உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

பல்லே! பல்லே! பஞ்சாப் போலாமா பஞ்சாப்

Updated: Thursday, May 18, 2017, 14:56 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

அதிசயம்!.... தலைகீழாக விழும் கோபுர நிழல்!.. என்ன நடக்கிறது விருபாட்சரே!

தமிழ்நாட்டுல இருந்து கேரளாவுக்கு போனாலே சாப்பாடு ஒத்துக்காம நாம திண்டாடும் போது 'என் இனமடா நீ'னு சொல்லி இந்தியா முழுக்க பஞ்சாபி தாபக்களை திறந்து ரொட்டியையும் ஆலு மசாலாவையும் வளைச்சு வளைச்சு அடிக்கும் முண்டாசு கட்டிய சிங்குங்க இயற்கையாவே கொஞ்சம் வித்தியாசமானவங்க. இவங்கள மாதிரியே இவங்க ஊரும் ரொம்ப வித்தியாசமான ஊர்.

வட இந்தியாவுல புதுமையான சுற்றுலா போகணும்னு நினைக்கிறவங்க தாராளமா பஞ்சாப் போகலாம். சும்மா அங்க போய் என்ன பண்றதுன்னு நினைகிறீங்களா? வாங்க பஞ்சாப்ல நாம செய்ய வேண்டிய வித்தியாசமான விஷயங்கள் என்னவெல்லாம் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்.

வாகாஹ், இந்தியா - பாகிஸ்தான் எல்லை :

பார்க்கும் போதே நாடி நரம்பெல்லாம் முறுக்கேறும் ஒரு நிகழ்ச்சி தான் பஞ்சாபில் இருக்கும் இந்திய பாகிஸ்தான் எல்லையான வாகாஹ்வில் நடக்கும் கொடியிறக்க நிகழ்ச்சி. 1959ஆம் ஆண்டு முதல் தினசரி நடந்துவரும் இந்த நிகழ்ச்சி இந்தியராய் பிறந்த அனைவரும் கட்டாயம் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய ஒன்றாகும். 

Photo: Sheep"R"Us

வாகாஹ், இந்தியா - பாகிஸ்தான் எல்லை :

சூரியன் மறையும் வேளையில் இரண்டு நாடுகளின் எல்லை காவலர்கள் தங்கள் நாட்டுக்கொடியை ஒரே சீராக கீழிறக்கி, ஒருவருக்கொருவர் கைகுலுக்கி எல்லைக்கதவை அடைகின்றனர். இரு நாடுகளுக்கிடையில் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த சடங்கு நடந்து வருகிறது. 

Photo: Sally Anderson

வாகாஹ், இந்தியா - பாகிஸ்தான் எல்லை :

இதனை காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வாகாஹ் எல்லையில் குவிகின்றனர். நண்பர்களுடன் சென்று உணர்ச்சிப்பெருக்கு மிகுந்த இந்த நிகழ்வை கண்டுகளியுங்கள். பஞ்சாபின் தலைநகரான சண்டிகரில் இருந்து 263 கி.மீ தொலைவில் இந்த வாகாஹ் எல்லை அமைந்திருக்கிறது. 

photo: Sally Anderson

தங்க கோயிலில் வழிபாடு :

சீக்கியர்களின் புனித கோயிலாக கருதப்படும் பொற்கோயில் பஞ்சாபின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்று. 15ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்த கோயிலினுள்ளே தான் சீக்கியர்களின் புனித நூலான 'ஆதி கிரந்தம்' வைக்கப்பட்டுள்ளது. எப்போதும் பக்தி கீதங்கள் ஒலித்தபடியே இருக்கும் இக்கோயிலுக்குள் சர்வ மதத்தினரும் செல்லலாம். 

Photo: sandeepachetan.com travel

தங்க கோயிலில் வழிபாடு :

19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மஹாராஜா ரஞ்சித் சிங் இந்த கோயிலின் மேல்தளப்பகுதியை 400 கிலோ எடையுள்ள தங்கத்தகடுகளால் போர்த்தினார். அதற்கு பிறகே இது தங்கக்கோயில் என்றழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலினுள் செல்லும் முன்பு சில அடிப்படை விதிமுறைகளை கடைபிடிப்பது அவசியம். 

தங்க கோயிலில் வழிபாடு :

ஹர்மந்திர் சாஹிபினுள் செல்லும் அனைவரும் தங்கள் தலையை துணியால் மூடியிருக்க வேண்டும். அதே போன்று காலனி அணிந்திருக்கவோ, எவ்விதமான போதை பொருட்களை உட்கொண்டிருக்கவோ கூடாது. பரவசமூட்டும் தெய்வீக அனுபவத்தை பெறவும், சீக்கியர்களின் மத வழக்கங்களை அறிந்து கொள்ளவும் இந்த பொற்கோயிலுக்கு நிச்சயம் செல்ல வேண்டும். 

தங்க கோயிலில் வழிபாடு :

இந்த பொற்கோயிலுக்கு செல்ல திட்டமிடுகிறீர்கள் என்றால் அங்கு எப்படி செல்வது? தங்குவதற்கு என்னென்ன ஹோட்டல்கள் ? இருக்கின்றன என்ற விவரங்களை எங்கள் தளத்தில் அறிந்து கொள்ளுங்கள்.

ஜாலியன் வாலா பாக்கின் ரத்தம் கசிந்த வரலாற்று பக்கங்களை புரட்டுங்கள் :

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மிக பயங்கரமான சம்பவங்களில் ஒன்று ஜாலியன் வாலா பாக் படுகொலை. 1919 வருடம் ஏப்ரல் 13ஆம் தேதி ஜாலியன் வாளா பாக் பூங்காவில் அமைதி வழியில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட மக்கள் பிரிட்ஷ் படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த கொடூரமான படுகொலையின் மௌன சாட்சியாக இன்றும் இருக்கும் இந்த இடத்திற்கு கட்டாயம் சென்றிடுங்கள். 

Photo: Joe Athialy

ஜாலியன் வாலா பாக்கின் ரத்தம் கசிந்த வரலாற்று பக்கங்களை புரட்டுங்கள் :

இந்த படுகொலையை நினைவு கூறும் பொருட்டு 1961ஆம் வருடம் இந்திய அரசாங்கத்தால் நினைவு சின்னம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்படுகொலையின் போது சுடப்பட்ட குண்டுகள் துளைத்த சுவரை இன்றும் சுற்றுலாப்பயணிகள் காணலாம். 

Photo: Paul Simpson

ஜாலியன் வாலா பாக்கின் ரத்தம் கசிந்த வரலாற்று பக்கங்களை புரட்டுங்கள் :

எப்படி செல்வது ?

தங்க கோயிலுக்கு மிக அருகிலேயே இந்த பூங்கா அமைந்திருப்பதால் பொற்கோயிலுக்கு சென்றுவிட்டு அப்படியே இங்கும் சென்று வாருங்கள். 

Photo: Dinesh Bareja

கிராம ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளுங்கள் :

பஞ்சாப் மாநிலத்தில் கிலா ராய்பூர் என்ற கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் கிராம ஒலிம்பிக்ஸ் என்ற பெயரில் கிராமங்களுக்கே உரித்தான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

கிராம ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளுங்கள் :

பிப்ரவரி மாத முதல் வாரத்தில் நடக்கும் இந்த ஒலிம்பிக் போட்டியில் எருது விரட்டு, யானைகளின் மேல் அமர்ந்து கால்பந்து விளையாடுவது, போலோ விளையாட்டு, தோள்களின் மேல் மூட்டை சுமந்து செல்லுதல் போன்ற பஞ்சாபி கிராமங்களுக்கே உரித்தான வித்தியாசமான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன

கிராம ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளுங்கள் :

இந்த போட்டிகளை காண டிக்கெட் கட்டணம் ஏதும் இல்லை என்பதால் சுற்றுலாப்பயணிகளும் இந்த போட்டிகளை காண குவிகின்றனர்.

சுக்னா ஏரியின் அழகில் மெய் மறந்திடுங்கள் :

சண்டிகர் நகரில் சிவாலிக் மலைத்தொடரின் அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்ச அமைந்திருக்கிறது சுக்னா ஏரி. அதி காலை நேரத்தில் இங்கு சென்றால் வாக்கிங் செல்பவர்களையும், சூரியனின் வர்ணஜாலத்தை புகைப்படம் எடுப்பவர்களையும், ஓவியர்களையும் பார்க்கலாம்.

சுக்னா ஏரியின் அழகில் மெய் மறந்திடுங்கள் :

அது மட்டும் இல்லாது இந்த ஏரியில் கயாக்கிங், ரோவிங் போன்ற படகு போட்டிகளும் நடைபெறுகின்றன. வருடத்தின் குறிப்பிட்ட காலங்களில் சைபீரிய வாத்துகள், நாரைகள் போன்ற பறவைகள் இங்கு புலம்பெயர்ந்து வருகின்றன.

விராசத் - இ - கல்சா :

தங்களின் வரலாற்று பெருமைகளை உலகுக்கு பறைசாற்ற சீக்கியர்களால் 350 கோடி செலவில் உருவாக்கப்பட்ட அற்புதம் தான் விராசத் - இ - கல்சா அருங்காட்சியகம். கிட்டத்தட்ட 13ஆண்டுகள் கட்டப்பட்ட இந்த அருங்காட்சியகம் ரூப்நகர் மாவட்டத்தில் அனந்தபூர் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது.

விராசத் - இ - கல்சா :

சீக்கிய மதம் உருவானதில் இருந்து இன்று வரையிலான 500 ஆண்டு கால வரலாற்றை சொல்லும் ஆவணங்கள் இதனுள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மிக கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கட்டிடம் இரவில் இதற்க்கு முன் உள்ள குளத்தில் அப்படியே பிரதிபலிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

நீங்களும் முண்டாசு கட்டிக்கொள்ளுங்கள் :

ஒரு புதிய ஊருக்கு சென்று அங்குள்ள இடங்களை சுற்றிப்பார்ப்பதை விடவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் அங்குள்ள மக்களுள் ஒருவராக நாமும் மாறுவதே. அப்படி பஞ்சாபுக்கு சென்றால் நீங்களும் முண்டாசு கட்டிக்கொண்டு ஒரு பஞ்சாபியை போன்றே வலம் வாருங்கள்.

பஞ்சாபி உணவுகளை சுவைத்திடுங்கள் :

பஞ்சாபி உணவுகளை ஒருமுறை சுவைத்தவர்கள் பின்னர் ஆயுசுக்கும் அதற்கு அடிமையாகி விடுவார்கள். அதிகமாக வெண்ணை கலந்து தந்தூரி முறையில் சமைக்கப்படும் தந்தூரி சிக்கன், மக்கி ரொட்டி, ஆலூ கோபி போன்ற உணவுகள் நாம் நிச்சயம் சுவைத்திட வேண்டிய உணவுகளாகும்.


மாதவிடாய் உண்டாகும் பெண் கடவுள் எங்கிருக்குன்னு தெரியுமா? காமாக்யா ஆலயத்தைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்

பிரம்மகிரி வனவிலங்கு சரணலாயத்திற்குபெங்களூரிலிருந்து எப்படி போவது? உங்களுக்கான ஒரு உபயோகமான கைடு!!

இந்தியாவின் 1000 ஆண்டுகள் பழமையான கோயில்கள் - 1

கொங்கனுக்கு ரு பைக் டூர்... ஜாலியா போகலாம் வாங்க!

ராஜஸ்தானில் இருக்கும் வித்தியாசமான சுற்றுலாத்தலங்கள்

பரந்து விரிந்த அற்புத கோட்டை சிதிலமடைந்ததன் அதிர்ச்சி பின்னணி இதுதானா!

Read more about: punjab, amritsar, golden temple
English summary

Things you must do when you visit Punjab

If you are visiting Punjab then there is no doubt that you have a number of things to do and places to visit in Punjab.
Please Wait while comments are loading...