Search
  • Follow NativePlanet
Share
» »இந்த ஊர்களுக்கு போயிட்டு இதெல்லாம் செய்யாட்டி எப்படி பாஸ் ?

இந்த ஊர்களுக்கு போயிட்டு இதெல்லாம் செய்யாட்டி எப்படி பாஸ் ?

By Naveen

சில இடங்களுக்கு பயணம் போனால் அந்த ஊர்களில் விசேஷமாக கிடைக்கும் பொருட்களை வாங்காமலோ அல்லது சாப்பிட்டு பார்க்காமலோ வரவே கூடாது. அந்த ஊர்களில் கிடைக்கும் பொருட்களும் உணவுகளும் மற்ற இடங்களிலும் கிடைக்கும் என்றாலும் அதற்கென்றே பெயர்போன இடங்களில் வாங்கும் போது அவற்றின் நேர்த்தியும், சுவையும் அற்புதமாக இருக்கும். அப்படி பிரபலமான சுற்றுலாத்தலங்களில் நாம் நிச்சயம் செய்திட வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஹைதராபாத் :

ஹைதராபாத் :

நவாப்கள் அரசாண்ட சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்திலும் சரி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துவிட்ட இந்த நவீன யுகத்திலும் சரி இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்றாக ஹைதராபாத் திகழ்கிறது. பழமை மற்றும் புதுமையின் அற்புத கலவையாக திகழும் இந்த நகருக்கு சென்றால் நாம் நிச்சயம் செய்திட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளதென்றால் அது சுட சுட ஹைதராபாத் பிரியாணியை சுவைப்பது தான்.

Photo: Flickr

ஹைதராபாத்தி பிரியாணி :

ஹைதராபாத்தி பிரியாணி :

பாஸ்மதி அரிசி, மட்டன் அல்லது சிக்கன், குங்குமப்பூ மற்றும் பல மசாலா பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பிரியாணிக்கு பின்னணியில் சுவையான வரலாறு ஒன்றும் உள்ளது. நவாப்களின் படை வீரர்களுக்கு தினமும் ரொட்டி தயாரிக்க அதிக நேரம் பிடித்ததால் அதற்கு தீர்வாக மாமிசம் மற்றும் அரிசியை ஒன்றாக கலந்து சமைக்க ஆரம்பித்துள்ளனர். அதுவே இப்போது நாம் சுவைத்து மகிழும் உலகப்புகழ் பெற்ற ஹைத்ராபாத்தி பிரியாணியாக உள்ளது.

Photo:Kake

எங்கு சாப்பிடலாம் :

எங்கு சாப்பிடலாம் :

ஹைதராபாத் நகரில் நல்லகுந்தா என்ற இடத்தில் அமைந்திருக்கும் பவராச்சி உணவகம், செகன்றாபாத்தில் உள்ள பேரடைஸ் ரெஸ்டாரன்ட், ஹோட்டல் நயாகரா போன்ற இடங்களில் அச்சுஅசலான ஹைதராபாதி பிரியாணியை நாம் ருசிக்கலாம். எனவே அடுத்தமுறை ஹைதராபாத் சென்றால் இந்த உணவகங்களுக்கும் நிச்சயம் சென்று பிரியாணியை ஒரு பிடி பிடியுங்கள்.

ஹைதராபாத் சுற்றுலாத்தலங்கள் :

ஹைதராபாத் சுற்றுலாத்தலங்கள் :

பிரியாணியை தாண்டியும் ஹைதராபாத்தில் நகரில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உண்டு. ஹைதராபாத்தின் அடையாளமாக திகழும் சார்மினார், ஹுசைன் சாகர் ஏரி, உலகின் மிகப்பெரிய படப்பிடிப்பு வளாகங்களில் ஒன்றான ராமோஜி பிலிம் சிட்டி, கோல்கொண்டா கோட்டை, லும்பினி பார்க் போன்ற இடங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட மிக ஏற்றவையாவும்.

Photo: Flickr

ஹைதராபாத் சுற்றுலாத்தலங்கள் :

ஹைதராபாத் சுற்றுலாத்தலங்கள் :

ஹைதராபாத் நகரை பற்றிய இன்னும் நிறைய தகவல்களையும், அந்த நகரத்தை எப்படி அடைவது ?, அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை 'தமிழ் நேடிவ் ப்ளேனட்' தளத்தில் அறிந்து கொள்ளுங்கள்.

காஞ்சீபுரம் பட்டு புடவைகள் :

காஞ்சீபுரம் பட்டு புடவைகள் :

'பட்டு புடவைகள்' இதை பிடிக்காத இந்திய பெண்களே இருக்க முடியாது. பல வண்ணங்களில் கண்ணை பறிக்கும் ஜொலிஜொலிப்புடன் நெய்யப்படும் புடவைகளுக்காக உலக அளவில் புகழ்பெற்ற இடம் தமிழகத்தில் சென்னையை அடுத்து அமைந்திருக்கும் காஞ்சிபுரம் ஆகும். இந்த நகரம் சென்னையில் இருந்து 75 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

Photo:mary jane watson

காஞ்சீபுரம் பட்டு புடவைகள் :

காஞ்சீபுரம் பட்டு புடவைகள் :

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னன் ராஜ ராஜ சோழனின் காலத்தின் பட்டு நெசவுத்தொழில் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டு அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தரமான பட்டு புடவைகள் வாங்க விரும்புகிறவர்கள் நிச்சயம் காஞ்சிபுரத்திற்கு வர வேண்டும். ஏனென்றால் பிரபல துணி கடைகளில் காஞ்சிபுரம் பட்டு என சொல்லி விற்கப்படும் பட்டு புடவைகள் யாவும் கோவையை அடுத்த சிறுமுகை என்னும் ஊரில் தயாரிக்கப்படுபவை ஆகும்.

Photo:C/N N/G

கோயில் நகரம் :

கோயில் நகரம் :

பட்டுப்புடவைகளை தாண்டி ஒரு விஷயம் இந்த நகரில் பிரபலம் என்றால் அது இங்கிருக்கும் கோயில்கள் தான். காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், காஞ்சி சங்கர மடம் போன்றவை நாடுமுழுவதிலும் இருந்து பக்தர்களை ஈர்க்க தவறுவதில்லை. உங்கள் வீட்டில் ஏதேனும் சுப காரியம் எனில் காஞ்சிபுரம் சென்று இந்த கோயிலில் இடைவனை வழிபட்டுவிட்டு அப்படியே பட்டுப்புடவைகளையும் எடுத்து வாருங்கள்.

Photo:Nithi Anand

டார்ஜிலிங் :

டார்ஜிலிங் :

மேற்கு வங்காள மாவட்டத்தில் அமைந்திருக்கும் மலை வாசஸ்தலமான டார்ஜலிங் சென்றால் நாம் நிச்சயம் செய்திட வேண்டிய ஒரு விஷயம் ஒரு கப் டீ குடிப்பது தான். டீ குடிக்க அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா என்று என்று நினைக்க வேண்டாம். ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு சுற்றுலா சென்று அலுத்து விட்டவர்கள் ஒரு மாற்றத்திற்காக டார்ஜிலிங் வரலாம். இங்கும் நாம் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன.

டார்ஜிலிங் :

டார்ஜிலிங் :

இங்கே உள்ள டைகர் ஹில்ஸ், ஊட்டி மலை ரயிலை போன்று பிரிட்ஷ் காலத்தில் துவங்கப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் டார்ஜலிங் - ஹிமாலயன் ரயிலில் பயணம் செய்யலாம், பத்மஜா நாயுடு உயிரியல் பூங்கா, பூட்டியா முத்த மடாலாயம் போன்ற விதவிதமான சுற்றுலாத்தலங்கள் இங்கே உண்டு. இந்த கோடை விடுமுறையை கொண்டாடவும், சுவையான தேனீரை சுவைபார்க்கவும் அற்புதமான இடம் டார்ஜிலிங் ஆகும் .

டார்ஜிலிங் :

டார்ஜிலிங் :

டார்ஜிலிங்டீ.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X