Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் சிறந்த மூன்று சாலைப்பயணங்கள் - ஒரு பார்வை

இந்தியாவின் சிறந்த மூன்று சாலைப்பயணங்கள் - ஒரு பார்வை

நண்பர்டளுடனோ தனியாகவோ நாம் மேற்கொள்ளும் பயணங்கள் என்றென்றைக்கும் மறக்க முடியாதவை. நாம் சென்றடையும் இடங்களில் கிடைக்கும் சந்தோசத்தை காட்டிலும் அந்த இடங்களை நோக்கிய பயணங்களின் போது கிடைக்கும் அனுபவம் அலாதியானது. அம்மாதிரியான அற்புதமான பயண அனுபவங்களை நமக்கு தரும் சிறந்த சாலைப்பயனங்கள் எவை எவை என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

goibibo தளத்தில் ஹோட்டல்கள் மற்றும் விமான கட்டணங்களில் 50% தள்ளுபடி பெற இங்கே கிளிக்குங்கள்

சாஜிலா கணவாய் - லடாக்:

சாஜிலா கணவாய் - லடாக்:

கடல் மட்டத்தில் இருந்து 11,000 அடி உயரத்தில் ஹிமாலய மலையின் மேல் லடாக் - கஷ்மீர் இடையிலான முக்கிய இணைப்பு சாலையாக விளங்குகிறது சாஜிலா கணவாய். கடுமையான பனிப்பொழிவு காரணமாக குளிர் காலத்தில் இந்த சாலை மூடப்படுகிறது. எனவே பிப்ரவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டம் இங்கு பயணம் மேற்கொள்ள சிறந்ததாகும்.

Photo:Anwaraj

சாஜிலா கணவாய் - லடாக்:

சாஜிலா கணவாய் - லடாக்:

கொஞ்சம் அசந்தாலும் மரணத்தில் முடிந்துவிட கூடிய ஆபத்தான வளைவுகள், குறுகலான சாலைகளை இந்த பயணத்தின் போது நாம் பார்க்க முடியும்.

ஹிமாலய மலைகளின் அற்புதமான காட்சிகளை கண்டு ரசித்தபடியே இங்கு நாம் மேற்கொள்ளும் பயணம் வாழ்க்கையில் என்றென்றைக்கும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்.

Photo:Yogeshgupta26

சாஜிலா கணவாய் - லடாக்:

சாஜிலா கணவாய் - லடாக்:

ஒரு குழுவாக நண்பர்களுடன் வண்டியில் எங்கேனும் பயணம் போகலாம் என நினைப்பவர்கள் தாரளமாக இந்த சாஜிலா கணவாயின் வழியாக பயணம் ஒன்றை மேற்கொள்ளலாம். அற்புதமான இயற்கை கட்சிகளை வாரி வழங்கும் சொனமார்க் பள்ளத்தாக்கு இந்த சாஜிலா கணவாயில் இருந்து வெறும் 9 கி.மீ தொலைவிலேயே அமைந்திருக்கிறது. அங்கு ஒரு இரவு கேம்ப் அமைந்தது தங்கி ஹிமாலயத்தின் இரவை ரசிக்கலாம்.

Photo:Anirban Biswas

சாஜிலா கணவாய் - லடாக்:

சாஜிலா கணவாய் - லடாக்:

கஷ்மீர் மாநிலத்தில் அமைந்திருக்கும் லடாக்கை எப்படி அடைவது ?

லடாக்கில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள்.

Photo:SundeepGajjar

தி க்ராண்ட் டிரன்க் ரோடு:

தி க்ராண்ட் டிரன்க் ரோடு:

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புகள் கொண்ட இந்திய பெருங்கண்டத்தில் இருக்கும் நான்கு நாடுகளையும் இணைக்கும் சாலை தான் இந்த க்ராண்ட் டிரன்க் ரோடு. மவுரிய பேரரசர்கள் காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருக்கும் இந்த சாலையில் பயணிப்பது நாம் பார்த்திராத இந்தியாவின் வேறொரு முகத்தை நாம் காணலாம்.

Photo:Avik Haldar

தி க்ராண்ட் டிரன்க் ரோடு:

தி க்ராண்ட் டிரன்க் ரோடு:

பங்களாதேசின் சிட்டகாங் நகரில் துவங்கி கொல்கத்தாவின் துர்காபூர், வாரணாசி, அலகாபாத், கான்பூர், தில்லி, அம்ரித்சர் வழியாக இந்திய பாகிஸ்தான் எல்லையை அடைந்து பின் லாகூர், பெஷாவர் வழியாக ஆப்கானிஸ்தானின் காபுல் நகரத்தில் முடிவடைகிறது இந்த 2500 தூர நீளம் கொண்ட சாலை.

Photo:Nagesh Kamath

தி க்ராண்ட் டிரன்க் ரோடு:

தி க்ராண்ட் டிரன்க் ரோடு:

இந்தியாவில் மொத்தம் 1700 கி.மீ தூரத்திற்கு இந்த சாலை உள்ளது. இந்தியாவில் கிழக்கு எல்லையில் இருந்து மேற்கு எல்லை வரை இந்த சாலையில் நாம் பயணிக்கலாம். மலைகளில் அமைந்திருக்கும் பசுமையான பெங்கால் தேயிலைத் தோட்டங்கள், பஞ்சாபின் கோதுமை வயல்கள், பழமை மாறாத பழைய தில்லியின் கட்டிடங்கள், காவியுடை அணிந்த சாதுக்கள் என வேறுபட்ட இந்தியாவின் பண்முகங்களை நாம் இந்த பயணத்தின் போது காணலாம்.

Photo:Shahid1024

தி க்ராண்ட் டிரன்க் ரோடு:

தி க்ராண்ட் டிரன்க் ரோடு:

மிக நீண்ட பயணம் ஒன்றை மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த கிராண்ட் டிரன்க் ரோடைவிட சிறந்த தேர்வு ஒன்று இருக்க முடியாது.

Photo:Anirban Biswas

மணாலி - லெஹ் என்னும் கனவுப்பயணம்:

மணாலி - லெஹ் என்னும் கனவுப்பயணம்:

இந்தியாவில் இருக்கும் மிக சிறந்த சாலைப் பயணங்களில் ஒன்றாக பயண விரும்பிகளால் சொல்லப்படும் பயணம் தான் மணாலியில் இருந்து லெஹ் வரையிலான 475 கி.மீ பயணம். 'A journey of dreams' என்று வர்ணிக்கப்படும் சிறப்பை கொண்டது இந்த சாலைப்பயணம்.

Photo:Robert Tyabji

மணாலி - லெஹ் என்னும் கனவுப்பயணம்:

மணாலி - லெஹ் என்னும் கனவுப்பயணம்:

வருடத்தில் மே மாதம் முதல் அக்டோபர் வரையிலான பனி இல்லாத நான்கு மாதங்கள் மட்டுமே இந்த சாலை திறந்திருக்கிறது. மணாலியில் இருந்து லஹால், ஸ்பிதி, சன்ச்கர் பள்ளத்தாக்குகள் வழியாக லெஹ்வை அடைகிறது இந்த தேசிய நெடுஞ்சாலை 3.

Photo:Anirban Biswas

மணாலி - லெஹ் என்னும் கனவுப்பயணம்:

மணாலி - லெஹ் என்னும் கனவுப்பயணம்:

மிகவும் சவால் நிறைந்த கரடுமுரடான சாலைகளை இந்தபயணத்தின் போது நாம் எதிர்கொள்ள வேண்டி வரும். 5000 மீட்டர் உயரத்திற்கு மேலாக நாம் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதால் வாகனங்களுக்கு தேவையான எரிபொருட்கள், வாகனம் பழுதடைந்தால் சரி செய்ய கருவிகள், அவசர முதலுதவிக்கு தேவையான மருத்துவ பொருட்கள் போன்றவற்றை எடுத்து செல்வது நல்லது.

Photo:Anirban Biswas

மணாலி - லெஹ் என்னும் கனவுப்பயணம்:

மணாலி - லெஹ் என்னும் கனவுப்பயணம்:

மேலே பயணிக்க பயணிக்க ஆக்ஸிஜென் அளவு குறையும் என்பதால் சுவாசப்பிரச்சனை இருப்பவர்கள் இந்த பயணத்தை தவிர்ப்பது நல்லது. இவையெல்லாம் தாண்டி நாம் கண்டிராத அற்புதமான இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் திர்ல்லான விசயங்களில் ஒன்றாக இந்த பயணம் அமையும் என்றால் அது மிகையல்ல.

Photo:(www.debabrata.info)

மணாலி - லெஹ் என்னும் கனவுப்பயணம்:

மணாலி - லெஹ் என்னும் கனவுப்பயணம்:

லெஹ் வில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

எப்படி அடைவது?

Read more about: road trip ladak leh delhi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X