Search
  • Follow NativePlanet
Share
» »பனிமூட்டத்தின் நடுவே ஒரு திகைப்பூட்டும் டிரெக்கிங் அனுபவத்திற்கு தயாரா நீங்க?

பனிமூட்டத்தின் நடுவே ஒரு திகைப்பூட்டும் டிரெக்கிங் அனுபவத்திற்கு தயாரா நீங்க?

நிஷானி மொட்டே மேற்கு தொடர்ச்சி மலைகளின் கூர்கில் உள்ள அதிகமாக வெளியே அறியப்படாத ஒரு மலைச் சிகரமாகும்.

By Bala Latha

நிஷானி மொட்டே அதன் ஏராளமான இயற்கை அழகு ரம்மியமான வானிலை மற்றும் பரந்த காஃபி தோட்டங்கள் ஆகியவற்றிற்கு புகழ் பெற்றதாகும்.

தென்னிந்தியாவிலுள்ள வார இறுதி பயண இடங்களின் பட்டியலில் கூர்க் தலைமையிடத்தைப் பெறுகிறது. மலையேற்றப் பயணிகளுக்கு நிஷானி மொட்டே வார இறுதியில் பெங்களூருவிலிருந்து செல்லக்கூடிய நேர்த்தியான மலையேற்றமாகும்.

Trekking In The Misty Mountains At Nishani Motte

உள்ளூர் மொழியில் மொழிப்பெயர்ப்பதென்றால் நிஷானி மொட்டே என்றால் குறியிடப்பட்ட மலைக்குன்று என்று அர்த்தம். பிரிட்டிஷ் காலத்தின் போது இந்தச் சிகரம் மலைத்தொடருக்குப் பக்கத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு வழிகாட்ட ஒரு குறியீடாக சேவையாற்றியது. எனவே இந்தப் பெயரைப் பெற்றது.

இந்த அமைதியான மலைச்சிகரம் பிரம்மகிரி மலைத்தொடரிலுள்ள தலக்காவேரி வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாகும், யானைகள் மற்றும் சிறுத்தைப் புலிகள் போன்ற விலங்குகளைக் கொண்ட திகைப்பூட்டும் வனவிலங்கு வாழ்க்கையின் தாயகமாகும்.

அவ்விடத்தை எப்படி அடையலாம்

கூர்க் பெங்களூருவிலிருந்து சுமார் 300 கிலோ மீட்டர் மற்றும் மைசூரிலிருந்து சுமார் 118 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக இருப்பதால் இது சாலை வழிகளில் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் குடகு மாவட்டம் காவேரி ஆற்றுக்குப் பக்கத்தில் அமைந்துள்ள அமைதியான பாகமண்டலா கிராமத்திற்கு வருகைத் தாருங்கள்.

Trekking In The Misty Mountains At Nishani Motte

வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியான காட்டு வழியே பாதை செல்லும் போது மலையேற்றப் பயணிகள் காட்டின் தணிக்கை நிலையத்திலிருந்து அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். தலக்காவேரியில் தொடங்கும் இந்த மலையேற்றப் பயணம் பாகமண்டலாவிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

வருகைத்தர சிறந்த காலம்

அனைத்துப் பருவங்களிலும் இந்த இடங்கள் அழகானது. இந்த வழிப்பாதை அதன் தனிப்பட்ட வசீகரத்தையும் அதே சமயத்தில் மலையேற்றப் பயணிகளுக்கு சவால்களையும் கொண்டுள்ளது.

எனவே ஒருவரின் ஆர்வம் மற்றும் திறனைப் பொறுத்து வருடம் முழுவதும் காடு மற்றும் மலையை சுற்றியுள்ள வழிகளில் மலையேற்றப் பயணிகள் ஏறுகிறார்கள்.

பாதை

இந்த 15 கிலோ மீட்டர் மலையேற்றப் பயணம் செழிப்பான சோழாக்காடுகள் மற்றும் பசுமையான புல்வெளிகளில் தொடங்கி ஒவ்வொரு சில அடிகளையும் அழகானதாகவும் உணர்ச்சிகரமானதாகவும் ஆக்குகிறது.

Trekking In The Misty Mountains At Nishani Motte

இந்தப் பாதையானது மிகவும் அசாதாரணமானதாக இருப்பதால் நன்கு குறிக்கப்படவில்லை. எனவே வனத்துறையின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலை விடாமல் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

இந்தப் பாதை புத்துணர்வூட்டும் நீருற்றுகள் மற்றும் அடர்ந்த காட்டு தாவர வகைகளின் வழியாக கடக்கிறது. இந்த வழி குறிப்பாக மழைக்காலத்திற்கு முன்பு அழகாகவும் பசுமையாகவும் இருக்கும்.

மழைக்காலப் பருவ நிலைகளில் அந்த வழிநெடுகிலும் நிறைய அட்டைப்பூச்சிகளின் படையெடுப்பை எதிர்கொள்ள வேண்டிவரும். எனவே ஒருவர் அதற்கேற்றவாறு முன்னேற்பாடுகளோடு தயாராக இருத்தல் அவசியமாகும்.

Trekking In The Misty Mountains At Nishani Motte

பல்வேறு விலங்குகள் மற்றும் தாவர இனங்களின் தாயகமான இந்த இடம் இயற்கை காதலர்களுக்கு மிகச்சிறந்த விருந்தாகும். நீங்கள் கடந்து செல்லும் போது நீங்கள் வருவதற்கு சற்று முன்பாக கடந்து சென்ற பல காட்டு விலங்குகளின் கால்தடங்களை நீங்கள் காணலாம்.

உயர்ந்த மற்றும் அடர்ந்த காட்டு வழியாக வசியம் செய்யும் இயற்கை காட்சிகள் நிறைந்திருக்கும் இந்த விறுவிறுப்பான நடைப்பயணத்தின் 60 பாகை சாய்தளம் கொண்ட இறுதி நீட்டமானது முடிவில் உங்களை சிகரத்தின் உச்சிக்கு வழிநடத்திச் செல்லும்.

பயணக் களைப்பினால் ஏற்படும் மூச்சுத்திணறல் மற்றும் கெண்டைக்கால் தசைகளில் வலி போன்றவை, உங்கள் கண்கள் பலரும் அறிந்திராத அந்த மந்திர அழகை திறந்து காட்டியவுடன் விரைவில் ஒதுங்கி விடும். திடீரென அந்த நடைப்பயணத்தின் அத்தனை முயற்சிகள் மற்றும் சவால்கள் மதிப்புடையதாகிவிடும்.

முகாம்

வேட்டையாடுதல் மற்றும் ஊடுருவலுக்கு எதிரான வனத்துறையின் மையம் ஒரு நாள் இரவு முழுவதும் தங்குவதற்கான முகாம் தளமாகும். அந்த வளாகத்தில் அருகாமையிலுள்ள இடங்களில் ஆக்கிரமப்புகள் அகற்றப்பட்டு முகாம் திடலாகப் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

வனத்துறையினரால் அமைக்கப்பட்ட நீர் ஆதாரங்கள் இங்கே கிடைக்கின்றன. இதற்கு மாற்றாக உள்ளூர் வாசிகளால் வழங்கப்படும் வீடுகளில் தங்கும் இடவசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எடுத்துச்செல்ல வேண்டிய பொருட்கள்

ஒரு வலிமையான முதுகுப்பை, டார்ச், உணவு, தண்ணீர் புட்டிகள், சோப்பு, அடிப்படை மருந்துகள், கூடாரம், தூங்கும்பை மற்றும் பாய், தொப்பி, சூரிய குளிர் கண்ணாடிகள் மற்றும் மழைகோட் (காட்டில் வானிலை எளிதில் ஆவியாகக் கூடியது).

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X