Search
  • Follow NativePlanet
Share
» »ஏழுகுண்டலவாடா கோவிந்தா கோவிந்தா!

ஏழுகுண்டலவாடா கோவிந்தா கோவிந்தா!

By Staff

சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி பாலாஜி கோவில் எத்தனை பிரசித்த பெற்றது என்று இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் மிக அதிகமாக பார்க்கும் புனித ஸ்தலங்களில் திருப்பதி முதன்மையானது. திருப்பதி கோவிலின் சிறப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி சில தகவல்களைப் பார்ப்போம் :

ஒன்றிற்கும் மேற்பட்ட பெயர்கள்:

திருப்பதி கோவில், திருமலை கோவில், வெங்கடேஸ்வரா கோவில்.

கோவிலில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் இருக்கிறது திருமலை; மலையின் வடிவம் பார்ப்பதற்கு 90 டிகிரியில் அசல் பெருமாளின் முகம் போல் இருக்கும்.

அன்று பரவலாக இருந்த திராவிட பாரம்பரிய கலையம்சத்தை கொண்டு கட்டப்பட்டது திருப்பதி கோவில்.

பாலாஜி கடவுளின் சிலையில் அவரின் முடியில் ஒன்று இருப்பதாக நம்பப்படுகிறது.

1800'களில், 12 பேர் கோவிலுக்குள் சில தீய செயல்களை செய்ததன் விளைவாக திருப்பதியை ஆண்ட அரசன் அவர்களை தண்டித்து கோவிலை 12 ஆண்டுகளாக மூடிவிட்டான்.

lord1

Photo Courtesy : Kalyan Kanuri

உலகிலேயே அதிக பக்தர்கள் வரும் கோவில்களில் திருப்பதி டாப் இடங்களில் ஒன்றாக இருக்கிறது. தினசரி 50,000 முதல் 100,000 பக்தர்கள் வருகின்றனர்; சிறப்பு நாட்களில், ப்ரம்மோற்சவம் போன்ற பண்டிகைகளில் ஐந்து லட்சத்திற்கு அதிகமாக வருகின்றனர்.

Laddu

Photo Courtesy : Thamizhparithi Maari

1715ஆகஸ்ட் 2 முதல் லட்டை நைவேத்தியமாக கடவுளுக்கு படைப்பது துவங்கியது என்றாலும் 1803இல் இருந்துதான் பிரசாதங்களை பக்தர்களுக்கு விற்கும் முறை கோவிலில் தொடங்கியது. சுவாரசியமாக அன்று பிரசாதமாக பூந்தியை விநியோகம் செய்தனர். 1940 முதல் பூந்திக்குப் பதில் லட்டை பிரசாதமாக வழங்கத்துவங்கினர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் தயாரிக்கப்படும் இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதனால் இந்த லட்டை வேறு யாரும் செய்து விற்க முடியாது.

சுப்ரபாத சேவை - திருப்பதி வெங்கடாசலபதியை துயில் எழுப்ப சுப்ரபாத சேவை தினமும் செய்யப்படுகிறது. ஆனால், தனுர்மாசங்களான டிசம்பர்-ஜனவரியின் போது சுப்ரபாத சேவை செய்யப்படாது.

கோவிலில் இருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்துதான் பூமாலைகள், பால், நெய், இன்னும் பிற பூஜை சாமான்கள் கோவிலுக்கு வருகிறது. இன்னொரு பழக்கம் இங்கு இருக்கிறது; இந்த கிராமத்தை சேர்ந்தவரைத் தவிர வேறு யாரும் இங்கு சென்று தங்க முடியாது.

Read more about: tirupati temples
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X