Search
  • Follow NativePlanet
Share
» »இந்த மாதத்தில் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருக்கிறீர்களா? இதை கொஞ்சம் படியுங்க!!

இந்த மாதத்தில் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருக்கிறீர்களா? இதை கொஞ்சம் படியுங்க!!

By Naveen

இந்த பிப்ரவரி மாதத்தில் எங்காவது சுற்றுலா செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறீர்களா?. இந்த மாதத்தில் இந்தியாவில் எந்த இடத்திற்கு செல்வது என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா?.

குளிர்காலம் நிறைவுறும் இதமான வெயில் அடிகக்துவங்கும் பிப்ரவரி மாதத்தில் நாம் நிச்சயம் செல்ல வேண்டிய, அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

குல்மார்க் - பனியில் விளையாடலாம் !!

குல்மார்க் - பனியில் விளையாடலாம் !!

இந்தியாவில் மக்கள் செல்லத்தயங்கும் சுற்றுலாத்தலங்களில் முதன்மையானது காஷ்மீர் ஆகும். தீவிரவாதத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் இதைவிட அழகான இடம் இந்தியாவில் இல்லையென்றே சொல்லலாம்.

அங்கிருக்கும் அற்புதமான சுற்றுலாத்தலம் தான் குல்மார்க் ஆகும். இங்கே செல்ல பிப்ரவரி மாதம் தான் மிகச்சிறந்த நேரமாகும்.

குல்மார்க் - பனியில் விளையாடலாம் !!

குல்மார்க் - பனியில் விளையாடலாம் !!

குளிர் காலத்தில் குல்மார்கில் ஏராளமான பனி விளையாட்டுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக ஸ்கீயிங் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டு இங்கே மிகப்பிரபலமாகும். சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே நடத்தப்படும் இந்த விளையாட்டு தெற்காசியாவில் இங்கு மட்டுமே நடக்கிறது.

குல்மார்க் - பனியில் விளையாடலாம் !!

குல்மார்க் - பனியில் விளையாடலாம் !!

குல்மார்கில் ஸ்கீயிங் போன்ற பனி விளையாட்டுகளில் ஈடுபட அவை நடைபெறும் அப்ஹர்வத் மலைசிகரத்தை கோண்டோலா என்ற இடத்தில் இருந்து ராப் கார் மூலம் சென்றடையலாம்.

இந்த 12கி.மீ ராப் கார் பயணத்தின் போது பனிப்போர்த்திய குல்மார்கின் பேரழகை ரசித்து மகிழலாம்.

குல்மார்க் - சுற்றுலாத்தலங்கள்

குல்மார்க் - சுற்றுலாத்தலங்கள்

பனி விளையாட்டை தவிர குல்மார்கில் பாபா ரிஷி கோவில், மீன்பிடி ஏரி, பானிபால் நாக், கௌதார் நாக், சோனாமார்க் போன்ற இயற்கை அழகு ததும்பும் சுற்றுலாத்தலங்களும் ஏராளமாக இருக்கின்றன.

குல்மார்க் - சுற்றுலா!!

குல்மார்க் - சுற்றுலா!!

குடும்பத்துடன் குளிர்காலத்தை கொண்டாட விரும்புகிறவர்கள் நிச்சயம் குல்மார்கிற்கு இந்த பிப்ரவரி மாதத்தில் சுற்றுலா சென்று வாருங்கள்.

குல்மார்க் பயண விவரங்கள்

குல்மார்க் ஹோட்டல்கள்

தேக்கடி :

தேக்கடி :

தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் மிக அற்புதமான பசுமை சூழ் இடம் தான் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் தேக்கடி ஆகும். இயற்கை அழகையும், கேரள பாரம்பரியத்தையும் ஒருங்கே கண்டுகளித்திட தேக்கடிக்கு வரலாம்.

தேக்கடி:

தேக்கடி:

தேக்கடியில் தான் பெரியார் தேசிய வனவிலங்கு சரணாலயம் மற்றும் முல்லைப்பெரியார் அணை ஆகியவை அமைந்திருக்கிறது. இந்த வனவிலங்கு சரணாலயத்தினுள் யானைகள், சாம்பார் மான்கள், புலிகள், சிங்கவால் குரங்குகள் போன்ற விலங்கினங்களும், ஏராளமான பறவைகளும் இந்த சரணாலயத்தினுள் வசிக்கின்றன.

தேக்கடி:

தேக்கடி:

தேக்கடியில் இருக்கும் தனிச்சிறப்புகளில் ஒன்று இங்குள்ள பெரியார் ஏரியில் ஆதி காலத்தில் நீரில் மனிதர்கள் பயணித்ததை போலவே மூங்கில் தோணியில் அமர்ந்து பயணிக்கலாம்.

தேக்கடி:

தேக்கடி:

முரிக்கடி எனும் காப்பி தோட்டங்கள் நிறைந்த பகுதி, ஆப்ரஹாம் வாசனைப்பயிர் தோட்டம், கடத்த நாடன் களரி மையம் மற்றும் மங்களா தேவி கோயில் போன்ற இடங்களையும் தவறாமல் தேக்கடியில் காணவேண்டிய இடங்களாகும்.

தேக்கடி:

தேக்கடி:

தேக்கடியை எப்படி சென்றடைவது?

தேக்கடி ஹோட்டல்கள் ..

கூர்க் :

கூர்க் :

கர்னாடக மாநிலத்தில் இருக்கும் கூர்க் தமிழ்நாட்டில் இருக்கும் ஊட்டியை போன்ற ஒரு மலை வாசஸ்தலமாகும். அருவிகள், ட்ரெக்கிங் செய்வதற்கான இடங்கள், கோயில்கள் மற்றும் புத்த மடாலயங்கள் என பல்வேறு மனதைக்கவரும் சுற்றுலா அம்சங்கள் கூர்கில் உண்டு.

கூர்க் :

கூர்க் :

கூர்கில் இருக்கும் மிகப்பிரபலமான சுற்றுலாத்தலம் தலைக்காவேரி ஆகும். கூர்கின் தலைநகரான மடிகேரியில் இருந்து 48கி.மீ தொலைவில் உள்ள பிரம்மகிரி மலையின் மேல் அமைந்திருக்கும் இந்த இடத்திலிருந்து தான் காவிரி ஆறு உற்பத்தியாகிறது.

அதனை குறிக்கும் விதமாக இங்கே ஒரு சிறிய குளமும் அதனருகே சிறு கோயிலொன்றும் உள்ளது.

கூர்க் :

கூர்க் :

கூர்கில் இருக்கும் பேரழகுடைய அருவி தான் அப்பே அருவியாகும். மடிகேரியில் இருந்து 8கி.மீ தொலைவில் ஒரு தனியார் தேயிலைத் தோட்டத்தினுள் இந்த அருவி அமைந்திருக்கிறது.

கூர்க் :

கூர்க் :

தென்னிந்தியாவின் மிகப்பெரிய புத்த மடாலயமான 'நம்ட்ரோளிங்' மடாலயம் கூர்க் மாவட்டத்தில் பைலகுப்பே என்னும் இடத்தில் தான் இருக்கிறது.

புத்த மதத்தின் கலாசாரத்தை அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் கட்டாயம் வரவேண்டிய இடம் இதுவாகும்.

கூர்க் :

கூர்க் :

காதலர் தினத்துக்கு எங்கேனும் தென் இந்தியாவினுள் சுற்றுலா செல்ல ஆசைப்பட்டால் அற்புதமான சீதோஷன நிலை நிலவும் பிப்ரவரி மாதத்தில் கூர்க் வாருங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X