உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

பொற்கோயிலில் இருக்கும் மர்மங்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Updated: Thursday, May 18, 2017, 15:04 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

கடவுள் தான் மனிதனை படைத்தாரா என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் கடவுளை படைத்தது மனிதன் தான் என்பது புதிர் நிறைந்த முரண்.

கடவுளை படைத்ததோடு மட்டுமில்லாமல் அதை சுற்றி ஒரு வாழ்வியல் முறையை கட்டமைத்து மதத்தை உருவாக்கினான். 

இன்று உலகெங்கும் கணக்கிடமுடியாத மத நம்பிக்கைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனக்கே உரிய வாழ்வியல் மற்றும் வழிபாட்டு முறைகளை கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று தான் குருநானக் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட சீக்கிய மதமாகும்.

 சீக்கிய மதத்தின் புனித இடமாக கருதப்படும் ஹர்மந்திர் சாஹேப் உலகின் பிரபலமான மத வழிபாட்டுத்தலங்களுள் ஒன்றாகும். தங்க கோயில் என்றும் அழைக்கப்படும் இந்த இடத்தை பற்றி இதுவரை வெளிவராத சில ரகசியங்களை உங்களுக்கு வழங்குகிறோம். முழுவதும் படியுங்கள்.

செய்யத்துணியாத ஒன்று

இந்த இடம் அனைத்து மதத்தினருக்கும் உரியது என்பதை உணர்த்த குரு அர்ஜுன் தேவ் செய்த காரியம் இன்றைய சூழலில் யாரும் செய்யத்துணியாத ஒன்றாகும்.

 

Arian Zwegers

முஸ்லிம் துறவி !! :

அர்ஜுன் சிங் அவர்கள் ஹர்மந்திர் சாஹிப் கோயிலுக்கு லாஹூரில் வாழ்ந்து வந்த 'மியான் மிர்' என்ற முஸ்லிம் துறவியை அடிக்கல் நாட்டச்செய்தார். 

 

Jordi Boixareu

அழிவிலிருந்து மீண்டுவந்தது

 இந்த கோயில் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அஹமத் ஷாஹ் என்ற இஸ்லாமிய மன்னனின் படையெடுப்பினால் அழிக்கப்பட்டு சில காலம் கழித்து புனரமைக்கப்பட்டிருக்கிறது.  

 

பணக்காரர்களுக்கு முன்னோடி

இன்றைக்கு அதிக செல்வம் படைத்த ஆன்மீக ஸ்தலங்களாக திகழும் திருப்பதி ஏழுமலையான் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் போன்றவற்றிக்கு எல்லாம் முன்னோடி இந்த ஹர்மந்திர் சாஹிப் தான். 

 

தங்கமான பளிங்கு கல்

பஞ்சாபின் அரசராக இருந்த ரஞ்சித் சிங் பளிங்கு கல்லினால் கட்டப்பட்டிருந்த இக்கோயிலின் சுவர் முழுக்க தங்க தகடுகளை பதிக்கப்பட காரணமாகவும் இருந்திருக்கிறார்.  

தங்கம் எவ்ளோ தெரியுமா?

கிட்டத்தட்ட 100கிலோ தங்கத்தை கொண்டு ஹர்மந்திர் சாஹிபின் சுவர் மற்றும் கூரை ஆகியவை தங்கத்தால் வேயப்பட்டிருக்கின்றன. 

 

 

வைரம் வைடூரியம் பதிப்பு

அதோடு இக்கோயிலின் உட்புறத்தில் உள்ள சுவர்களில் வைரம், வைடூரியம் போன்ற விலைமதிக்க முடியாத கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.

சாகவரம் அளிக்கும் அமிர்த குளம் !!

 இக்குளத்தில் இருக்கும் நீர் சாகவரம் அளிக்கும் அமிர்தத்திற்கு நிகரானதாக சொல்லப்படுகிறது. 

 

மீன்கள் கூட தங்கம்தான்

இந்த குளத்தில் ஏராளமான தங்க மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

Axel Drainville

மூன்று வேளை இலவச உணவு

பொற்கோயிலுக்கு அருகிலுள்ள 'லங்கர்' 3 வேலையும் இலவசமாக உணவு பரிமாறப்படுகிறது.  

Laura7581

உலகின் மிகப்பெரிய சமையல் அறை :

இங்கு மட்டும் தினமும் மூன்று வேலையும் சேர்த்து ஒரு லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்படுகிறது. இதற்க்கான மூலப்பொருட்களான கோதுமை, பருப்பு மற்றும் காய்கறிகள் அனைத்தும் பலராலும் நன்கொடையாக வழங்கப்படுகிறது. 

Ajay Goyal

உலகின் மிகப்பெரிய சமையல் அறை :

லங்கருக்கு சாப்பிட வரும் பக்தர்கள் உணவு தயாரிப்பு, பரிமாறுதல், சமையல் பாத்திரங்களை சுத்தப்படுத்துதல் போன்ற காரியங்களில் தாமாக முன்வந்து சேவையாற்றலாம். 

உலகின் மிகப்பெரிய சமையல் அறை :

லங்கர் உணவு தயாரிப்புக்கூடத்தின் ஒரு காட்சி. 

 

Kulveer Virk

வாள் ஏந்திய பாதுகாவலர்கள்

ஸ்ரீ ஹர்மந்திர் சாஹேப் கோயிலை பாதுக்காக்கும் பணியில் பரம்பரை பரம்பரையாக சில குடும்பங்களை சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் இன்றும் வாள் ஏந்தியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். நீல நிறத்தில் உடையணிந்திருக்கும் இவர்கள் மற்றவர்களை காட்டிலும் மிகப்பெரிய தலைப்பாகையை கொண்டிருக்கின்றனர்.  

புனித நூல்

ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் கோயிலினுள் சீக்கியர்களின் புனித நூலான 'குரு கிரந்த சாஹிப்' வைக்கப்பட்டுள்ளது.  ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் கோயிலை நிறுவிய குரு அர்ஜுன் என்பவரே இந்நூலை இயற்றியிருக்கிறார். 

இக்கோயிலினுள் குரு கிரந்த சாஹிப் நூல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. உலகெங்கிலும் இருந்து வரும் சீக்கியர்கள் இந்த புனித நூலின் முன்பாக மண்டியிட்டு அமர்ந்து வழிபாடு செய்கின்றனர்.   

தீபாவளி

தீப ஒளி திருநாளான தீபாவளி பொற்கோயிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இக்கோயில் முழுக்க வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வான வேடிக்கைகள், சிறப்பு வழிபாடுகள் என கொண்டாட்டங்கள் களைகட்டுகின்றன. 

வித்தியாசமாக தீபாவளியை கொண்டாட நினைப்பவர்கள் நிச்சயம் இந்த பொற்கோயிலுக்கு வரலாம். 

பஞ்சாப் சுற்றுலா

இந்தியாவில் ஒருமுறையேனும் நாம் சென்று சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களில் பஞ்சாப் மாநிலம் முக்கியமானது. இங்கு வாழும் மக்களின் தனித்துவமான கலாச்சாரம், பண்பாடு, வாழ்கையை கொண்டாடும் விதம், வரலாற்று பெருமை நிறைந்த இடங்கள், அதி சுவையான பஞ்சாபி உணவுகள், ரகளையாக கொண்டாடப்படும் திருவிழாக்கள் என பஞ்சாபிற்கு நாம் ஏன் வரவேண்டும் என்பதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 

பஞ்சாப் சுற்றுலா

பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் பற்றிய மேலும் பல தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். 

பஞ்சாப்பில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள் தமிழ் பயண வழிகாட்டியில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவிலேயே அதிக தேனிக்கள் உருவாகும் இடம் தெரியுமா?

இந்தியாவின் 1000 ஆண்டுகள் பழமையான கோயில்கள் - 1

இந்தியாவின் டாப் 10 மிக கவர்ச்சியான திருமண மாளிகைகள் எவை தெரியுமா?

கேரளாவின் 26 சுற்றுலாத் தலங்கள்! - ஒரு ஃபுல் ரவுண்ட் அப்

வார விடுமுறையை கொண்டாட அற்புதமான , இன்னும் அதிகம் அறியப்படாத இடங்கள்

English summary

The untold secrets of Golden Temple

Golden Temple in Amritsar, is a top tourist attraction in India.This is one of the must visit places in India too. Let's visit the golden temple.
Please Wait while comments are loading...