Search
  • Follow NativePlanet
Share
» »தமிழ் நாட்டில் இருந்துவிட்டு இந்த கோயில்களுக்கு செல்லாமல் இருந்தால் எப்படி ?

தமிழ் நாட்டில் இருந்துவிட்டு இந்த கோயில்களுக்கு செல்லாமல் இருந்தால் எப்படி ?

கோயில்கள் தான் இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் உயிர்நாடியாக திகழ்கிறது எனலாம். இந்தியர்கள் அறிவியல் வளர்ச்சியிலும், வாழ்க்கை முறைகளிலும் உலகின் பிற எல்லா நாடுகளை விடவும் எவ்வளவு முன்னேறியிருந்தனர் என்று சொல்லும் பொக்கிஷங்கள் இந்த கோயில்கள் தான்.

இந்த கோயில்கள் கட்டப்பட்ட நுட்பமும், செறிந்திருக்கும் அழகும், காலங்களை வென்ற பழமையும் இங்கு செல்லும் அனைவருக்கும் பரவசமான ஓர் உணர்வை தரும். வாருங்கள் தமிழ் நாட்டில் நாம் கண்டிப்பாக வாழ்வில் ஒருமுறையேனும் பார்க்கவேண்டிய மூன்று கோயில்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ஹோட்டல் மற்றும் விமான கட்டணங்களில் 70% தள்ளுபடி பெறுவதற்கான கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

தமிழராய் பிறந்துவிட்டு இன்னமும் நீங்கள் முக்கூடல் நகராம் மதுரையில் இருக்கும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்ததில்லை என்றால் வாழ்வில் உன்னதமான ஓரனுபவத்தை பெரும் வாய்ப்பை தவற விடுகிறீர்கள்என்று சொல்லலாம்.

மன்னர் குலத்தில் பண்டையவராம் பாண்டியரின் தலைநகராய் விளங்கிய மதுரையில் இருக்கும் இக்கோயில் தமிழன் எவ்வளவு உயர்ந்தவன் என்று உலகுக்கு பறைசாற்றும் அற்புதம்.

Photo:Feng Zhong

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

வைகை நதிக்கரையில் நான்கு பெரும் கோபுர வாயில்களுடன் பிரமாண்டமாக வீற்றிருக்கும் இக்கோயில் 2500 ஆண்டுகள் பழமையான மதுரை நகரின் உயிர்நாடியாக திகழ்கிறது.

இக்கோயிலினுள் இருக்கும் குளத்தில் தங்கத்தாமரையும், மூலவரான மீனாட்சி அம்மன் மற்றும் உடையார் சுந்தரேஸ்வரர் சந்நிதி கோபுரங்கள் தங்கத்தால் வேயப்பட்டிருக்கின்றன.

Photo:Prateek Garg

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

13ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மன்னர்களின் படை இக்கோயிலை சிதைத்திருக்கிறது. பின்னர் கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் கழித்து 1560 ஆண்டில் நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் மதுரை வந்த பிறகு புனரமைக்கப்பட்டு இப்போது நாம் காணும் தோற்றத்தை இக்கோயில் பெற்றிருக்கிறது.

Photo:feministjulie

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

பெரும் பொருட்செலவு பிடிக்கும் இக்கோயில் திருப்பணிகளை தொடர பாண்டிய மன்னன் மக்களுக்கு வரி விதித்திருக்கிறான். செல்வம் படைத்தவர்கள் தங்கத்தையும், வைரத்தையும் தானமாக இக்கோயில் பணிகளுக்கு வழங்கியிருகின்றனர்.

இவற்றை கொடுக்க இயலாத எளியவர்கள் தங்களால் முடிந்தது ஒரு படி அரிசியேனும் கொடுத்து உதவியிருகின்றனர். இவ்வகையில் எல்லா படிநிலைகளில் இருக்கும் மக்களும் இக்கோயிலுக்காக உதவி புரிந்திருகின்றனர்என்ற விவரங்களை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் நாம் அறியலாம்.

Photo:Vinoth Chandar

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

கோயிலினுள்ளும், கோபுரங்களிளுமாக மொத்தம் 33,000 சிற்பங்கள் மீனாட்சி அம்மன் கோயிலில் இருக்கின்றன. இங்குள்ள கற்சிற்பங்கள் எல்லாம் அவ்வளவு உயிர்ப்புடன் வடிக்கப்பட்டிருகின்றன.

குறிப்பாக பச்சை பட்டுடுத்திய மூலவரான மீனாட்சி அம்மனின் கற்சிலையை கட்டிலும் அழகான ஒன்றை இவ்வுலகில் நாம் காணவே முடியாது.

Photo:Vinoth Chandar

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

இத்துனை சிறப்பு மிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை பற்றிய மேலதிக விவரங்களையும், மதுரையில் இருக்கும் ஹோட்டல்களில் சலுகை விலையில் தங்கும் அறைகளை முன்பதிவு செய்திடவும் தமிழ்பயண வழிகாட்டியை கிளிக்கிடுங்கள்.

Photo:Prateek Garg

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

இக்கோயில் தான் உலகத்திலேயே கற்கூரை வேயப்பட்ட மிகப்பெரிய கோயில் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

Photo:Simply CVR

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

மதுரைக்கு சென்றுவிட்டு நாம் மறக்காமல் வாங்கிவர வேண்டிய ஒரு பொருளென்றால் அது மல்லிகை பூ தான். மதுரையில் கிடைக்கும் மல்லிகை பூ அளவில் பெரியதாகவும், அதிக மணம் உடையதாகவும் இருக்கின்றன.

Photo: Flickr

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தம்.

Photo: Flickr

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் :

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் :

தென்னாடுடைய சிவனுக்கு சிம்மாசனமிட சோழன் கட்டியெலுப்பிய பேரதிசயம் தஞ்சை மாநகரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலாகும். முதலாம் ராஜ ராஜ சோழனால் கி.பி 1010ஆம் கட்டப்பட்டஇக்கோயிலானது ஆயிரம் வருடங்களை கடந்தும் அதே கம்பீரத்துடன் வீற்றிருக்கிறது

Photo:Nara J

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் :

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் :

இதன் விமான கோபுரம் கிட்டத்தட்ட 216 அடி உயரமானதாகும். முழுக்க முழுக்க பாறைகளால் ஆன இக்கோயிலை கட்ட 60 கிமீ தொலைவில் உள்ள திருச்சியில் இருந்து டன் கணக்கான எடையுள்ள கற்களை எந்தவித நவீன சாதனங்களின் உதவியுமின்றி கொண்டுவந்திருக்கின்றனர்.

Photo:Vinayaraj

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் :

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் :

விமான கோபுரத்திற்கு தேவையான பாறைகளை அவ்வளவு உயரத்திற்கு கொண்டு செல்ல 6.44 கி.மீ தொலைவில் இருந்து சரியான கோணத்தில் சாரம் அமைத்து யானைகளின் உதவியுடன் பாறைகளை கொண்டு சென்றிருக்கின்றனர்.

இந்த கோயிலின் பிரபலமான அடையாளங்களில் ஒன்றான பிரமாண்ட நந்தி சிலை ஒரே கல்லில் வடிக்கப்பட்டதாகும்.

Photo:Hari Shankar05

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் :

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் :

இதன் மூலவராக சிவ பெருமான் பிரகதீஸ்வரராக வீற்றிருக்கிறார். இந்த லிங்கமானது 3.7 மீட்டர் உயரமானதாகும். சோழப்பேரரசின் அதி முக்கியமான நிகழ்வுகளான மன்னருக்கு முடி சூட்டுதல், திருமணங்கள், இளவரசு பட்டம் சூட்டுதல் போன்ற நிகழ்வுகள் நடக்கும் இடமாகவும் இந்த கோயில் இருந்திருக்கிறது.

Photo:Vsvs2233

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் :

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் :

தமிழர் கட்டிடக்கலைக்கு மேன்மையானதொரு எடுத்தக்காட்டாக திகழும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் வாழ்வில் பலமுறை கண்டு லயிக்க வேண்டிய உன்னதமானதொரு படைப்பாகும். தஞ்சையை பற்றிய மேலதிக தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Shefali11011

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் :

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் :

ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய ராஜ ராஜ சோழனின் ஓவியம். இதில் சோழன் அவரின் குருவுக்கு பின்னல் பணிவுடன் நிற்கிறார்.

Photo: Eugene a

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் :

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் :

சோழன் ராஜராஜனின் அதி அழகான சிற்பம்.

Photo:Venu62

காமாட்சி அம்மன் கோயில் - காஞ்சீபுரம் :

காமாட்சி அம்மன் கோயில் - காஞ்சீபுரம் :

தமிழகத்தில் இருக்கும் மிக முக்கியமான அம்மன் கோயில்களில் ஒன்று காஞ்சீபுரம் நகரில் அமைந்திருக்கும் காமாட்சி அம்மன் கோயிலாகும். பல்லவர்களின் தலைநகரமாக விளங்கிய காஞ்சி நகரில் கி.பி 6ஆம் நூற்றாண்டில் கட்டிப்பட்டிருக்கிறது.

Photo:Keerthivasan Rajamani

காமாட்சி அம்மன் கோயில் - காஞ்சீபுரம் :

காமாட்சி அம்மன் கோயில் - காஞ்சீபுரம் :

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலோ அல்லது வேறு பெரிய அம்மன் கோயில்களிலோ இருப்பது போல அல்லாமல் காமாட்சி அம்மன் பத்மாசனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

காஞ்சீபுரம் நகரை பற்றிய மேலதிக தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.

Photo:Dileep Eduri

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X