Search
  • Follow NativePlanet
Share
» »தமிழக கடற்கரைகளில் என்னென்ன ஆன்மீகத் தலங்கள் இருக்குனு தெரியுமா?

தமிழக கடற்கரைகளில் என்னென்ன ஆன்மீகத் தலங்கள் இருக்குனு தெரியுமா?

தமிழகத்தின் நீண்ட கடற்கரையோர மக்கள் வழிபடும் ஆலயங்கள் பற்றிய ஒரு புகைப்பட சுற்றுலா

By Udhaya

காலந்தொட்டே இருந்த பழக்கவழக்கங்களில் இறை நம்பிக்கையும் ஒன்றாக நம்முடன் இருந்து வருகிறது. பழந்தமிழர்கள் நிலங்களை 5 ஆகப் பிரித்தனர். அவை குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல், பாலை. அவற்றில் நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த இடங்களும். அந்த பகுதி மக்களின் கலாச்சாரம், பழக்கவழக்கங்களுக்கு ஏற்றவாறு அக்காலத்தில் அவர்களுக்கென கோவில்களை உருவாக்கி வழிபட்டனர். ஆனால் கம்பெனி ஆதிக்கத்துக்கு பிறகு, மக்கள் பிற மதங்களின்பால் ஈர்க்கப்பட்டு, அந்தந்த மதக் கடவுள்களின் மேல் நம்பிக்கை வைத்து, அவர்களுக்கென பல்வேறு கோவில்களைக் கட்டினர். இந்த வகையில், கடற்கரையோர வழிபாட்டுத் தலங்களின் வரலாறு, நம்பிக்கைகள் பற்றி காணலாம்.

உவரி அந்தோணியார் ஆலயம்

உவரி அந்தோணியார் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே அமைந்துள்ளது உவரி அந்தோணியார் ஆலயம். இது பாரத பதுவை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயம், மாவட்டத் தலைநகர் திருநெல்வேலியிலிருந்து 70 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 50கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. உள்ளூர் மக்களின் நம்பிக்கையின்படி, 450 வருடங்களுக்கு முன்னர் உவரி அருகே வந்த ஒரு போர்ச்சுகீசிய கப்பல் கரை ஒதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

PC: Yesmkr

உவரி அந்தோணியார் ஆலயம்

உவரி அந்தோணியார் ஆலயம்

கப்பலில் உள்ளவர்கள் காலாரா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவே, அங்கிருந்த தச்சர் மரத்தால் ஆன அந்தோணியார் உருவத்தை செய்தாராம். பின்னர் அவர்களுக்கு ஏற்பட்ட காலாரா குணமாகிவிட்டதாக உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது. பின்னர் மாலுமிகள் இந்த இடத்தில் அந்தோணியாரின் சிலையை வைத்ததாகவும், கிராமத்தினர் ஆலயத்தை கட்டியதாகவும் கூறப்படுகிறது. அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்செந்தூர், நாகர்கோவில். விமான நிலையம் தூத்துக்குடி.

PC: uvari St.Antony's church

உவரி கப்பல் மாதா ஆலயம்

உவரி கப்பல் மாதா ஆலயம்

கப்பல் வடிவிலான ஆலயம் ஒன்று உவரி அந்தோணியார் ஆலயத்திலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கப்பல் மாதா ஆலயம் அவர் லேடி ஆப் குட் ஹெல்த் என்று அழைக்கப்படுகிறது. அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்செந்தூர், நாகர்கோவில். விமான நிலையம் தூத்துக்குடி.

PC: Cleome

கப்பல் மாதா ஆலயம்

கப்பல் மாதா ஆலயம்

ஆலயத்தின் மற்றொரு தோற்றம்.

தேவி கன்னியா குமாரி கோவில்

தேவி கன்னியா குமாரி கோவில்

குமரி முனையில் அமைந்துள்ள இந்த கோவிலில் அம்மன் குமரியாக காட்சியளிக்கிறார். அரக்கனை அழிக்க குமரியாக உருப்பெற்று வந்த அம்மன், இறைவனை மணக்க நினைத்து வேண்டினார். இறைவனும் அதற்கு ஒப்புக்கொள்ளவே, திருமணத்துக்கு தயாரானார் குமரி அம்மன். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் இறைவன் வரவில்லை எனக் கோபமுற்ற அம்மன், இனி வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே கழிக்க முடிவெடுத்து குமரியில் கன்னியாக நின்றார் என்பது நம்பிக்கை.

PC: Sankarrukku

பகவதியம்மன் கோவில்

பகவதியம்மன் கோவில்

குமரி பேருந்து நிலையத்திலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள குமரியம்மன் கோவிலில் அய்யப்பன் சீசன் காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அருகிலுள்ள ரயில் நிலையம் கன்னியாகுமரி, நாகர்கோவில். விமான நிலையம் திருவனந்தபுரம், தூத்துக்குடி.

PC: Alice

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில்

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தலைநகர் நாகர்கோவிலிருந்து 23 கிமீ தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 75கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. குமரி மாவட்டத்தின் பழைமையான கோவில்களில் ஒன்றாக இது விளங்குகிறது. கன்னியாகுமரி, நாகர்கோவிலிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. அருகிலுள்ள ரயில் நிலையம் நாகர்கோவில். விமான நிலையம் திருவனந்தபுரம்.

photo courtesy: mandaikadu.in

மண்டைக்காடு பிள்ளையார் கோவில்

மண்டைக்காடு பிள்ளையார் கோவில்

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள மற்றொரு தலம் இந்த பிள்ளையார் கோவில். பகவதியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இவரை வழிபட்டுவிட்டுதான் செல்வார்கள்.

photo courtesy: mandaikadu.in

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்த உவரியில், தானாக முளைத்த சிவபெருமான் தனக்கென அமைத்துக்கொண்ட திருத்தலம் உவரி சுயம்புலிங்க சுவாமி ஆலயம். கிராமத்தில் பால் வியாபாரம் செய்து வந்த ஒருவர், சாலையில் செல்லும் போது நிலைதடுமாறி கீழே விழ, சாலையோரத்தில் இருந்த கல்லின் மேல் பால் அபிஷேகமாக பெய்ததாம்.

PC: ovarisuyambulingaswamy.com

உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில்

உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில்

இந்த இடத்தில் அவர் ஒரு கோவிலைக் கட்ட அதுவே சுயம்புலிங்க சுவாமி கோயிலானதாக நம்பப்படுகிறது. அருகிலுள்ள ரயில் நிலையம் கன்னியாகுமரி, நாகர்கோவில். விமான நிலையம் திருவனந்தபுரம், தூத்துக்குடி.


PC: ovarisuyambulingaswamy.com

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழர்களின் முன்னோரான தமிழ்க்கடவுளாக நம்பப்படும் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான இது செந்தூர் என்று அழைக்கப்படுகிறது. இது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. சூரபத்மனின் அச்சுறுத்தலுக்கு பயந்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, நெற்றிக்கண்ணை திறந்தார் அவர்.

PC: tiruchendurmurugantemple.tnhrce.in

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில்

அதிலிருந்து ஆறு முகமாக உருவெடுத்த முருகப்பெருமான், தந்தையின் கட்டளையை ஏற்று அரக்கனை அழிக்க திருச்செந்தூர் வந்ததாக நம்பப்படுகிறது. அருகிலுள்ள ரயில் நிலையம் திருச்செந்தூர், திருநெல்வேலி. விமான நிலையம் தூத்துக்குடி.

PC: tiruchendurmurugantemple.tnhrce.in

லேடி ஆப் ரேன்சம் சர்ச், கன்னியாகுமரி

லேடி ஆப் ரேன்சம் சர்ச், கன்னியாகுமரி

கன்னியாகுமரி வந்த புனித பிரான்சிஸ் சேவியர், குமரி முட்டம் அருகே அவர் லேடி ஆப் டெலைட் கிரேட்டோவைக் கண்டார். அதே இடத்தில் அவர் ஒரு ஆலயத்தை அமைத்து, அதற்கு லேடி ஆப் ரேன்சம் சர்ச் என்று பெயரிட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த புனித தலத்துக்கு உலகெங்கிலுமிருந்து பலர் வருகை தருகிறார்கள். அருகிலுள்ள ரயில் நிலையம் கன்னியாகுமரி, நாகர்கோவில். விமான நிலையம் திருவனந்தபுரம், தூத்துக்குடி.

PC: ransomchurchkanyakumari

குலசேகரப் பட்டிணம் முத்தாரம்மன் கோவில்

குலசேகரப் பட்டிணம் முத்தாரம்மன் கோவில்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன் பட்டிணத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக நம்பப்படும் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு தேவி, முத்தாரம்மன் என்ற பெயரில் ஆட்சி செய்து வருவதாகவும், நம்பி வரும் பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் கருணையுள்ளம் கொண்டவள் எனவும் நம்பப்படுகிறது. அருகிலுள்ள ரயில் நிலையம் தூத்துக்குடி, திருச்செந்தூர். விமான நிலையம் தூத்துக்குடி.

PC: kulasaimutharammantemple

குலசேகரப் பட்டிணம் பெருமாள் கோவில்

குலசேகரப் பட்டிணம் பெருமாள் கோவில்

கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த கோவில். மிகவும் சக்திவாய்ந்த கோவில் என நம்பப்படும் பெருமாள் வேண்டிய வரம் தருவதாகவும் கூறுகின்றனர் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள். அருகிலுள்ள ரயில் நிலையம் கன்னியாகுமரி, நாகர்கோவில். விமான நிலையம் திருவனந்தபுரம், தூத்துக்குடி.

PC: Ezhilarasan446

வட்டக்கோட்டை ஸ்ரீ நாராயண மகாராஜா கோவில்

வட்டக்கோட்டை ஸ்ரீ நாராயண மகாராஜா கோவில்

கன்னியாகுமரி அருகில் அமைந்துள்ள இந்த வட்டகோட்டை பல்வேறு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. திருவாங்கூர் சமஸ்தானத்தால் கட்டப்பட்ட கடல் கோட்டைகளில் இதுவே கடைசி கோட்டை. இந்த கோட்டை தே லேன்னாய் என்ற டச்சுக் கடற்படை அதிகாரியால் எழுப்பப்பட்டது.

கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில், பல ஓய்வறைகள், காவல் கோபுரங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளும் உள்ளன. இக்கோட்டையின் உட்புறச் சுவர்களில் காணப்படும், செதுக்கிய மீன்களின் சித்திரங்கள், அவை பாண்டியர்களின் சின்னம் என்பதை குறிக்கின்றன.

தொல்பொருள் ஆராய்சியாளர்களின் ஆய்வின்படி, இந்தக் கோட்டை முன்னாட்களில் பாண்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று சொல்லப்படுகிறது.


PC: Infocaster

அன்னை வேளாங்கண்ணி ஆலயம்

அன்னை வேளாங்கண்ணி ஆலயம்

தமிழ்நாட்டின் கோரமண்டல கடற்கரையோரம் அமைந்திருக்கும் வேளாங்கன்னி, அனைத்து மதத்தை சேர்ந்த மக்களுக்கும் ஆன்மீகத் ஸ்தலமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் இந்த வேளாங்கன்னியில் அன்னை மரியாவிற்கு ஒரு மகத்தான பேராலயம் எழுப்பப்பட்டிருக்கிறது.

PC: BrownyCat

அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம்

அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம்

இந்த பேராலயம் மடோனா ஆப் வேளாங்கன்னிக்கு அர்ப்பனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பேராலயத்தில் குடிகொண்டிருக்கும் அன்னை மரியா, ஆரோக்கிய அன்னை என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

PC: tj_jenson

சாந்தோம் ஆலயம்

சாந்தோம் ஆலயம்

16ம் நூற்றாண்டில் சென்னைக்கடற்கரைக்கு வந்திறங்கிய போர்த்துக்கீசிய ஆக்கிரமிப்பாளர்களால் இந்த கிறித்துவ தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. துவக்கத்தில் சிறியதாக உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் பின்னர் 1893ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்டு கதீட்ரல் அந்தஸ்தும் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த புதிய அமைப்பு 19ம் நூற்றாண்டில் கட்டிடக்கலைஞர்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்பட்ட நியோ-காத்திக் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

PC: PlaneMa

சாந்தோம் ஆலயம்

சாந்தோம் ஆலயம்

கிறித்துவ ஆன்மீக நம்பிக்கைகளின்படி ஏசு கிறித்துவின் 12 சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸ் கி.பி 52ம் ஆண்டில் கேரளாவுக்கு வந்திறங்கி பின் சென்னையில் உள்ள பரங்கிமலைக்கு வந்து மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு மரித்ததாக நம்பப்படுகிறது.

PC: PlaneMa

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X