Search
  • Follow NativePlanet
Share
» »ஏங்க வெளிநாடுதான் போகனும்னு அடம் பிடிக்கிறீங்க! அத விட சூப்பரான இடங்களெல்லாம் நம்மூர்ல இருக்கு !! இத

ஏங்க வெளிநாடுதான் போகனும்னு அடம் பிடிக்கிறீங்க! அத விட சூப்பரான இடங்களெல்லாம் நம்மூர்ல இருக்கு !! இத

ஏங்க வெளிநாடுதான் போகனும்னு அடம் பிடிக்கிறீங்க! அத விட சூப்பரான இடங்களெல்லாம் நம்மூர்ல இருக்கு !! இதப் படிங்க!!

By Balakarthik Balasubramanian

வார விடுமுறையை கொண்டாட அற்புதமான , இன்னும் அதிகம் அறியப்படாத இடங்கள்வார விடுமுறையை கொண்டாட அற்புதமான , இன்னும் அதிகம் அறியப்படாத இடங்கள்

இந்த கட்டுரை வெளிநாடு தான் அழகு என்பவர்களுக்காகவும் இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற பல இடங்களை பற்றி நீங்கள் தெரியாத தகவலை தருவதற்காகவும் எழுதப்படுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். அப்படி என்ன தான் இவன் சொல்ல போகிறான் என்பதனை தெரிந்து கொள்ளும் ஒரு ஏக்கம்... உங்கள் மனதில் இருப்பது எனக்கு தெரிகிறது. வாங்க அது என்னனு பார்க்கலாம்.

பொதுவாக விடுமுறை என வந்துவிட்டாலே...விட்டாச்சு லீவு என மூட்டை முடிச்சுகளை கட்டிகொண்டு எங்காவது வெளியில் செல்ல வேண்டுமென அனைவரும் ஆசைப்படுவது இயல்பான ஒன்றே. ஒரு வேளை...நம் நெருங்கிய தோழர்கள் அல்லது உறவினர்கள், அயல்நாட்டில் இருப்பாராயின்...நம் விடுமுறையை இன்னும் இனிமையாக அங்கு செல்வதன் மூலம் க(ழி)ளிக்கலாம் என்பது முற்றிலும் உண்மையே. ஆனாலும்...இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை அல்லவா?

<strong>மகாபாரதத்தின் பழமையான நகரங்கள் நிகழ்காலத்தில் எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கணுமா?</strong>மகாபாரதத்தின் பழமையான நகரங்கள் நிகழ்காலத்தில் எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கணுமா?

மேற்கண்ட முயற்சிகளை மேற்கொள்ளும்போது...ஒரு சராசரி மனிதனுக்கு இரண்டு வகையான சங்கடங்கள் உண்டாகிறது. ஆம், ஐரோப்பிய நாடுகளுக்கோ...பிற நாடுகளுக்கோ நாம் செல்லும்போது, நேரமும் பணமும் நம் பயண திட்டத்துக்கு இடையூராக கபடி ஆடுகிறது என்றே கூற வேண்டும்.

இந்த பரந்து விரிந்த நாட்டில் நாம் பார்ப்பதற்கு ஏதுவான இடங்கள் எவ்வளவோ இருக்கிறது. அப்படி இருக்க...நாம் அயல்நாட்டின் மீது மோகம் கொள்வது எந்த விதத்தில் நியாயம்? என்ன இவன் இப்படி பேசுகிறான் என நீங்கள் நினைப்பதை போல் நான் உணர்கிறேன். அதற்கான ஒரு அழகிய பதிவு தான் இந்த கட்டுரை. முதலில் நம் பயணத்தை, பாண்டிச்சேரியிலிருந்து தொடங்கலாமே...முன்னால் பிரெஞ்ச் குடியேற்ற பகுதியான இந்த இடம், இன்று அனைத்து செல்வாக்குகளையும் பெறாத ஒரு இடமாக திகழ்கிறது. இங்கே காணப்படும் கட்டிடக் கலையும், உணவு முறைகளும், கலாச்சார பழக்கவழக்கங்களும் பிரெஞ்ச் குடியரசின் போது இங்கே பழக்கப்பட்ட அழகிய தருணங்களாகும்.

கடலை கடந்த அழகிய இடங்கள் இங்கே அமைந்து நம் கண்களை காட்சிகளால் குளிரூட்டுகிறது. அப்புறம் எதுக்கு இந்த வெளிநாட்டு மோகம் உங்களுக்கு? வேண்டாமே...இந்தியாவில் இருக்கும் அழகிய இடங்களை கண்டு புகழை உச்சி நோக்கி நீங்கள் உரைத்தால்...மற்றவர்களுக்கும் அந்த இடங்கள் சென்று சேர்வது மிகவும் எளிதல்லவா? அயல்நாட்டு இடங்களையே தோற்கடிக்கும் பிரம்மாண்டம், அப்படி என்ன இங்கே இருக்கிறது? சொன்னால் நம்பமாட்டீர்கள் என்பதற்காகத்தான்...எடுத்துக்காட்டுக்களுடன் உங்களை சந்திக்க நான் தயாராகிவிட்டேன்...சரியா? நான் உரைத்து முடித்த மறு நிமிடம் உங்கள் முடிவை நீங்கள் உலகிற்கு சொல்லுங்கள்.

<strong>இந்த இடங்கள்ல மட்டும் திருமணம் செஞ்சீங்க! உங்கள அடிச்சிக்க ஆள் இல்லங்க!</strong>இந்த இடங்கள்ல மட்டும் திருமணம் செஞ்சீங்க! உங்கள அடிச்சிக்க ஆள் இல்லங்க!

அந்நிய நாட்டில் அதிசயிக்கும் இடங்களை தோற்கடிக்கும் பல இடங்கள் இங்கேயும் உண்டு. அது என்ன?
மலானா - ஹிமாச்சல பிரதேசத்தில் காணப்படும் சிறிய கீரீஸ் என்றழைக்கப்படும் இடம்:
அலெக்ஷான்டர் வம்சாவளிகள் வாழ்ந்து வரும் ஒரு இடமாக...உள்ளூர்வாசிகளால் நம்பப்படும் இந்த இடம், இங்குள்ள ஒரு உள்ளூர் நீதிமன்றத்தின் மூலமாக பண்டைய கிரேக்க முறையையும் பிரதிபலித்து காட்சியளிக்கிறது.

எதனால் இதனை சின்ன கீரீஸ் என்று அழைக்கிறோம்?

எதனால் இதனை சின்ன கீரீஸ் என்று அழைக்கிறோம்?

இங்கு காணப்படும் மலானா மக்களின் வீடுகள்... கீழ் வீடு மற்றும் மேல் வீட்டின் அமைப்புகள் கீரீஸ் நாட்டில் உள்ள வீடுகளின் அமைப்பை ஒத்திருக்க...அத்தகைய காரணத்தினாலே இது சின்ன கீரீஸ் என்றழைக்கப்படுகிறது. மேலும் இந்த கிராமம், உலகிலேயே பழமையான ஜனநாயக முறையுடன் செயல்பட்டு வருவதாகவும் கருதப்படுகிறது.

hermesmarana

பாண்டிச்சேரி – தமிழ் நாட்டில் காணப்படும் ஒரு சிறிய பிரெஞ்சு நகரம்:

பாண்டிச்சேரி – தமிழ் நாட்டில் காணப்படும் ஒரு சிறிய பிரெஞ்சு நகரம்:

இது பிரெஞ்ச் காலனிகளின் பெருமையை பிரதிபலிக்கும் இடங்களுள் ஒன்றாகும். இங்குள்ள கட்டிடக்கலைகள்... போர்த்துகீசியர்கள், டச்சு மற்றும் ப்ரன்ஞ்ச் காலனித்துவங்களையும் கொண்டு பெருமையுடன் விளங்கும் ஒரு இடம் தான் இந்த பாண்டிச்சேரி.
இங்கு காணப்படும் ஒரு சுவாரஸ்யமான விசயம் என்னவென்றால்... தமிழ் வீடுகளின் குறைபாடற்ற மாற்றங்கள் இந்த அழகிய பிரஞ்ச் வில்லாவிற்கு மேலும் வழு சேர்த்து நம்மை வியப்படைய செய்கிறது. அவற்றை காணும் நம் கண்கள் வினோதமான பார்வையுடனும் அழகான கட்டிடக்கலையை கண்டு நம் கருவிழிகள் பிரமிப்பும் கொள்கிறது என்றே கூற வேண்டும்.

Roshan Sam

இந்தியாவில் எங்கெல்லாம் மிகச்சுவையான அசைவ உணவுகள் கிடைக்கும் தெரியுமா?

ஆலப்புழா – கேரளாவில் காணப்படும் கிழக்கு வெனிஸ் என்றழைக்கப்படும் ஒரு இடம்:

ஆலப்புழா – கேரளாவில் காணப்படும் கிழக்கு வெனிஸ் என்றழைக்கப்படும் ஒரு இடம்:

இந்த அழகிய இடத்தை நாம் காண பஞ்ச பூதங்களுள் ஒன்றான நீர் உதவ...படகு சவாரியின் மூலம் நாம் இந்த அழகிய காட்சியை காணலாம். இந்த இடம் வந்து செல்வோருக்கு விருந்து படைத்து கொண்டிருக்க மனதினை இதமானதொரு உணர்வினை கொண்டு வருடுகிறது. மேலும் ஏன் இதனை நாம் சிறிய வெனிஸ் என கூறுகிறோம் என யோசித்தால்...அதற்கான பதிலை வெனிஸ் நகரத்திற்கு நாம் சென்றால் தெரிந்துகொள்ளலாம் என்கின்றனர் இங்குள்ள உள்ளூர் வாசிகள்.

அட...ஆமாம்ங்க...இத்தாலியில் உள்ள வெனிஸின் ஒரு அழகிய இடத்தை..இந்த ஆலப்புழா ஒத்திருக்கிறதாம். இப்பேர்ப்பட்ட அழகிய இடத்தை காண இந்தியாவில் உள்ள கேரளாவுக்கு செல்லாமல் இத்தாலி செல்ல நினைப்பது நியாயமா என்ன? வெனிஸ் பகுதியில் காணப்படும் கால்வாய் அமைப்பின் அழகை ஒத்து காணப்படும் ஒரு இடம் நம் சொந்த ஊரிலே இருக்கிறது என கூறும்பொழுதே இதழ்களில் தேன் வடிந்து மனம் இன்பத்தில் திளைக்கிறது. இங்கே காணப்படும் படகு வீடுகளின் உள்ளே செல்லும் நாம்...அந்த தனிமையில் பெய்யும் அழகு மழையில் நனைந்து மனதை அங்கேயே தொலைத்து உடலை மட்டும் வெளியில் கொண்டு வருகிறோம் என்று தான் கூற வேண்டும். ‘விண்ணை தாண்டி வருவாயா...' போன்ற காதல் திரைப்படங்களின் அழகு மேலும் மெருகேற முக்கியமான ஒரு காரணம், இந்த ஆலப்புழா எனவும் கேரளாவில் காணப்படும் இந்த அழகிய இடத்தின் பெருமையை நாம் ஆர்ப்பரிக்க கூறலாம்.

Silver blue

காசோல் – ஹிமாச்சல பிரதேசத்தில் காணப்படும் குட்டி இஸ்ரேல்:

காசோல் – ஹிமாச்சல பிரதேசத்தில் காணப்படும் குட்டி இஸ்ரேல்:

இந்த இடம் இஸ்ரேல் மக்களின் பெரும்பான்மையினரை கொண்ட ஒரு இடமாக விளங்குகிறது. இங்கே காணப்படும் அழகும் கலாச்சாரமும் இஸ்ரேல் நாட்டு கலாச்சாரத்தை ஒத்திருக்கும் காரணத்தினாலே இந்த இடம் குட்டி இஸ்ரேல் என பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

மேலும் இங்குள்ள சாலை குறியீடுகள்...எபிரேய மொழிகளை கொண்டுள்ளது. அத்துடன் ஹம்மஸின் உள்ளூர் உணவும் இங்கே செல்லும் இடமெல்லாம் நமக்கு கிடைத்து இஸ்ரேலிற்கே சென்றதோர் உணர்வினை இமாச்சல பிரதேசத்தின் மூலம் நமக்கு தருகிறது. இந்த இடத்திற்கு செல்லும் பலருக்கும் இஸ்ரேலை நினைவூட்டுகிறது என்றே கூறுவர் என்பதே உண்மை. ஆம், என்ன தான் நாம் இஸ்ரேல் செல்லவில்லையென்றாலும்...சமூக வலைத்தளத்தின் மூலமாக கூட பார்க்க நமக்கு வாய்ப்பிருக்கிறது அல்லவா...அப்பேற்ப்பட்ட இஸ்ரேலை ஒத்த அழகிய இடத்தை தேடி நாம் இந்தியாவிலேயே மனமகிழ காண்பது ஒன்றும் தவறில்லையே...என்ன நான் சொல்வது சரி தானே?

Raghavan Prabhu

மும்பை – 80களின் மியாமி:

மும்பை – 80களின் மியாமி:

வாழ்க்கையின் இயந்திரத்தன்மைக்கு ஏற்ற ஒரு இடமாக தென்படும் இந்த மும்பை பொருளாதாரத்திலும் நல்லதொரு வளர்ச்சியை கொண்டு பெருமையுடன் விளங்குகிறது. பாதாள மற்றும் நீண்ட கடற்கரைகளை கொண்ட ஒரு அழகிய இடமான இந்த மும்பை...30 வருடங்களுக்கு முன்பிருந்த மியாமியின் அழகை ஒத்த ஒரு இடமாக இன்றும் பெருமை நீங்கா தன்மையுடன் விளங்குகிறது. வானவளாவிய பிரசித்திபெற்ற காரணிகளுடன் விளங்கும் இந்த இடம்... அமெரிக்க மாநிலத்தின் அழகையும் ஒத்திருக்கிறது.

Vidur Malhotra

உங்களுக்குத் தெரியுமா மலைக்கோட்டையின் 1080 வருட ரகசியம் என்னவென்று?

தார் பாலைவனம் – இந்தியாவின் சஹாரா பாலைவனம்:

தார் பாலைவனம் – இந்தியாவின் சஹாரா பாலைவனம்:

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெரிய பாலைவனத்தை கண்டதுண்டா? ஓஹோ இல்லையா...அப்படி என்றால் உலகிலேயே பெரிய பாலைவனமான சஹாராவிற்கு தான் நீங்கள் செல்லவேண்டுமென அர்த்தம் கிடையாது. அந்த பாலைவனத்துக்கு ஈடு இணையாக ராஜஸ்தானில் காணப்படும் தார் பாலைவனத்துக்கு செல்வது கூட அருமையானதொரு அழகிய யோசனையே. இங்கே சஹாரா பாலைவனத்தில் நாம் காண நினைக்கும் அனைத்தையும் கண்டு இந்தியாவிலேயே இன்புற மகிழ்ந்து மனதினை காட்சிகளால் குளிரூட்டலாம். ஆம், தேள்கள், மண்வெளி பாம்புகள், முடிவில்லா மணல் திட்டுகள் மற்றும் வானத்தில் நட்சத்திரங்கள் நிரப்பப்பட்ட அழகிய இரவு காட்சி என காண்போரை சஹாராவிற்கே அழைத்து செல்கிறது இந்த தார் பாலைவனம்.

binnyva

மேற்குத்தொடர்ச்சி மலைகள் – அமேசான் காட்டின் அழகை ஒத்த ஒரு இடம்:மேற்குத்தொடர்ச்சி மலைகள் – அமேசான் காட்டின் அழகை ஒத்த ஒரு இடம்:

மேற்குத்தொடர்ச்சி மலைகள் – அமேசான் காட்டின் அழகை ஒத்த ஒரு இடம்:மேற்குத்தொடர்ச்சி மலைகள் – அமேசான் காட்டின் அழகை ஒத்த ஒரு இடம்:

குஜராத்திலும் மகாராஷ்ட்ரா எல்லைகளிலும் தொடங்கும் மகத்தான பசுமையான காடு குமரியில் முடிவடைகிறது. இந்த வனம், கோவா, கர்நாடகா, கேரளா, மற்றும் தமிழ்நாடு என இந்த நான்கு மாநிலங்களின் வழியாகவும் சென்று 1600 கிலோமீட்டர் பரப்பளவை அழகால் ஆக்கிரமித்து பெருமையுடனும் கண்கொள்ளா காட்சிகளை கண்களுக்கு தரும் இனிமையான ஒரு உணர்வினையும் தந்து மனதிற்கு இன்பம் படைக்கிறது. இந்த வனம், அயல் நாட்டில் காணப்படும் அமேசான் காடுகளின் அழகை ஒத்த...இந்தியாவிலேயே இனிமை பொங்க மனதினை வருடி காட்சிகளை கண்களுக்கு கர்வமின்றி சமர்ப்பிக்கிறது என்று கூறும்பொழுது மனதில் ஒரு இன்ப வெள்ளம் பெருக்கெடுத்து, பெருமை நீங்கா தன்மையுடன் ஓடுகிறது.

"சஹ்யாத்ரி" என்றழைக்கப்படும் இந்த பகுதி...யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாகவும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். மேலும் உலகில் உயிரியல் பன்முகத்தன்மையின் முக்கியமான பகுதிகளை கொண்ட ஒரு இடமாகவும் இது விளங்குகிறது.

Thangaraj Kumaravel

ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்களைப் பற்றி தெரியுமா?

ஷில்லாங் – கிழக்கில் காணப்படும் ஸ்காட்லான்ட்:

ஷில்லாங் – கிழக்கில் காணப்படும் ஸ்காட்லான்ட்:

பரந்து விரிந்த... அலைகளை போல புல்வெளிகளையும், நதிகளையும், பசுமையான புற்களையும் கொண்டு ஸ்காட்லான்டின் அழகை ஒத்த மிளிரும் ஒரு அற்புதமான இடம் தான் இந்த ஷில்லாங்க். நீங்கள் ஒரு இயற்கை ஆர்வலரா? அப்படி என்றால்...இந்த ஷில்லாங்கை காண ஒரு போதும் மறவாதீர்கள். இப்படிப்பட்ட அழகிய இடம் இந்தியாவிலிருக்க...நாம் ஏன் ஸ்காட்லான்டிற்கு செல்ல வேண்டுமென்னும் கேள்வி..இந்த ஷில்லாங்கிற்கு வந்து திரும்பும் சுற்றுலா பயணிகளின் மனதில் எழத்தான் செய்கிறது. அத்துடன் பசுமை நிறைந்த காட்சிகளுடன் இன்னும் பல்வேறு அதிசயங்கள் நிறைந்த இடங்களும் நம்மை வரவேற்று இங்கே அமர வைக்கிறது என ஆனந்தம் பொங்க கூறலாம்.

Sindhuja0505

Read more about: travel places
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X