Search
  • Follow NativePlanet
Share
» »கோவாவில் நாம் செய்யவே கூடாத விஷயங்கள்

கோவாவில் நாம் செய்யவே கூடாத விஷயங்கள்

கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் எல்லோருக்குமே இருக்கும் கனவுகளில் ஒன்று நண்பர்களுடன் கோவா சென்று ஆசை தீர கொண்டாட வேண்டும் என்பதுதான். நண்பர்களுடன் ஒன்றாக கோவாவின் கடற்கரைகளில் கொண்டாடி மகிழ்வதற்கு இணையாக வேறு எதுவுமே இருக்க முடியாது.

என்றாலும் நம்மில் பலருக்கும் கொண்டாட்டம் என்பது குடிப்பதாக மட்டுமே இருக்கிறது. கோவா போன்ற அற்புதமான ஒரு சுற்றுலாத்தலத்திற்கு வெறுமனே குடிப்பதுக்கு மட்டுமா செல்ல வேண்டும்?. அதை தாண்டியும் பல நல்ல விஷயங்களை நாம் அங்கே செய்யலாம். அவற்றைப் பற்றியும் கோவாவில் நாம் செய்யவே கூடாத சில விஷயங்களை பற்றியும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

ஓவரா குடிக்காதீங்க :

ஓவரா குடிக்காதீங்க :

இந்தியாவில் மற்ற எல்லா இடங்களை காட்டிலும் கோவாவில் பியர் மற்றும் இதர மதுபானங்களின் விலை பாதிக்கு பாதி குறைவாகும். விலை கம்மியாக கிடைக்கிறது என்று வயிறு முட்ட குடிக்காதீர்கள். இப்படி குடித்து விட்டு சுயநினைவு இல்லாமல் இருப்பவர்களிடம் இருக்கும் செல் போன், பர்ஸ் மற்றும் தங்க நகைகளை கொள்ளை அடிப்பதற்கென்றே ஒரு கும்பல் உலா வருகிறதாம்.

Photo: Flickr

ஓவரா குடிக்காதீங்க :

ஓவரா குடிக்காதீங்க :

தவிர்க்க முடியாத சூழலில் அப்படி குடிக்க நேர்ந்தால் எக்காரணத்தை கொண்டும் வாகனங்களை ஓட்ட துணியாதீர்கள். குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களால் அதிக விபத்து நேரும் மாநிலங்களில் ஒன்றாக கோவா இருக்கிறது. சுற்றுலா சென்ற இடத்தில் விபத்தில் மாட்டிக்கொள்ளும் அவஸ்த்தை தேவையா நமக்கு?.

ஓவரா குடிக்காதீங்க :

ஓவரா குடிக்காதீங்க :

இந்த பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல இருந்து விட்டு கொஞ்சம் சோமபானம் உள்ளே போன பிறகு அவருக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் பிரபுதேவா வெளியே வந்து கண்ட இடத்திலெல்லாம் கேட்ட ஆட்டம் போடுவார்.

இப்படியெல்லாம் கோவாவில் செய்து யாரிடமாவது வாயை கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.

வெளிநாட்டு பெண்களிடம் வழியாதீங்க :

வெளிநாட்டு பெண்களிடம் வழியாதீங்க :

கோவா டூர் போவதன் ஆகப்பெரிய நோக்கமே பிகினி உடையணிந்த வெளிநாட்டு பெண்களை 'சைட்' அடிக்க வேண்டும் என்பதுதான். கடற்கரைகளில் சூரியக்குளியல் போடும் அவர்களிடம் அரைகுறை ஆங்கிலத்தில் நட்பு கோரிக்கைகளுடன் செல்வதும், வேறு எதோ ஒன்றை புகைப்படம் எடுப்பது போல அவர்களை புகைப்படம் எடுப்பதும் நாம் நிச்சயம் செய்ய கூடாத செயல்களில் ஒன்றாகும்.

Photo:Andrew Miller

வெளிநாட்டு பெண்களிடம் வழியாதீங்க :

வெளிநாட்டு பெண்களிடம் வழியாதீங்க :

இப்படி செய்வது அநாகரீகமான செயல் என்பது மட்டுமில்லாமல் இந்தியர்களை பற்றி கீழான எண்ணங்களை அவர்களுக்குஏற்படுத்தி விடும்.

இப்படி இல்லாமல் வெகு இயல்பாக, நாகரீகமாக நடந்துகொண்டால் வெளிநாட்டவர்களுடன் நண்பர்களாக அவர்களின் பார்டிகளில் கலந்துகொள்ளவும் செய்யலாம்.

Photo:Ian D. Keating

முறையான ஆடை அணியுங்கள் :

முறையான ஆடை அணியுங்கள் :

அதிகமாக கடற்கரைகளுக்கு சென்று பழக்கம் இல்லாததாலோ என்னவோ சற்றும் பொருத்தம் இல்லாத மிக அபத்தமான உடையணிந்து வருபவர்கள் பலரை நாம் காண முடியும். லுங்கி, உள்ளாடை, ஜீன்ஸ் பேன்ட் போன்ற கடற்கரைக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத உடைகளை அணிவதை தவிருங்கள்.

Photo:Iain Tait

சும்மா நிற்காமல் போய் விளையாடுங்கள் :

சும்மா நிற்காமல் போய் விளையாடுங்கள் :

இந்தியாவில் வேறு எந்த இடத்திலுமே நமக்கு செய்ய கிடைக்காத ஒரு விஷயம் கோவாவில் இருக்கிறது என்றால் அது நீர் விளையாட்டுகள் தான். அலைச்சறுக்கு, பாய்மர படகு பயணம், ஸ்கூபா டைவிங் என பலதரப்பட்ட சாகச நீர் விளையாட்டுகள் கோவாவில் இருக்கின்றன. வெறுமனே கடற்கரையை சுற்றிப்பார்க்காமல் இந்த விளையாட்டுகளிலும் கலந்துகொள்ளுங்கள்.

சில நாட்களாவது இட்லி, தோசை சாப்பிடாதீங்க:

சில நாட்களாவது இட்லி, தோசை சாப்பிடாதீங்க:

படிக்க கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம் ஆனால் அது தான் உண்மை. நம்ம ஊர் ஆட்களுக்கு உலகத்தின் எந்த மூளைக்கு சென்றாலும் நம்ம ஊர் உணவுகள் தான் வேண்டும். சுவையானதாகவே இருந்தாலும் விதவிதமான உணவுகளை முயற்சி செய்து பார்ப்பதில் தயக்கம் இருக்கவே செய்கிறது.

Photo:Joel's Goa Pics

சில நாட்களாவது இட்லி, தோசை சாப்பிடாதீங்க:

சில நாட்களாவது இட்லி, தோசை சாப்பிடாதீங்க:

அடுத்த முறை கோவா சென்றால் வழக்கமான தென் இந்திய உணவுகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு நாவை அடிமையாக்கும் அதி சுவையான கோவாவின் கடல் உணவுகளை உண்டு மகிழுங்கள்.

Photo:Candice and Jarrett

வரலாறு முக்கியம் அமைச்சரே..!! :

வரலாறு முக்கியம் அமைச்சரே..!! :

இந்தியாவில் போர்த்துகீசியர்கள் வசம் இருந்த வெகு சில இடங்களில் கோவா முக்கியமான ஒன்றாகும். கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு மேலாக அவர்களின் ஆதிக்கம் கோவாவில் இருந்ததால் இன்றும் அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் நிறைய இருக்கின்றன.

வரலாறு முக்கியம் அமைச்சரே..!! :

வரலாறு முக்கியம் அமைச்சரே..!! :

சே காதேட்றல், போம் ஜீசஸ் பசிலிக்கா, இமாகுலேட் சர்ச் போன்ற மிக பழமையான போர்த்துகீசிய கட்டிடங்கள் கோவாவில் இருக்கின்றன. வெறும் கடற்கரைகளு சுற்றிப்பார்ப்பதோடு மட்டும் நின்று விடாமல்

வானமே எல்லை :

வானமே எல்லை :

கோவாவை சுற்றிப்பார்க்க நினைப்பவர்கள் தயவு செய்து காரில் சுற்றிப்பார்க்க வேண்டாம். சுற்றுலாப்பயணிகளுக்கு உதவும் வகையில் இரு சக்கர வாகனங்கள் கோவாவில் குறைந்த விலைக்கு வாடகைக்கு கிடைக்கின்றன. கோவாவின் இயற்கை பேரழகை ரசிக்க அதைவிட சிறந்த முறை எதுவுமே இல்லை.

Photo:Jaskirat Singh Bawa

அசுத்தம் செய்யாதீர்கள் :

அசுத்தம் செய்யாதீர்கள் :

கோவா செல்லும் அனைவரும் கண்டிப்பாக பின்பற்றவேண்டிய ஒன்றாகும் இது. கடற்கரைகளுக்கோ அல்லது வேறு எந்த இயற்கை பகுதிகளுக்கோ சென்றால் பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்ப்பது நல்லது. பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்துவது தவிர்க்க முடியாதது என்றாலும் பயன்படுத்திய பின் அவற்றை ஒன்றாக சேகரித்து குப்பைத்தொட்டியில் கொண்டு சென்று போடுவது இயற்கைக்கு நாம் செய்யும் சிறிய கைமாறாக இருக்கும்.

Photo:Ian D. Keating

ஹோட்டல்கள் :

ஹோட்டல்கள் :

கோவா சுற்றுலா சென்றால் அங்கு தங்குவதற்கான ஹோட்டல்களின் விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

Read more about: goa beaches party adventure
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X