Search
  • Follow NativePlanet
Share
» »வட இந்தியாவில் நிச்சயம் செய்ய வேண்டிய சில அற்புதமான விஷயங்கள்

வட இந்தியாவில் நிச்சயம் செய்ய வேண்டிய சில அற்புதமான விஷயங்கள்

லிங்கா படத்தில் க்ளைமேக்ஸில் வரும் பலூன் சண்டை காட்சி நன்றாக இருந்ததோ இல்லையோ வித்தியாசமாக இருந்தது 100% உண்மை. அந்த படத்தில் வருவது போன்ற பலூனில் பயணம் செய்ய ஆசையா? அல்லது ரம்யமான ஒரு ஏரியின் நடுவே மதி மயங்கும் மாலை நேரத்தில் உங்கள் அன்பானவருடன் கொஞ்சல் மொழி பேசிய படியே ஒரு டின்னர் சாப்பிட்டால் நன்றாகத்தானே இருக்கும்?. இதையெல்லாம் கேட்கும் போதே செய்ய வேண்டும் போல இருக்கிறதல்லவா?

வாருங்கள் இயற்கை பேரதிசயங்கள் நிரம்பியிருக்கும் வட இந்தியாவில் பயணம் மேற்கொள்கையில் நாம் நிச்சயம் செய்ய வேண்டிய விஷயங்கள் மற்றும் போக வேண்டிய இடங்களை பற்றி அறிந்து கொள்வோம்.

Expedia தளத்தில் ஹோட்டல் புக்கிங் செய்து 50% தள்ளுபடி பெற்றிடுங்கள்

நிலவொளியில் தாஜ் மஹால்:

நிலவொளியில் தாஜ் மஹால்:

தாஜ் மஹால், இன்னும் எத்தனை தடவை தான் இங்கே போவது என்கிறீர்களா? எத்தனை முறை போனாலும் தாஜ்மஹாலை பார்க்கும் போது வரும் பிரம்மிப்பு மாறப்போவதில்லை என்றாலும் பௌர்ணமி நாளில் தாஜ்மஹாலின் வெண் பளிங்கு கற்கள் நிலவொளியில் ஜொலிக்கும் காட்சி இதுவரைக்கும் வாழ்வில் நாம் பார்த்த மிக அற்புதமான காட்சியாக இருக்கும்.

photo:anurag agnihotri

நிலவொளியில் தாஜ் மஹால்:

நிலவொளியில் தாஜ் மஹால்:

எனவே அடுத்த முறை தாஜ்மஹாலை பார்க்க செல்வதாக இருந்தால் பௌர்ணமி நாளில் தாஜ் மஹாலை பார்ப்பதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு செல்லுங்கள். தெளிவான வானம் இருக்கும் மார்ச் முதல் மே வரையான கோடைகாலத்தில் செல்வது இன்னும் சிறந்தது. முழுநிலவு நாளில் அரைமணி நேரம் தாஜ்மஹாலை சுற்றிபார்க்க ரூ. 510 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Photo:Koshy Koshy

நிலவொளியில் தாஜ் மஹால்:

நிலவொளியில் தாஜ் மஹால்:

தாஜ்மஹாலை எப்படி அடைவது என்பதற்கான சாலை வழிகளை பற்றிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஆக்ராவில் இருக்கும் ஹோட்டல்களை பற்றிய தகவல்களை இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Klaquax

நகரும் மாளிகையில் இந்தியாவை வலம் வாருங்கள்:

நகரும் மாளிகையில் இந்தியாவை வலம் வாருங்கள்:

கொஞ்சம் செலவு பிடிக்கும் விஷயம் தான் ஆனால் உங்கள் மனைவியுடனோ கணவருடனோ இந்தியாவை சுற்றிபார்க்க நினைத்தால் மகாராஜா எக்ஸ்பிரஸ், ராயல் ராஜஸ்தான், டெக்கான் ஒடிசி போன்ற ஆடம்பர ரயில்களில் ஏதேனும் ஒன்றில் ராஜா ராணியை போல பயணம் மேற்கொள்ளுங்கள்.

Photo:Simon Pielow

நகரும் மாளிகையில் இந்தியாவை வலம் வாருங்கள்:

நகரும் மாளிகையில் இந்தியாவை வலம் வாருங்கள்:

வட இந்தியாவை சுற்றிப்பார்க்க நினைப்பவர்கள் மகாராஜா எக்ஸ்பிரஸ், ராயல் ராஜஸ்தான் போன்ற ரயில்களை தேர்வு செய்யலாம். ராஜஸ்தானின் கோட்டைகள், தாஜ்மஹால், புராதன டில்லி போன்ற இடங்களுக்கு இந்த ரயிலில் சென்று சுற்றிப்பார்க்கலாம்.

Photo:Simon Pielow

நகரும் மாளிகையில் இந்தியாவை வலம் வாருங்கள்:

நகரும் மாளிகையில் இந்தியாவை வலம் வாருங்கள்:

மகாராஜா எக்ஸ்ப்ரஸில் எட்டு நாட்கள் வட இந்தியாவை வலம் வர ஒருவருக்கு ரூ. 4,23,669 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு மாளிகையில் இருக்கும் அத்தனை ஆடம்பர விஷயங்களும் இந்த ரயில்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Photo:Simon Pielow

"பூக்களே சற்று ஓய்வெடுங்கள்" :

சந்தேகமே இல்லாமல் இந்தியாவில் இருக்கும் மிக மிக அழகான இடங்களில் ஒன்று உத்ரகண்ட் மாநிலத்தில் மேற்கு இமய மலையின் மீது அமைந்திருக்கும் பூக்களின் பள்ளத்தாக்கு தான். இந்த பள்ளத்தாக்கில் வேறெங்கும் நாம் பார்க்க கிடைக்காத அறிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளை நாம் காணலாம். ஆசிய கருங்கரடி, பனிச் சிறுத்தை போன்ற மிகவும் அரிய வகை மிருகங்கள்இந்த பள்ளத்தாக்கில் வாழ்கின்றன.

"பூக்களே சற்று ஓய்வெடுங்கள்" :

இங்கு வெள்ளை மற்றும் மஞ்சள் அனிமோன், டியன்தஸ், காலன்டயுலா, டைசி, இமாலய நீல பாப்பி மற்றும் ஸ்னேக் லில்லி போன்ற 300 வகையான பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

"பூக்களே சற்று ஓய்வெடுங்கள்" :

இந்த பள்ளத்தாக்கை நோக்கிய ட்ரெக்கிங் பயணத்தின் போது இமய மலை கிராம மக்களை சந்திக்கலாம், ஆறுகளை தொங்கும் பாலத்தில் கடக்கலாம், அதிர்ஷ்டம் இருந்தால் முன்பு குறிப்பிட்ட அரிய விலங்குகளை பார்க்கலாம். பிப்ரவரி முதல் ஜூன் வரை இந்த பள்ளத்தாக்கை அடைய சிறந்த காலகட்டமாகும். இதனை எப்படி அடைவது என்பது பற்றிய விரிவான தகவல்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

 பலூனில் பறக்கலாம் வாங்க:

பலூனில் பறக்கலாம் வாங்க:

ஒரு ஊரை எப்படி சுற்றிபார்க்கலாம்?. காரில் செல்லலாம், வண்டியில் செல்லலாம், ஏன் நடந்தும் கூட செல்லலாம். ஆனால் பலூனில் சுற்றிப்பர்ப்பது கேள்விப்படாத ஒன்று தானே. பலூன் என்றால் குழந்தைகள் ஊதி விளையாடும் பலூன் இல்லை. லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிபறந்து வந்து அனுஷ்காவை காப்பாற்றுவாறே அந்த 'ஹாட் ஏர்பலூன்'. அப்படி பலூனில் நின்று கொண்டே ஊர் சுற்ற வேண்டும்என்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் ராஜஸ்தான்.

Photo:Andrew Johnson

 பலூனில் பறக்கலாம் வாங்க:

பலூனில் பறக்கலாம் வாங்க:

ராஜஸ்தானில் செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்த பலூன் பயணத்தை மேற்கொள்ளலாம். ராஜஸ்தானில் இருக்கும் புகழ் பெற்ற கோட்டைகளின் மேலாகவும், அக்டோபர் மாதத்தில் சென்றால் அப்போது நடக்கும் புஸ்கர் மேளா எனப்படும் உலகின் மிகப்பெரிய ஒட்டகச் சந்தையின் மேலாகவும் பறக்கலாம்.

Photo:Andrew Johnson

 ஏரியின் நடுவே டின்னர்:

ஏரியின் நடுவே டின்னர்:

ஒரு ஹோட்டலில் காதலியுடன் கேண்டில் வெளிச்சத்தில் டின்னர் சாப்பிடுவதே அற்புதமாக இருக்கும் என்னும் போது மலைகளுக்கு பின்னே சூரியன் மெதுவாக மறையும் நேரத்தில் காதலியுடன் படகில் மிதந்தபடி பிசோலா ஏரியின் நடுவே டின்னர் சாப்பிடுவது நிச்சயம் வாழ்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அனுபவமாகும்.

Photo:Kalyan Neelamraju

 ஏரியின் நடுவே டின்னர்:

ஏரியின் நடுவே டின்னர்:

இந்த பிசோலா ஏரி ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் நகரத்தில் அமைந்திருக்கிறது. 14ஆம் நூற்றாண்டில் உதய்பூர் ராஜாவால் செயற்கையாக நிர்மாணிக்கப்பட்ட இந்த ஏரியின் நடுவே ஜக் நிவாஸ், ஜக் மந்திர் என்ற இரண்டு தீவுகள் இருக்கின்றன. அதில் ஜக் நிவாஸ் என்ற தீவில் அரண்மனை ஒன்று அமைந்திருக்கிறது.

Photo:Arian Zwegers

 ஏரியின் நடுவே டின்னர்:

ஏரியின் நடுவே டின்னர்:

'லேக் பேலஸ்' என அழைக்கப்படும் இந்த அரண்மனை இப்போது தாங்கும் விடுதியாக செயல்படுகிறது. இந்த அரண்மனையில் தங்கி பிசோலா ஏரியின் பேரழகையும், மலைகளுக்கு பின்னே நடக்கும் அற்புதமான சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை காணலாம்.

Photo:Arnie Papp

 ஏரியின் நடுவே டின்னர்:

ஏரியின் நடுவே டின்னர்:

லேக் பேலஸில் நீங்கள் தங்கினால் மாலை நேரத்தில் 'கங்கௌர்' என்ற படகில் பிசோலா ஏரியில் ரம்யமாக பயணம் ஒன்றை மேற்கொண்ட படியே உங்கள் அன்பானவருடன் டின்னர் சாப்பிடுவது வாழ்கையில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

Photo:Arnie Papp

 ஏரியின் நடுவே டின்னர்:

ஏரியின் நடுவே டின்னர்:

இந்தியாவின் வெனிஸ் என்று அழைக்கப்படும் உதைபுரில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தலங்கள் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. லேக் பேலஸில் தங்க விருப்பம் கொண்டால் எங்கள் தளத்தின் வழியாக உங்கள் அறையை இங்கே முன் பதிவு செய்யுங்கள்.

 மணாலி - லெஹ் சாலைப்பயணம்:

மணாலி - லெஹ் சாலைப்பயணம்:

பயணங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் வட இந்தியாவில் கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒரு பயணம் மணாலியில் இருந்து லெஹ் வரையிலான 490 கி.மீ பயணம் தான். இந்த பயணத்தின் போது நாம் கடந்து வரும் இயற்கை காட்சிகள் விவரிக்க முடியாத அழகுடையவை.

 மணாலி - லெஹ் சாலைப்பயணம்:

மணாலி - லெஹ் சாலைப்பயணம்:

வருடத்தில் மே மாதம் முதல் அக்டோபர் வரையிலான பனி இல்லாத நான்கு மாதங்கள் மட்டுமே மணாலி - லெஹ் சாலை திறந்திருக்கிறது. 5000 அடி உயரத்தில் கரடு முரடான சாலைகளில் நாம் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதால் போதிய எரிபொருள், உணவு, டென்ட் போன்றவற்றை உடன் எடுத்து செல்வது அவசியம்.

 மணாலி - லெஹ் சாலைப்பயணம்:

மணாலி - லெஹ் சாலைப்பயணம்:

பனி படர்ந்த இமய மலையின் அழகை ரசித்தவாறே நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் இந்த பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்கள் மோட்டார் சைக்கிள் டைரியில் இந்த பயணம் தனி இடத்தை பெரும். லெஹ்வை அடைவதற்கு உண்டான மேலதிக தகவல்களை இங்கே படியுங்கள்.

குல்மார்கில் பனிச்சறுக்கு:

குல்மார்கில் பனிச்சறுக்கு:

சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் பனிச்சறுக்கு விளையாட்டில் முயற்சி செய்து பார்க்க ஆர்வம் இருப்பவர்கள் நிச்சயம் கஷ்மீர் மாநிலம் குல்மார்கிற்கு வர வேண்டும். பனிச்சறுக்கில் ஈடுபட இந்தியாவின் சிறந்த ஸ்தலமாக குல்மார்க் திகழ்கிறது. வித்தியாசமான சாகசம் ஒன்றில் ஈடுபட நினைப்பவர்கள் நிச்சயம் இந்த பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட குல்மார்க் வர வேண்டும்.

photo:Vineet Radhakrishnan

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X