கப்பட, அங்கே தேனி கூட்டமானது அவர்களை தாக்கவில்லையென்றால்... ஆலயத்தையே அவர்கள் எரித்திருக்க கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

Marshmir

 சேப்பல் சாலை:

சேப்பல் சாலை:

சேப்பல் சாலை, கட்டணங்களினால் பிஸியாகவே காணப்படுகிறது. மலை சாலையில் தொடங்கி ரான்வார் கிராமத்தின் வழியாக சென்று, லீலாவதி மருத்துவமனையை அடைகிறது. யாழில் பழமையான பாணியில் ஓட்டல் பகுதி காணப்பட, வெளி நாட்டவர்களுக்கு அவை வாடகைக்கு விடப்படுகிறது. மேலும் அவற்றின் பரிமாணமானது ஆக்கப்பூர்வமான படைப்பாகவும் காணப்படுகிறது. கிராஃபிட்டி அலைகள் வழியாக நாம் வர, அங்கே பழமையான பேக்கரிகளின் சுவர் கண்களை கவர, அங்கே கோவன் பாவோ எனப்படும் வீட்டில் தயாரிக்கும் பப்ஸ் மற்றும் மாவால் செய்த ஒரு வகை உண்ணும் பண்டமும் விற்கப்படுகிறது.

Satish Krishnamurthy

 சூயும் கிராமம்:

சூயும் கிராமம்:

பழமையான ஓட்டல்கள், இரண்டு மாடி கட்டிடங்களென, இந்த குக்கிராமத்தை சுற்றி குறுகிய பாதைகள் காணப்பட, அவை அனைத்தும் கார்டர் சாலையில் தென்படுகிறது. உள்ளூர் வாசிகள் இங்கே விரைவதன் மூலம் ஒழுங்குபடுத்தப்படாத கடைகள், நாளிதழ் படித்துக்கொண்டிருக்கும் மண்டப வாசிகள் என பலவற்றையும் நம்மால் பார்க்க முடிகிறது. மீனவர்களுக்கும், தோட்டக்காரர்களுக்கும் வீடுகள் இங்கே காணப்பட, அவர்கள் மாம்பழங்களையும், காய்கறிகளையும் அறுவடை செய்கின்றனர். இந்த இடமானது வளிமண்டலத்தில் அமைந்து நம்மை நிம்மதியடையவும் செய்கிறது.

 கார்டர் சாலை:

கார்டர் சாலை:

பந்த்ராவிற்கு வருபவர்களின் பெரும் மகிழ்ச்சி நிறைந்த ஓர் இடமாக இவ்விடம் இருக்கிறது என்பதனை வருபவர்களின் சந்தோஷம் நமக்கு உணர்த்த, மலர் பதித்த ஆடைகளை அணிந்துக்கொண்டு கால் உயரத்துக்கு ஹீல்ஸை மாட்டிக்கொண்டு பெண்கள் தேவாலயம் நோக்கி சென்றுக்கொண்டுள்ளனர். உணவகங்களிலும் எழுத்தாளர்களின் கைவண்ணம் அழகு சேர்க்க, அதோடுமட்டுமல்லாமல் மாடல்களுடன் இணைந்த புகைப்பட ஆர்வலர்களும், தங்கள் ஒப்பந்தகளை தொலைபேசி மூலமாக பரிசோதிக்கின்றனர்.

தங்கள் வாழ்க்கையில் நடைபயிற்சிக்கு (Jogging) ஆசைக்கொண்ட பலரை இந்த கார்டர் சாலையில் நம்மால் பார்க்க முடிய, உடற்பயிற்சி விரும்பி, இருசக்கர வாகன ஓட்டிகள், குடும்பங்கள், கல்லூரி மாணவ/மாணவிகள் என பலரையும் நம்மால் இங்கே பார்க்க முடிகிறது. அவர்கள் இங்கே ஆங்காங்கே கூடி நின்று உணவகங்களில் சாப்பிட, வேறென்ன இன்பம் தான் நம் வாழ்வில் வேண்டும்? என்ற எண்ணமும் நமக்குள் தோன்றுகிறது. மேலும், பல பிரபலங்களையும் இங்கே தினசரி ஜாக்கிங்க் மூலம் நம்மால் சந்திக்க முடிகிறது.

Read more about: travel trek
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X