Search
  • Follow NativePlanet
Share
» »தென்மலா சூழல் சுற்றுலாவை பற்றிய சுவையான தகவல்கள்

தென்மலா சூழல் சுற்றுலாவை பற்றிய சுவையான தகவல்கள்

இந்தியாவிலேயே மிக அழகான இயற்கை எழில் சூழ்ந்த இடமென்றால் அது கேரளா தான். இதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கேரளாவிற்கு வருகின்றனர். வெள்ளி போல கரைந்தோடும் ஆறுகள், எங்கெங்குகாணினும் நிறைந்திருக்கும் பசுமை, இந்திய கலாச்சரத்தின் வேர்களை மறக்காமல், அழிக்காமல் இன்றும் பாதுகாத்து வருவது போன்றவை கேரளா இந்தியாவில் இருக்கும் சிறந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக திகழ காரணமாக இருக்கின்றன.

கடவுளின் சொந்த தேசம் என்ற புனைபெயருடன் அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் புதிதாக சூழல் சுற்றுலா (Eco Tourism) தென்மலா என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இயற்கையை நேசிக்கும் அனைவரும் கட்டாயம் செல்லவேண்டிய இந்த இடத்தை பற்றிய சுவையான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

சூழல் சுற்றுலா!!

சூழல் சுற்றுலா!!

கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் இருக்கும் புனலூர் என்ற நகரத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது தென்மலா என்ற இடம்.

இது தான் இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட சூழல் சுற்றுலாத்தலம் ஆகும். இந்த இடத்தின் சிறப்புகளை அடுத்தடுத்த பக்கங்களில் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Sudeesh Kumar

சூழல் சுற்றுலா!!

சூழல் சுற்றுலா!!

சுற்றுலாத்தலமாக இருக்கும் பெரும்பான்மையான இயற்கை எழில் மிக்க இடங்கள் பலவும் மனிதனால் சீரழிக்கப்பட்டுவரும் நிலையில் உலக அளவில் சூழல் சுற்றுலா என்பது பிரபலமாகி வருகிறது.

இயற்கைக்கு எந்தவித கேடும் விளைவிக்காமல், அவற்றை ரசிக்கவும், அறிவியல் பூர்வமாக அவ்விடங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும் விரும்பும் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலாவே சூழல் சுற்றுலா (Eco Tourism) என்றழைக்கப்படுகிறது.

Kerala Tourism

சூழல் சுற்றுலா!!

சூழல் சுற்றுலா!!

இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்ட சூழல் சுற்றுலாதளமான தென்மலாவில் இருக்கும் தீண்டப்படாத இயற்கை அழகும், குளுகுளு சூழலும் எவரையும் அந்த இடத்தின் மேல் காதல் கொள்ளச்செய்யும்.

இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் நோக்கில் பலவிதமான சுவாரஸ்யம் நிறைந்த அம்சங்கள் இங்கே இருக்கின்றன.

Akhil S Unnithan

சூழல் சுற்றுலா!!

சூழல் சுற்றுலா!!

தென்மலாவில் இருக்கும் ஏரியில் நாம் படகு பயணம் செல்லலாம், கரடுமுராடான மலைப்பாதையில் சைக்கிள் ஓட்டலாம், ட்ரெக்கிங் பயணமும் மேற்கொள்ளலாம்.

குழந்தைகளை கவரும் விதமாக மாலை நேரத்தில் இங்குள்ள செயற்கை ஊற்றில் நீர்-ஒளி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

சூழல் சுற்றுலா!!

சூழல் சுற்றுலா!!

தென்மலாவில் புள்ளி மான்களுக்கான புத்துணர்வு மையம் ஒன்றும் இருக்கிறது. இங்கே இயற்கையான சூழ்நிலையில் வாழும் மான்களை அருகில் சென்று தொந்தரவு செய்யாமல் பார்த்து ரசிக்கலாம்.

Thanashyam Raj

சூழல் சுற்றுலா!!

சூழல் சுற்றுலா!!

தென்மலாவில் இருக்கும் தொங்கும் பாலம், கல்லடா ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கும் தென்மலா அணை, தென்மலாவில் இருந்து தொலைவில் இருக்கும் பாலருவி என்ற அருவி போன்றவை முக்கிய சுற்றுலாத்தலங்கள் ஆகும்.

Kumar Mullackal

சூழல் சுற்றுலா!!

சூழல் சுற்றுலா!!

தென்மலா பூங்கா வருடம் முழுக்கவே சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்திருக்கிறது. என்றாலும் பருவமழை காலமான செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் இங்கே செல்வதை தவிர்ப்பது நல்லது.

Ciju Panicker Cherian

சூழல் சுற்றுலா !!

சூழல் சுற்றுலா !!

தென்மலாவில் சில நாட்கள் தங்கி சுற்றிப்பார்க்க விரும்புகிறவர்களுக்காக இருக்கும் தங்கும் விடுதிகளும் வித்தியாசமானவையே.

இங்கே காட்டுக்குள்ளே கேம்ப் அமைத்து தங்கலாம், மரத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கும் குடிசைகளில் தங்கலாம், இங்கிருக்கும் ஏரியின் முன்பாக குடில் அமைத்து தங்கியும் இயற்கை அழகை ரசிக்கலாம்.

இந்த குடிகளில் அதிசுவையான கேரள உணவுகள் பரிமாறப்படுகின்றன.

phoogler

சூழல் சுற்றுலா !!

சூழல் சுற்றுலா !!

தென்மலாவில் இடிமுலங்கான் பாரா, ராக் வூட், ரோஸ் மலா என ட்ரெக்கிங் செல்ல மூன்று அற்புதமான இடங்கள் இருக்கின்றன.

இந்த இடங்களில் ட்ரெக்கிங் பயணம் மேற்கொள்ளும் போது காடுகளின் இதயத்துடிப்பை நாம் நன்றாக உணரும் வாய்ப்பை பெறலாம். மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியளிக்கும் விஷயமாக இந்த அனுபவம் இருக்கும்.

ட்ரெக்கிங் செல்ல கட்டணமாக ஒருவருக்கு 2500-3000 வரை வசூலிக்கப்படுகிறது.

Mohanraj Kolathapilly

சூழல் சுற்றுலா !!

சூழல் சுற்றுலா !!

நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்கள் நிச்சயம் இந்த தென்மலாவிற்கு சென்று வாருங்கள்.

திருவனந்தபுரத்தில் இருந்து 72 கி.மீ தொலைவில் தென்மலா அமைந்திருக்கிறது.

Rakesh S

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X