Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் இருக்கும் மிகவும் சுத்தமான சுற்றுலாத்தலங்கள்

இந்தியாவில் இருக்கும் மிகவும் சுத்தமான சுற்றுலாத்தலங்கள்

By Super Admin

கோயம்புத்தூர் - எப்போதும் ஸ்பெஷல்தான் ஏன் தெரியுமா?கோயம்புத்தூர் - எப்போதும் ஸ்பெஷல்தான் ஏன் தெரியுமா?

நம் மக்களுக்கு டூர் போவது என்றாலே ஏதோ வனவாசம் போவது மாதிரி பீரோவில் இருக்கும் பாதி துணிகளை பையில் திணித்துக்கொண்டு, விடிய விடிய புளி சாதம் கிண்டி பார்சல் செய்துவிட்டு ஊட்டிக்கோ கொடைக்கானலுக்கோ சென்று தரையில் கால் படாமல் எல்லா இடங்களையும் ஒரு மேற்ப்பார்வை பார்ப்பதோடு முடிந்து விடுகிறது. மலர்க்கண்காட்சி போன்ற இடங்களில் எல்லாம் கூட்டம் கும்மியடிக்கும் என்று தெரிந்தும் கால் கடுக்க ஒரு நாள் முழுக்க வரிசையில் நிற்பான் தமிழன்.

இது எல்லாவற்றையும் தாண்டி தான் கால் வைக்கின்ற எல்லா இடங்களிலும் குப்பைகளை போட்டு செல்வது நமக்கு மிகவும் பழகிப்போன பிடித்தமான விஷயங்களில் ஒன்று. இந்த மாதிரியெல்லாம் இல்லாமல் நிம்மதியாக சென்று புத்துணர்ச்சி பெற ஆசையா உங்களுக்கு. வாருங்கள் இந்தியாவின் மிக சுத்தமான சுற்றுலாத்தலங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

இந்த இடங்கள்ல மட்டும் திருமணம் செஞ்சீங்க! உங்கள அடிச்சிக்க ஆள் இல்லங்க!இந்த இடங்கள்ல மட்டும் திருமணம் செஞ்சீங்க! உங்கள அடிச்சிக்க ஆள் இல்லங்க!

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

காணும் பொங்கலன்று மெரீனா கடற்கரைக்கு சென்ற ஒருவர் இந்த ராதா நகர் கடற்கரைக்கு ஒருவேளை வர நேர்ந்தால் நிச்சயம் இது இந்தியாவில் இருக்கும் இடம் என அவர் நம்ப மாட்டார். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம், முகம் சுளிக்க வைக்கும் அசுத்தம் என நாம் இங்கு பார்த்து பழகிய கடற்கரைகளை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது இந்த ராதா நகர் கடற்கரை.

Photo: Flickr

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

எங்கே அமைந்திருக்கிறது ?

அந்தமான் தீவுக்கூட்டங்களில் ஒன்றான ஹவேலோக் தீவில் தான் இந்த ராதா நகர் கடற்கரை. அந்தமான் & நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில் இருந்து 57 கி.மீ தொலைவில் இந்த ஹவேலோக் தீவு அமைந்திருக்கிறது. படகு மூலம் மட்டுமே இந்த தீவினை அடையமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo: Flickr

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

சிறப்பம்சம் :

இந்த ஹவேலோக் தீவில் ராதா நகர் கடற்கரை, எலிபெண்ட் பீச், விஜயா நகர் கடற்கரை போன்ற இடங்கள் சுற்றுலாத்தலங்கலாக அறியப்படுகின்றன. இவற்ற்றுள் ராதா நகர் கடற்கரையானது 'டைம்ஸ்' இதழால் ஆசியாவின் மிக சிறந்த கடற்கரையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த கடற்கரையில் காணக்கிடைக்கும் அற்புதமான இயற்கை காட்சிகள் நாம் எங்கோ சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வை தரும்.

Photo:Sankara Subramanian

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

சாகசங்கள் :

சற்றும் மாசுபடாத வெள்ளை மணல் கடற்கரை, வானமே பூமிக்கு வந்துவிட்டது போல தோற்றமளிக்கும் நீல நிறக்கடல், நச்சு கலக்காத குளுமையான காற்று இவையெல்லாம் நம் மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வூட்டும். இவை தவிர நீர் சார்ந்த சாகச விளையாட்டுகளிலும் இந்த கடற்கரையில் ஈடுபடலாம். அவற்றை பற்றி அடுத்த பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

Photo:Arun Katiyar

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

சாகச விளையாட்டுகள் :

இந்த ராதா நகர் கடற்கரையில் 'ஸ்நார்கிலிங்க்', ஸ்கூபா டைவிங், படகு மூலம் இன்னமும் மனிதர்கள் வசிக்காத தீவுகளுக்கு போவது போன்ற சுவாரஸ்யமான சாகசங்களில் ஈடுபடலாம்.

Photo: Flickr

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

உங்கள் ஹனீமூனுக்கு எங்கே செல்வது என்ற குழப்பத்தில் இருந்தால் நிச்சயம் இந்த தீவினை தேர்வு செய்யலாம். இங்கே வந்து குறைந்தது மூன்று நாட்களேனும் தங்கிடுங்கள். ஹெவேலோக் தீவு பற்றிய மேலதிக தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo: Flickr

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

எழில் கொஞ்சும் ராதா நகர் கடற்கரையின் சில அழகிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ.

Photo: Flickr

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

கடற்கரையில் ஆனந்தமாக விளையாடும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள்.

Photo: Flickr

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

இந்த கடற்கரையில் வேறெங்கும் இல்லாத அம்சமாக யானையின் மீந்து அமரிந்து சவாரி செய்யலாம்.

Photo: Flickr

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

இந்த பகுதியில் மிகவும் வளமான பவளப்பாறைகள் இருக்கின்றன. ஸ்க்குபா டைவிங் செய்வதன் மூலம் இவற்றை மிகவும் அருகில் சென்று ரசிக்கலாம்.

Photo: Flickr

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

ராதா நகர் கடற்கரை - அந்தமான் தீவு :

சற்றும் மாசுபடாத வெண்மணல் கடற்கரை.

Photo: Flickr

 சுவாமி அக்ஷர்தாம் கோயில் - டெல்லி :

சுவாமி அக்ஷர்தாம் கோயில் - டெல்லி :

புது தில்லியில் 2005ஆம் ஆண்டு கட்டப்பட்ட சுவாமி அக்ஷர்தாம் கோயில் இன்று டெல்லியில் சுற்றுலா அடையாளங்களில் ஒன்றாக மாறி விட்டது. சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி டெல்லிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் 70% பேர் இந்த கோயிலுக்கும் தவறாமல் வருகைதருகின்றனர்.

Photo: Flickr

 சுவாமி அக்ஷர்தாம் கோயில் - டெல்லி :

சுவாமி அக்ஷர்தாம் கோயில் - டெல்லி :

கிட்டத்தட்ட 7000 கலைஞர்கள் இக்கோயிலில் இருக்கும் 234 அலங்கார தூண்களையும், 20,000க்கும் மேற்ப்பட்ட ஹிந்து கடவுள்கள் மற்றும் ரிஷிகளின் சிலைகளை வடித்துள்ளனர். இக்கோயில் முழுக்கவே ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட பளிங்குக்கல்லினால் ஆனதாகும்.

Photo: Flickr

 சுவாமி அக்ஷர்தாம் கோயில் - டெல்லி :

சுவாமி அக்ஷர்தாம் கோயில் - டெல்லி :

இக்கோயிலின் மூலவராக ஐம்பொன்னினால் செய்யப்பட்ட 11 அடி உயர சுவாமி நாராயன் என்பவரின் சிலை உள்ளது. மூலவரின் சிலைக்கு அருகிலேயே சீதா ராமர், ராதை, கிருஷ்ணர், சிவன், பார்வதி போன்ற ஹிந்து கடவுள்களின் சிலையும் உள்ளன.

Photo: Flickr

 சுவாமி அக்ஷர்தாம் கோயில் - டெல்லி :

சுவாமி அக்ஷர்தாம் கோயில் - டெல்லி :

இந்த கோயில் வளாகத்தில் கடவுள் விகாரங்களை தாண்டி இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் பல விஷயங்கள் இருக்கின்றன. சுவாமி நாராயணின் சிறு வயது வாழ்க்கையை சொல்லும் சஹாஜானந் பிரதர்ஷன் என்ற மண்டபம், சுவாமி நாராயன் இந்தியா முழுக்க மேற்கொண்ட யாத்திரையை விளக்கும் திரைப்படம் திரையிடப்படும் நில்காந்த் தர்ஷன் என்ற அரங்கம், சன்ஷ்க்ரிதி விஹார் எனப்படும் 15 நிமிட படகு பயணம் போன்ற சுற்றுலாப்பயணிகளை கவரும் ஏராளமான அம்சங்கள் இங்கே இருக்கின்றன.

Photo: Flickr

சுவாமி அக்ஷர்தாம் கோயில் - டெல்லி :

சுவாமி அக்ஷர்தாம் கோயில் - டெல்லி :

இந்த கோயில் வளாகத்தில் தான் இந்தியாவின் மிகப்பெரிய படிக்கிணறு உள்ளது. யக்னபுருஷ் குண்ட் எனப்படும் இங்கு மாலை நேரத்தில் இங்குள்ள நீரூற்றில் ஒலி-ஒளி கண்காட்சி நடத்தப்படுகிறது. அதே போல இங்கே தாமரை மலரின் இதழ்கள் போன்ற அழகிய தோட்டம் ஒன்றும் உள்ளது.

Photo: Flickr

சுவாமி அக்ஷர்தாம் கோயில் - டெல்லி :

சுவாமி அக்ஷர்தாம் கோயில் - டெல்லி :

இக்கோயிலில் உள்ள பேரழகு நிரம்பிய தோட்டம்.

Photo: Flickr

சுவாமி அக்ஷர்தாம் கோயில் - டெல்லி :

சுவாமி அக்ஷர்தாம் கோயில் - டெல்லி :

இக்கோயிலின் சுவர்களில் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகள் பார்க்கும் எவரையும் வியப்படையச்செய்யும்.

Photo: Flickr

சுவாமி அக்ஷர்தாம் கோயில் - டெல்லி :

சுவாமி அக்ஷர்தாம் கோயில் - டெல்லி :

இக்கோயிலின் மத்திய மண்டபத்தின் மேற்கூரை.

Photo: Flickr

சுவாமி அக்ஷர்தாம் கோயில் - டெல்லி :

சுவாமி அக்ஷர்தாம் கோயில் - டெல்லி :

பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தாலும் மிக அற்புதமாக பராமரிக்கப்படுகிறது. மிகப்புதுமையான ஆன்மீக அனுபவத்தை பெறுவதோடு மட்டுமில்லாமல், குடும்பத்துடன் சுற்றுலா சென்று வரவும் மிகவும் சிறப்பான இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

Photo: Flickr

பான்காங் ஏரி :

பான்காங் ஏரி :

பிரமிக்க வைக்கும் இயற்கை காட்சிகளை பார்க்க ஆசையா உங்களுக்கு ?. அப்படியென்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் இந்திய-திபெத்திய எல்லையில் அமைந்திருக்கும் இயற்கையின் பேரற்புதமான படைப்புகளில் ஒன்றான பான்காங் ஏரிக்கு தான். கடல் மட்டத்தில் இருந்து 14,000 அடி உயரத்தில் இமய மலையின் மேல் அமைந்திருக்கும் இந்த ஏரியின் ஒரு பகுதி இந்தியாவிலும் மற்றொரு பகுதி திபெத்திலும் இருக்கிறது.

பான்காங் ஏரி :

பான்காங் ஏரி :

இங்குள்ள கடுமையான தட்பவெட்ப நிலையினால் இந்த ஏரியில் எந்த மீன்களும் இல்லை. ஆனால் கோடை காலத்தில் இங்கு சென்றால் அற்புதமான இயற்கையின் வர்ணஜாலத்தை காணலாம். அமைதியும், குளுமையும் நிலவும் இங்கு வாழ்கையில் ஒருமுறையேனும் சென்று வாருங்கள்.

Photo: Flickr

பான்காங் ஏரி :

பான்காங் ஏரி :

இந்த ஏரியை லேஹ்வில் இருந்து 5 கி.மீ சாலைப்பயணத்தில் அடையலாம். குறிப்பாக புல்லெட் வண்டியில் நீண்ட தூர பயணம் போக விரும்புகிறவர்கள் இந்த பான்காங் ஏரியை நோக்கிய பயணத்தின் போது விவரிக்க முடியாத காட்சிகளை காணலாம்.

Photo: Flickr

Read more about: andaman havelock temples leh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X