Search
  • Follow NativePlanet
Share
» »நீருக்கு மத்தியில் தங்க கோயில் எங்கே தெரியுமா?

நீருக்கு மத்தியில் தங்க கோயில் எங்கே தெரியுமா?

நீருக்கு மத்தியில் தங்க கோயில் இருக்கும் இடத்தை சுற்றிப்பார்க்கலாம் வாங்க!

By Super Admin

ஆங்கிலேயருக்கு எதிரான முதல் சுதந்திரப்போராட்டமாக கருதப்படும் சிப்பாய் கலகம் நடந்த சரித்திரப் புகழ் வாய்ந்த இடமான வேலூர் நகரம் வரலாறு, ஆன்மிகம் என பல்வேறு சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

வெள்ளியங்கிரி மலையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் !!வெள்ளியங்கிரி மலையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் !!

தமிழ்நாட்டின் கோட்டை நகரம் என்று அழைக்கப்படும் பெருமையை பெற்றிருக்கும் வேலூர் நகரத்துக்கு அப்படியே ஒரு ரவுண்ட் போய் வருவோம் வாருங்கள்!

விஜய் படத்தில் வந்த சில அற்புதமான சுற்றுலாத்தலங்கள்விஜய் படத்தில் வந்த சில அற்புதமான சுற்றுலாத்தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

உலகப் புகழ்பெற்ற வேலூர் கோட்டையைத் தவிர ஸ்ரீபுரம் தங்கக்கோயில், அம்ரிதி விலங்கியல் பூங்கா, வள்ளிமலை, ஜலகண்டேஷ்வரர் கோயில் உள்ளிட்ட இடங்களும் வேலூரில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள்.

வேலூரின் சுற்றுலாத் தலங்கள்

வேலூர் கோட்டை

வேலூர் கோட்டை

வேலூர் நகரத்தின் அடையாளமான வேலூர் கோட்டை வேலூர் நகரத்தின் மையப்பகுதியில் பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரிலேயே அமைந்துள்ளது. ஜலகண்டேஷ்வரர் கோயில், ஒரு மசூதி, ஒரு தேவாலயம், முத்து மண்டபம், புகழ் பெற்ற வேலூர் கிறிஸ்டியன் மருத்துவமனை மற்றும் மாநில அரசு அருங்காட்சியகம் போன்றவை இந்த கோட்டை வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த கோட்டையின் வெளிச்சுவரானது பிரம்மாண்ட கிரானைட் பாறை கட்டமைக்கப்பட்டிருப்பதோடு அதனை ஒட்டியே அகலமான அகழி ஒன்றும் காணப்படுகிறது. சூர்யகுண்டம் நீர்த்தேக்கத்திலிருந்து இந்த அகழிக்கு நீர் கொண்டு வரப்படுகிறது.

படம் : Bhaskaranaidu

கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்

கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்

வேலூர் கோட்டையை அரசுடை அணிந்த காவலாளிகள் காவல் காப்பது போன்ற கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் காட்சி.

படம் : Soham Banerjee

படகுப்பயணம்

படகுப்பயணம்

வேலூர் கோட்டையின் அகழியில் படகுப்பயணம் செல்லும் வெளிநாட்டுப் பயணிகள்.

படம் : Tom Maisey

ஸ்ரீபுரம் தங்கக்கோயில்

ஸ்ரீபுரம் தங்கக்கோயில்

ஸ்ரீபுரம் தங்கக்கோயில் எனும் இந்த பிரசித்தமான ஆன்மீகத்தலம் வேலூர் நகரத்தில் மாலைக்கொடி எனும் இடத்தில் உள்ளது. மஹாலட்சுமிக்காக எழுப்பப்பட்டிருக்கும் இந்த கோயில் முழுதும் தங்க முலாம் பூசப்பட்டதாக காட்சியளிக்கிறது. எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு காணப்படும் 15 தங்க அடுக்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலுக்கு விஜயம் செய்யும் பயணிகள் கடுமையான உடை விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அரைக்காற்சட்டை, மிடி போன்ற உடைகள் இங்கு தவிர்க்கப்படவேண்டியவையாகும். மேலும், மொபைல் போன்கள், கேமராக்கள் மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்களும் இங்கு தடை செய்யப்பட்டிருக்கின்றன.

நேரம் : காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை

படம் : Dsudhakar555

நீருக்கு மத்தியில்

நீருக்கு மத்தியில்

நீருக்கு மத்தியில் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் அமைந்திருக்கும் காட்சி.

படம் : Ag1707

அம்ரிதி விலங்கியல் பூங்கா

அம்ரிதி விலங்கியல் பூங்கா

அம்ரிதி விலங்கியல் பூங்கா எனும் இந்த முக்கியமான சுற்றுலாத்தலமானது அம்ரிதி ஆற்றுக்கு அப்பால் தெள்ளாய் எனும் இடத்தில் உள்ள ஜவ்வாது மலையடிவாரத்தில் உள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் அழகிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் பலவகையான விலங்கினங்கள் மற்றும் தாவரவகைகளை பார்த்து ரசிக்க முடியும்.

மாநில அரசு அருங்காட்சியகம்

மாநில அரசு அருங்காட்சியகம்

மாநில அரசு அருங்காட்சியகம் வேலூர் கோட்டை வளாகத்தில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் எட்டு காட்சிக்கூடங்கள் அமைந்துள்ளன. மாவட்ட வரலாறு, வரலாற்றுக்காலத்திற்கு முந்தைய காலம், ஓவியக்கலை, விலங்கியல், கற்சிற்பங்கள், நாணயச்சேகரிப்புகள், செப்புப்பொருட்கள் மற்றும் மானுடவியல் போன்ற எட்டு தனிப்பிரிவுகளுக்கான காட்சிக்கூடங்கள் இது கொண்டுள்ளது.

ஜலகண்டேஷ்வரர் கோயில்

ஜலகண்டேஷ்வரர் கோயில்

ஜலகண்டேஷ்வரர் கோயில் வேலூர் கோட்டை வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான ஜலகண்டேஷ்வரர் எனும் பெயருடன் காட்சியளிக்கின்றார். விஜயநகர அரசின் பிற்காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

படம் : Pratapy9

கோயில் கோபுரம்

கோயில் கோபுரம்

ஜலகண்டேஷ்வரர் கோயிலின் கோபுரம்.

படம் : Simply CVR

தூண்கள்

தூண்கள்

ஜலகண்டேஷ்வரர் கோயில் தூண்கள் அட்டகாசமான சிற்பங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருக்கும் காட்சி.

படம் : Balaji.B

வள்ளிமலை

வள்ளிமலை

வேலூர் பகுதியில் திருவலம் எனும் ஊருக்கு வடக்கே 16 கி.மீ தூரத்தில் இந்த வள்ளிமலை அமைந்துள்ளது. முருகப்பெருமானின் இரு மனைவியருள் ஒருவரான வள்ளி இம்மலையில் பிறந்ததாக நம்பப்படுகிறது.

படம் : Sreenivas101

அஸம்ஷன் கத்தீட்ரல்

அஸம்ஷன் கத்தீட்ரல்

வேலூரின் பிரபலமான கிறிஸ்தவ தேவாலயமான அஸம்ஷன் கத்தீட்ரல்.

படம் : Maydinaselvan Durairaj

வி.ஐ.டி பல்கலைகழகம்

வி.ஐ.டி பல்கலைகழகம்

இந்தியாவின் பிரபலமான மற்றும் மிகச் சிறந்த பல்கலைகழகங்களில் ஒன்றான வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி.

படம் : Wikindinator

மஹாமுத்துமாரியம்மன் கோயில்

மஹாமுத்துமாரியம்மன் கோயில்

வேலூரிலிருந்து 12 கி.மீ தொலைவிலுள்ள மஹாமுத்துமாரியம்மன் கோயில்.

படம் : Murthysundara1

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

வேலூர் ஹோட்டல் டீல்கள்

வேலூரை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

வேலூரை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

எப்படி அடையலாம்?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Soham Banerjee

Read more about: வேலூர்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X