Search
  • Follow NativePlanet
Share
» »வாகமண் - ஆசியாவின் ஸ்காட்லாந்து!

வாகமண் - ஆசியாவின் ஸ்காட்லாந்து!

By

வானை முட்டும் நீல மலைகள், வளைந்து நெளிந்து ஓடும் ஆறுகள், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள், அடர்ந்த பைன் மரக்காடுகள் என இயற்கையின் செல்லக்குழந்தையாக திகழ்ந்துவரும் வாகமண் மலைவாசஸ்தலம், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், கோட்டயம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.

இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய 50 அழகு பிரதேசங்களில் வாகமண் ஸ்தலத்தையும் சேர்த்து பட்டியலிட்டுள்ளது ‘நேஷனல் ஜியாகிரபிக் டிராவலர்' பத்திரிகை.

அதுமட்டுமல்லாமல் ‘ஆசியாவின் ஸ்காட்லாந்து' என்றும் புகழப்படும் வாகமண் மலைவாசஸ்தலம் கேரளாவின் முதன்மை சுற்றுலாத் தலங்களில் ஒன்று.

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

வாகமண் மலைவாசஸ்தலத்தில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்ளாக குரிசுமலா, தங்கல் பாறா, வாகமண் ஏரி, சூசைட் பாயிண்ட், வாகமண் அருவி ஆகியவை அறியப்படுகின்றன.

சுற்றுலாத் தலங்கள்

படம் : Madhu Kannan

சூசைட் பாயிண்ட்

சூசைட் பாயிண்ட்

V வடிவில் பயங்கரமான பாறைப்பிளவாக காட்சிதரும் சூசைட் பாயிண்ட்டின் மயக்கம் வர வைக்கும் அதி பயங்கர ஆழமானது நம்மை முதல் பார்வையிலேயே மயிர்கூச்செரிய வைத்து விடுகிறது. இந்த சூசைட் பாயிண்ட் பகுதிக்கு சிரமமான மலையேற்றத்துக்குப் பின்னரே சென்றடைய முடியும்.

படம் : Vanischenu

சாலையோர அருவி

சாலையோர அருவி

வாகமண் பகுதியின் மழைக்காலங்களில் சாலையோரம் கூட சிறு சிறு அருவிகள் வழிந்தோடுவதை பார்க்கலாம்.

படம் : Visakh wiki

டிரெக்கிங்

டிரெக்கிங்

பலவித வண்ணமலர்ச்செடிகளும், ஆர்க்கிட் தாவரங்களும் நிரம்பியிருக்கும் பசுமைப்பள்ளத்தாக்குகளின் வழியே மலையேற்றத்தில் ஈடுபடுவது இயற்கை ரசிகர்களை பரவசமூட்டக்கூடிய சாகசப்பயணமாக இருக்கும். அருவிகளை ஒட்டி சலசலத்தோடும் சிற்றோடைகளில் கால்நனைத்து கடந்து பலவித எழிற்காட்சிகளை மலையேற்றத்தின் போது நீங்கள் தரிசிக்கலாம்.

படம் : Visakh wiki

டிரெக்கிங் பாதையில்...

டிரெக்கிங் பாதையில்...

டிரெக்கிங் பாதையில் சலசலத்தோடும் அருவி.

படம் : anumodbalan

பைன் மரக்காடுகள்

பைன் மரக்காடுகள்

வாகமண் மலைவாசஸ்லத்தின் முக்கிய ஈர்புகளில் ஒன்று பைன் மரக்காடுகள்.

படம் : Anoop Joy

குரிசுமலா

குரிசுமலா

புனித சிலுவைக்குன்று என்று அழைக்கப்படுகிற குரிசுமலா, வாகமண் மலைவாசஸ்தலத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்குள்ள பால்பண்ணைகளுக்காக பிரபலமாக அறியப்படும் குரிசுமலா மலையை சுற்றிலும் பசுமையான தேயிலைத்தோட்டங்கள் மற்றும் அடர்ந்த காடுகளுடன் கூடிய மலைகள் ஆகியவை காணப்படுகின்றன.

படம் : Vanischenu

தேயிலைத் தோட்டங்கள்

தேயிலைத் தோட்டங்கள்

வாகமண் மலைவாசஸ்லத்தின் தேயிலைத் தோட்டங்களை காலாற நடந்து சுற்றிப்பார்ப்பது இனிமையான அனுபவம்.

படம் : Kerala Tourism

பருந்தன்பாறா

பருந்தன்பாறா

வாகமண் ஸ்தலத்திலுள்ள பருந்தன்பாறா.

படம் : Vanischenu

மொட்டக்குன்னு

மொட்டக்குன்னு

பருந்தன்பாறா அருகேயுள்ள மொட்டக்குன்னு.

படம் : Vanischenu

குடப்பனமூடு

குடப்பனமூடு

கோட்டயத்திலிருந்து வாகமண் செல்லும் வழியில் உள்ள குடப்பனமூடு.

படம் : SAMNAD.S

வாகமண் ஹைட்ஸ்

வாகமண் ஹைட்ஸ்

வாகமண் மலைவாசஸ்தலத்தில் உள்ள வாகமண் ஹைட்ஸ் எனும் தனியார் பகுதி ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.

படம் : Riju K

தாரன்யகனம்

தாரன்யகனம்

தாரன்யகனம் எனும் மலைக்காட்சிதளம்.

படம் : Sajetpa

பச்சை புல்வெளிகள்

பச்சை புல்வெளிகள்

பச்சை புல்வெளிகளின் எழில்மிகு தோற்றம்.

படம் : Bibin C.Alex - Bibinca

ஜும்மா மஸ்ஜித்

ஜும்மா மஸ்ஜித்

வாகமண் ஜும்மா மஸ்ஜித்.

படம் : Sajetpa

வாகமண் செல்லும் வழி

வாகமண் செல்லும் வழி

கொண்டாய் ஊசி வளைவுகளுடன் வாகமண் செல்லும் வழி.

படம் : Visakh wiki

வாகமண் வந்தால் எங்கு தங்குவது?

வாகமண் வந்தால் எங்கு தங்குவது?

வாகமண் ஹோட்டல்கள்

படம் : manu sankerms

எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Sajetpa

Read more about: hill stations
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X