Search
  • Follow NativePlanet
Share
» »இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் வாழ்கையில் செய்திருக்க வாய்ப்பே இல்லை தெரியுமா ?

இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் வாழ்கையில் செய்திருக்க வாய்ப்பே இல்லை தெரியுமா ?

முதல் முறை காதலை கன்னத்தில் தரும் அந்த காதல் முத்தம், பிறந்த குழந்தையின் பாத ஸ்பரிசம், நீண்ட பிரிவுக்கு பிறகு அம்மாவை சந்திக்கும் அந்த கணம், ஊசிமுனை தூரத்தில் உயிரே போயிருக்கும் விபத்தை தவிர்த்த பிறகான இதயத்துடிப்பு இவையெல்லாம் எப்போதோ ஒரு முறை நம் வாழ்கையில் நடப்பவை இருந்தாலும் அவை தரும் அனுபவமும், படிப்பினையும் மிகப்பெரியது. வாழ்க்கை இதுவென உணர்த்துபவை.

இதுவரை நாம் பெறாத ஒரு அனுபவத்தை பெற்றிட நாம் இது வரை செய்திடாத ஒரு விஷயத்தை செய்திட வேண்டும். அப்படி ஒரு வித்தியாசமான பரவசமூட்டும் சில சுற்றுலா சார்ந்த விஷயங்களை பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.

கஷ்மீரில் பனிச் சிறுத்தையை பார்க்கலாம் :

கஷ்மீரில் பனிச் சிறுத்தையை பார்க்கலாம் :

காட்டில் தனியாக உலாவும் மிகவும் அரிய விலங்குகளில் ஒன்றான பனிச் சிறுத்தையை பார்ப்பது உண்மையில் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாத ஒன்றாகும். காஷ்மீரின் உயர்ந்த ஹிமாலய மலைகளில் இந்த வகை சிறுத்தை புலிகளை நாம் காண முடியும். ஹெமிஸ் தேசிய பூங்கா மற்றும் லடாக் பகுதிகளில் கம்பீரமாக இந்த புலிகள் உலா வருகின்றன.

photo:Tambako The Jaguar

கஷ்மீரில் பனிச் சிறுத்தையை பார்க்கலாம் :

கஷ்மீரில் பனிச் சிறுத்தையை பார்க்கலாம் :

இவற்றை ஒரே நாளில் சென்றதும் பார்த்து விட முடியாது. குறைந்தது ஒரு வாரமாவது மலைகளின் மேல் ட்ரெக்கிங் பயணம் மேற்கொள்ள வேண்டும். இது போன்ற பயணங்களை ஒரு குழுவாக மேற்கொள்வதே நல்லது. மலையேற்றத்தின் போது இரவு தங்கிட தேவையான டென்ட் மற்றும் உணவுப்பொருட்களை எடுத்து செல்வதும் அவசியமாகும்.

Photo:Tim Ellis

கஷ்மீரில் பனிச் சிறுத்தையை பார்க்கலாம் :

கஷ்மீரில் பனிச் சிறுத்தையை பார்க்கலாம் :

சுற்றுலாப்பயணிகளை இது போன்ற சாகச பயணங்களுக்கு அழைத்து செல்வதற்காகவே ஏராளமான சுற்றுலா நிறுவனங்கள் லெஹ் மற்றும் லடாக் பகுதிகளில் இயங்குகின்றன. டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டம் இந்த சாகச பயணம் செல்ல ஏற்ற நேரமாகும்.

Photo: Flickr

கஷ்மீரில் பனிச் சிறுத்தையை பார்க்கலாம் :

கஷ்மீரில் பனிச் சிறுத்தையை பார்க்கலாம் :

வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுடையவர்கள் நிச்சயம் இந்த சாகச பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த பனி சிறுத்தை தவிர லடாக் பகுதியில் வசிக்கும் வரையாடு மற்றும் சில வகை அழகான குருவிகளையும் நாம் காண முடியும்.

Photo:makitani

கஷ்மீரில் பனிச் சிறுத்தையை பார்க்கலாம் :

கஷ்மீரில் பனிச் சிறுத்தையை பார்க்கலாம் :

பனிச் சிறுத்தையின் சில அற்புதமான புகைப்படங்கள் இங்கே.

Photo:Tambako The Jaguar

கஷ்மீரில் பனிச் சிறுத்தையை பார்க்கலாம் :

கஷ்மீரில் பனிச் சிறுத்தையை பார்க்கலாம் :

பனிச் சிறுத்தையின் சில அற்புதமான புகைப்படங்கள் இங்கே.

Photo:Tambako The Jaguar

கஷ்மீரில் பனிச் சிறுத்தையை பார்க்கலாம் :

கஷ்மீரில் பனிச் சிறுத்தையை பார்க்கலாம் :

பனிச் சிறுத்தையின் சில அற்புதமான புகைப்படங்கள் இங்கே.

Photo:Tambako The Jaguar

கஷ்மீரில் பனிச் சிறுத்தையை பார்க்கலாம் :

கஷ்மீரில் பனிச் சிறுத்தையை பார்க்கலாம் :

பனிச் சிறுத்தையின் சில அற்புதமான புகைப்படங்கள் இங்கே.

Photo:Heidi Schuyt

கஷ்மீரில் பனிச் சிறுத்தையை பார்க்கலாம் :

கஷ்மீரில் பனிச் சிறுத்தையை பார்க்கலாம் :

பேரழகு நிறைந்த லடாக் நாகரத்தி பற்றி எங்கள் தளத்தில் மேலும் விரிவாக அறிந்து கொள்ள இங்கே கிளிக்குங்கள்.

Photo: Flickr

அவலாஞ்சியில் மீன் பிடிக்கலாம் :

அவலாஞ்சியில் மீன் பிடிக்கலாம் :

எழில் கொஞ்சும் நீலகிரி மலையில் ஊட்டி நகரில் இருந்து 28 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் ஒரு சொர்க்கம் தான் அவலாஞ்சி பள்ளத்தாக்கு ஆகும். இங்கு பசுமையான தேயிலைத்தோட்டங்கள் சூழ பேரழகுடன் திகழ்கிறது அவலாஞ்சி ஏரி. இந்த ஏரியில் நாம் தூண்டிலில் மீன் பிடித்து மகிழலாம்.

photo:stonethestone

அவலாஞ்சியில் மீன் பிடிக்கலாம் :

அவலாஞ்சியில் மீன் பிடிக்கலாம் :

தூண்டிலில் மீன் பிடிப்பது பல வெளிநாடுகளில் மிக சகஜமான ஒரு பொழுதுபோக்கு விஷயம் என்றாலும் இந்தியாவில் அப்படியில்லை. இங்கிருக்கும் ஏரிகள் மற்றும் குளங்கள் ஒன்று மாசுபடுத்தப்பட்டோ அல்லது ஆக்கிரமிக்கப்பட்டோ இருப்பதால் தூண்டிலில் மீன் பிடிப்பதை நினைத்து கூட பார்க்க முடியாது.

Photo:Prabhu B Doss

அவலாஞ்சியில் மீன் பிடிக்கலாம் :

அவலாஞ்சியில் மீன் பிடிக்கலாம் :

ஆனால், இன்றும் மனிதனால் சற்றும் மாசுபடாத இடமாகவே இந்த அவலாஞ்சி ஏரி இருக்கிறது. இங்கு மீன்வளமும் நிறையவே இருப்பதால் குளுகுளு சூழலில் குழந்தைகளுடன் மீன் பிடித்து விளையாடலாம். மீன் படிக்க தேவையான கருவிகள் ஏரிக்கு பக்கத்திலேயே வாடகைக்கு கிடைக்கின்றன.

Photo:Sandeep Somasekharan

அவலாஞ்சியில் மீன் பிடிக்கலாம் :

அவலாஞ்சியில் மீன் பிடிக்கலாம் :

தூண்டிலில் மீன்பிடிப்பதை தாண்டி ஏரியில் ராப்டிங் பயணம் மேற்கொள்ளலாம் மற்றும் இதனை சுற்றியுள்ள மலைகளில் ட்ரெக்கிங் பயணம் செல்லலாம். ஊட்டி நகரின் இரைச்சலில் இருந்து தப்பித்து பரிசுத்தமான இயற்கையை அனுபவிக்க விரும்புகிறவர்கள் நிச்சயம் இந்த அவலாஞ்சி ஏரிக்கு வர வேண்டும்.

Photo:Prabhu B Doss

அவலாஞ்சியில் மீன் பிடிக்கலாம் :

அவலாஞ்சியில் மீன் பிடிக்கலாம் :

அழகான அவலாஞ்சி.

Photo:Prabhu B Doss

அவலாஞ்சியில் மீன் பிடிக்கலாம் :

அவலாஞ்சியில் மீன் பிடிக்கலாம் :

அழகான அவலாஞ்சி.

Photo:Anand

அவலாஞ்சியில் மீன் பிடிக்கலாம் :

அவலாஞ்சியில் மீன் பிடிக்கலாம் :

அழகான அவலாஞ்சி.

Photo:Raghavan Prabhu

பனிச் சிகரத்தில் ஏறலாம் :

பனிச் சிகரத்தில் ஏறலாம் :

மலையேற்றம் செய்ய நம்ம ஊர்களிலேயே இப்போது ஏராளமான ட்ரெக்கிங் பாதைகள் இருக்கின்றன. ஆனால், பனி படிந்த சிகரத்தின் மேல் ஏறுவது என்பது நாம் நிச்சயம் கேள்விப்பட்டிராத ஒன்றாகும். இது சாதாரண மலையேற்றத்தை விட அதிக சவால் நிறைந்ததும், சுவாரஸ்யம் மிகுந்ததும் ஆகும். அப்படிப்பட்ட இந்த பனி மலையேற்றம் செய்ய இந்தியாவில் இருக்கும் சிறந்த இடமாக அறியப்படுவது உத்ரகண்ட் மாநிலத்தில் இருக்கும் கோமுக் என்ற இடமாகும்.

Photo:Barry Silver

பனிச் சிகரத்தில் ஏறலாம் :

பனிச் சிகரத்தில் ஏறலாம் :

உத்ரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 13,200 அடி உயரத்தில் கங்கை நதி உற்பத்தியாகும் கங்கோத்ரி பனி மலையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது. இமய மலையில் இருக்கும் மிகப்பெரிய பனிச் சிகரங்களில் ஒன்றாக திகழும் இந்த கோமுக் ட்ரெக்கிங் செய்ய ஏற்ற இடம் என்பதை தண்டி ஹிந்துக்கள் ஆன்மீக யாத்திரை வரும் இடமாகவும் இது உள்ளது.

Photo:Atarax42

பனிச் சிகரத்தில் ஏறலாம் :

பனிச் சிகரத்தில் ஏறலாம் :

20 கி.மீ தொலைவு கொண்ட இந்த ட்ரெக்கிங் பயணத்தின் போது கங்கையின் கிளை நதிகளில் ஒன்றான பகிரதி நதியை நாம் காண முடியும். கோமுக்கை அடைவதற்கு 4 கி.மீ முன்பாக சில தாங்கும் விடுதிகள் இருகின்றன. வெறும் ரூ.300 கட்டணத்தில் ஒருநாள் இரவு இங்கே தங்கி ஓய்வெடுத்து விட்டு பின்னர் பயணத்தை தொடரலாம். இந்த பயணத்தின் கடைசி 2 கி.மீ செங்குத்தான மலையை கடந்து கோமுக்கை அடையலாம்.

Photo:Soumen Halder

பனிச் சிகரத்தில் ஏறலாம் :

பனிச் சிகரத்தில் ஏறலாம் :

கோமுக் ட்ரெக்கிங் பயணத்தின் சில புகைப்படங்கள்.

Photo:Soumen Halder

பனிச் சிகரத்தில் ஏறலாம் :

பனிச் சிகரத்தில் ஏறலாம் :

கோமுக் ட்ரெக்கிங் பயணத்தின் சில புகைப்படங்கள்.

Photo:Soumen Halder

பனிச் சிகரத்தில் ஏறலாம் :

பனிச் சிகரத்தில் ஏறலாம் :

கோமுக் ட்ரெக்கிங் பயணத்தின் சில புகைப்படங்கள்.

Photo:Soumen Halder

பனிச் சிகரத்தில் ஏறலாம் :

பனிச் சிகரத்தில் ஏறலாம் :

கோமுக் ட்ரெக்கிங் பயணத்தின் சில புகைப்படங்கள்.

Photo:Soumen Halder

பனிச் சிகரத்தில் ஏறலாம் :

பனிச் சிகரத்தில் ஏறலாம் :

கோமுக் பற்றிய மேலதிக விவரங்களை எங்கள் தளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

Photo:Soumen Halder

மூங்கில் படகில் பயணம் :

மூங்கில் படகில் பயணம் :

கேரளா - தமிழக எல்லையில் அமைந்திருக்கும் இயற்கை பேரழகுடன் அற்புதமான சூழலில் அமைந்திருக்கிறது பெரியார் தேசிய பூங்கா. ஏராளமான புலிகளுக்கும், யானைகளுக்கும் வாழ்விடமாக திகழும் இந்த தேசிய பூங்கா சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கவும் தவறுவதில்லை. அப்படி இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை ஆச்சர்யப்படுத்தும் ஒரு அம்சம் இங்கிருக்கும் மூங்கில் படகு சவாரி தான்.

Photo:-Reji

மூங்கில் படகில் பயணம் :

மூங்கில் படகில் பயணம் :

மூங்கில்களை கொண்டு கட்டப்பட்ட கட்டுமர படகில் அமர்ந்தபடி பெரியார் தேசிய பூங்காவினுள் இருக்கும் ஏரியில் உலா வரலாம். அப்போது இங்கு வாழும் பலவகை விலங்குகளையும், மிருகங்களையும் பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்கும். நகரத்தின் இரைச்சலில் இருந்து தப்பித்து வார விடுமுறையை கொண்டாட நினைப்பவர்களுக்கு இந்த இடம் மிகச்சிறந்த தேர்வாக அமையும்.

Photo:Mikko Koponen

Read more about: adventure kashmir ladaak gujrath ooty
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X