Search
  • Follow NativePlanet
Share
» »நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய சிவன் கோவில்கள் இவை

நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய சிவன் கோவில்கள் இவை

நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய சிவன் கோவில்கள் இவை ஏன் தெரியுமா?

By Super Admin

ஸ்ரீமத்பாகவதம் பக்தி ரசம் சொட்டும் ஒரு அற்புதக் காவியம். அதில் பக்தி ஒரு தாயாக உருவகப்படுத்தப் படுகிறாள். பக்தித் தாய் நாரதரிடம் கூறுகிறாள் - "நான் திராவிட மண்ணிலே பிறந்தேன்" என்கிறாள்! இந்தத் தமிழ் கூறும் நல்லுலகிலே தான் பக்தி பிறந்தது. பக்தியைத் தமிழிலே தீஞ்சுவைப் பாக்களாக வடித்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் வாழ்ந்த புண்ணிய பூமி நம் தமிழகம்.

தமிழகம் சுற்றுலாச் செல்பவர்களுக்கு ஒரு சுவர்க்க பூமியாகும். மலைவாசஸ்தலங்களும், கடற்கரைகளும், இன்னும் கோட்டைகள் போன்ற பண்டைய காலச் சின்னங்களும் இங்கே உள்ளன. ஒரு புறம் கிழக்குத் தொடர்ச்சி மலை தந்தையாய் அரவணைக்க, ஒருபுறம் அலைவீசும் கடல் பிள்ளையாய்க் கலீரென்று சிரிக்க, இயற்கை அழகு நெஞ்சை நிறைக்கும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு இடமும் காணக் காணப் பரவசமே!

பலர் தமிழ்நாட்டின் வரலாற்றுக்காகவும் இன்னும் கட்டிக் காக்கப்படும் அதன் கலாச்சாரத்திற்காகவுமே இங்கு வருவர். சுற்றுலாத் தலங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைகள், டிசம்பர் கர்நாடக சங்கீதக் கச்சேரிகள், தியாகராஜ ஆராதனை, உலகப்புகழ் பெற்ற நம் பரதநாட்டியம் இவற்றைக் காணவும் சுற்றுலாப் பயணிகள் உலகெங்கிலும் இருந்து வருகிறார்கள்.

எனினும் தமிழகம் என்னும் பெயரைக் கேட்டாலே நமக்கு முதலில் கோயில்கள் தான் நினைவுக்கு வரும். யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ள உலகப் பாரமபரியக் களங்கள் பல தமிழ்நாட்டில் உள்ளன. இவைகள் பெரும்பாலும் கோயில்களே. கல்லிலே கோயில்கள் எழுப்பிய பல்லவர்கள், வானுயரக் கோபுரங்கள் எழுப்பிய சோழர்கள், எண்ணற்ற கோயில்களில் திருப்பணி செய்து புண்ணியம் கட்டிக் கொண்ட நாயக்க மன்னர்கள் இவர்கள் விட்டுச் சென்றுள்ள சிற்ப அற்புதங்கள் உலகிலேயே தலைசிறந்த கட்டுமானக் கலை, சிற்ப சித்திர உதாரணங்களில் இடம்பெறும் கலைக் காவியங்களாயிற்றே!

தமிழகத்தில் சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள், முருகப் பெருமான் கோயில்கள், அம்பிகைக்கான ஆலயங்கள் என்று அநேகம் ஆலயங்கள் உள. தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான ஆலயங்களுள் சில நம் தமிழகத்தில் தான் உள்ளன.

இதோ, புராதனச் சிறப்பும், புராணச் சிறப்பும், கட்டுமானச் சிறப்பும், கலைச் சிறப்பும் மிக்க சில சிவாலயங்களை உங்களுக்குத் தொகுத்து அளிக்கிறோம் - படங்களுடன்! தரிசித்து அருள்பெறுங்கள்!

பிருஹதீஸ்வரர் ஆலயம்

பிருஹதீஸ்வரர் ஆலயம்


சோழர் கட்டுமானத்தில் வழக்கில் இருக்கும் ஆலயங்களில் தஞ்சைப் பெரிய கோயில் மிகவும் அழகானதாகும். சோழர் கட்டிடக் கலை மிளிரும் ஆலயங்களில் முடிமணியாய் விளங்கும் ஆலயம் இது!

PC: யுகமதி பாலசுப்ரமணியன்

இராமநாத சுவாமி ஆலயம், இராமேஸ்வரம்

இராமநாத சுவாமி ஆலயம், இராமேஸ்வரம்


தீவு நகரமான இராமேஸ்வரத்தில் உள்ளது அருள்மிகு இராமநாத சுவாமி ஆலயம். பன்னிரு ஜோதிர்லிங்க ஆலயங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஆலயம் இது எனும் பெருமை இதற்குண்டு. சீதா பிராட்டியாரால் மணலினால் பிடிக்கப்பட்டு உருவாகி ஸ்ரீராமர் சீதை இவர்களால் பூஜிக்கப்பட்டவர் ஸ்ரீ இராமநாதர். இங்கு அனுமனால் கைலாயத்திலிருந்து கொண்டுவரப் பெற்ற லிங்கப் பெருமானும் பூஜை பெறுகிறார்.

துல்லியமான கட்டிடக் கலைக்கு ஒரு உதாரணமாகத் திகழும் இக்கோயில் பிராகாரத்தை யாரே மறக்க முடியும்?

PC: விநயராஜ்

ஐராவதேஸ்வரர், தாராசுரம், கும்பகோணம்

ஐராவதேஸ்வரர், தாராசுரம், கும்பகோணம்


இந்திரனின் யானையான ஐராவதம் பூஜித்த ஈசன் இக்கோயிலில் அருள்புரிகிறார். இங்கு தான் அர்ஜுனன் மகனான அபிமன்யுவிற்கும் விராட ராஜன் மகளான உத்தரைக்கும் திருமணம் நிகழ்ந்ததாம்.

12ஆம் நூற்றாண்டுக் கட்டுமானம். சிற்பங்கள் நெஞ்சை அள்ளிக் கொண்டு போய்விடும்.

PC: சுப்ரஜா கண்ணன்

கபாலீஸ்வரர் ஆலயம், மைலாப்பூர், சென்னை

கபாலீஸ்வரர் ஆலயம், மைலாப்பூர், சென்னை


பிரம்மனின் ஒரு சிரம் கிள்ளிக் கையில் தரித்ததால் இவ்விறைவன் கபாலீச்வரர் எனும் நாமங்கொண்டார். அம்பிகை இத்தலத்தில் இறைவனை நோக்கி ஒரு பெண்மயிலாக உருவெடுத்துத் தவம் புரிந்தமையாலேயே இத்தலம் மயிலை எனும் பெயர் படைத்தது.

இங்குதான் ஞானசம்பந்தப் பெருமான் மரித்த பெண்ணுக்கு உயிர்கொடுத்தார். இங்கு நடைபெறும் அறுபத்து மூவர் உற்சவம் உலகப் பிரசித்தி.

இந்த 7-ஆம் நூற்றாண்டு ஆலயத்தின் சிற்ப வேலைப்பாடுகளும் புகழ்பெற்றவை.

PC: அலெக்ஸாண்டர் சைகோவ்

ஜலகண்டேஸ்வரர் ஆலயம், வேலூர்

ஜலகண்டேஸ்வரர் ஆலயம், வேலூர்


விஜயநகரப் பேரரசின் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் இது. வேலூர் கோட்டைக்குள்ளேயே அமைந்திருக்கிறது. இப்போது இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சுற்றிலும் நீர் நிறைந்த ஒரு புற்றிலிருந்து கிடைத்தவர் இக்கோயில் ஈசர், எனவே ஜலகண்டேச்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

PC: வைகூவரி

ஏகாம்பரநாதர் ஆலயம், காஞ்சிபுரம்

ஏகாம்பரநாதர் ஆலயம், காஞ்சிபுரம்


கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தின் தலையாய் ஆலயங்களுள் ஒன்று. "ஒற்றை மாங்கனியாம் நாதன்" என்பதே ஈசனின் நாமத்தின் பொருள். நான்கு வேதங்களும் நான்கு கிளைகளாய் விளங்கும் தத்துவ மரத்தில் பழுக்கும் கனியாம் ஆத்மாவே ஏகாம்பர நாதன்.

கோயில் சோழர் கட்டுமானம். இவ்வாலயத்திலேயே "நிலாத்திங்கள் துண்டர்" எனும் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். 108 திவ்யதேச மூர்த்திகளில் ஒருவர் இவர்.

PC: ஸ்ரீராம் mt

Read more about: temple travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X