Search
  • Follow NativePlanet
Share
» »கோனார்க் சூரிய கோயிலில் புதைந்திருக்கும் அறிவியல் ரகசியங்கள் !!

கோனார்க் சூரிய கோயிலில் புதைந்திருக்கும் அறிவியல் ரகசியங்கள் !!

By Super Admin

உலகெங்கும் மதம், கடவுள் போன்றவை மனிதர்களின் பயத்தை தூண்டவும், அவர்களை அடிமைப்படுத்தவுமே பயன்பட்டுவந்த காலத்தில் ஆன்மீகத்தையும், அறிவியலையும் ஒன்றுபடுத்தி உடலுக்கு ஆரோக்கியத்தையும், மனதுக்கு தெளிவையும் தரும் வகையில் அமைக்கப்பட்டவை தான் ஹிந்து கோயில்கள் ஆகும். ஹிந்து கோயில்களில் புதைந்திருக்கும் அறிவியல் உண்மைகள் பலவும் இன்றைய நவீன கால அறிவியல் அறிஞர்களுக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.

ஹிந்து கோயில்களை வெறும் மத அடையாளமாக மட்டுமே பார்ப்பது நாம் செய்துவரும் மிகப்பெரும் தவறாகும். இந்தியாவெங்கும் ஏராளமான கோயில்கள் நமது மூதாதையர்களின் அறிவை பறைசாற்றுகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்று தான் இந்தியாவின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் கோனார்க் சூரிய கோயில் ஆகும். இங்கே புதைந்திருக்கும் கட்டிடக்கலை அதிசயங்கள் பற்றியும், சில அறிவியல் ரகசியங்களையும் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

அதிகம் படிக்கப்பட்ட கட்டுரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மொத்த கோயிலும் ஒரு கால கடிகாரம் !!

மொத்த கோயிலும் ஒரு கால கடிகாரம் !!

1250ஆம் ஆண்டு கிழக்கு கங்கை வம்சத்தை சேர்ந்த முதலாம் நரசிம்ம தேவனால் கட்டப்பட்டிருக்கும் இக்கோயில் மொத்தமுமே ஒரு அறிவியல் பெட்டகமாகும்.

சூரிய பகவானை மூலவராக கொண்டிருக்கும் இக்கோயில் ஒரு கால கடிகாரம் போல செயல்படுகிறது.

Achilli Family | Journeys

மொத்த கோயிலும் ஒரு கால கடிகாரம் !!

மொத்த கோயிலும் ஒரு கால கடிகாரம் !!

இக்கோயில் மொத்தமும் ஒரு தேர் வடிவில் இருக்கிறது. கருவறையை சுற்றிலும் கல்லில் வடிக்கப்பட்ட 24 தேர் சக்கரங்கள் இருக்கின்றன.

இந்த 24 தேர் சக்கரங்களும் ஒரு நாளின் இருபத்திநான்கு மணிநேரத்தை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

Dinudey Baidya

மொத்த கோயிலும் ஒரு கால கடிகாரம் !!

மொத்த கோயிலும் ஒரு கால கடிகாரம் !!

10அடி விட்டம் உடைய இந்த தேர் சக்கரங்கள் ஒவ்வொன்றிலும் ஏழு சக்கரக் கட்டைகள் இருக்கின்றன.

இந்த கட்டைகள் வாரத்தின் ஏழு நாட்களை குறிக்கின்றன.

Paul Swansen

மொத்த கோயிலும் ஒரு கால கடிகாரம் !!

மொத்த கோயிலும் ஒரு கால கடிகாரம் !!

கால ஓட்டத்தில் சூரிய கோயிலின் பெரும்பகுதி பல்வேறு காரணங்களினால் அழிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இப்போதிருக்கும் கோயில் கருவறையை ஒட்டியே 229அடி உயரமான விமான கோபுரம் இருந்ததாம். இப்பகுதியில் இருக்கும் வலுவில்லாத மண் தன்மையின் காரணமாக 1837ஆம் ஆண்டு அது இடிந்து விழுந்துவிட்டதாம்.

Arpan Bhowmick

கட்டிடக்கலை அதிசயம்:

கட்டிடக்கலை அதிசயம்:

இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட நாளின் போது சூரிய ஒளி நேரடியாக கருவறையின் மேல் விழுகும் படி அமைக்கப்பட்டிருக்கிறது.

அதோடு இக்கோயிலின் முன்பாக இருக்கும் ஏழு குதிரைகளின் சிற்பங்களையும் நாம் காணலாம்.

Sagarika Bose

மைதுன சிற்பங்கள்:

மைதுன சிற்பங்கள்:

கோனார்க் சூரிய கோயிலில் மத்திய பிரதேசத்தில் இருக்கும் கஜுராஹோவில் இருப்பது போன்றே ஏராளமான மைதுன சிற்பங்கள் இருக்கின்றன.

காமம் ததும்ப வடிக்கப்பட்டிருக்கும் இச்சிற்பங்கள் காலப்போக்கில் சற்றே சிதைந்து போயிருக்கின்றன.

Steve Browne & John Verkleir

இதர கோயில்கள்

இதர கோயில்கள்

கோனார்க் சூரிய கோயிலுக்கு அருகிலேயே பாழைடைந்த நிலையில் இரண்டு கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

அதிலொரு கோயில் சூரிய பகவானின் மனைவியான மாயாதேவியுடைது என்றும், மற்றொரு கோயிலில் பலராமர், வராஹா பகவான் மற்றும் திருவிக்ரமர் ஆகியோரது விஹாரங்கள் இருக்கும் வைணவ கோயிலென்றும் கண்டறியப்பட்டுள்ளது.

Paul Swansen

புகைப்படங்கள் !!

புகைப்படங்கள் !!

கலிங்க கட்டிடக்கலையின் உச்சமாக திகழும் கோனார்க் சூரிய கோயிலின் சில அற்புதமான புகைப்படங்களின் தொகுப்பு!!

Steve Browne & John Verkl

புகைப்படங்கள் !!

புகைப்படங்கள் !!

அழகிய மங்கையரின் மைதுன சிற்பங்கள்!!

Steve Browne & John Verkl

புகைப்படங்கள் !!

புகைப்படங்கள் !!

இக்கோயிலில் உள்ள சுவர்களில் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Steve Browne & John Verkleir

புகைப்படங்கள் !!

புகைப்படங்கள் !!

இக்கோயில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு மத்திய அரசின் சுற்றுலாத் துறையினால் பாதுக்காக்கப்படுகிறது.

Srikumar Mitra

எப்படி செல்வது?

எப்படி செல்வது?

ஓடிஸா மாநிலத்தின் தலைநகரான புரியில் இருந்து கோனார்கிற்கு சிறப்பான சாலை மற்றும் பேருந்து வசதி இருக்கிறது.

புரியில் இருந்து 33 கி.மீ தொலைவில் கோனார்க் சூரிய கோயில் அமைந்திருக்கிறது.

eT-pek

எப்படி செல்வது?

எப்படி செல்வது?

கோனார்க் சூரிய கோயில் அமைந்திருக்கும் கோனார்க் நகரை பற்றிய மேலதிக தகவல்களையும், அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய தகவல்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Read more about: spiritual places odisha temples
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X