உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

கோவா ன்னு சொன்னாலே 'அது' மட்டும்தானா? அங்க இருக்கும் இந்த இடங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்கள

Written by: Balakarthik Balasubramanian
Published: Saturday, July 15, 2017, 16:00 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

இந்த கோவா என்ற ஒற்றை வார்த்தை, பலர் நினைவலைகளில் கடற்கரையையும், மலைகளையும், ஆட்டம் பாட்டம் என பலவற்றையும் மனதிலே பதித்து விடுமுறைக்கான திட்டங்களையும் இங்கே செல்ல வகுக்கவும் துடிக்கும். இந்தியாவின் மேற்கு கடற்கரையில் காணப்படும் இந்த அழகிய மாநிலமானது...நம்முடைய விடுமுறைக்கு ஏற்ற சிறந்த இடமாகவும் இருக்கிறது. கடற்கரையை கடந்து, கோவாவில் 300 வருடங்களுக்கு பழமை வாய்ந்த நினைவு சின்னங்கள் போர்த்துகீசிய கட்டிடக்கலை பாணியில் காணப்படுவது நம் மனதை இதமாக்குகிறது.

இந்த மாநிலத்தில் உள்ள உணவகங்களில் கடல் உணவுகள் கிடைக்க, ருசியானதாகவும் இவை இருக்கிறது. இந்த இடமானது பயணத்திற்கும், மலை ஏற்றத்துக்கும் சிறந்த இடமாக அமைந்து கடற்கரை மற்றும் மலைகளையும் கொண்டுள்ளது. இத்தகைய அனைத்து விதமான அழகிய இடங்களை ஒருங்கே பெற்றிருக்கும் காரணத்தினால் தான் கோவாவை அனைவரும் தங்களுக்கு ஏற்ற ஆர்வமிக்க இடமாக தேர்வு செய்கின்றனர். நீங்கள் ஒரு இயற்கை ஆர்வலராகவோ, வரலாற்று ஆர்வலராகவோ, சாகச சிந்தனை உடையவர்களாகவோ, ஏன் உணவு பிரியராக இருப்பீர்களென்றாலும் இந்த கோவா உங்கள் மனதின் விருப்பப் பட்டியலில் முதலிடத்தை கண்டிப்பாக பெறும் என்பதில் எத்தகைய சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம்.

கோவாவில் என்ன அனைவருக்கும் பிடிக்குமென்பதை நான் சொல்லி தெரிந்துகொள்ள வேண்டிய தேவையில்லை. இருப்பினும், கோவாவில் குகைகள் ஏதேனும் நீங்கள் பார்த்தீர்களா? இல்லையா, கவலை வேண்டாம். இங்கே காணும் ஆர்வலம் குகையானது இயற்கை அழகை உள்ளடக்கியதாய் காட்சியளிக்க இயற்கை அன்னை இக்குகையின் உள்ளே நுழைபவர்களை தாலாட்டி தூங்க வைப்பாள் என்பதே அழகிய உண்மை. வட கோவாவின் சாங்கூலிம் கிராமத்தில் காணப்படும் இந்த ஆர்வலம் குகையானது, பனாஜியிலிருந்து 31 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. இந்த குகையை தோண்ட, 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிவப்பு நிற களி மண் வகை மலையை நம்மால் பார்க்க முடிகிறது.

கோவா ன்னு சொன்னாலே 'அது' மட்டும்தானா? அங்க இருக்கும் இந்த இடங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்கள

Hemant192

இந்த புதிரான ஆர்வலம் குகை பற்றி சில தகவல்கள்:

இதனை 'பாண்டவா குகை' என்றும் அழைப்பர். ஏனெனில், பஞ்ச பாண்டவ சகோதரர்களான யுதிர்ஷ்டன், பீமன், அர்ஜுனன் , நகுலன், சஹாதேவன் ஆகிய ஐந்து பேரும், 12 வருட சிறைவாசத்தின்போது இங்கே வந்ததாக மகாபாரதத்தின் புராணம் மூலம் நமக்கு தெரிய வருகிறது. இந்த குகையில் ஐந்து தொகுதிகள் காணப்பட, இந்த கதை எவ்வளவு உண்மை என்பதும் நமக்கு தெரிய வருகிறது.

இந்த ஐந்து தொகுதிகளில்... மூன்றில் சன்னதிகள் காணப்பட, மத்தியில் காணப்படும் முக்கிய சன்னதி ஒன்றில் சிவலிங்கம் ஒன்று காணப்படுகிறது. இந்த குகைகள் ஹிந்து மதத்துவத்தை உணர்த்த, சில அறிஞர்களோ இதனை புத்த பிறப்பிடத்தின் இடமெனவும் கூறுகின்றனர். இங்கே தோண்டியதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மஹாவீர் கௌதம புத்தரின் பெரிய சிலை ஒன்று, 4ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியில் உள்ள வரலாற்றை நினைவுக்கு கொண்டு வருகிறது.

தோண்டி எடுக்கப்பட்ட புத்த சிலையானது, இப்பொழுது கோவா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இதனை "ஹார்வலெம் குகை' என்றும் உள்ளூர் மக்கள் அழைப்பர். தெற்கில் விஹாரா இருக்க, வடக்கில் சரணாலயம் ஒன்று காணப்படுகிறது. இந்த குகைகளின் அமைப்பானது புத்த வடிவத்தை ஒத்து பாறையில் செதுக்கப்பட்டிருக்க, மக்களோ...புத்த துறவிகள் இங்கே வந்து செந்நிற களிமண் கொண்டு செதுக்கி சென்றதாய் நம்புகின்றனர். இந்த குகையின் இரண்டாம் தொகுப்பானது சமஸ்கிருதம் மற்றும் பிராமண மொழிகளை கொண்டு 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி பெருமையை எடுத்துரைக்கிறது.

இந்த ஆர்வலம் குகையின் இயற்கை அழகு வருடலால், பல திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகள் இங்கே நடைபெற, இதனை கடந்து இது சுற்றுலா பயணிகளின் முக்கியமான இடமாகவும் சிறந்து விளங்குகிறது.

ஆர்வலம் நீர்வீழ்ச்சி:

கோவா ன்னு சொன்னாலே 'அது' மட்டும்தானா? அங்க இருக்கும் இந்த இடங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்கள

Kavya Rastogi

இயற்கை அழகு அதிகம் நிறைந்து மனதிற்கு பரிசை தரத்துடிக்கும் இந்த கோவாவில் காணப்படும் பிரசித்திபெற்ற இடங்களுள் ஒன்று தான் இந்த ஆர்வலம் நீர்வீழ்ச்சியாகும். இந்த குகையிலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில் இந்த மனதை மயக்கும் இரகசிய நீர்வீழ்ச்சியான ஆர்வலம் தென்படுகிறது. இந்த ஒழுங்கற்ற வீழ்ச்சியானது 70 அடி உயரத்திலிருந்து வீழ்கிறது. இந்த மாபெரும் வீழ்ச்சி, குளம் அல்லது ஏரியை உருவாக்க, நீந்துவதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு சிறந்த இடமாக இது அமைகிறது.

இது மிகவும் பிரசித்திபெற்ற ஒரு சுற்றுலா தளமாக இருக்க சுற்றுலா பயணிகளும் நிறைய பேர் வந்து செல்கின்றனர். இங்கே காணும் ருத்ரேஷ்வரர் ஆலயமானது அருகில் அமைந்து, பார்வையாளர்களை அன்புடன் வரவேற்று பரவசமூட்டும் காட்சிகளால் வெகுவாக கவர்கிறது.

ஆர்வலம் குகையையும், நீர்வீழ்ச்சியையும் நாம் காண சிறந்ததோர் நேரம்:

வருடத்தில் எந்த நேரத்திலும் நாம் இந்த ஆர்வலம் குகையை பார்த்து ஆச்சரியப்படலாம். இங்கே கால நிலையானது வருடம் முழுவதும் மென்மையானதாகவும், பேரின்பம் தரும் வகையிலும் காணப்படுகிறது. அதேபோல், பருவ மழைக்காலங்களில், இந்த ஆர்வலம் நீர்வீழ்ச்சிக்கு நாம் வருவது சிறந்ததோர் நேரமாக அமைகிறது. அதனால், இந்த வீழ்ச்சியிலிருந்து விழும் நீரை கண்டு நாம் மிகவும் பெருமையடையலாம்.

நேரங்கள்:

இந்த குகையானது பொதுவாக காலை 9 மணி முதல் மாலை 5 வரை திறந்து காணப்படுகிறது. மதியம் 1 முதல் 2 வரையில் இடைவேளையும் விடப்படுவதோடு...வாரத்தில் அனைத்து நாட்களிலும் இந்த குகையானது திறக்கப்படுகிறது. அதேபோல், ஆர்வலம் நீர்வீழ்ச்சியானது காலை 9 மணிக்கு திறந்து மாலை 6 மணிக்கு மூடப்படுகிறது. இதுவும் வாரத்தில் அனைத்து நாட்களிலும் இயங்குகிறது.

கோவா ன்னு சொன்னாலே 'அது' மட்டும்தானா? அங்க இருக்கும் இந்த இடங்களைப் பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்கள


ஆர்வலம் குகை மற்றும் நீர்வீழ்ச்சியை நாம் அடைவது எப்படி?

ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி?

சாங்கூலிமிலிருந்து 40.5 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் டபோலிம் சர்வதேச விமான நிலையம் தான் அருகில் காணப்படும் ஓர் விமான நிலையமாகும். இது இந்தியாவின் முக்கிய நகரங்களான பெங்களூரு, சென்னை, மும்பை என பல நகரங்களுடன் இணைந்திருக்க, இங்கிருந்து நாம் கார் அல்லது பேருந்தின் மூலம் குகையை அடையலாம்.

தண்டவாள மார்க்கமாக செல்வது எப்படி?

சாங்கூலிமிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் டபோலிம் இரயில் நிலையம் தான் அருகில் அமைந்திருக்கும் ஒன்றாகும். இந்த இரயில் நிலையத்திலிருந்து முக்கிய நகரங்களான பூனே, அஹமதாபாத், பெங்களூரு என பல நகரங்கள் இணைக்கப்பட்டிருக்க, இங்கிருந்து பேருந்து அல்லது காரின் உதவியுடன் நாம் செல்லலாம்.

சாலை மார்க்கமாக செல்வது எப்படி?

மாநிலங்களின் இடையேயான பேருந்து சேவையானது பஞ்சிமிலிருந்து சாங்கூலிமிற்கு இயக்கப்படுகிறது. சாங்கூலிமிலிருந்து வாடகை கார்கள் இயக்கப்பட, நாம் குகை மற்றும் நீர்வீழ்ச்சியை காரின் மூலம் அடையலாம். சாங்கூலிம், பஞ்சிமிடம் இணைக்கப்பட்டிருக்க, அது ஏனைய பக்கத்து நகரங்களுடனும் இணைந்து காணப்படுகிறது.

Read more about: travel, tour, goa
English summary

The Unexplored Arvalem Caves And Waterfall At Goa

The Unexplored Arvalem Caves And Waterfall At Goa
Please Wait while comments are loading...