Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் மிகப்பெரிய கோட்டை... இது பற்றி தெரியுமா ?

இந்தியாவின் மிகப்பெரிய கோட்டை... இது பற்றி தெரியுமா ?

இந்தியாவின் மிகப்பெரிய கோட்டை இது பற்றி தெரியுமா ?

இந்தியாவின் மிகப்பெரிய கோட்டைகளுள் ஒன்று இந்த சித்தூர் கோட்டை ஆகும்.

மேலும் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. சித்தூர் கோட்டை மேவார் பகுதியின் சித்தோர்கார் மாவட்டத்தின் தலைமையிடமான சித்தோர்கார் நகரத்தில் அமைந்துள்ளது.

இந்த கோட்டையில் பல்வேறு சிறப்பம்சங்கள் ஒளிந்துள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

கோட்டை அமைவிடம்

கோட்டை அமைவிடம்

இது ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

wiki

பரப்பளவு

பரப்பளவு


இது 691 ஏக்கர் பரப்பளவுக்கு பரந்து விரிந்துள்ளது. நகரத்திலிருந்து 2கிமீ தூரம் தள்ளி அமைந்துள்ளது.

Sujay25

மலை

மலை

இது மலை மீது 180 மீ உயரத்தில் அமைந்துள்ளது அற்புத கோட்டையாகும்.Milo & Silvia

Milo & Silvia

மயூரா

மயூரா


ஏழாம் நூற்றாண்டில் பெரும் வெற்றியுடன் வாழ்ந்துவந்த மயூரா வம்சத்தினரே இந்த இடத்தை கண்டறிந்தனர். இந்த கோட்டை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டுள்ளது.

Sougata Bhar

 மீனினை போல

மீனினை போல

இந்த கோட்டை உயரத்திலிருந்து பார்க்கும்போது, மீனைப் போன்ற தோற்றத்தில் உள்ளது.

பறவைகளின் கண்களுக்கு இது உண்மையான மீனின் தோற்றத்தை தரும் என்கிறார்கள்.

ramnath

நினைவுச் சின்னங்கள்

நினைவுச் சின்னங்கள்


சித்தூர் கோட்டையின் உள்ளே, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கே பல நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ளன.

lensnmatter

எவையெவை

எவையெவை

65 வரலாற்று நினைவுச் சின்னங்களும், நான்கு மாளிகைகளும் உள்ளன. 19 பெரிய கோயில்களும், 20 சிறிய ஆன்மீக அமைவிடங்களும் அமைந்துள்ளன.

Shakti

நீர்நிலைகள்

நீர்நிலைகள்


இந்த கோட்டையில் நீரை சேமித்துவைக்கும் பல இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழை நீரை சேமிப்பதற்கு அந்த காலத்திலேயே நிறைய மெனக்கெட்டிருக்கின்றனர்.

இந்த கோட்டைக்கு அருகிலேயே பல குளங்களும், ஏரிகளும், குட்டைகளும் அமைந்துள்ளன. நீர் மேலாண்மைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்றால், கிட்டத்தட்ட 40 சதவிகித கோட்டை முழுவதும் நீரை சேமித்து வைக்க பயன்படுத்துகின்றனர்.

Findan

ஏழு நுழைவு வாயில்கள்

ஏழு நுழைவு வாயில்கள்


இந்த கோட்டையில் ஏழு நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன. அவற்றிற்கு கணேசன், லட்சுமணன், அனுமன், ராமன் எனுமாறு பெயரிட்டுள்ளனர்.

Visaran

 வெற்றிச் சின்னம்

வெற்றிச் சின்னம்

இந்த இடம் பல சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முகமது ஹாஜியை தோற்கடித்து மகரான கும்பா இந்த இடத்தை அமைத்தார். 157 படிகட்டுகள் ஏறி நடந்தால், நீங்கள் மொத்த நகரத்தின் அழகை ரசிக்கலாம்.

Sanyam Bahga

Read more about: travel temple fort
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X