Search
  • Follow NativePlanet
Share
» »இந்த குளிர்காலத்தை குதூகலப்படுத்த செல்லவேண்டிய இடங்கள் இவை!

இந்த குளிர்காலத்தை குதூகலப்படுத்த செல்லவேண்டிய இடங்கள் இவை!

இவையனைத்தும் உங்களை மன இறுக்கத்திலிருந்து விடுபடச் செய்யும் இடங்களாகும்.

By Super Admin

கடல், மலை, நிலவு, யானை இவை நான்கும் காணக் காண அலுக்காதவை.

அதிலும் மலைப் பிரதேசம் நம் மனதைக் கவர்ந்து கொண்டு போய்விடுகிறது. சான்றோர்களின் மனதைப் போல உயர்ந்து நிற்கும் சிகரங்கள், கடவுளின் கருணையைப் போன்று பாய்ந்து வரும் அருவிகள், உற்ற தோழனைப் போல அன்புடன் அணைத்துக் கொள்ளும் குளிர்காற்று எல்லாமே உடல், மனம், ஆத்மா மூன்றுக்குமே அதீத ஆனந்தத்தைத் தருகிறது.

கோடையின் வெப்பம் தணிக்க மலைகளின் அணைப்பை நாடுகிறோம். தென்னிந்தியாவில் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அழகிய மலைவாசஸ்தலங்கள் இருக்கின்றன.

அவற்றுள் சில கிழக்குத் தொடர்ச்சி மலைகளைச் சேர்ந்தவையானாலும் பெரும்பாலானவை மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியவையே. ஹார்ஸ்லீ குன்றுகள், நல்லமலா குன்றுகள் ஆகிய இடங்கள் கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும், காவிரி பிறக்கும் கூர்க் மலைத்தொடர்கள், செம்பரா சிகரம், மூணாறு, கொடைக்கானல் ஆகிய இடங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் இருக்கின்றன.

சரி, இந்தப் பனிக்காலத்தில் நாம் தென்னிந்தியாவின் சிறந்த மலைவாச ஸ்தலங்களுக்கு ஒரு இன்பச் சுற்றுலா கிளம்புவோம். நெஞ்சில் நிறைந்த எழிலின் நினைவுகளை அமரத்துவமாக்கும் நிழற்படங்களுடன் திரும்புவோம்!

குந்தாத்ரி

குந்தாத்ரி


குந்தாத்ரி ஷிமோகா பகுதியில் உள்ள அமைதியான சுற்றுலாத் தலமாகும். இங்கு மலையுச்சியில் இருக்கும் ஜைன ஆலயம் பழமையானது. இவ்விடம் அதிகமாக வெகுஜனப் பிராபல்யம் அடையவில்லையாயினும் இங்கு பல பயணிகள் வருகிறார்கள்.

PC: மஞ்சேஷ் PV

வகமோன்

வகமோன்

மலையாளும் மலையாள பூமியில் உள்ளது வகமோன். நேஷனல் ஜியோக்ராஃபிக் ட்ராவலர் பத்திரிகையில் "இந்தியாவில் காணத்தக்க அழகிய 50 இடங்கள்" என்ற கட்டுரையில் இடம்பிடித்துள்ள எழிலார் பூமி வகமோன். பரந்து விரியும் தேயிலைத் தோட்டங்களும், அழகு பொங்கும் இயற்கைக் காட்சிகளையும் காணக் காணக் களிகூருகிறது.

PC: பிபின் C. அலெக்ஸ்

கூர்க்

கூர்க்

கர்நாடகத்தின் முடிமணி என்றே இவ்வழகிய மலைப்பகுதியைக் குறிப்பிட்டுவிடலாம். கூர்க் பகுதிகளைக் கண்டவர் யாரும் அதன் எழிலையும் அமைதியையும் மறப்பது இல்லை.

PC: Jyotirmoy

பொன்முடி

பொன்முடி


இது கேரளத்தின் மலைவாச ஸ்தலங்களில் பொன்முடியாகும், பொருத்தமான பெயரைத் தாங்கி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நிற்கிறது. திருவனந்தபுரத்திற்கருகில் உள்ள இவ்விடம் மலையேற்றத்திற்குப் (trekking) பிரசித்தி பெற்றது.

PC: அருண் எலக்ட்ரா

ஏற்காடு

ஏற்காடு

"தென்னிந்தியாவின் ஆபரணம்" என்று அழைக்கப்படுவது ஏற்காடு. ஷேவராய் மலைத்தொடர்களில் இருக்கிறது. தமிழ்நாட்டின் மனங்கவரும் சுற்றுலாத் தலங்களுள் ஒன்று.

PC: ரிஜு K

குடசாத்ரி மலைத் தொடர்

குடசாத்ரி மலைத் தொடர்

கர்நாடக மாநிலத்தில் ஷிமோகா பகுதியில் உள்ள மிக உயரமான மலைகளில் ஒன்று. மலையேறுதல் பிரசித்தம்.

PC: சேத்தன் அன்னாஜி கௌடா

நெல்லியம்பதி

நெல்லியம்பதி

அதிகம் பயணிகள் சென்றிராத, இன்னும் முழுமையாகச் சுற்றிப் பார்த்திராத ஒரு இடம் நெல்லியம்பதி. ஆனால் அதன் அழகு மனம் மயக்கும் தன்மை கொண்டது. கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள மலைப் பிரதேசங்களில் ஒன்று. அமைதி ததும்பும் நெல்லியம்பதி அனைவரும் காணவேண்டிய ஒரு இடமாகும்.

PC: Kj ராஜேஷ்

அரக்கு பள்ளத்தாக்கு

அரக்கு பள்ளத்தாக்கு

ஆந்திர மாநிலம், கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. காப்பித் தோட்டங்களுக்குப் பெயர் பெற்றது.

PC: Adityamadhav83

மூணாறு

மூணாறு

கேரள மாநிலத்தில் சுற்றுலாச் செல்பவர்களுக்கு முதலில் நினைவுக்கு வரும் இடங்களில் ஒன்று மூணாறு. அயல் நாட்டினரெல்லாம் தேடி வருகின்ற இந்த அழகிய மலைப்பகுதியை நாம் எவ்வாறு காணாதிருக்க இயலும்? போற்றாதிருக்க இயலும்?

PC: கேரள சுற்றுலாத்துறை

ஹார்ஸ்லீ குன்றுகள்

ஹார்ஸ்லீ குன்றுகள்

ஆந்திர மாநிலத்தில் உள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அழகான இடம்.

PC: NAYASHA WIKI

Read more about: travel பயணம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X