Search
  • Follow NativePlanet
Share
» »அலகாபாத்தில் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்

அலகாபாத்தில் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்

அலகாபாத்தில் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்

By Balakarthik Balasubramanian

'ப்ரயாக்' அல்லது 'பிரசாதங்களின் பிறப்பிடம்' என்றழைக்கப்படும் அலகாபாத், நாட்டின் முக்கியமான புனித யாத்ரீக மையங்களுள் ஒன்றாக விளங்கி, இந்து மதத்தை போதிக்கிறது. நகரத்தில் மூன்று நதிகளானது சங்கமிப்பதாக தெரியவர, அவை கங்கா, யமுனா மற்றும் சரஸ்வதி என்பதும் நமக்கு தெரியவருகிறது.

நாட்டின் இரண்டாவது பழமையான நகரம் இந்நகரம் என்பதும், வேத காலத்து தோற்றங்களின் தடயங்களையும் நம்மால் இங்கே பார்க்க முடிவதாக சொல்லப்படுகிறது. 1583ஆம் ஆண்டு, முகலாய பேரரசரான அக்பரால், அலகாபாத் அல்லது லியஹாபாத் என்று இந்த நகரத்தை அழைக்கப்பட, உருது மொழியில் அலகாபாத் என்பதற்கு 'அல்லாக்களின் தோட்டம்' என்ற பெயரும் உண்டு.

இந்த இடத்தில் பழமையான வேத மொழிகளானது வரையறுக்கப்பட்டிருக்க, தியாக சடங்கொன்றும் பிரம்மாவால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் தெரிய வருகிறது.

யாத்ரீக தளங்களுள் ஒன்றான அலகாபாத், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியமான இடத்தை பெறுகிறது. அதனால், அலகாபாத்தில் அப்படி என்ன தான் நம்மால் பார்க்க இயலும் என்பதை வாருங்கள் படித்து தெரிந்துக் கொள்ளலாம்.

 திரிவேனி சங்கமம்:

திரிவேனி சங்கமம்:

அலகாபாத்தில் நாம் பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்றாக திரிவேனி சங்கமம் காணப்படுகிறது. இங்கே, இந்தியாவின் முக்கிய நதிகளான கங்கா, யமுனா, மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவை இப்படி இருப்பினும், இந்த மூன்று நதிகளிலிருந்து கலக்கும் நீரினை வண்ணத்தின் மூலம் நம்மால் பிரிக்கவும் முடிகிறது என்பது மனதில் ஆச்சரியத்தை மலர செய்கிறது.

கங்கை நதியிலிருந்து விழும் நீரானது தூய்மையாக காணப்பட, யமுனை நதியின் நீர் பச்சை நிற தோற்றத்தால் மனதை வருடுகிறது. சரஸ்வதி நதியின் நீரானது நீருக்கடியில் மூழ்கியும்போகிறது. இந்த இடமானது கும்ப மேளாவின் முக்கிய இடங்களுள் ஒன்றாக காணப்பட, 12 வருடத்திற்கு ஒருமுறை தான் இது நேர்கிறதாம்.

Partha Sarathi Sahana

 அலகாபாத் கோட்டை:

அலகாபாத் கோட்டை:

அசோகரால் கட்டப்பட்ட ஒரு பழமையான கோட்டை இதன் பிறப்பிடமாக காணப்பட, 1583ஆம் ஆண்டு முகலாய பேரரசரால் மறு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வருகிறது. திரிவேணி சங்கமத்திற்கு அருகில் காணப்படும் இந்த கோட்டையானது, அக்பரால் கட்டப்பட்ட ஒரு பெரிய கோட்டையும் கூட.

இந்த கோட்டையின் அரணாய் உயர்ந்த மணி கூண்டு ஒன்று காணப்பட, அதன் மூன்று காட்சியகங்கள் அவ்விடத்திற்கு பாதுகாப்பாய் விளங்குகிறது. இந்த கோட்டையின் உள்புறத்தில் நாட்டுப்புற பெண்களுக்கான ஷனனா அரண்மனை காணப்பட, சரஸ்வதி நதிக்கு ஆதாரமாக விளங்கும் சரஸ்வதி கூப்பும் இங்கே தென்படுகிறது. மேலும், 3ஆம் நூற்றாண்டின் அசோக தூண் கூட இங்கே காணப்படுகிறது.

மேலும் இந்த கோட்டையில் அழிவற்ற மரம் ஒன்று காணப்பட, அதனை ‘அக்ஷயவாத்' என்றும் அழைக்கின்றனர். தெற்கு சுவருக்கு வெளிப்புறத்தில் இவை காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharad Kumar

 குஷ்ரோ பாக்:

குஷ்ரோ பாக்:

மூன்று கல்லறைகளை கொண்ட சுவருடைய தோட்டமானது காணப்பட, முகலாய கட்டிடக்கலை பாணியில் இது கட்டப்பட்டுள்ளது. பேரரசர் ஜஹாங்கிருக்கும், குசரு மிர்ஷாவுக்கும், அவருடைய முதல் மனைவியான ஷா பேகம்க்கும் மற்றும் அவருடைய மகளுக்கும் என இங்கே மூன்று கல்லறைகள் காணப்படுகிறது.

தன்னுடைய தந்தையிடம் புரட்சியில் இறங்கிய குஷ்ரோ பாக், தன்னுடைய பெயரை குஷ்ரோ மிர்ஷா என மாற்றிக்கொண்டதாகவும், அவள் மரணத்தை சம்பவிக்க, அதனால், தன்னுடைய மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் சேர்த்து அவளை புதைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

முகலாய கலை மற்றும் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த அமைப்பானது விளங்க, கற்களை கொண்டும், கலைப்பண்புக் கூறுகளை கொண்டும் அழகாக செதுக்கப்பட்டதாகவும் நமக்கு தெரியவருகிறது.

Oo91

 ஆனந்த பவன்:

ஆனந்த பவன்:

1930ஆம் ஆண்டு மோத்திலால் நேருவால் இந்த ஆனந்த பவன் கட்டப்பட, நேருவின் குடும்ப வாழிடமாக இது விளங்கியதாக தெரிய வருகிறது. நேருவின் குடும்பத்துடைய முன்னால் வீடாக இந்த கட்டிடம் கட்டமைக்கப்பட, ‘ஷ்வராஜ் பவன்' என்ற பெயரும் இந்த இடத்திற்கு வைக்கப்பட்டதாம். அதன்பின்னர், இந்திய தேசிய காங்கிரஸிடம் இவ்விடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

பின்னர், 1970ஆம் ஆண்டில் இந்திரகாந்தியின் மூலம் இந்திய அரசுக்கு சொந்தமாக இந்த கட்டிடம் தரப்பட, இன்று... நேருவின் வாழ்க்கை மற்றும் குடும்பத்துடன் அவர் செலவிட்ட நினைவுகளை கொண்டு அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விடத்தில், ஜவஹர் கோளரங்கமானது 1979ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருக்க, அது நம்மிடையே பார்க்கும் ஆர்வத்தையும் தூண்டுகிறது.

Gurpreet singh Ranchi

 அனைத்து துறவிகள் கதீட்ரல்:

அனைத்து துறவிகள் கதீட்ரல்:

ஆங்கிலேயரால் கட்டப்பட்ட இந்த அனைத்து துறவிகள் கதீட்ரல் 1887ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாகும். அதன் பிறகு 4 வருடங்கள் ஆனதாம் ஒட்டுமொத்த அமைப்பையும் கட்டிமுடிக்க...

பதிமூன்றாம் நூற்றாண்டில் இந்த அமைப்பானது கோதிக் மறுமலர்ச்சி கட்டிடக்கலைகலையும் கொண்டு அமைக்கப்பட, உயரமானது 31 மீட்டர் வரை காணப்படுகிறது. இந்த மாபெரும் வடிவமானது தோராயமாக 1250 சதுர மீட்டர் காணப்பட, காலனித்துவ விதிகளை கொண்டு இந்தியாவில் கட்டப்பட்ட அழகிய இடங்களுள் இதுவும் ஒன்று என்பதும் நமக்கு தெரிய வருகிறது.

விக்டோரிய இராணிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த நினைவு கதீட்ரல், விளக்கையும் மேல் கோபுரத்தில் கொண்டிருக்கிறது.

Ptwo

Read more about: travel hills
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X